1474 ”பாடும் நிலா பாலு ” வாட்ஸப் தளத்தில்
அன்பர்களே..
சில ஆடியோ அப்லோட் பிரச்சனைகளால் ”பாடும் நிலா பாலு ” வாட்ஸப் தளத்தில் பாடல்கள் மற்றும் வானொலித் தொகுப்புகள் வரும். இணையதள இசைப்பிரியர்கள் மற்றும் வானொலி தொகுப்பாளர்கள் அனைவரும் இணைய விரும்பினால் எனது முகநூலில் தங்களின் வாட்ஸப் எண் வைத்திருப்பவர்கள் குறிப்பிடலாம்.
1473 அடி பாடுதே பாடுதே பூஞ்சோலைக் குயில்
இந்த பாடல் முழுதும் கொஞ்சுகிறது SPB குரல் (ENNA ORU KATHAL ANBU ASAI - KURALIL ) WOOOOW. (Last line la Hoy Hoy Hoy hoy வரிகளில் செல்லம் கொஞ்சுகிறது spb குரல். கடவுளே இந்த இனிய தேவாமிருத குரலை எங்களுக்கு அருளியதற்கு நன்றிகள் கோடி ஏழேழு பிறவியிலும் இவரை இதே பாலு ஸார் ஆக தந்து விடு.
1472 பாலுஜி சிறப்பு பிறந்த நாள் வானொலி நிகழ்ச்சி 2015
தேன் குரல் தென்றல் பாலுஜி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று வாழ்த்த வயதில்லை ஆகையால் அவரை வணங்குகிறோம்.
இப்படி நாங்களும் ரோடு சைட் ப்ளக்ஸ் பேனர் வைப்போம்ல.. ஹி..ஹி..ஹி.
1471 தென்றல் நீ.. தென்றல் நீ ....
பாலுஜிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
பாலுஜி உங்கள் குரல் என்றென்றுமே தென்றல் நீ....தென்றல்..நீ !
(எல்லோருக்கும் உடலில் ரத்தமும் எலும்பும் சதையும் வைத்து படைத்த கடவுள் நம்ம பாலு சாருக்கு மட்டும் இசையும் இனிமையும் ராகமும் தாளமும் (ba) பாவமும் சேர்த்து படைத்தான் போல இருக்கிறது.
1470 என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட
இசைஞானி இசையில் இனிமையான மெலோடி பாடல். பாலுஜி நடுவுல வந்தாலும் அசத்தலான ஆலாபனையுடன் ஆரம்பிக்கும் வரிகள் அடடா.. அடடா .... என்னத்தச் சொல்ல வார்த்தைகள் இல்லவே இல்லை.. அந்த இனிமையை கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.
1469 ஆத்த கடக்க வேணும்
பல முறை கேட்ட பாடல் ஏன் பதியாமல் விட்டு போய்விட்டது என்று தெரியவில்லை. ஆஹா.. ஆஹா.. சரிதா கண்கள் போல் கூர்மையான மற்றும் இனிமையான பாடல். பாடல் துவக்கத்திலேயே ஆலாபனையுடன் நம்மையும் பரிசலில் கொண்டு செல்கிறார் பாலுஜியும் சுசிலாம்மாவும். அந்த சுகத்தை நீங்களும் அனுபவியுங்களேன்.
1468 யார் யாரோ நான் பார்த்தேன்
அன்பர்களே, நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்துள்ளேன். இந்த படத்தின் பெயர் மட்டும் தான் கேள்விபட்டுருந்தேன் படம் பார்த்த நினைவு இல்லை. இணையத்தில் இருக்கிறது முழுப்படம் பார்க்க நேரம் ஒதுக்க வேண்டும்.
1467 பாலுஜியின் வானொலித் தொகுப்பு
மலர்களிலே உருவாகும் தேன் துளிகள் போல பாலுஜியின் அற்புத முக பாவங்களுடன் அவரின் இனிமையான குரல் வானொலித்தொகுப்பை மீண்டும் மீண்டும் கேட்டு மகிழுங்கள். தித்திக்கும் தெவிட்டாத கானங்கள்.
பாலுஜியின் வானொலித்தொகுப்பு கூகுள் ட்ரைவிலே கேட்கலாம்.
1466 பச்ச கொடி காட்டுங்கம்மா பாரத கொடி
நாளை கிரிக்கெட் அரை இறுதி போட்டியில் பாரத அணி ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் பாலுஜியின் பாடல்களை விரும்பி கேட்பவர்கள் அதிகம் இருப்பார்கள். ஏன் பாலுஜியே எந்த வேளையும் வைத்துக்கொள்ளாமல் போட்டியை விரும்பி பார்ப்பவர். இதோ அவரே தன் ரசிகர்களுடன் சேர்ந்து பாடுகிறார்.
1465 இது என்ன முதலிரவா அம்மாடி
பாலுஜியுடன் இணைந்து பி.எஸ்.சசிரேகா குறைந்த பாடல்களே பாடியிருந்தாலும் அணைத்து அற்புதமான பாடல்கள் டி.ஆர் அதிகம் வாய்ப்புகள் வழங்கியிருப்பார். நீண்ட நாட்கள் கழித்து இந்த பாடலை கேட்பதால் கிணற்றுக்குள் இருந்து கேட்கும் பிரமை உங்களூக்கும் ஏற்படுமே ? எப்படி இருந்தாலும் பாடலை ரசியுங்கள்.
1464 பாடல் நான் பாட என் பார்வை
பாடல் நான் பாட என் பார்வை
மோகன் ரேகா அமலா கவுண்டமணி செந்தில்
பாடல், இசை: கங்கை அமரன்
இயக்கம்: அனுமோகன்
படம்: இது ஒரு தொடர்கதை
ஓகேவா..? அமலா கேட்கவில்லை நான் கேட்கிறேன் சுந்தர் சார்.. இந்த பாடலை 2008ல் பதிய முயற்சி செய்துள்ளீர்கள்.
1463 நானோ மழைத் துளி
டப்பிங் பாடல் தான் இது போன்ற கிளுகிளூப்பான பாடல் கேட்டு பல வருடங்கள் ஆயிற்று. இதோ உங்களுக்காக ஒலியும் ஒளியிலும்.
1462 வாசமுள்ள மலரிது (வானொலித் தொகுப்பு)
”வஞ்சி இளம் மாமன் பொண்ணு ”என்று அமர்க்களமாக ஆரம்பிக்கும் அறிவிப்பாளினி திருமதி ராகினி பாஸ்கரன் அவர்களின் வானொலித்தொகுப்பு. வானொலி நேயர்கள் வேண்டி விரும்பி கேட்ட பாடல் பட்டியல். அனைத்து அமர்க்களமான ஹிட் பாடல்கள். தனித்தனியாக எத்தனை தடவை இந்த வலைப்பூவில் கேட்டாலும்.
11461 நான் சொல்ல வந்தேன் நலமான சேதி
//மதுரச இதழ்களைத் திறந்துவிடு.. தேனை எடு விருந்து கொடு.. ஏங்கும் ஏக்கம் இதுதான் வேறென்ன//
நீண்ட நாட்கள் பிறகு வ்ருகை தந்துள்ளேன் ஒரு இனிமையான மெலோடி பாடலுடன். பாலுஜியும் வாணியம்மாவும் சேர்ந்து வழக்காமாக பாடியிருக்கும் இந்த பாடல் ஒரு வித சுவையான சுகம்.
1460 வாழும் நாள் நான் வாழும் நாள்
படம்: மூனே மூனு வார்த்தை
எஸ்.பி.பி.சரண் தனது கேப்பிடல் நிறுவனம் சார்பில் தயாரித்து வரும் படம், மூணே மூணு வார்த்தை. மதுமிதா இயக்கும் இந்தப் படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், லட்சுமியும் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர்.
1459 ரம் பம் பம் டர டம்
இது மலையாள மொழி மாற்றம் படம் அதிகம் கேட்டறியாத பாடல் இணையத்தில் இருந்தாலும் பட்ம் பிரபலமில்லை. மம்மி டாடி படம் வந்ததாக கூட நினைவில்லை. இனிமையான பாடல் கேட்டு தான் பாருங்களேன் ஒளிகோப்புடன்.
பாடலை நினைவுபடுத்திய கோவை கோபலகிருஷ்னன் அவர்களுக்கு நன்றி.
1458 நீ ஒரு கடிதம் உன்னை தினமும்
படம் : இரு மேதைகள்
நடிகர்கள்: பிரபு, ராதா
நீ ஒரு கடிதம் உன்னை தினமும்
மனம் எழுதும் அன்பே ரெண்டு
அன்பில் கொஞ்சும் சொந்தம் விடாது
அன்றும் இன்றும் என்றும் இந்த பந்தம் விடாது
நீ ஒரு கடிதம் உன்னை தினமும்
மனம் எழுதும் அன்பே ரெண்டு
அன்பில் கொஞ்சும் சொந்தம் விடாது
அன்றும் இன்றும் என்றும் இந்த பந்தம
1457 ஓ நண்பா.. நண்பா..நண்பா...வா..
அன்பார்ந்த நண்பர்களே,.. இந்த மாதத்தில் இந்த பாடல் மட்டும் பதிய முடிந்தது மிகவும் வருத்தமாக உள்ளது (வேலை பளுவின் காரணமாக) அதுவும் பாலுஜியின் அன்பை பெற்ற அதிதீவிர ரசிகர் சென்னை சித்தார்த் அவர்களின் உதவியால் முடிந்தது. ஆகையால் ”ஓ நண்பா..
21456 மழை பேசும் வானம் நீயா
பாடகர் ஸ்ரீனிவாஸ் அவர்களின் சிறகடிப்பேன் என்ற இசையில் உருவான இசை ஆல்பத்தில் நமது பாலுஜியின் இனிமையான குரலில் அபாரமான மெலோடி பாடல். அருமையான இசை நம் மனதை ஏதோ ஒரு உலகத்திற்க்கு கொண்டு செல்லும் அந்த அனுபத்தை நான் உணர்ந்தேன். பொதுவாகவே ஸ்ரீனிவாச் அவர்களின் பாடும் அழகை நான் வெகுவாக ரசிப்பேன்.
1455 எங்கே போனாய் யாரை தேடி
இனிய பாடல் பாலுஜி குரலில் எப்படி படம் பிடித்திருகிறார்கள் என்று பார்க்கேவே படம் பார்க்க செல்லவேண்டும். ஆமாம்.. படம் வெளி வந்துவிட்டதா ?
பாடல் மற்றும் வரிகளை மூன்று மாதத்திற்கு முன் அனுப்பி வைத்த அதி தீவிர ரசிகை திருமதி யோகாம்பாள் அவர்கள் தினமும் பாடல் பதியாமல் எங்கே போனாய் .. எங்கே போனாய் ..
1454 கரையோர காற்று கல்யாண
இந்த பாடல் இணையத்தில் பரவலாக இருந்தாலும் வானொலியில் அதிகம் ஒலிபரப்படாத பாடல் இது. நேற்று நான் மயிலிறகு நிகழ்ச்சியில் கேட்ட பாடல் இனிமையான மெட்டு அமைத்திருந்தார் இளையராஜா. படத்தை பார்த்ததாக நினைவு இல்லை. ஆகையால் படத்தை பார்த்தவர்கள் படத்தின் காட்சியை பின்னூட்டத்தில் விவரிக்கலாமே? உங்களுக்காக இதோ...
1453 வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
பாலுஜியின் அதி தீவிர ரசிகை திருமதி யோகாம்பாள் அவர்களின் விருப்ப பாடல். இந்த பாடல் எப்படி விடுபட்டது என்று தெரியவில்லை. இனிமையான பாடலை நினைவு படுத்தியதற்கு மிக்க நன்றி மேடம்.
11452 பச்சை வண்ண தோட்டம் கண்டு
இந்த பாடலை கேட்டு எத்தனை வருடங்களாயிற்று என்று கணக்கு போட்டு கூட நேரமில்லை. பாலுஜியின் தீவிர ரசிகை திருமதி யோகாம்பாள் அவர்கள் முகநூலில் இந்த பாடலின் ஒளிக்கோப்பை பகிர்ந்தார்கள். அடடே இந்த படத்தில் அருமையான இனிமையான ஒரு பாடல் வருமே என்று பலமாக யோசித்தேன். எஸ் ..
21451 இந்நாடு நம் நாடு விழுந்து போச்சு
அன்பர்களே.. இந்த பாடலை சுதந்திர தினத்தில் பதியலாம் என்றிருந்தேன் வேலை அதிகம் காரணமாக பாடல் வரிகளை எழுத முடியவில்லை. சென்னையில் இருந்து பாலுஜியின் தீவிர ரசிகை திருமதி யோகாம்பாள் மேடம் அவர்கள் எனக்கு பாடல் வரிகள் சிரமப்பட்டு கேட்டு எழுதி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
1450 வானம் கீழே வந்தால் என்ன
அன்பார்ந்த நண்பர்களே, நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்துள்ளேன் சென்னை சித்தார்த்தின் கையை பிடித்து கொண்டு (ஹி..ஹி..). ஆமாம் எனது யாகூ முகவரி அதிகம் பயனபடுத்த முடியவில்லையாதலால். புதிய முகவரியில் தேடி பிடித்து அவரின் அற்புதமான வரிகளை இங்கே உங்களுக்காக இணைத்துள்ளேன். நன்றி சித்தார்த்.
1449 ஒரு வீடு இரு உள்ளம்
இந்த படம் பார்த்தோமா என்று நினைவு இல்லை. இந்த படத்தில் பல பிரபல பாடல்கள் கேட்டிருக்கிறேன். படம் வந்த புதிதில் இந்த பாடல் அதிகமாக பிரபலமாகவில்லை என்று தெரிகிறது. இணையத்தில் அதிகம் கேட்டிருக்கலாம். நேற்று பண்பலையில் ஜெய்சங்கர் வாஆஆஆஆரம் நிகழ்ச்சி இரவு கேட்டுக்கொண்டிருந்தேன்.
11448 வசந்தமே வசந்தமே கனிந்ததே பருவமே
படம் டப்பிங் படம் தெலுங்கில் இருந்து வந்தது படம் எப்ப வந்தது எப்போ பொட்டிக்குள் போச்சு டப்பிங் செய்த செலவு கிடைத்துருக்குமா என்பது சந்தேகமே. அது எப்படியோ போகட்டும் நமக்கு வேண்டியது இனிமையான பாடல் அந்த இனிமையை இந்த பாடலில் சுவைக்கலாம்.
21447 வேற வேலை ஓடுமா..(பாலுஜியின் பிறந்த நாள் வானொலித் தொகுப்பு)
"வேற வேலை ஓடுமா..” நேற்று 4.6.2014 அன்று பாலுஜி அவர்களின் பிறந்தநாள்.முகநூலில் அவரது அபிமானிகள் வாழ்த்துக்களை வாரி வழங்கி அமர்க்களப்படுத்திவிட்டார்கள். எல்லாவற்றையும் பாலுஜி வெளிநாட்டில் இருந்து பார்த்திருப்பார் என்று நம்புகிறேன். மேலும், கோவையில் ஐந்து
பண்பலைகள் உள்ளன.
1446 வாழப்பிறந்தேன்... வாழப்பிறந்தேன்...(பிறந்த நாள் ஸ்பெஷல்)
என் இனிய பாலுஜி அவர்களுக்கு பிறநத நாள் நல்வாழ்த்துக்கள்.
பாடும் நிலா பாலு வலைப்பூ நண்பர்கள் பெப் சுந்தர், கோவை ரவி மற்றும் ரசிகர்கள்.
இது ஒரு சீரியல் டைட்டில் பாடல்... சீரியஸாக கேட்காமல் .. ரிலாக்ஸா கேளுங்க சார். அற்புதமாக உள்ளது.
1445 உறவெனும் புதிய வானில்
நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த பாடல். பதிவுகள் வராததற்கு ஒரு காரணமாக இருக்கலாம் ஆம்மாம் சார். சமீப காலமாக பதிவர்கள் முகநூலில் அறிதான பாடல் சுட்டிகளை வழங்கி கலக்கிவருகிறார்கள். பாலுஜி, ஜானகியம்மா அவர்களின் இனிமையான குரலில் வரும் இந்த பாடல் நெஞ்சத்தை கிள்ளாதே என்று வைத்திருக்கிறார்கள்.
11444 மதுரை.... மீனாட்சி தேவி
2012 பதிவான பாடலாம் இந்த இனிமையான் பாடல். படம் வெளிவரவில்லை என்று நினைக்கிறேன் அதனால் பிரபலமாகாமல் போனது. என் கண்ணிலும் படாமல் இருந்து விட்டது. பாலுஜியின் அதி தீவிர ரசிகை திருமதி., யோகாம்பாள் வெங்கட்ராமன் அவர்கள் நேற்று இந்த பாடலை கேட்டீர்களா என்ற கண்டிப்புடன் மின்னஞ்சல் செய்தார். அடடா..
1443 கொக்கரக்கோ கும்மிக்கோ.. கும்மிக்கோ..
கொக்கரக்கோ கும்மிக்கோ.. கும்மிக்கோ.. சின்னதம்பி சின்ன தம்பி... மற்றும் கானக்குயிலே போன்ற 3 இனிமையான பாடல்கள் பாலுஜியின் குரலில் இந்த பூஞ்சோலை ஆல்பத்தில். பாடல் வரிகள் அப்புறமா... வரும் அதுவரை பாடலகளை கேளூங்கள். அது சரி எவ்ளோ இந்த படத்தை பாத்திருக்கீங்க..
11442 உன்னைத்தான் கும்பிட்டேன்
ரொம்ப வருடங்கள் கழித்து கேட்கும் பாடல். பாலுஜியின் தீவிர ரசிகை சென்னை யோகாம்பாள் வெங்கட்ராமன் அவர்களின் விருப்பப்பாடல். // தவிக்கின்ற நெஞ்சையெல்லாம் கரை ஏற்றும் ஓடம் // டி,எம்.எஸ் ஐயாவும், பாலுஜி அவர்களின் குரலும்.. அவர்களுடன் நாமும் அவர்களுடன் சேர்ந்து கேட்போமே.
1441 ஆகாச நிலவுதான் அழகாத் தெரியல
திடிர்ன்னு ஒரு நாள் காலை வானொலியில் பாடல் முடியும் தருவாயில் கேட்டேன் இந்த பாடலை அடடே சூப்பரா இருக்கே இது என்ன படம்? என்று கோவை கோபால் சார்கிட்ட கேட்டேன் தெரியவில்லை என்றார். சரி தெரியாமலா போய்விடும் என்று காத்திருந்தேன் சமீபத்தில் கேட்கும் போது முழுப்பாடலும் முக்கனியாய் இனித்தது.
7