ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன

தர்ம துரை (1991) படத்தில் வரும் சுற்றி விருந்துக்காக வந்திருந்தவர்கள் கூடியிருக்க ரஜினி ஸ்டைலாக வந்து அமர்த்தலாகப் பாடும் இந்தத் தனிப்பாட்டு அருமையான பாடல். இதே பாணியில் பல "பார்ட்டி" பாடல்கள், தத்துவங்கள் கலந்து வந்திருக்கின்றன - ரஜினி படங்களிலேயே. இந்தப் பாடலை நிதானமாகத் தெளிவாகப் பாடியிருப்பார். நடுவே அவரது பாணியிலான, ரஜினிக்கான சிரிப்பையும் உதிர்க்கத் தவறவில்லை.
ஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன எல்லாம் ஓரினம் தான்
அட நாடென்ன வீடென்ன காடென்ன மேடென்ன எல்லாம் ஓர் நிலம் தான்
நீயும் பத்து மாசம் நானும் பத்து மாசம் மாறும் இந்த வேஷம்

ஒண்ணுக்கொண்ணு ஆதரவு உள்ளத்திலே ஏன் பிரிவு
கண்ணுக்குள்ள பேதம் இல்ல பார்ப்பதிலே ஏன் பிரிவு
பொன்னு பொருள் போகும் வரும்
அன்பு மட்டும் போவதில்லை
தேடும் பணம் ஓடிவிடும் தெய்வம் விட்டுப் போவதில்லை
மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு
வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன

இதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும் இன்னும் மயக்கமா?
ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன எல்லாம் ஓரினம் தான்
அட நாடென்ன வீடென்ன காடென்ன மேடென்ன எல்லாம் ஓர் நிலம் தான்
சொந்தம் பந்தம் சேர்ந்திருந்தா சொத்து சுகம் தேவையில்லே
பந்தம் விட்டுப் போச்சுதுன்னா வாழ்வதிலே லாபம் இல்லே
எண்ணம் மட்டும் சேர்ந்திருந்தா இன்றும் என்றும் சோகம் இல்லே
கன்றை விட்டுத் தாய் பிரிஞ்சா காணும் சுகம் ஏதுமில்லே
ஊருக்கும் பேருக்கும் காருக்கும் இஷ்டப்பட்டு
வாழ்கின்ற வாழ்க்கைக்கு என்றென்றும் அர்த்தமில்லே
ஊருக்கும் பேருக்கும் காருக்கும் இஷ்டப்பட்டு
வாழ்கின்ற வாழ்க்கைக்கு என்றென்றும் அர்த்தமில்லே
இதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும் இன்னும் மயக்கமா?
ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன எல்லாம் ஓரினம் தான்
அட நாடென்ன வீடென்ன காடென்ன மேடென்ன எல்லாம் ஓர் நிலம் தான்
நீயும் பத்து மாசம் நானும் பத்து மாசம் மாறும் இந்த வேஷம்
ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன எல்லாம் ஓரினம் தான்
அட நாடென்ன வீடென்ன காடென்ன மேடென்ன எல்லாம் ஓர் நிலம் தான்

0 comments:
Post a Comment