Friday, October 27, 2006

சலங்கை ஒலி - காவிரி மங்கை வந்தாளம்மா

Image and video hosting by TinyPic
ஆல்பத்தில் இருக்கும். ஆனால் படத்தில் இருக்காது - என்ற வகையில் எத்தனையோ நல்ல பாடல்கள் ஒளி வடிவத்தில் வெளி வராமல் எங்கோ தூங்கிக் கொண்டிருக்கின்றன. சில சமயத்தில் நல்ல ஹிட் பாடல்களை இசையமைப்பாளரோ அல்லது நடிகரோ அவர் திருப்திக்காகவும் பாடி (இசைஞானி...கமல்...ஹிஹி) ஆல்பத்தில் சேர்த்திருப்பார்கள் - ஆனால் படத்தில் பாடகர் பாடியது மட்டும் இருக்கும். எவ்வளவோ உதாரணங்கள்!!

எனக்குள் ஒருவனின் மேகம் கொட்டட்டும் பாடலை கமலும் பாடியிருப்பார் - அது கேஸட்டில் இருந்தது. படத்தில் பாலு பாடியது!

இதய கோவில் படத்தில் இதயம் ஒரு கோவில் பாடலை இசைஞானி பாலு என்று பாடியிருப்பார்கள். படத்தில் மாறி மாறி வரும் அது.

மைக்கேல் மதன காம ராஜன் படத்தின் பாடல் தொகுப்பில் மனோ "ஆடிப் பட்டம் தேடிச் செந்நெல் விதை போட்டு" என்ற அற்புதமான பாடலைப் பாடியிருக்கிறார். கேட்டிருக்கிறீர்களா? அது படத்தில் வரவில்லை.

சலங்கை ஒலி படத்தின் பாடல் தொகுப்பில் பாலுவும் ஷைலஜாவும் பாடியிருக்கும் இன்னொரு குதூகலப் பாடல் "காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கை வீசி" என்ற பாடல். நாத விநோதங்கள் பாடலின் முடிவில் தொடங்கும் பாடல் அது. அது (தமிழிலும் தெலுங்கிலும்) படத்தில் வரவில்லை. ஆனால் அதே பாடல் பானுப்ரியா நடித்த தெலுங்குப் படம் "சிதாரா"வில் இடம் பெற்றது.

தனனனனனனன தனனனனனன
தனனனனனனன தனனனனனன
தனனனனனனன தனனனனனன

ஜமக்கு ஜமக்கு ஜிஞ்சின ஜிஞ்சின
ஜமக்கு ஜமக்கு ஜின்ன ஜின்ன ஜின்ன

காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி

ஜமக்கு ஜமக்கு ஜிஞ்சின ஜிஞ்சின
ஜமக்கு ஜமக்கு ஜின்ன ஜின்ன ஜின்ன

காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி

மேனி எங்கும் மினுக்கி அட
மேளதாளம் முழக்கி
கூந்தல் கொஞ்சம் ஒதுக்கி
மேலாடை கொஞ்சம் விலக்கி

காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி
காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி

பச்சிளம் பூவில் ஓ
பாவாடை தைச்சு
பச்சிளம் பூவில் ஓ
பாவாடை தைச்சு
குண்டுமல்லியில் கொண்டையும் வச்சு
வந்தா அரசாணி வா வாலிப தேசத்து ராணி
வந்தா அரசாணி வா வாலிப தேசத்து ராணி

காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி
காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி

மன்னிக்கவும்.. தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தும் இந்தப் பாடல் எங்கும் கிடைக்கவில்லை. மக்கள் யாரிடமாவது இருந்தால் தயவிட்டு கொள்சி பிடி! மிக்க நன்றியுடையவனாக இருப்பேன்.

10/30 : நண்பர் கோவை ரவீ சிரமமெடுத்து இந்தப் பாடலைத் தேடிப்பிடித்து அனுப்பியிருக்கிறார். அது இங்கே.

4 comments:

கோவை ரவீ said...

சுந்தர், இப்ப தானே சொல்லியிருக்கீங்க தேடி பிடிச்சு அனுப்பிடுறேன். சரியா?

கோவை ரவீ said...

//மன்னிக்கவும்.. தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தும் இந்தப் பாடல் எங்கும் கிடைக்கவில்லை. மக்கள் யாரிடமாவது இருந்தால் தயவிட்டு கொள்சி பிடி! மிக்க நன்றியுடையவனாக இருப்பேன்.//

சுந்தர், இனி நீங்க நிமிர்ந்து நேரா உக்கார்ந்துட்டு தண்ணீர் குடிக்கலாம். உங்க ஜிமெயில் பாக்ஸ் பாருங்க. பாடல் வந்துடுச்சு. தெலுங்கு, தமிழ் இரண்டையும் ப்ளாக்ல இருக்கட்டும். ஒ.கே வா?

கோவை ரவீ said...

எஸ்.பாலா எங்க போய்டீங்க இந்தபாட்டுக்கு சூப்பரான விளக்கம் கொடுங்க சார்.

Baluvedhan Who Else said...

Sure a Ravi Sir..Indha Sundar a Udhaikanum, avar mattu Ezudhinde porar, nammmala Pinnadi ooda Mudiyala..varen Varen..

Followers

பகிர்க