கிழக்கு வாசல் # 2 - தளுக்கித் தளுக்கி வந்து
குஷ்பு தாவணி போட்டு நடித்த படங்களில் சின்னத் தம்பி, வருஷம் 16, கிழக்கு வாசல் ஆகியவற்றை மறக்கவே முடியாது.
கிழக்கு வாசலிலும் கார்த்திக்கைச் சீண்டிக்கொண்டே இருக்க, கார்த்திக்கும் அவரைச் சீண்டும் காட்சிகளெல்லாம் இளமையானவை.
கிழக்கு வாசல் # 1 - பச்ச மலைப் பூவு
எனக்கு மென்மையான பாடல்களென்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் பாலு பாடிய மெலடிப் பாடல்கள் என்றால் எனக்கு உயிர் (பட்டியலெல்லாம் போடமாட்டேன். போட்டால் இந்தப் பதிவு போதாது).
ஆர்.வி. உதயகுமாரின் கிழக்கு வாசல் (1990) தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் சிறப்பாக ஓடி பெருமை பெற்றது.
புன்னகை இளவரசிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்!
"சின்னக் குயில் பாடும் பாட்டு கேட்குதா?" என்று குயிலாகப் பாடி அறிமுகமாகி இன்று வரை எத்தனையோ இனிய பாடல்களை நமக்குக் கொடுத்திருக்கும் சின்னக்குயில் சித்ராவுக்கு இன்று பிறந்தநாள்.
இளையராஜாவின் இசையில் ஜானகி, பாலு, சித்ரா நூற்றுக்கணக்கான அற்புதமான பாடல்களைப் பாடியிருக்கிறார்கள்.
T.R. & Bala # 5 - நெஞ்சம் பாடும் புதிய ராகம்
ஒரு தலை ராகம் மாதிரி டி.ஆரின் இயக்கத்தில் வந்த இன்னொரு படம் நெஞ்சில் ஒரு ராகம் (1982). இதில் தியாகராஜனும் சரிதாவும் நடித்திருந்தனர். படத்தைப் பார்த்ததாக நினைவில்லை. தியாகராஜன் என்றாலே எனக்கு நினைவுக்கு வரும் இரண்டே படங்களில் முதன்மையானது 'மலையூர் மம்பட்டியான்".
2கடலோடு நதிக்கென்ன கோபம்
அர்த்தங்கள் ஆயிரம் (1981) சரியாகப் போகாத படம் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். தமிழ்ப்படங்களின் விதிப்படி தோல்வியடைந்த படங்களில் முத்தாக ஏதாவது ஒரு பாடல் இருக்க வேண்டுமல்லவா? இருக்கிறது. சங்கர் கணேஷ் இசையில் பாலு பாடியிருக்கும் இந்த அற்புதமான பாடலை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலத் தோன்றும்.
3பாடும் நிலாவின் அமெரிக்க/கனடிய பயண அட்டவணை!
பாலுவின் அடுத்த அமெரிக்க/கனடா பயண அட்டவணை இதோ. பாஸ்டனிலும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை அறிந்து நான் அளவிலா மகிழ்ச்சியுற்றிருக்கிறேன். இதுவரை அவரது நிகழ்ச்சி எதையும் நேரில் பார்த்ததில்லை. அவரை முதன்முறையாகப் பார்க்கமுடிவது பற்றிய நினைப்பே என்னுள் ஆர்வத்தைக் கிளறிவிட்டிருக்கிறது.
2T.R. & Bala # 4 - வாசமில்லா மலரிது
ஒரு தலை ராகம் (1980) படத்தின் சங்கரும் அவருடைய பெல்பாட்டம் பேண்ட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. பெல்ஸ் அல்லது பெல்பாட்டத்தைப் போட்டுக் கொண்டு நடக்க முழங்காலுக்குக் கீழே இரண்டு விசிறிகளை மாட்டி வைத்தது போல நன்றாக காற்று வரும்.
5பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன் - ஸ்பெஷல் # 14
ஜேசுதாஸ் பற்றி நிறைய விளக்கவேண்டியதில்லை. பாலுவால் அன்போடு "தாஸண்ணா" என்றழைக்கப் படுபவர். ஆரம்ப காலகட்டத்தில் இவரது தமிழ் உச்சரிப்பைக் கிண்டல் செய்திருக்கிறார்கள். ஆனால் அவரது குரல்! யாரையும் வாயைத் திறக்கவிடாத, மெய்மறக்கச் செய்யும் தெய்வீகக் குரல்.
7பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன் - ஸ்பெஷல் # 13
பொதுவாகவே "பாவாடை" "லவுக்கை" என்ற வார்த்தைகள் காதில் விழுந்தாலே பள்ளிக்கூடப் பையன்களாகிய எங்களுக்கெல்லாம் கன்னம் சிவந்துவிடும்.
6பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன் - ஸ்பெஷல் # 12
1990-இல் கல்லூரி படித்து முடித்த அடுத்த வாரத்திலேயே வேலைக்குச் சேர்ந்தாகிவிட்டது. மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று ஆர்வமிருந்தும் வசதியில்லாதிருந்தது முக்கிய காரணம். ஆனாலும் அப்படி உடனே வேலைக்குச் சேர்ந்ததற்காக ஒரு முறையும் வருத்தப் பட்டதில்லை.
11பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன் - ஸ்பெஷல் # 11
சிறுவயதில் புராணக் கதைகளைக் கேட்கும்போதெல்லாம் கற்பனை சிறகடித்துக்கொண்டு எங்கோ பறக்கும். வளரும் பருவத்தில் கண்டு, கேட்டு, உணர்ந்ததை மனது பதிய வைத்துக் கொண்டே இருக்கும் ஒரு பருவத்தில் கேள்விப்பட்ட புராணக் கதைகளெல்லாம் சிறுவனான என் ஆர்வத்தைக் கிளறிக்கொண்டே இருந்தன.
1T.R. & Bala - # 3 எங்கும் மைதிலி எதிலும் மைதிலி
சின்னதாக இருந்தாலும் குஷியாக இருக்கும் எளிய பாடல். பாலு கலக்கலாகப் பாடியிருக்கிறார். பாடல் வரிகளைப் பார்த்தும் "இது என்ன படம்?" என்று "சீதைக்கு ராமன் சித்தப்பாவா?" வகையில் கேட்கப்படாது.
T.R. & Bala - # 2 ஒரு பொன் மானை நான் காண
மை.எ.கா. படத்தில் உள்ள இன்னொரு அருமையான பாலுவின் தனிப்பாடல் கேட்பதற்குச் சுகமான பூபாள ராகத்தில் அற்புதமாக அமைந்திருக்கிறது. ஆரம்ப ஆலாபனையில் பாலு பின்னு பின்னு என்று பின்னியிருப்பார்.
நாமெல்லாம் கட்டாயம் சிறுவயதில் பம்பரம் விட்டிருப்போம்.
T.R. & Bala - # 1 தண்ணீரிலே மீன் அழுதால்
டி.ராஜேந்தர் இசையமைத்து 80-களில் நிறைய படங்கள் வந்தன. அவருடைய படங்களென்றாலே புதிதாக என்ன செட்டிங் போட்டிருக்கிறார் என்று எல்லாரும் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தார்கள்.
5மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே
ஸ்டார் என்று ஒரு படம் 2001-இல் வந்தது. பிரசாந்த், ஜோதிகா நடித்திருந்தனர். ப்ரவீண்காந்த் இயக்கியிருந்தார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் சில பாடல்கள் அருமையாக இருக்கின்றன. ஷங்கர் மகாதேவன் "தோம்.. கருவில் இருந்தோம்" என்ற பாடலை அசத்தலாகப் பாடியிருப்பார்.
4பூந்தேனில் கலந்து பொன் வண்டு எழுந்து
ஏணிப்படிகள் பற்றி முன்பு எதிலோ குறிப்பிட்ட நினைவு. சிவக்குமார், "ஊர்வசி" ஷோபா நடித்த படம். K.V. மகாதேவன் அவர்களின் இசையில் சில பாடல்கள் அருமையாக அமைந்திருக்கின்றன.
இந்தப் பாடலை பாலு மிக இனிமையாகப் பாடியிருக்கிறார். கூடவே ஓடி வருகின்றன வயலின்கள் கூட்டம்.