தில்லு முல்லு படம் ரஜினியின் மகுடத்திலிருக்கும் ஒரு வைரம். நகைச்சுவை நடிப்பு கடினம். தனக்கு அதுவும் அனாயசமாக வரும் என்று ரஜினி அப்போதே ஆணித்தரமாக நிரூபித்த படம் தில்லு முல்லு. சரவெடி போன்று காட்சிக்குக் காட்சி தேங்காய் ஸ்ரீநிவாஸனும் ரஜினியும் பட்டையைக் கிளப்பியிருப்பார்கள்.

2

நேற்று இன்று நாளை.. என்றும் மெல்லிசை மன்னர் மெல்லிசை மன்னர்தான். அவரது இசையில் தென்றல் காற்றாக பாலு பாடியிருக்கும் இந்தப் பாடல் எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று.

"எங்கும் பாடும் தென்றல் காற்றும் நானும் ஒன்றுதானே!" - ஆமாம் பாலு. நீங்களும் தென்றல் காற்றும் ஒன்றுதான்.

1

மீரா (1992) பி.ஸி.ஸ்ரீராம் இயக்கி ஒளிப்பதிந்த படம். "அந்தக் கால" விக்ரமும், அழகு ஐஸ்வர்யாவும் நடித்திருந்த படம். ஷங்கர் பாணியில் ஒரு வருடமோ என்னவோ இழுத்து எடுக்கப்பட்ட படம். அழகுணர்ச்சி மிகுந்திருப்பவர்கள் கனவுகள் நிரம்பியவர்கள். யதார்த்தத்தைச் சுலபத்தில் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

5

பாலுவின் உச்ச ஸ்தாயியில் ஆரம்பித்து பாடல் நடனமாடிக் கொண்டே போகிறது. இசை அற்புதம். இன்னொரு இனிய பாடல் சலங்கையில் ஒரு சங்கீதம் படத்திலிருந்து. பாடல்கள் அனைத்திலும் பாலு முழுமையாக ஆளுமை செய்திருக்கிறார்.

இந்தப் பாடலை பாலுவும் ஜானகியும் அற்புதமாகப் பாடியிருப்பார்கள். அவர்கள் குரல்களோடு, இசை சுழன்றாடி, நம்மை ஒரு கனவுலகுக்கே இட்டுச் செல்லும். கேட்டுப் பாருங்கள். மனங்களின் சங்கமச் சுழற்சியில் நாமும் சிக்கிக்கொண்டு தவிப்போம்.

நீண்ட நாள்களாக இந்தப் படத்தின் பாடல்கள் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தேன். சிரமமெடுத்துப் பாடல்களைத் தேடித்தந்த கோவை ரவீ அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

தெலுங்கில் வந்த "ஆலாபனா" என்ற படம் தமிழ் ஒலி வடிவத்தில் "சலங்கையில் ஒரு சங்கீதம்"-ஆக வந்தது.

6

மகுடி படம் (1984) மோகனும் நளினியும் நடித்தது என்று நினைக்கிறேன். மகுடி என்றாலே நாகம் மட்டும்தான் மயங்க வேண்டுமா? ராஜாவின் மகுடி ஊதியிருக்கும் இந்தப் பாடல் அப்படியே நம்மை மயங்கிப் போகச் செய்துவிடும். ஜானகியும் பாலுவும் இனிமையாக அருமையாகப் பாடியிருக்கிறார்கள். வீணையும் வயலினும் போட்டி போடுகிறது.

1

அபூர்வ சகோதரர்கள் (1989) படம் ஒரு அபூர்வம். குள்ள அப்புவுக்கு புன்னகை மன்னனிலேயே முன்னோட்டம் பார்த்துவிட்டாலும் அபூர்வ சகோதரர்களில் பிரம்மாண்டமாகச் செய்திருந்தார் கமல். தமிழ்ச் சினிமாவின் ஒவ்வொரு துறையிலும் இயன்ற அளவு தரத்தைக் கொடுப்பதில் கமல் படங்களுக்கு விசேஷ இடம் உண்டு.

2

விஜய்யின் கொத்துப்புரோட்டா படங்களை மறந்திருக்க மாட்டோம். அவற்றிலும் ஒன்றிரண்டு முத்துகள் அவ்வப்போது சிக்குவதுண்டு. தேவா (1993) படத்தின் இந்தப் பாடல் மிக இனிமையானது. சரணத்தை முதலில் விஜய் படிக்கப் பின்பு சன்னமான குரலில் பாலு பாடத் துவங்குவார்.

2

வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் இருக்கும் இந்தப் பாடல் அற்புதமானது. எல்லாரும் ரசித்திருப்போம் என்பதால் நிறைய விளக்கங்கள் தேவையில்லை. பாலுவும் ஜானகியும் கமலையும் ஸ்ரீதேவியையும் கண்முன் கொண்டுவந்திருப்பது கூட்டுவெற்றி. அபாரமான நடிப்பு. அபாரமான இசை. அபாரமாகப் பாடியிருக்கிறார்கள்.

இதயத்தை வலிக்கச் செய்யும் படங்கள் உண்டு. படம் முடிந்து வெளியில் வரும்போது ஒருவித இயலாமையும், ஆத்திரமும், ஆதங்கமும், சோகமும் உள்ளத்தைக் கவ்விக் கொண்டு, இறுக்கத்துடன் செல்வோம். அதன் பாதிப்பும் பல நாட்களுக்கு நீடித்துத் தூக்கத்தைக் கெடுக்கும்.

3

அப்போதெல்லாம் மாருதி கார்கள் மிகவும் பிரபலம். மொட்டை அம்பாஸிடர்களுக்கும், ஒல்லிப்பிச்சான் ப்ரீமியர் பத்மினிகளுக்கும், ரயில் நீள ப்ளைமவுத்களுக்குமிடையே அந்தச் சிவப்பு நிற மாருதி கார் பளிச்சென்று கண்ணை கவரும்.

3

அப்போது நான் +2 படித்துக் கொண்டிருந்தேன். அம்மன் கோவில் கிழக்காலே (1986) மதுரை திருநகர் கலைவாணி திரையரங்கில் - சுருக்கமாக "ஊர்க் கோடியில்" வெளியிடப்பட்டு ஓடிக்கொண்டிருந்தது. நாங்கள் ஒரு கோஷ்டி இளையராஜா பாலு ஜானகியின் அதி தீவிர ரசிகர்கள்.

1

“A bet of 3 Rupees”

In my childhood, this was a usual dialogue in my friends circle. Actually the betting value is fixed as we knew the cost of a Ghee polished Roast+2 katori of Sambhar at the popular restaurant ‘Parthasaradhi’ of my temple city Thiruvanaikoval.

1

சரிதா என்றாலே அந்தக் குண்டு கண்கள் சட்டென்று நினைவுக்கு வரும் - கூடவே ஒலிப்பது அவரது குரல். அருமையான குரல் வளம் படைத்தவர் - நிறைய நடிகைகளுக்குக் குரல் கொடுத்திருக்கிறார். இயக்குநர் இமயத்தின் கண்டுபிடிப்பு.

10

டார்லிங் டார்லிங் டார்லிங் (1982)பாக்யராஜும் பூர்ணிமா ஜெயராமும் நடித்த ஊட்டி படம். ஊட்டி என்பதால் பசுமையான கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சிகள் அமைந்த படம். அப்போது பாக்யராஜுக்கு உதவியாளராய் இருந்த பாண்டியராஜனும் ஒரு பாத்திரத்தில் வந்திருப்பார்.

5

Finale @ Front

Music reveals some answers/solution to peace, not only it’s just a medicine.

Music @ Middle:

“In My Garden”

I can able to see my friend’s twinkling eyes while uttering the above sentence.

1

உன் கண்ணில் நீர் வழிந்தால் (1984) படம் ரஜினி, மாதவி நடித்து பாலுமகேந்திரா இயக்கியது. இப்படத்தில் ஒரு அருமையான பாடல் இருக்கிறது. பாலுவும் ஜானகியும் பாடியது. இசைஞானியின் இசை. இப்பாடலில் இருவரும் அருமையாகப் பாடியிருக்கிறார்கள்.

4

காதல் மன்னன் (1998) என்று ஒரு படம் வந்தது நினைவிருக்கலாம் (ஜெமினி கணேசன் படம் இல்லை). ஆனால் அஜீத்தைக் கட்டாயம் நினைவிலிருக்கும். மனு என்ற ஹிந்திப் படவுலகிலிருந்து வந்த நாயகியையும் நினைவிலிருக்கலாம். மெல்லிசை மன்னரும் நடித்திருக்கிறார். சரண் இயக்கியது.

3

மே மாதம் (1994) படம் ஒரு அழகான புகைப்படத் தொகுப்பு மாதிரி. கண்ணுக்குக் குளிர்ச்சியான ஒளிப்பதிவு. அந்த பெங்காலி நடிகை பெயரென்ன? ஆங் - ஸோனாலி குல்கர்னி - வினீத்துக்கு அக்கா மாதிரி காட்சியளித்தார் என்று சொன்னார்கள்.

7

நாடோடிப் பாட்டுக்காரன் படத்தில் சில பாடல்கள் மிகவும் இனிமையானவை. இசைஞானியின் ராஜாங்கத்தில் பாடல்கள் நம்மைத் தாலாட்டுகின்றன. பாலுவின் இந்தத் தனிப் பாடல் அழகான வரிகளுடன் இனிமையாக இருக்கிறது. ஆரம்பத்தில் தாள இசை சூடுபிடிக்க, சரணங்களுக்கிடையில் புல்லாங்குழல் நடனமாடுகிறது.

நந்தா என் நிலா (1977) என்ற படத்தை நான் பார்த்ததில்லை. ஆனாலும் பாலுவின் இந்தப் பாடலை எவ்வளவோ முறை அந்தக் காலகட்டத்தில் கேட்டதுண்டு. படத்தில் விஜயகுமாரும் சுமித்ராவும் நடித்திருந்தார்கள் என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியவில்லை.

7

அமர்க்களம் படத்தில் இன்னொரு அருமையான பாலுவின் தனிப்பாடலொன்று இருக்கிறது. பாடகராக விரும்புபவர்கள் ஒவ்வொருவருக்கும் உச்ச ஸ்தாயி பயிற்சிக்கு இந்தப் பாடல் உறுதுணையாக இருக்கும். அருமையான உக்கிரமான இசை. கொந்தளிக்கும் உணர்வுகளை அடக்கிப் பாடும் பாலுவின் குரல்.

9

அனுராதா ரமணின் கூட்டுப் புழுக்கள் (1987) கதை படமாக்கப்பட்டு ஆர்.சி.ஷக்தி இயக்கியிருந்தார். 1984-இல் வந்த சிறையும் ஷக்தி இயக்கிய அனுராதா ரமணன் எழுதிய கதையே. உணர்ச்சிகள், மனிதரில் இத்தனை நிறங்களா?, தர்மயுத்தம் என்று "மக்கள் இயக்குனர்" இயக்கிய படங்கள் வெளிவந்த காலகட்டங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டவை.

16

கடலோரக் கவிதைகள் (1986) படம் மதுரை அமிர்தம் தியேட்டரில் வெளியிட்டார்கள் என்று நினைக்கிறேன். படம் ஓடிய அந்தச் சிலமணி நேரங்களும் கடற்கரையில் வாழ்ந்த உணர்வைக் கொடுத்தது. படம் முடிந்து சீட்டைவிட்டு எழும்போது பேண்ட்டில் ஒட்டியிருக்கும் (?) மணலை மானசீகமாகத் தட்டிவிட்டுக் கொண்டேன்.

1

கொக்கரக்கோ (1983) இளவரசி, மகேஷ் நடிக்க கங்கை அமரன் இயக்கத்தில் இசைஞானி இசையில் வந்த படம். படமெல்லாம் யார் பார்த்தார்கள்? இந்தப் பாடல் அருமையான மெல்லிசைப் பாடல். பாலு பின்னியெடுத்திருப்பார்.

2

சுஹாசினி மணிரத்னம் இயக்கிய இந்திரா (1995) படம் முழுவதையும் பார்க்கவில்லை. சில காட்சிகளும் பாடல்களையும் பார்த்திருக்கிறேன். இசைப்புயல் வழக்கமான புயல் பாடல்களை விட்டுவிட்டுத் தென்றலாக இனிய பாடல்களைத் தந்திருப்பார். "நிலா காய்கிறது" இன்னும் கண்ணுக்குள்ளேயே காய்ந்து கொண்டிருக்கிறது.

3

உனக்காகவே வாழ்கிறேன் படத்திலுள்ள மற்றுமொரு இனிய பாடல் இந்தக் "கண்ணா உனைத் தேடுகிறேன்" பாடல். ஜானகி அழகாக அழைத்து ஆரம்பித்து சோகத்துடன் பாட, ஆறுதல் கூறும் காதலனின் உணர்வுகளைக் குரலில் நிரப்பி பாலு கம்பீரமாகத் தொடர்ந்து பாடுகிறார். கேட்பதற்கு மிகவும் இனிமையான பரபரப்பில்லாத பாடல்.

3

அன்னக்கிளியில் அறிமுகமானதாலோ என்னவோ, சிவக்குமார் படங்களுக்கு இசைஞானி சிறப்பு கவனம் செலுத்துவது போல ஒரு பிரமை! :) இவர்கள் இணைந்து எவ்வளவோ அருமையான படங்களைக் கொடுத்திருக்கிறார்கள். அருமையான பாடல்களையும்தான். எல்லாவற்றிலும் தலையாய சிந்துபைரவி பற்றி எல்லாரும் அறிவார்கள்.

2

மைக்கேல் மதன காமராஜன் (1991) படத்தை எத்தனை முறை பார்த்திருப்பேன் என்பதற்குக் கணக்கே கிடையாது. மதுரை அரசரடி மதி திரையரங்கத்தில் வழக்கமாகக் கமல் படங்களெல்லாம் வெளியாகும். அப்போது நான் பெப்ஸியில் பணியில் சேர்ந்து ஒரு வருடம் ஆகியிருந்தது. படம் வெளியான அந்த வருட தீபாவளி தினங்களில் சரியான மழை.

9

பன்னீர் புஷ்பங்கள் (1981) படத்தின் இந்தப் பாடல் நன்றாக இருக்கும். நிறைய கோரஸ் சேர்ந்து பல்லவி இல்லாமல் சரணம் ஆரம்பிப்பது போல படு வேகமாக ஆரம்பித்துச் செல்கிறது பாடல். வரிகளுக்கிடையே ஆலாபனை நிறைந்திருக்கும் பாடல். பாலுவும் ஜானகியும் அருமையாகப் பாடியிருக்கிறார்கள். இசைஞானி இசை-வைரமுத்துவின் வரிகள்.

5

அடுத்த வாரிசு (1983) படத்தில் இசைஞானி இசையில் வயலின்களின் வேக ஓட்டத்துடன் மெட்டு தத்தித் தத்தி, ரகசியக் குரலில் பேசிக் கொள்ளும் காதலர்களைப் போல நம் காதோடு இந்தப் பாடல் பேசுகிறது. ரஜினி Sriதேவி நடித்துள்ள படம். பஞ்சு அருணாசலமும், வாலியும் பாடல்களை எழுதியிருக்கின்றனர்.

5

பாலசந்தரின் நிழல் நிஜமாகிறது (1978) படத்தின் இந்தப் பாடல் மங்கலாக நினைவிலிருக்கிறது. ஷோபா அறிமுகமான படம் என்று நினைக்கிறேன். சரத்பாபு, அனுமந்து, சுமித்ரா, கமல் ஆகியோரைச் சுற்றி நகரும் கதை.

18

நிழல் நிஜமாகிறது படத்தில் வரும் இன்னொரு அருமையான பாடல் "கம்பன் ஏமாந்தான்". அதே பாலு, வாணி ஜெயராம் கூட்டணி.

"அட நானும் ஏமாந்தேன்" என்பதில் "நானும்"-ஐ ஒரு விரக்தி/நக்கல்/ஏளனச் சிரிப்புடன் பாலு பாடியிருப்பார். "நெஞ்சத்தை" என்பதை "பாவமாக"ப் பாடுவார். "கம்பன்" என்பதையே பலவிதங்களில் பாடுகிறார்.

6

ஏப்பை சாப்பையாக ஏராளமாகப் படங்கள் வந்து கொண்டிருந்தாலும் சில காட்சிகளோ பாடல்களோ "அட!" என்று புருவம் உயர்த்த வைக்கும். அப்பாஸ் காதல் தேசத்தில் வந்து தமிழ் நாட்டு யுவதிகளை ஆட்டி வைத்துக் கொண்டிருந்த சமயம் அது. அவருக்கு இது இரண்டாவதோ மூன்றாவது படமா தெரியவில்லை.

8
இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading