1049. ஒரே நாள் உனை நான்
என்னுடைய சிறுவயதில் வந்தபடம் இளமை ஊஞ்சலாடுகிறது. மிகப்பெரிய வெற்றிப்படமான அது எல்லா நகரங்களிலும் ஓடிமுடிந்து வற்றாயிருப்பு ராமகிருஷ்ணா டூரிங் தியேட்டருக்கு வந்தபோது கமல், ரஜினி இருவரும் இருந்ததால் ஊரே ஓடிப்போய் பார்த்தது. ஸ்ரீதர் இயக்கிய படம். பாடல்களுக்காகவே பட்டிதொட்டியெல்லாம் ஓடியது. ராமகிருஷ்ணாவில் நாலைந்து தினங்கள் ஓட்டிவிட்டு “இன்றே இப்படம் கடைசி” ஒட்டி எடுத்துவிட்டாலும் பிறகு காட்சிகளுக்கு இடையே கூம்பு ஒலிபெருக்கியில் ஒலிபரப்பப்படும் பாடல்களில் இளமைஊஞ்சலாடுகிறது பாடல்களும் பல வருடங்களுக்கு ஒலித்துக்கொண்டே இருந்தன. இந்தப் பாடலைக் கேட்காத நாளே இல்லை எனலாம். வாணிஜெயராமும் பாலுவும் சேர்ந்து வாலியின் வரிகளை அழகாகப் பாடியிருப்பார்கள். இசை இளையராஜா. கமலும் ஸ்ரீப்ரியாவும் நடித்திருப்பார்கள். நாய்க்காலர் சட்டையின் மேல் பொத்தான்களைத் திறந்துவிட்டுக்கொண்டு பெல்பாட்டம் போட்டுக்கொண்டு ஸ்டைலான மைனர் மாதிரி வருவார் கமல்.
படம் கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்களாவிட்டாலும் இன்னும் மனதில் ஊஞ்சலாடிக்கொண்டிருக்கும் பாடல் இது.
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
சங்கமங்களில் இதம் பெறும் சம்பவங்களில் நிதம் நிதம்
மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
நெஞ்சத்தில் பேரெழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
நெஞ்சத்தில் பேரெழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
கற்பனைகளில் சுகம் சுகம் கண்டதென்னவோ நிதம் நிதம்
மழை நீ நிலம் நான் மயக்கமென்ன
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
லலலலலலலலலலலலலலலா
லலலலலலலலலலலலலலலா
லலலலலலலலலலலலலலலா
லலலலலலலலலலலலலலலா
பஞ்சணை பாடலுக்கு பல்லவி நீயிருக்க
பஞ்சணை பாடலுக்கு பல்லவி நீயிருக்க
கண்ணிரண்டிலும் ஒரே ஸ்வரம்
கையிரண்டிலும் ஒரே லயம்
இரவும் பகலும் இசைமுழங்க
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
ஊஞ்சலாடுது ஊஞ்சலாடுது ஆஹஹாஹஹா..


1 comments:
Dear Sundar,
Welcome back......
NIce write up about the songs ...
Old Days - Theater - ellam nyabagam vara seithuteenga...
Thanks for the writings Sundar.
With Love,
Usha Sankar.
Post a Comment