Saturday, October 10, 2015

சங்கீத ஜாதி முல்லை!

Thursday, August 13, 2015

1474 ”பாடும் நிலா பாலு ” வாட்ஸப் தளத்தில்
அன்பர்களே..

சில ஆடியோ அப்லோட் பிரச்சனைகளால் ”பாடும் நிலா பாலு ” வாட்ஸப்  தளத்தில் பாடல்கள் மற்றும் வானொலித் தொகுப்புகள் வரும்.  இணையதள இசைப்பிரியர்கள் மற்றும் வானொலி தொகுப்பாளர்கள் அனைவரும்  இணைய விரும்பினால்  எனது முகநூலில் தங்களின் வாட்ஸப்   எண் வைத்திருப்பவர்கள் குறிப்பிடலாம். சிரமங்களூக்கு மன்னிக்கவும் .


-. இப்படிக்கு. உங்கள் அன்பன் பெப் சுந்தர் மற்றும் கோவை ரவீந்திரன்

Thursday, July 02, 2015

1473 அடி பாடுதே பாடுதே பூஞ்சோலைக் குயில்
இந்த பாடல் முழுதும் கொஞ்சுகிறது  SPB குரல் (ENNA ORU KATHAL ANBU ASAI  - KURALIL ) WOOOOW.   (Last line la Hoy Hoy Hoy  hoy  வரிகளில் செல்லம் கொஞ்சுகிறது spb  குரல். கடவுளே இந்த இனிய தேவாமிருத குரலை எங்களுக்கு அருளியதற்கு நன்றிகள் கோடி ஏழேழு பிறவியிலும் இவரை இதே பாலு ஸார் ஆக தந்து விடு.


திருமதி.யோகாம்பாள் மேடம் நீங்கள் சொல்லியபடி பாலுஜியின் கடைசி வரிகளின் இனிமைதான் டச்சிங் டச்சிங்.  ஓர் இனிமையான பாடலையும் வரிகளையும் இணையதள நேயர்களுக்காக வழங்கியதற்கு மிக்க நன்றி.
படம்: மன்னவரு சின்னவரு
நடிகர்கள்: சிவாஜி கனேசன், அர்ஜூன், சௌந்தர்யா, மஹேஸ்வரி
இசை: கீதப்பிரியன்
இயக்குனர்: பி.என்.ராமச்சந்தர்
தயாரிப்பு: எஸ்.தாணு
வருடம்: 1999

அடி பாடுதே பாடுதே பூஞ்சோலைக் குயில் ஒண்ணு
பாட்டுக்கு அர்த்தம் சொல்லு
ஆஹா  ஓஹோ
குயில் பாடுதே பாடுதே பாட்டுக்கு அர்த்தங்கள் புரியாது விட்டுத் தள்ளு 
ஆஹா ஆஹா
அடி குக்கூனா பக்கம் வா அடி குக்கூனா முத்தம் தா
இது நீ சொல்லும் பாஷை குயில் சொல்லாத பாஷை
நீ என் காதில் பூ சுத்தாதே

ஹோய் அம்மாடி என்னை நம்பு ஆகாது இந்த வம்பு
ஹை செல்லாது உன் குறும்பு  ஹ ஆகாது இந்த வம்பு
அடி பாடுதே பாடுதே பூஞ்சோலைக் குயில் ஒண்ணு
பாட்டுக்கு அர்த்தம் சொல்லு ஹோய்
குயில் பாடுதே பாடுதே பாட்டுக்கு அர்த்தங்கள் புரியாது விட்டுத் தள்ளு 
கண்மணி உப்பில்லாத வாழ்வில் ஹோய் முத்தமிட்டு சக்கரை சேரு
காதலில் முத்தமொரு பாகம்தான் முத்தம் மட்டும் காதலாகாது
மீண்டும் சிறு பிள்ளையாகி நாம் கொஞ்சம் விளையாடலாம்
போதும் விளையாட்டு உன்னிடம் இங்கே வினையாகலாம்
வெட்கத்தை ஒத்தி வை. அச்சத்தை பொத்தி வை
முத்தத்தில் மோட்சம் வரச்செய்   ஹ ஹா
ஹ  செல்லாது உன் குறும்பு  ஹ ஆகாது இந்த வம்பு
அட  அம்மாடி என்னை நம்பு ஆகாது இந்த வம்பு
குயில் பாடுதே பாடுதே பாட்டுக்கு அர்த்தங்கள் புரியாது விட்டுத் தள்ளு 
அடி பாடுதே பாடுதே பூஞ்சோலைக் குயில் ஒண்ணு
பாட்டுக்கு அர்த்தம் சொல்லு ஹோய் ஹோய்
காதலாம் நந்த வனச்சோலையில் பூக்கள் இனி கிள்ளக்கூடாது
பூவே  நீ அபிநயத்தில் அழைக்கிறாய் பக்கம் வந்தால் தள்ளக்கூடாது
கண்ணா குறும்பான விரல்களை எங்கே தண்டிப்பது
அன்பே என் கொள்கை என்பது எல்லாம் மன்னிப்பது
வரம்பை மீறாதே குறும்பை  வீசாதே அழகை கொள்ளையிடாதே
ஹேய் அம்மாடி என்னை நம்பு ஆகாது இந்த வம்பு
ஹஹா  செல்லாது உன் குறும்பு  ஹ ஆகாது இந்த வம்பு
அடி பாடுதே பாடுதே பூஞ்சோலைக் குயில் ஒண்ணு
பாட்டுக்கு அர்த்தம் சொல்லு
குயில் பாடுதே பாடுதே பாட்டுக்கு அர்த்தங்கள் புரியாது விட்டுத் தள்ளு 
அடி குக்கூனா பக்கம் வா அடி குக்கூனா முத்தம் தா
இது நீ சொல்லும் பாஷை குயில் சொல்லாத பாஷை
நீ என் காதில் பூ சுத்தாதே

ஹோய் ஹோய் ஹோய்  அம்மாடி என்னை நம்பு ஆகாது இந்த வம்பு
ஹை செல்லாது உன் குறும்பு  ஹா ஆகாது இந்த வம்பு

Wednesday, June 03, 2015

1472 பாலுஜி சிறப்பு பிறந்த நாள் வானொலி நிகழ்ச்சி 2015

தேன் குரல் தென்றல் பாலுஜி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று வாழ்த்த வயதில்லை ஆகையால் அவரை வணங்குகிறோம்.

இப்படி நாங்களும் ரோடு சைட் ப்ளக்ஸ் பேனர் வைப்போம்ல.. ஹி..ஹி..ஹி.


உலகில் எல்லா எப்.எம் வானொலிகளும் பாலுஜியின் பாடல்களுடன் அவரின் அன்பை பாராட்டி பாடல்களை பட்டை கிளப்பிக்கொண்டிருக்கும் இந்த வேளையில்  பா.நி. பா வலைப்பூவும்  தன்னுடைய  வாழ்த்துப் பூக்களை  அவரை நோக்கி தனது வலைப்பூவை விரிக்கின்றது.

அவரின் அன்பை என்றும் நாடும் பா.நி.பா இணையதள ரசிகர்கள். மேலும் ரசிகர்களின் விருப்பபாடல்களை கீழே உள்ள சுட்டியில் கேட்டு மகிழலாம் அன்பர்களே.

அறிவிப்பாளினி திருமதி. ராகினி பாஸ்கரன் அவர்களின் சிறப்பு பிறந்த நாள் வானொலி நிகழ்ச்சி இதிலே  கேட்டு மகிழுங்கள்நிகழ்ச்சி வழங்கிய வானொலி அறிவிப்பாளினி திருமதி ராகினி பாஸ்கரன் அவர்களுக்கு இணையதள ரசிகர்கள் சார்பாக நன்றி.

1471 தென்றல் நீ.. தென்றல் நீ ....


பாலுஜிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பாலுஜி உங்கள் குரல் என்றென்றுமே  தென்றல் நீ....தென்றல்..நீ !

(எல்லோருக்கும் உடலில் ரத்தமும் எலும்பும் சதையும் வைத்து படைத்த கடவுள்  நம்ம பாலு சாருக்கு மட்டும் இசையும் இனிமையும் ராகமும் தாளமும் (ba) பாவமும் சேர்த்து படைத்தான் போல இருக்கிறது.  வாழ்க பல்லாண்டு.)  (அவர் குரல் என்னும் விரலால் எனது  மனம் எனும் வீணையை மீட்டுகிறார்  என் செல்ல அமுல் பேபி சார் )

பாடல் வரிகள் மற்றும் ரசிப்பு : நன்றி : திருமதி யோகாம்பாள் வெங்கட்ராமன், சென்னை


படம்: : தந்து விட்டேன் என்னை
நடிகர்:    விக்ரம் ரோகிணி 
பாடகர்கள்ள் பாலுஜி & ஜானகியம்மா
இசை: இளையராஜா
வருடம் :1991

தென்றல் நீ தென்றல் நீ சேதி சொன்ன மங்கை நீ
திங்கள் நீ திங்கள் நீ
பொங்கி வந்த கங்கை நீ
கீதம் சங்கீதம் உன் சாம்ராஜ்யமே
நாளும் எந்நாளும் உன் ராஜாங்கமே
ஆஹா ஆஹா ...  (இந்த இடத்தில் humming super aga irukkum) (SPB sir)
தென்றல் நீ தென்றல் நீ
சேதி சொன்ன மன்னன் நீ
திங்கள் நீ திங்கள் நீ தேடி வந்த கண்ணன் நீ
ஆடை மூடி பேச வந்து
ஆடும் தென்றல் காற்றிலே
ஆசையோடு பூத்ததிந்த ரோஜா
மேடை மீது பாட வந்த
வேந்தன் உன்னைப் பார்த்ததும் தேகம் முல்லைத் தோட்டம் ஆகும் ராஜா
பூவை நெஞ்சில் பூட்டி வைத்த
வைரம் கையில் வந்தது
பாவை உள்ளம் தாழ்திறந்து
பாடல் ஒன்று தந்தது
வெள்ளி ரதம் வருமா
வீதியில் சுகமா
ஓஹோ ஓஹோ ....
தென்றல் நீ தென்றல் நீ
சேதி சொன்ன மன்னன் நீ
திங்கள் நீ திங்கள் நீ
தேடி வந்த கண்ணன் நீ
மேகம் என்னும் தேரில் ஏறி
ஊரைச் சுற்றிப் பார்க்கலாம் மேளதாளம் கேட்கும் நல்ல நேரம்
பூமி எங்கும் பூக்கள் கொண்டு
வானவில்லில் கோர்க்கலாம் காம தேவன் கோபம் இங்கு தீரும்
ராஜ ராஜ ராதை இந்த ராணி ராகம் பாடினாள்
ராக தேவன் தந்த அன்பு
மாலை ஒன்று சூடினாள்
வெள்ளி மழை விழுமா
வீணையில் ஸ்வரமா  (வீணையும் ஸ்வரமும் சேர்ந்த மாதிரி பாலு சார் குரல் ஒலிக்கும்) ஆஹா ஆஹா ....
தென்றல் நீ தென்றல் நீ
சேதி சொன்ன மன்னன் நீ
திங்கள் நீ திங்கள் நீ தேடி வந்த கண்ணன் நீ
கீதம் சங்கீதம் உன் சாம்ராஜ்யமே
நாளும் எந்நாளும் உன் ராஜாங்கமே
ஆஹா ஓஹோ ....
தென்றல் நீ தென்றல் நீ
சேதி சொன்ன மங்கை நீ
திங்கள் நீ திங்கள் நீ
பொங்கி வரும் கங்கை நீ