தர்பாரி கானடா - என்றவுடன் பயமாகத்தான் இருந்தது. கர்ணா (1995) படத்தின் இந்தப் பாடல் அமைந்த ராகமாம் அது.

பாடலை எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன். வடக்கத்திய கஜல் போல இது தமிழ்க் கஜல் என்று யாரோ ஒரு பேட்டியில் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது.

9

-0-

பாலா இயக்கிய நந்தா படம் (2001) சூர்யாவுக்கு நல்ல திருப்புமுனையைத் தந்த படம்.

4

அவளுக்கென்று ஓர் மனம் படத்தில் மெல்லிசை மன்னர் இசையில் பாலுவும் சுசீலாவும் பாடியிருக்கும் இந்த இனிய பாடலைக் கேளுங்கள். பாடல் எழுதியது கவியரசர். பாலுவின் குரல் படு இளமையாக அன்று இருந்ததையும் இன்று முதிர்ந்து மெருகேறி வைரம் பாய்ந்த மரம் போல கம்பீரமாக ஒலிப்பதையும் - கால இடைவெளியையும் - உணர முடிகிறது.

1

தனியிடமாகத் தேர்ந்தெடுங்கள். இரவுப் பொழுதாக இருத்தல் முக்கியம். முடிந்தவரை சந்தடியில்லாத இடமாக இருக்க வேண்டும். புழுக்கமான அறை வேண்டாம். திறந்த வெளியோ மொட்டைமாடியோ பரவாயில்லை. ஹெட்போன் இருந்தால் இன்னும் சிறப்பு. கண்களை மூடிக் கொள்ளுங்கள். உடலை விறைப்பாக இல்லாமல் தளர விடுங்கள்.

5

பொண்ணுக்குத் தங்க மனசு (1973-74) படத்தில் ஜி.கே. வெங்கடேஷ் இசையமைப்பில் கவியரசரின் வரிகளில் பாலுவும் ஜானகியும் இந்த இனிய பாடலைப் பாடியிருக்கிறார்கள். விஜயகுமார் அறிமுகமான படம் என்று நினைக்கிறேன். இது இளையராஜா இசையமைத்துள்ளது என்று நீண்ட காலமாக நம்பிக் கொண்டிருந்தேன்.

9

இது தேவதாஸ் மோகன் பாடும் பாட்டு. அருமையான சில்-அவுட் காட்சிகள் நிறைய இருக்கும். ஆரம்ப வரிகளில் பாலுவின் குரல் மிகவும் வித்தியாசமாக இருக்கும். சோகப் பாட்டு. அமைதியான இரவுகளிலும் கேட்கலாம்.

3

மேல் ஸ்தாயியிலேயே முழுப்பாடலையும் பாடியிருக்கிறார் பாலு. ஒரு தடவை பாடிப் பார்த்ததில் தாடையிலிருந்து கழுத்து முழுவதும் வலி பின்னியெடுத்தது. "வேதனையைத் தூண்டுதடி" என்பதில் வ்வேதனையை என்று அழுகுரலில் அட்டகாசமாகப் பாடி மோகனின் நடிப்பை நிறைவு செய்திருப்பார் பாலு. அருமையான பாடல்.

1

பயங்கர குஷியுடன் இந்தப் பாடல் துள்ளல் நடை போட்டுக் காற்றினில் தென்றலாய் வந்து நம்மைத் தழுவும். இசையும் குரலும் போட்டி போட்டுக் கொண்டு கபடி ஆடும். இரண்டாம் சரணம் முடிந்ததும் பாலுவும் ராஜாவும் ஒரு விளையாட்டு விளையாடியிருக்கிறார்கள் கேட்டுப் பாருங்கள்.

1

இது கொஞ்சம் தத்துவார்த்தமான ஆனால் மிக அருமையான பாடல். இளையராஜா ஒரு விசேஷமான மனநிலையில் இருந்திருப்பார் போல. அவ்வளவு அருமையான ட்யூன். மூன்று சரணங்கள். இரண்டாவதை இளையராஜாவுக்காகவே அமைந்தது போல இருக்கும்.

1

மதுரை அழகப்பன் நகர் தாண்டி வரும் பைக்காராவிலிருந்து உள்ளே செல்லும் பாதையில் சென்றால் வயற்காடு வரும். அதனுள்ளே தள்ளி ஒதுங்கியிருந்தது சரவணா டூரிங் தியேட்டர். அங்கே தான் நானும் என் நண்பர்களும் சேர்ந்து இரண்டாம் ஆட்டத்திற்குப் போய் இதய கோவில் படம் பார்த்தோம்.

2

picture courtesy: www.rajinifans.com

தங்கமகன் படத்தில் ரஜினியும் பூர்ணிமாவும் நடித்திருக்கிறார்கள். காதல், மோதல் நிறைந்த வழக்கமான கதை. நல்ல பாடல்கள், போட்டிப் பாடல் என்று இசை மழை பெய்த படம்.

7

ரோஜா மலரே படத்தில் ஆதித்யன் இசையில் மொத்தம் எட்டு பாடல்கள். முரளி, விவா மாதிரி ரீவா, ஆனந்த்பாபு, அருண் பாண்டியன் நடித்துள்ள படம் - ஜெயமுருகன் இயக்கத்தில்.

1

அதிரடியான ஆரம்ப இசையுடன், ஒளி கண்ணா மூச்சி ஆடும் காட்சியமைப்புடன் ரஜினியின் வித்தியாசமான நடனத்துடன், பாலு, ஸ்வர்ணலதாவின் துள்ளும் குரல்களில் - பாலு அநியாயத்திற்கு சேட்டை செய்திருப்பார், எல்லாவற்றையும் கேட்டு அப்படியே எழுத எனக்குக் கட்டுப்படியாகாது சாமி - நடுவே தேவார பாசுரப் பகுதி ஒன்றும் கலந்து - ம்

5

தளபதி (1991) ரஜனிக்கு ஒரு மைல்கல். படம் வந்த புதிதில் நாங்களெல்லாம் ராணுவப் பச்சை நிறத்தில் சட்டை போட்டு அலைந்து கொண்டிருந்தோம். சற்றே மெதுவாக நகரும் படம்.

5

அமரன் படத்தில் (கார்த்திக் சொந்தக் குரலில் ஒரு பாடல் பாடியிருக்கிறார்) ஆதித்யன் இசையமைப்பில் இந்தப் பாடல் ஒரு அற்புதம். கார்த்திக் வித்தியாசமான சிகையலங்காரத்துடன் - அவரது வழக்கமான குறும்புக் காதலன் பிம்பத்துக்கு மாறாக - நடிக்க முயன்ற படம் என்று நினைக்கிறேன்.

2

தம்பிக்கு எந்த ஊரு (1984) படத்தில்தான் பாம்பு வரும் நகைச்சுவைக் காட்சியை முதலில் ரஜினி செய்தார் என்று நினைக்கிறேன். பின்பு அண்ணாமலையிலும் பாம்புக் காட்சி வந்தது. இளையராஜாவின் இசையில் பஞ்சு அருணாசலத்தின் பாடல் வரிகளில் மிகமிக இனிமையான இந்தப் பாடலைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை.

10

பகலில் ஒரு இரவு படத்தில் "ஆசையக் காத்துல" பாணியில் "தோட்டம் கொண்ட ராஜாவே" என்ற ஒரு பாடல் இருக்கிறது (ராஜா, ஜென்ஸி பாடியிருக்கிறார்கள்). ஆனால் அதைவிட "தாஆஆம்த தீஈஈஈம்த ஆஆஆஆடும் உள்ளம் பாடும் காஆஆஆவியம்" என்ற அட்டகாசமான (பாடுவதற்குச் சிரமமான) பாடலும் இருக்கிறது. ஜானகியம்மா பாடியிருக்கிறார்.

2

பகலில் ஒரு இரவு 1979-இல் ஐ.வி.சசி இயக்கத்தில் வந்த படம். "ஓர் இரவு" என்றிருக்க வேண்டும். "ஓர் அணில் ஒரு மரத்தில் ஏறியது" என்று தமிழாசிரியர் சொல்லிக் கொடுத்தது நினைவுக்கு வருகிறது. அணில் மரத்தில் ஏறுவது இருக்கட்டும்.

9

ஆறிலிருந்து அறுபது வரை! இந்த ஒரு வாசகம் எழுதினா..... நூறு வாசகம் எழுதினா மாதிரி! :) :) சரிசரி. கொஞ்சம் பாடலைப் பற்றி.

ரஜினியின் 51-வது படம். 1979-இல் வந்தது. S.P. முத்துராமன் இயக்கத்தில் பஞ்சு அருணாசலம் தயாரிப்பில்.

5

உல்லாசப் பறவைகள் (1980) - பெயருக்கு ஏற்றபடி உல்லாசப் பயணத்திற்குச் செல்லும் - கொசுவர்த்திச் சுருள் பழைய நினைவுகளை மறக்க முயற்சி செய்யும் - கதாநாயகன் - பழைய காதலி (தீபா) இறந்து போக, புது கதாநாயகி ரத்தி அக்னிஹோத்ரியோடு ஜெர்மனிக்கு உல்லாசப் பயணம்.

9

பாரதிராஜாவின் கேப்டன் மகள் (1991) படத்தில் சில காட்சிகளைத் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். அவரது ஆஸ்தான நடிகர் ராஜாவும் குஷ்புவும் நடித்துள்ள படம். குஷ்பு தமிழ்ச்சினிமாவில் கொடி(கோவில்) கட்டிப் பறந்த காலம்.

6

(படத்தில் டை கட்டிக் கொண்டு நின்று கொண்டிருப்பவர் இசையமைப்பாளர் விஜயபாஸ்கர்)

ஆடு புலி ஆட்டம் படம் என் நினைவுகளில் மேகமாகவே மிச்சமிருக்கிறது.

9

(புகைப்படத்தில் இடது பக்கத்திலிருந்து - பாலு, கண்டசாலா, தயாரிப்பாளர் மூர்த்தி, இசையமைப்பாளர் M.B. சீனிவாசன் - நன்றி: www.ghantasala.info)

மதன மாளிகை (1976) படத்தில் M.B. Srinivasan இசையமைப்பில் பாலு பாடியிருக்கும் அருமையான இந்தப் பாடலை எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன்.

8
இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading