'டேய் ஆ(ட்)ச்சிய புடிக்கிறேன் ஆ(ட்)ச்சிய புடிக்கிறேன்னு காரக்குடிப்பக்கம் போய் சொல்லிடப்போறாண்டா. புடிச்சி அடிச்சுப்புடுவாக..' :)

**

'அண்ணே என்னண்ணே கேட்டு(gate-u) மூடிட்டிங்க..'

'டேய் கேட்டுத்தானடா மூடினேன் கேணப்பயலே.

7

முதன்முதலாக மேடையேறிய SPB அவர்கள் இப்படித்தான் ஆரம்பித்தார்.

பிறகு சினிமா வாய்ப்புக்காக காத்திருந்தபோது மெல்லிசை மன்னரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அவருக்கு.

1

S P B யும் கத்ரி கோபால்நாதின் ஸாக்ஸபோனும் இணைந்து பாடிய இந்த பாட்டு ரொம்ப தனித்துவம் வாய்ந்தது. உபயோகிச்சிருக்கும் இசைக்கருவிகள்னு பாத்தா ரொம்ப கம்மிதான்.. முழுக்க முழுக்க SPBயின் குரல் ஆட்சி செய்த பாட்டு இது. குரலில் அவ்வளவு உருக்கம்..

10

உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இப்பாடலை அருமையாகப் பாடியிருப்பார் பாலு. கிட்டத்தட்ட மொத்த பாடலும் தண்ணீருக்கடியில் நளினமாக எடுக்கப்பட்டிருக்கும். மெல்லிசை மன்னரின் இசையில் இது ஒரு தென்றலாக வந்து தழுவுகிறது.

4

வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள்

வந்து ஆடும் காலமிது

அம்மா அழகே உலகின் ஒளியே

பூவில் வண்டு கூடும்

சங்கீத ஜாதி முல்லை

குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ

நதியிலாடும் பூவனம்

நன்றி சிவா

2

கனவுலகில் அழைத்துச் சென்று சஞ்சரிக்கவிட்டு, உதடுகளில் புன்னகையை விரிக்கச் செய்யும் பாடல் இது - எப்போது கேட்டாலும்.

1

இப்போதே இத்தனை இளமையான குரலில் பாடுகிறாரே. பாட வந்த புதிதில் அவர் குரல் எவ்வளவு இளமையாக இருந்திருக்க வேண்டும் என்று யோசிக்கும் பட்சத்தில் ஒரு முறை சாந்தி நிலையம் படத்தில் அவர் பாடிய இந்தப் பாடலைக் கேட்டால் போதும். குரலில் இளமை அள்ளிக்கொண்டு போகும்.

3

இப்பாடலில் காதலைக் கம்பீரமாகவும் அதே சமயம் அதற்கே உரித்தான நெகிழ்வு குன்றாமலும் ஸ்வர்ணலதாவும் பாலுவும் அற்புதமாகப் பாடியிருப்பார்கள். நான் இதை மனோ பாடியது என்றே நீண்ட நாள் நினைத்துக்கொண்டிருந்த்தேன்.

பாடல் வரிகளும் அழகாக அமைந்திருக்கும்.

5

ஜானகியும் பாலுவும் அமர்களமாகப் பாடியிருக்கும் இந்தப் பாடல் அருமையான பாடல்.

6

"நான் பாடும் பாடல்" படம் வந்த காலகட்டத்தில், ஒவ்வொரு கல்லூரி இசை நிகழ்ச்சியிலும் தவறாது அப்படத்தின் பாடல்கள் இடம் பெற்றன.

தேவன் கோவில் தீபம் ஒன்று பாடலில் சுரேந்தரோடும், பாட வா உன் பாடலை-யில் தனி ஆவர்த்தனமாகவும் ஜானகி விஸ்பரூபமே எடுத்திருப்பார். மிக மிக அருமையாகப் பாடியிருப்பார்.

1

ஒரே ஒரு வாத்தியம் (தபேலா) மட்டும் உபயோகப் படுத்தப்பட்ட இந்தப் பாடலை காதைச் செவிடாக்கும் வண்ணம் ஏகத்துக்கு இரைச்சலாக வாத்தியங்களை இசைத்து குரலின் கழுத்தை நெறிக்கும் இசையமைப்பாளர்கள் ஒரு முறை கேட்டால் தேவலை.

"தனிமையோடு சத்தமாகப் பேசிக் கொள்கிறேன்".... ம்ம்...

2

சிகரம் என்றாலே மற்ற பாடல்களைப் பற்றிப் பேசுவதற்கு முன்பு இந்தப் பாடலைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியா வண்ணம் இது தவிர்க்கப் பட முடியாத பாடலாகிவிட்டது. எல்லாரும் நிறைய இந்தப் பாடலைப் பற்றிப் பேசியாகி விட்டபடியால், வேறு ஒன்றும் புதிதாகச் சொல்வதற்கில்லை. நேரடியாகப் பாடலுக்குப் போய்விடுவோம்.

2

லா லா என்று முடியும் இந்தப் பாட்டை ஒரு சவாலுக்காகக் கண்ணதாசன் எழுதினார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். லாவ வேண்டுமென்பதற்காக வெறுமனே வார்த்தைகளை இட்டு நிரப்பாமல் அழகான வரிகளுடன் எழுதியிருக்கிறார் கவியரசர். மெல்லிசை மன்னரின் இசையில் பாலுவின் குரல் பாடலுக்கு இன்னும் அழகு சேர்க்கிறது.

7

அது 1992 இல். இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. எனது நண்பன் ராஜாங்கம் வீட்டின் மேல்மாடியிலிருந்த அவனது பிரத்யேக அறையில், எங்கள் விருப்பப்படி நண்பர் செல்வராஜ் சக்திவாய்ந்த Amplifier வைத்து Assemble செய்து கொடுத்த Tape Recorder-இல் "யாரோ ஏ.ஆர்.ரஹ்மானாமே... புதுசா ம்யூசிக் போட்ருக்கார்.

8

ரொம்ப நாளா இந்த பாட்டைப்போடணுமின்னு ஒரு ஆசை. சின்னவர் படத்துல SPB சித்ராவுடன் இணைந்து பாடிய பாடல். இதே படத்துல வரும் "அந்தியிலே வானம் தந்தனத்தோம்.." பாடல் பயங்கர ஹிட்... ஆனாலும் எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்.

8

வேறு எந்த விஷயத்துக்காக இல்லாவிட்டாலும் குடும்பத்தோடு சென்று நெளியாமல் படத்தைப் பார்க்கமுடியும் என்ற ஒரே காரணத்திற்காக இயக்குனர் கதிரின் படங்கள் எனக்குப் பிடிக்கும். "இதயம்" காதலை மென்மையாகச் சொல்லாமல் சொன்னது.

13

வறுமையின் நிறம் சிகப்பில் நிஜம் நேரடியாக முகத்தில் அறைந்தது. சரி படத்துக்குள் போக வேண்டாம். அது வேறு வகையான உள்ளிழுப்பு! :(

இந்தப் படத்தில் பாலு சில அற்புதமான பாடல்களைப் பாடியிருக்கிறார்.

சங்கராபரணம் போலக் கம்பீரமாக "நல்லதோர் வீணை செய்தே"யைப் ம்ஹூம்.

7

தமிழக அரசு அறிவித்துள்ள 2003-2004 ஆண்டுகளுக்கான "கலைத் துறை வித்தகர்கள் விருது" பிரிவில் "தியாகராஜ பாகவதர் விருது" திரு. எஸ்.பி.பாலசுப்ரமண்யம் அவர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலுவின் மகுடத்தில் இன்னுமொரு வைரம். வாழ்த்துகள் பாலு!

அவரோடு இந்த விருதைப் பெறும் மற்ற கலைஞர்கள் : ஏ.எல்.

3

தம், தூள், கில்லி, டமால், டூமீல் என்று தலைப்புகள் திரைப்படங்களுக்கு வைக்கப்பட்டு கூட்டம் கூட்டமாகத் தெருவில் நடனம் ஆடுகிறார்கள். அடிதடி பொறி பறக்கிறது.

7

SPB என்பதற்கு ஆயிரம் விளக்கங்கள் இருந்தாலும், முதலும் முந்நிலையும் பாலுவிற்குத்தான். அந்தக் குரலுக்கு மயங்காதவர் எவர் உண்டு? எத்தனையோ படங்கள் இந்தக் குரலினாலேயே ஓடிய காலங்கள் உண்டு. மதர்லேண்ட் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பாளர்களின் படங்கள், பாலுவின் பாட்டினாலேயே ஓடியது என்பதை மறக்க முடியாது.

2

உண்மைதாங்க SPBயின் குரலில் சுவரங்கள் நாட்டியமாடும். எப்பவுமே பாட்டு கேட்டோம்னா அதுங்கூடவே பாடுற பழக்கம் எல்லாருக்கும் இருக்கும், நானும் அப்படித்தான். ஆனா SPB பாடின பாடல்கள் சில கேட்கும்போது ரொம்ப எளிமையா இருந்தாலும் பாடும்போது தொண்டை வேலை நிறுத்தம் செய்யும்.

7

எனக்கு இசைஞானம் கடுகளவும் கிடையாது. ஆனாலும் இப்பாடல் கேதாரம் என்ற ராகத்தில் அமைந்தது என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

காலைப் பொழுதுகளையே பெரும்பாலும் சிலாகித்துக் கவிஞர்கள் கவிதை பாடுகிறார்கள் என்று எனக்குத் தோன்றியதுண்டு.

17

1996-இல் இந்த படம் வந்த போது பிரத்யேக ரயிலெல்லாம் விட்டார்கள். ஏ.ஆர். ரகுமானின் இனிய இசை.

5

உள்ளங்கை நெல்லிக்கனியைப் பார்க்கக் கண்ணாடி தேவையில்லை. அதுபோல பாடும் நிலாவுக்கு அறிமுகம் தேவையில்லை - இல்லையா? இருந்தாலும் முதல் மடலில் குறிப்பாக ஏதாவது சொல்லி ஆரம்பித்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பதால் சில நினைவூட்டல்களுடன் தொடங்குகிறேன்.

7
இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading