இதயத்தை அறுக்கும் என்று சில உணர்வுகளைச் சொல்வார்கள். அவற்றில் பிரதானமானது காதல். மனிதனைப் பைத்தியமாக அடித்து சுயநினைவின்றி கனவுலகில் சஞ்சரிக்க வைத்து துன்பப்பட வைத்து, ஏக்கத்தைக் கூட்டி, எதிலும் நாட்டமில்லாமல் அடிக்கக் கூடிய உணர்வு காதல்.

4

இதயம் (1991) திரைப்படம் வந்த புதிதில் கல்லூரி வட்டாரங்களில் அது ஏற்படுத்திய தாக்கத்தைக் குறித்து ஒரு ஆய்வுக் கட்டுரையே எழுதலாம். அதிலும் ஹீரா என்ற தேவதையைப் போலத் தோன்றிய பெண் கல்லூரி யுவதிகளின் மத்தியில் ஒரு பெரிய அலையையே ஏற்படுத்தினார்.

இயக்குநர் கதிரின் முதல் படம்.

2

பாலுவும் சாதனா சர்கமும் பாடியிருக்கும் இந்தப் பாடல் தெனாலியில் எனக்கு மிகவும் பிடித்த பாடல். படத்திலிருந்து விலகி நிற்கும் பாடல்! கமலின் முகம் மட்டும் திரை முழுதும் காண்பிக்கப்பட அவருடைய அழகான சிகையலங்காரமும், இயற்கை எழில் நிறைந்த இயற்கைப் பின்னணியும், வித்தியாசமான உடைகளும் கூட ஜில்லென்று ஜோ வேறு.

5

எனக்குள் ஒருவன் படத்தில் கமல் அறிமுகமாகும் பாடல் ஒரு அட்டகாசமான அமர்களப் பாடல்.

2

எனக்குள் ஒருவனின் இந்த டூயட் பாடலை Sweet-heart ஜானகியும் செல்லம் பாலுவும் ஜாலியாகவும் அழகாகவும் பாடியிருக்கிறார்கள். முத்தம் பாடல் வரிகளில் மட்டுமல்லாது பாடலின் படமாக்கத்திலும் நிறைந்திருப்பதால் அதைப்பற்றி மேலும் விளக்கவேண்டியதில்லை. பின்னே கமல் அல்லவா? :)

முத்தம் போதாதே.. சத்தம் போடாதே..

3

பூந்தளிர் (1979) என்ற படத்தைப் பற்றிய தகவல்கள் என்னிடம் அதிகமாக இல்லை. மோகன் என்பவர் இயக்கியிருக்கிறார் என்று தெரிகிறது. இளையராஜா இசை என்று கேட்டாலே தெரிகிறது. ஆனாலும் இந்தப் பாடலை சிறுவயதிலிருந்து எத்தனையோ முறை கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்.

2

எனக்குள் ஒருவன் (1984) படம் சரியாக ஓடவில்லை. அதை மதுரையில் நரிமேட்டைத்தாண்டி வரும் மீனாட்சிபுரத்தில் இருக்கிற ஒரு டூரிங் கொட்டாயில் நான்கைந்து முறை பார்த்திருக்கிறேன் - அந்த உபேந்திரா பாத்திரத்திற்காக மட்டும்.

உயிருள்ளவரை உஷா (1980) படத்தில் வரும் இந்தப் பாடலை பாலு அழகாகப் பாடியிருப்பார். குறிப்பாக சரணங்களை அவர் ஆரம்பிக்கும் விதமே அருமையாக இருக்கும். 'தென்றலதன் விலாசத்தை' என்று அவர் பாடுவது சொக்க வைக்கிறது. கூடப் பாடியிருப்பது ஜானகியா? நம்பவே முடியவில்லை.

5

தங்கைக்கோர் கீதத்தில் வரும் இந்தப் பாடல் மேடையில் பல்வேறு வண்ண விளக்குகளுடன் கண்களைக் கூசச் செய்யும் பளபள உடைகளுடன் 80 களி்ல் வந்த பல்வேறு டிஸ்கோ பல்வேறு பாடல்களைச் சேர்ந்த ஒன்றுதான் என்றாலும் எனக்கு இந்தப் பாடலின் சரணங்களும் அதை பாலு பாடியிருக்கும் விதமும் மிகவும் பிடிக்கும்.

3

புதுப்புது அர்த்தங்களின் குருவாயூரப்பா பாடலை முன்பே பதிந்திருக்கவேண்டும். எப்படியோ விட்டுப்போய்விட்டது. பரவாயில்லை. கலகலப்பான பாடலுக்கு உதாரணம் இந்தப் பாடல். எத்தனையோ காதல் பாடல்களைக் கேட்டிருக்கிறோம். இளையராஜாவின் இசையாக்கத்தில் தனித்துவம் பெற்ற எத்தனையோ பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று.

1

மைதிலி என்னைக் காதலி படத்தில் இந்தப் பாடலை அற்புதமாக பாலு பாடியிருப்பார். பாடலைக் கேட்டாலே போதும். நான் சொல்ல நினைப்பது அனைத்தையும் பாலுவின் குரல் உங்களுக்கு உணர்த்திவிடும். "நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை" என்று சொல்லிவிட்டு ஒரு ஆலாபனையைத் தீர்க்கமான குரலில் பாடுவார் கேட்டுப் பாருங்கள்.

1

நன்றி: www.ghantasala.info

ராஜ லஷ்மியின் முதல் படம்.

நாட்டியதாரகை மஞ்சு பார்கவியின் மகனாக நடித்தது துளசி!

இயக்குநர் காசீநாதுனி.விஸ்வநாத்தின் (அதாங்க கே.விஸ்வநாத்) பிரம்மாண்ட வெற்றிப்படங்களில் முதன்மையானது.

வசனங்களை எழுதியவர் ஜந்யாலா.

1

மத்யமாவதி ராகத்தில் அமைந்த இந்தப் பாடலை எழுதியவர் வெட்டூரி சுந்தர ராமமூர்த்தி அவர்கள். சங்கராபரணம் படத்தின் பாடல்களின் மகுடமாக இந்தப் பாடலைக் குறிப்பிடலாம்.

Sankara naada Sareeraparaa

vEda vihaarahara jeevESwaraa

Sankara naada Sareeraparaa

vEda vihaarahara jeevESwaraa

Sankara...

சங்கராபரணத்தில் பக்த காளிதாஸ் இயற்றிய பாடலின் ஒரு பகுதியை பாலு பாடியிருக்கிறார்.

சங்கராபரண ராகத்தில் அமைந்துள்ள இந்தப் பாடலை மிக கம்பீரமாக பாலு ஜானகியோடு பாடியிருப்பார். பாடலை எழுதியவர் வெட்டூரி சுந்தர ராமமூர்த்தி.

Om Om

Omkaara naadaanu sandhaanamou gaanamE SankaraabharaNamu

Omkaara naadaanu sandhaanamou gaanamE SankaraabharaNamu

Sankaraa bharaNamu...

தியாகையரின் கீர்த்தனைகளில் ஒன்றான ஸாமஜவர கமனா பாடலை ஹிந்தோள ராகத்தில் மெட்டமைத்து மைசூர் வாசுதேவாச்சாரியின் வரிகளை பாலுவும் ஜானகியும் அற்புதமாகப் பாடியிருப்பார்கள். "ஆமனி கோயிலா" என்று பாலு ஆரம்பிப்பதே சுகமாக இருக்கும்.

2

சாருகேசி-ஹிந்தோளத்தில் அமைந்துள்ள இந்தப் பாடலை பாலு அட்டகாசமாகப் பாடியிருப்பார். இது ராக மாலிகா வகையைச் சேர்ந்த மெட்டு. பல்லவியும் அனுபல்லவியும் சாருகேசியில் அமைந்திருப்பதாக அறிகிறேன். பாடலை எழுதியவர் வெட்டூரி சுந்தர ராமமூர்த்தி அவர்கள்.

1

சாமா - ஷண்முகப்பிரியா ராகத்தில் அமைந்த இந்த இனிய பாடலை வாணி ஜெயராமும் பாலுவும் பாடியிருக்கிறார்கள். பாடலை எழுதியவர் சதாசிவ பிரம்மேந்திர ஸ்வாமி என்பவர்.

1

பூக்கள் விடும் தூது (1987) படத்திற்கு இசை தே.ரா. இயக்கியவர் ஸ்ரீதர் ராஜன் (இப்போது எங்கே?). அதற்கு முன்பு 1982-இல் கண் சிவந்தால் மண் சிவக்கும் என்ற படத்தையும் 1986-இல் இரவுப் பூக்கள் படத்தையும் இவர் இயக்கியிருக்கிறார். முகத்தில் பால் வடியும் பாலகக் களையுடைய ஹரீஷ் இந்தப் படத்தின் நாயகன்.

2

டூயட் படத்தின் இந்தப் பாடல் அதிகமாகக் குறிப்பிடப்படுவதில்லை என்ற குறை எனக்கு உண்டு. கத்ரி கோபால்நாத் அவர்களின் சாக்ஸ் இசையும் பாலுவின் இனிய குரலும் இணைந்து தென்றல் தீண்டும் சுகத்தை நமக்கு அளிக்கும் அற்புதமான பாடல் இந்தப் பாடல். ஆரம்பத்திலும் இறுதியிலும் சாக்ஸபோனின் இசை நம்மை சொக்கவைத்துவிடும்.

2

கண் பார்வையற்ற அந்தக் கிழவி கோவில் குளத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து யாசித்துக்கொண்டிருக்க கடந்து போகும் நபர் ஒருவர் வாழைப்பழம் ஒன்றை அவளருகில் போட்டுவிட்டுப் போகிறார். நெற்றி நிறைய திருநீறு பூசிக்கொண்டு வரும் அந்தச் சிறுவன் இக்காட்சியை கவனிக்கிறான்.

2

சுதந்திர தினத்தை நாம் கொண்டாடும் லட்சணத்தைப் பற்றியும் நிறையப் பேசியாகிவிட்டது. மாணவர்களுக்கு இது இன்று "முட்டாய்" கொடுக்கும் நாள். சரி விவரம் தெரியாத வயது என்று விட்டுவிடலாம்.

3

முசிறியில் 1983-85-இல் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது என் அம்மா தெருவிலிருக்கும் பல குட்டிப் பெண்களுக்கு மாலை வேளைகளில் பாட்டு சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தார். ஒரு பத்து பதினைந்து குழந்தைகள் தினமும் கும்பலாக வரும்.

2

பாரதிராஜாவின் மண் வாசனையில் (1983) மதுரையிலிருந்து பாண்டியன் என்பவர் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார் என்று மதுரை முழுதும் பரபரப்பாக இருந்தது. நான் மதுரையில் இருந்தாலும் படத்தைப் பார்க்கவில்லை. பாண்டியனின் படங்களைப் பார்த்தபோது நல்ல நிறமாகத்தான் இருக்கிறார்.

1

நடிகர் மோகன் பாலு பாடும்போது ரிக்கார்டிங்குக்கு பல தடவை நேரில் போய் எப்படிப் பாடுகிறார் என்று கிட்ட இருந்து பார்ப்பாராம். பாலு அவர்கள் பல நிகழ்ச்சிகளில் தெரிவித்த செய்தி தான் இது. மோகனுக்காக பாலு பாடிய பல மெலோடி பாடல்களில் இந்த பாட்டு என் மனசை ஐஸ் க்ரீமாய் உருக்கிவிட்டது.

5
இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading