ஜெய்கணேஷ் ஒரு நல்ல குணசித்திர நடிகர். 2001-இல் புற்றுநோய்க்கு இரையாகிவிட்டது சோகம். கதாநாயகனாகவும் வில்லனாகவும் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். சட்டென நினைவுக்கு வருபவை அன்றைய ஆட்டுக்கார அலமேலு, அவள் ஒரு தொடர்கதை, நீயா, வருவான் வடிவேலன், சமீபத்திய உள்ளத்தை அள்ளித்தா, மலபார் போலிஸ்.

1

பாலசந்தர் இயக்கத்தில் கவிதாலயா தயாரிப்பில் 1984-இல் வெளிவந்த அச்சமில்லை அச்சமில்லை என்ற படத்தில் ராஜேஷ் சரிதா நடித்திருந்தார்கள். சரிதா அற்புதமான நடிப்பை இதிலும் வெளிப்படுத்தியிருந்தார். வலுவான திரைக்கதையில் ராஜேஷ் நடிப்பும் சிறந்து இருந்தது.

அதில் வரும் ஒரு அற்புதமான ஜோடிப் பாடலை V.S.

3

சில பாடல்களைக் கேட்கத் துவங்கியதும் உடலில் ஒரு பரவசம் பரவி நாடி நரம்புகளெல்லாம் துடிக்கும். அந்த அனுபவம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறதா? "சினிமா பாடல்" என்ற எந்த வரையறைகளுக்குள் அடங்காது தனித்து நிற்கும் அற்புதப் பாடல்கள் பல தமிழ்ச் சினிமாக்களில் வந்திருக்கின்றன.

16

ரோசாப்பூ ரவிக்கைக் காரி (1979) படத்தை வீட்டுக்குத் தெரியாமல் பார்த்தது நினைவிருக்கிறது. அப்பாவி சிவக்குமாருக்கு அழகான பட்டணத்துப் பெண் தீபா மனைவியாக வர, கிராமத்துக்கு பளீரென்று அழகாக வலம் வரும் தீபாவை பலர் கண் வைக்க, தீபாவும் வழி தவறிப் போவார் என்பது போன்ற கதை - சரியாக நினைவில்லை.

13

இயக்குநர் சிகரத்தின் சொல்லத்தான் நினைக்கிறேன் (1973) படத்தை நான் பார்க்கவில்லை. மணியனின் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படமாம். சிவகுமார், ஜெயசித்ரா, ஸ்ரீவித்யா, சுபா ஆகியோர் நடித்தது. ஆனாலும் இந்தப் பாடலைப் பலமுறை கேட்டிருக்கிறேன்.

4

சீர்காழி கோவிந்தராஜன் என்றதும் எனக்கு உடனடியாக நினைவுக்கு வருவது அவரது பக்திப் பாடல்கள்தான்.

3

வத்திராயிருப்பின் கூரை வீட்டில் வாழ்ந்த போது மழை பெய்த நாட்களில் வீட்டிலிருக்கும் பாத்திரங்களையெல்லாம் எடுத்து கூரையின் எண்ணற்ற ஓட்டைகள் வழியாகக் கோடு மாதிரி இறங்கும் நீரைப் பிடித்து வெளியே கொட்டிவிட்டு நடுங்கும் இரவுகளில் சேர்த்து வைத்துத் தைத்த சாக்குப்பைகளைப் போர்த்திக்கொண்டு உறங்கியதுண்டு.

2

அது 1983-84 இருக்கும். முசிறியில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம். ஏற்கெனவே இருந்த டூரிங் தியேட்டர் தவிர புதிதாக நல்ல வசதிகளுடன் ஒரு தியேட்டர் கட்டி அதுவரை சில படங்கள் வெளியாகியிருந்தன. விஜயகாந்த் படங்களெதையும் நான் அவ்வளவாகப் பார்த்ததில்லை.

3

A.R. ரஹ்மான் பாடியிருக்கும் இந்தப் பாடலின் படமாக்கம் மிகப்பெரியதொரு ஏமாற்றம். இதே போல பாட்டை மட்டும் கேட்டுவிட்டு எப்படியெல்லாம் படமாக்கியிருப்பார்கள் என்று மனக் கோட்டை கட்டிக்கொண்டு சென்றால் அதை மெனக்கெட்டு தவிடுபொடியாக்கியிருப்பார்கள்.

8

சிவாஜியின் பிற்காலத்திய படங்களில் சிறப்பானவையாக நான் கருதுவது இரண்டு படங்கள், முதல் மரியாதை (1985), தேவர் மகன். இரண்டிலும் வயதிற்கேற்ற பாத்திரங்களை எடுத்துக்கொண்டு அசத்தியிருந்தார். அசாத்தியமான நடிப்பையும் சில காட்சிகளில் வெளிப்படுத்தியிருந்தார்.

11

உயர்ந்த உள்ளம் (1985) படத்தில் கமல், அம்பிகா, விகே ராமசாமி, ராதாரவி ஆகியோர் நடிக்க S.P. முத்துராமன் இயக்கத்திலும் ஏ.வீ.எம். நிறுவனம் தயாரிப்பிலும் வந்தது.

1

தை பிறந்தால் வழி பிறக்கும் படத்தில் வரும் இந்தத் தத்துவப் பாடலைச் சிறுவயதில் கேட்டிருக்கிறேன் (அழுவாச்சி பாட்டுடா அது!). கே.வி.மகாதேவன் இசையமைப்பில் திருச்சி லோகநாதன் பாடியிருக்கும் "ஆசையே அலைபோலே" என்ற பாடல்தான் அது. எஸ்.எஸ்.ராஜேந்திரனும் ராஜசுலோசனாவும் நடித்திருந்தார்கள்.

9

சிவாஜி மஞ்சுளா நடித்திருக்கும் உத்தமன் (1976) படத்தைப் பற்றி எனக்கு எதுவும் நினைவில்லை - இந்த ஒரு பாடலைத் தவிர. கே.வி.மகாதேவனின் இசையில் பாலுவும் சுசீலாவும் இந்தப் பாடலை அருமையாகப் பாடியிருப்பார்கள்.

1

கணீரென்று பாடுவது ஒருவகை. இனிதாகப் பாடுவது ஒரு வகை. சிம்மக் குரலோனின் குரல் எப்படி ஒரு விதத்தில் அழகோ அது போல 90 படங்களுக்கு மேல் மோகனுக்குக் குரல் கொடுத்த சுரேந்தரின் இனிய குரல் இன்னொரு விதத்தில் அழகு.

அந்தப் பக்கம் T.M.

1

நாயகன் (1987) வந்த பொழுது, அடடா இவ்வளவு அற்புதமான தலைவர் (கமல்) படத்துல நம்ம தலைவர் (பாலு) ஒரு பாட்டு கூட பாடலையேன்னு ரொம்பவும் வருத்தப்பட்டேன். வருத்தம் தலைவர் காதுல கேட்டதோ என்னவோ ஒரு பாட்டைப் பாடிட்டார்.

படத்துல இளையராஜாவும் கமலும் இதே பாட்டை வெவ்வேறு சூழ்நிலைகள்ல பாடிருப்பாங்க.

16

சிவாஜி இரு வேடங்களில் - ஒருவர் வக்கீல் பாரிஸ்டர் ரஜினிகாந்த் ? - பட்டாசு கொளுத்திய கெளரவம் (1973) படத்தில் அவரது நடிப்பையொற்றி இப்போது விவேக் கிண்டலடித்து பல படங்களில் நடித்து வருகிறார். "நீயும் நானுமா?" என்று கணீரென்று டி.எம்.எஸ்.

9

இளையராஜா அவ்வளவுதான் என்று குசுகுசுக்க ஆரம்பித்த நேரத்தில் காதலுக்கு மரியாதை படம் வந்தது (1998?). இசைஞானி ஒரு கலக்கு கலக்கியிருந்தார் - பாடல்களிலும், பின்னணி இசையிலும்.

என் மகள் அக் ஷராவுக்கு அப்போது ஒரு வயதுதான் ஆயிருந்தது.

5

சில பாடல்களைக் கேட்கையில் இந்தப் பாடலை நம் ஆதர்ச பாடகர் பாடியிருந்தால் எப்படி இருக்கும் என்று நம் எல்லாருக்கும் தோன்றியிருக்கும். சில அற்புதமான ஜேசுதாஸ் பாடல்களைக் கேட்கும்போது இதை பாலு பாடியிருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று நினைத்ததுண்டு.

10

வீரா படம் ஒரு கலவையான படம். முழு நகைச்சுவை படம் என்று சொல்ல முடியாது. முழு அதிரடிப் படம் என்றும் சொல்ல முடியாது. காதல், நகைச்சுவை, பாசம், உணர்வுகள், அதிரடி என்று எல்லாம் கலந்த திருத்தமான ரஜினி படம். கண்ணழகி மீனாவும் ரோஜாவும் என்று இரண்டு நாயகிகள்.

3

எங்கம்மா சபதம் படத்தின் இந்தப் பாடலை பாலுவும் வாணி ஜெயராமும் பாடியிருக்கிறார்கள். படத்தைப் பற்றி அதிக விவரங்கள் கிடைக்கவில்லை. 1974-இல் S.P.முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த படம்.

6

இந்தச் சந்திப்பு 1970-இல் நிகழ்ந்தது. "பொம்மை" பத்திரிக்கையில் வெளிவந்தது. இணையத்தில் கிடைத்த ஒளிநகல்களை இங்கே இட்டிருக்கிறேன்.

4

தர்ம துரை (1991) படத்தில் வரும் சுற்றி விருந்துக்காக வந்திருந்தவர்கள் கூடியிருக்க ரஜினி ஸ்டைலாக வந்து அமர்த்தலாகப் பாடும் இந்தத் தனிப்பாட்டு அருமையான பாடல். இதே பாணியில் பல "பார்ட்டி" பாடல்கள், தத்துவங்கள் கலந்து வந்திருக்கின்றன - ரஜினி படங்களிலேயே. இந்தப் பாடலை நிதானமாகத் தெளிவாகப் பாடியிருப்பார்.

மதுரையில் டி.வி.எஸ். பள்ளிக்கூடம் கட்டுப்பெட்டியான பள்ளிக்கூடம் (அதாவது நான் படித்த 80-களின் மத்தியிலான காலகட்டத்தில்!).

1

சோக ராகம்தான். ஆனாலும் அதையும் இனிதாகப் பாடியிருக்கிறாரே பாலு. போகுதே போகுதே போன்றே இதுவும் சோகத்தை மனதில் நிரப்பும் பாடல். சரணத்திற்கு முந்தைய இசையின் பாணியிலேயே ராஜாவின் இசையில் நிறைய பாடல்கள் வந்திருக்கின்றன.

இன்றும் இரவில் என் குழந்தைகளுக்காக நான் பாடும் பாடல் இந்தப் பாடல். அருமையான தாலாட்டுப் பாடல். எல்லாவற்றுக்கும் "அந்தக் காலப் பாட்டு மாதிரி வருமா?" என்று ஒப்பிடும் என் தந்தைக்கும் "ராஜாத்தி ஒன்ன காணாத நெஞ்சு"க்குப் பிறகு மிகவும் பிடித்த ராஜாவின் பாடல் இந்தத் "தேனே தென்பாண்டி மீனே" பாடல்.

7

ஒரு நிலாவே அழகு. இரண்டு நிலாக்கள்? இங்கே பாடுகின்றன இரண்டு நிலாக்கள். ஜானகியும் பாலுவும் சேர்ந்து பாடு்ம் நிலாக்களாகவும், தேன் கவிதைகளாகவும், பூக்களாகவும் மலர்ந்து இனிய குரல்களால் நம்மை வருடுகிறார்கள். வரிக்கு வரி ராஜாவின் வயலின்கள் நம்மை ஊடுருவுகின்றன.

1

உதய கீதம் (1985) மெளனமாக ஆரம்பத்தில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருந்தது. ஓரிரு வாரங்கள் கழித்துச் சூடு பிடித்துக்கொண்டு ஒரு அசுர ஓட்டம் ஓடியது பாருங்கள்! மோகன் ரேவதி லட்சுமி நடித்திருத்தனர்.

மதுரை நடராஜ் திரையரங்கில் 250 நாட்கள் ஓடியது அந்தப் படம்.

A singer who changed the playback scene

Jun 4, 2006, 02:20

At a time when the legendary Ghantasala came to the field, most artistes were singing their own songs and verses, and he set a trend as a star-singer so much that some artistes like Nageswara Rao who were singing their own songs welcomed G

சில வருடங்களுக்கு முன்பு அனைத்திந்திய வானொலி நிலையம் கோயம்புத்தூரில் பாலுவுடனான ஒரு சந்திப்பு ஒலிபரப்பாகியது. இது இன்றைய இணைய நேயர்களுக்காக இங்கே.

ஒலிக்கோப்பைத் தந்துதவிய கோவை ரவீ அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

15

திரைப்பாடல் கேட்பவர்களில் தாத்தா முதல் இன்றைய ஒரு வயதுக் குழந்தை வரை மிகக் குறைந்தபட்சமாக பாலு பாடியிருக்கும் ஒரு பாடலையாவது கேட்காதவர்கள் இருக்க முடியாது.

1

"இளைய நிலா பொழிகிறதே" எப்படி கிடார் வாசிப்பவர்களுக்கு மிகவும் பிடித்த பாட்டோ அப்படி "மணியோசை கேட்டு எழுந்து" பாடல் அந்த காலகட்டத்தில் இசை நிகழ்ச்சிகளில் பாடகர்களால் விரும்பிப் பாடப்பட்ட பாடல்.

வத்திராயிருப்பில் நடுத்தெருவில் ஒருவர் வீனஸ் இசைக்குழு என்று ஒன்றை நடத்தி வந்தார்.

4

பாடுவதற்கு வாய்ப்புக் கிடைக்காமல் தவித்துக்கொண்டிருக்கும் மோகன் மேடையில் பாட முதன்முதலில் வாய்ப்பு கிடைத்ததும் படு உற்சாகமாக வர, அந்நேரம் பார்த்து மழை கொட்டோ கொட்டென்று கொட்ட கூடியிருக்கும் மக்களெல்லாம் கலைந்து சென்று விடுவார்கள்.

1

இது இன்னொரு அருமையான ஜோடிப் பாடல். பாலுவும் ஜானகியும் பாடியது. இசை லேசாக தென்றலே என்னைத் தொடு பாடலை நினைவுபடுத்துகிறது. பாலுவைப் போன்று ஜானகியும் நகாசு வேலை செய்திருக்கிறார் இந்தப் பாடலில். "குளிரெடுக்கும்" என்று அவர் பாடுவதைக் கேட்டால் குளிரெடுக்கிறது.

2

மயில் தோகை விரித்தாடுவதைக் "கேட்க" வேண்டுமா? இந்தப் பாடலின் ஆரம்ப இசையைக் கேட்டுப் பாருங்கள். புல்லாங்குழல் தோகையைச் சிலிர்க்கிறது.

அருமையான பாடல் வரிகள். இனிமையான இசை. தேன் போன்ற பாலுவின் குரல்.

பயணங்கள் முடிவதில்லையில் வரும் இந்தச் சோகப்பாடல் எனக்குப் பிடித்தமான பாடல். அதிகபட்ச துன்பத்தில் உழலுபவனின் மனநிலையை எளிதாகக் கொண்டுவரும் அபாரமான மெட்டு, இசை, பாலுவின் குரல். குரல் நடுங்குவதைக் கூட அழகாகச் செய்திருப்பார் பாலு.

இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading