பருவமே புதிய பாடல் பாடு
1981-இல் மகேந்திரனின் இயக்கத்தில் வெளிவந்த நெஞ்சத்தைக் கிள்ளாதே படம் பார்க்கவில்லை. ஆனாலும் இந்தப் பாட்டை ஒளியும் ஒலியும்-இல் பார்த்ததுண்டு. காலை நேர ஓட்டப்பயிற்சி செய்யும் சுகாசினியும் மோகனும். சுகாசினி அறிமுகம். இளையராஜாவின் இசை. பாலுவும் ஜானகியும் பாடியிருக்கிறார்கள்.
3Ugadi Subhakaankshalu!
அனைத்து தெலுங்கு சகோதர சகோதரிகளுக்கும் மனங்கனிந்த இனிய தெலுங்குப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
1நானென்ன கள்ளா, பாலா? நீ சொல்லு நந்தலாலா!
சிம்லா ஸ்பெஷல் (1982) ஒரு வெள்ளித் திரை நாடகம். Y.G. மகேந்திரன், S.Ve. சேகர், மனோரமா, Sriப்ரியா மற்றும் நாடகக் குழுவினோரோடு நட்பு, பாசம் போன்ற செண்ட்டியெல்லாம் கலந்து கட்டி முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வந்த படம்.
நிறைய நகைச்சுவைக் காட்சிகளும், அறுவை ஜோக்குகளும் விரவியிருக்கும் படம்.
நிவேதா!
இந்த மாதிரி பாடல்கள் மட்டும் என்றால் பாடலாசிரியர்களே சினிமாவுக்குத் தேவையில்லாது போய்விடும். :) :)
ஒரு படம் வெற்றிபெற்றதும் அதே போலவே பத்து படங்கள் வரிசையாக வந்து வரிசையாக மண்ணைக் கவ்வும். அல்லது வெற்றி பெற்ற நடிகர்களை வைத்து ஒரு "அட்டு" படத்தை எடுத்துக் கவிழ்ப்பார்கள்.
துள்ளித் திரிந்ததொரு காலம்
என்றும் அன்புடன் படத்தில் பாலு பாடியிருக்கும் இந்தத் தனிப்பாடல் மிகவும் இனிய பாடல். இதில் முரளி கல்லூரி மாணவனாக வரவில்லை என்று நினைக்கிறேன். :)
இளையராஜாவின் இசையும் மிகவும் இனிமையாக இருக்கும்.
அசத்தலான ஆரம்ப ஆலாபனையுடன் சட்டென்று ஆரம்பித்துத் தவழும் பாடல்.
வளையோசை கலகலகலவென
முன் குறிப்பு:-
எவ்வளவோ முயற்சித்தும் பாடலில் மட்டும் கவனத்தைச் செலுத்தாமல் படத்தைப் பற்றியும் நிறைய எழுதியதால் நீளமான பதிவாகிவிட்டது. கமல் ரசிகனாயிருப்பதில் உள்ள சிரமங்களில் இதுவும் ஒன்று! :) பொறுத்தருள்க!
1988-இல் வந்து அதிரடியாகக் கலக்கிய படம் சத்யா. சரியாகச் சொல்வதானால் 1988 ஜனவரி-28 இல்.
அந்தி மழை பொழிகிறது
பாலுவை முதன்முதலாகத் திரையில் நான் பார்த்தது கமலின் நூறாவது படமான ராஜ பார்வை படத்தில் இந்தப் பாடலின் ஆரம்பத்தில் வரும் சில நொடிக் காட்சியில்தான்.
இளையராஜா, வைரமுத்து, பாலு என்ற மூவர் கூட்டணி கொடுத்த எத்தனையோ முத்துகளில் இந்தப் பாடலும் ஒன்று.
பூங்காற்று உன் பேர் சொல்ல
ஏஜெண்ட் XII என்று ஒரு காமிக்ஸ் கதையைச் சிறுவயதில் படித்திருக்கிறேன். அதில் வரும் நாயகன் ஒரு உளவாளி. ஏதோ விபத்தில் அடிபட்டு நினைவுகளைப் பறிகொடுத்து தான் யாரென்று கண்டுபிடிப்பதற்காக - "நான் நல்லவனா கெட்டவனா?" என்று அவனாகவே கேட்டுக்கொள்ளும் பாத்திரம் - மெனக்கெட்டு செய்யும் சாகசங்களே கதை.
7வெண்மேகம் விண்ணில் நின்று கண்ணில் இன்று பன்னீர் தூவும்
நான் சிகப்பு மனிதனில் பாலு பாடியிருக்கும் இன்னொரு அருமையான மென்மையான உணர்வுப் பூர்வமான பாடல் இது. பெண்மானே-யில் இருக்கும் காதல் ததும்பும் கவர்ச்சிக் குரல் இதில் இல்லை. ஆழமான குரலில் - அண்ணன் பாசத்துடன் பாடும் தொனியைக் குரலில் கொண்டுவந்துவிடுவது பாலுவுக்குக் கடவுள் தந்த வரம்.
6முதன் முதலாக காதல் டூயட்
ஜாலியா ஒரு பாட்டு கேட்கலாமா. காதல் என்றாலே அங்கே ஊடல் சகஜம் தானே. அப்புறம் காதலன் தான் கெஞ்சி கூத்தாடி பாட்டு பாடணும். அம்மணி எறங்கி வரவே மாட்டாங்க. இங்கே எஸ்.பி.பி படும் பாட்டை கேளுங்கள். எஸ்.ஜானகி வாங்கு வாங்குன்னு வாங்கறாங்க.
15பெண்மானே சங்கீதம் பாடவா
திகட்டத் திகட்ட இனிப்பு சாப்பிடுவது போன்றது ஜானகியும் பாலுவும் சேர்ந்து பாடிய மெல்லிசைப் பாடல்களைக் கேட்பதென்பது - இளையராஜாவின் இசையில். எத்தனையெத்தனை பாடல்கள்! இருபது வருடங்கள் கழித்துக் கேட்டாலும், நேற்று கேட்டது போலத் தோன்றும், இனிய பாடல்களை ஏராளமாக இந்தக் கூட்டணி நமக்குக் கொடுத்திருக்கிறது.
4என்ன அழகு! எத்தனை அழகு!
விஜய்யும் சுவலட்சுமியும் நடித்த லவ் டுடே படத்தின் இந்தப் பாடல் குஷியைக் கிளப்பும் குதூகலப் பாடல். வழக்கமான கோஷ்டி நடனக் காட்சியமைப்புதான்; ஆனால் பாடல் துள்ளல் தாளத்துடன் படுவேகமாகச் செல்கிறது. பாலு அருமையாகப் பாடியிருக்கிறார்.
8தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் எறங்கு!
சிட்டுக்குருவி (1978) படத்தில் வரும் இந்தப் பாடல் சற்று புதுமையாக - அந்தக் காலத்தில்! - இருந்திருக்கும். வார்த்தை வார்த்தையாகப் பாடி முதல் வார்த்தை முடியுமுன்னே அதே பாடகர்/பாடகி பாடிய இரண்டாவது வார்த்தையும் ஆரம்பித்து அப்படியே தொடர் ஓட்டம் போன்று ஓடிச்செல்லும் இந்தப் பாடல் மிகவும் இனிமையான பாடல்.
6கேளடி கண்மணி பாடகன் சங்கதி
புதுப்புது அர்த்தங்களில் வரும் பாலுவின் இன்னொரு தனிப்பாட்டு "கேளடி கண்மணி பாடகன் சங்கதி" என்ற சிறப்பாகப் பாடப்பட்ட பாடல்.
பாடகன் பாடுவது போல பாடப்பட்ட பாடல்களைப் பாலு பாடுகையில் (எத்தனை "பா"!) நடிகர் நினைவில் வராமல் பாலுவே பாடுவது போல ஒரு பிரமை ஏற்படும்.
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
புதுப்புது அர்த்தங்கள் எனக்கு பலவிதங்களில் பிடித்த படம். பாலசந்தரின் வழக்கமான காட்சியமைப்புகள் நிரம்பியிருந்தாலும் ரகுமான், கீதா ஆகிய இருவரின் அற்புத நடிப்போடு - சித்தாராவின் பாந்தமான நடிப்பும் சேர்ந்து படத்தை விறுவிறுப்பாகக் கொண்டு செல்லும்.
5இதயத்தைத் திருடிய கீதாஞ்சலி
எந்தப் படத்தையும் பொதுவாக நான் அடித்து பிடித்துப் பார்ப்பதில்லை. டிக்கெட் வரிசையில் நிற்பவர்கள் தோள் மீது ஏறிச் செல்லும் கலையைப் பயின்றிருக்காததும் வரிசையில் நின்று தோள் மீது நடந்து செல்பவரைத் தாங்கும் பொறுமையும் இல்லாததும் காரணங்கள்.
15அச்சமில்லை அச்சமில்லை
பார்க்காமல் தவறவிட்ட படங்களில் ஏழாவது மனிதன் படமும் ஒன்று. எல்.வைத்யநாதன் இசையில் மகாகவி பாரதியார் பாடல்கள் நிறைந்த ரகுவரன் நடித்த படம்.
ஜேசுதாஸ் நான்கு பாடல்களும் ராஜ்குமார் பாரதி இரு பாடல்களும் பாடியிருக்கின்றார்கள். மொத்தம் பத்து பாடல்கள் இந்தப் படத்தில்.
என்ன சத்தம் இந்த நேரம்
கம்ப்யூட்டர் மூலம் இசை என்று செய்தி வந்து ஜூரம் போன்று கம்ப்யூட்டர் ம்யூசிக் என்று எல்லாரும் சிலாகித்த நேரம் அது. புன்னகை மன்னனில் (1986) இளையராஜா கம்ப்யூட்டரை வைத்து இசையமைத்திருக்கிறார் என்று பரபரப்பாகப் பேசிக்கொண்டார்கள்.
2மழையும் நீயே வெயிலும் நீயே
அழகனில் அந்த இரண்டாவது பாட்டு இதுதான். பதிவுகள் பதியும்போது ஒவ்வொரு பாட்டையும் பொறுமையாகக் கேட்டு பாடல்வரிகளை எழுதியே போடுகிறேன். இணையத்தில் தேடுவது பாடலில் ஒலிக்கோப்புக்காகவும் இசையமைப்பாளர் படம் பற்றிய விவரங்களுக்கு மட்டும்தான்.
3சாதிமல்லி பூச்சரமே
அழகன் படத்தை நான் இதுவரை பார்க்கவில்லை. இசை மரகதமணி (ஏனோ தமிழில் பெரிய அளவில் வராமல் போய்விட்டார்). ஆனால் அந்த தூர்தர்ஷன் பாடலை அடிக்கடி முன்பு ஒலியும் ஒளியும்-இல் பார்த்திருக்கிறேன் (சங்கீத ஸ்வரங்கள்).
4எனைக் காணவில்லையே நேற்றோடு
அப்பாஸ் அறிமுகமாகி, அட்டகாசமான அரங்க அமைப்புகளுடன், அதிரடியான ஏ.ஆர்.ரஹ்மானின் இசையுடன் தமிழகத்தை ஒரு கலக்கு கலக்கிய படம் "காதல் தேசம்" (1996).
8மறுபடியும் மறுபடியும் : எல்லோரும் சொல்லும் பாட்டு
மறுபடியும் படத்தின் நலம் வாழ-வில் லேசாகச் சோகம் கலந்திருப்பது போன்ற ஒரு பிரமை பாடலைக் கேட்கும்போது தோன்றிகொண்டே இருக்கும். ஆனால் இந்தப் பாடலை மிகவும் தெளிவாக சீரான நீரோட்டம் போன்ற குரலில் பாலு பாடியிருக்கிறார்.
கேட்பதற்கு அவ்வளவு இனிதாக ஒலிக்கும் பாடல் இது.
மலையோரம் வீசும் காற்று
இழிவுபடுத்தப்பட்டு அவமானப்பட்டு தனித்திருக்கும் ஒருவனின் உளக்குமுறலையும் ஆதங்கங்களையும் ஏக்கங்களையும் வெளிப்படுத்தும் விதமாகக் காட்சியமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலில் மோகன் மிக நன்றாக நடித்திருப்பார்.
2நிலவு தூங்கும் நேரம்
"மைக் மோகன்" என்று என்னதான் கிண்டலடித்தாலும் தமிழ்ச் சினிமாவில் அதிக சில்வர் ஜூப்ளி படங்களைக் கொடுத்தவர் என்ற பெருமையை இன்னும் தக்கவைத்துக் கொண்டிருப்பவர் நடிகர் மோகன் (சரிதானே?).
9Yes. I love this idiot.. I love this lovable idiot....
கோபுர வாசலிலே படத்திலேயே பாலுவும் சித்ராவும் பாடியிருக்கும் அற்புதமான காதல் பாட்டு இந்தப் பாட்டு. ஆரம்ப வசன வரிகளைத் தொடர்ந்து வயலின் சரசரவென்று தொடங்கி நம்மை இழுத்துக்கொள்ள, புல்லாங்குழல் சேர்ந்துகொண்டு ஒரு கனவுலகுக்கே இட்டுச் செல்லும்.
12கேளடி என் பாவையே ஆடவன் உன் தேவையே
பிரபல மலையாள டைரக்டர் பிரியதர்ஷன் தமிழில் முதன்முதலாகக் காலடி வைத்தது கோபுர வாசலிலே படத்தின் மூலம் - 1991-இல். இளையராஜாவின் அருமையான இசை, பி.சி.ஸ்ரீராமின் கண்ணுக்குக் குளுமையான - இருளில்லாத - ஒளிப்பதிவு - போன்ற பல சிறப்பம்சங்கள் இருந்தாலும் வலுவான திரைக்கதை இல்லாததால் படம் சரியாகப் போகவில்லை.
மறுபடியும்
மறுபடியும்
ஆர்ப்பாட்டமில்லாத நடிப்புடன் அரவிந்த சாமியும், அருமையான நடிப்புடன் ரேவதியும் நன்றாகச் செய்திருந்த படம் மறுபடியும். என்னை மறுபடியும் மறுபடியும் பலமுறை கேட்கத் தூண்டியது இந்தப் பாடல். பாடலின் காட்சியாக்கமும் நன்றாக இருக்கும்.
வெண்ட்ரிலோக்யுஸம் (Ventriloquism)
கூர்ந்து கவனித்தால் மட்டும் உதடுகள் மிக லேசாக அசைவதைக் கண்டுபிடிக்கமுடியும் வெண்ட்ரிலோக்யுஸம் (ventriloquism) என்ற கலையைப் பழகக் கடுமையான பயிற்சிகள் தேவை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
4Breathless # 2 : சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
1998-இல் என்று நினைக்கிறேன். Breathless என்ற ஒரே ஆல்பத்தில் அகில இந்திய அளவில் பிரபலமானார் ஷங்கர் மகாதேவன். அவருக்கு நல்ல இனிமையான குரல். அந்தப் பாடலின் ஒளியாக்கமும் சிறப்பாக இருக்கும். இசையும் கூடவே ஓடிவரும் - அழகான பாடல். ஜாவித் அக்தர் இயற்றியது. சும்மாவே ஹிந்தி தெரியாமல் முழிக்கும் ஆசாமி நான்.
13Breathless # 1 : மண்ணில் இந்தக் காதலன்றி
இசைஞானி கேளடி கண்மணி படத்துக்காக ஒரு மூச்சுவிடாத பாடலை இசையமைத்து பாலுவைப் பாட வைத்திருக்கிறார். தமிழகத்தில் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்த பிரபலமான பாடல். இப்பாடலில் படமாகியிருக்கும் கடற்கரையின் ஓயாதிருக்கும் அலைகளைப் போலவே பாடலும் மனதில் நீண்டகாலமாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.
4