Sunday, December 10, 2006

கன்னிப்பெண்ணே..உன் உடலில்

Photobucket - Video and Image Hosting

கன்னிப்பெண் இந்த படத்தில் பாலு அற்புதமான பாடல்கள் பாடியுள்ளார் மற்றும் கன்னிப்பெண்ணே என்ற பெயரில் பல படங்களில் பல ஸ்டைலில் பாடல்களூம் மெலோடியாக பாடியுள்ளார் இது யாவருக்கும் தெரிந்ததே. பாலு ரசிகர்க்ளுக்கும், இணையதள பதிவாளர்களுக்கும் என் அன்பு வேண்டுகோள். இந்த பாடலை பாலு ரசிகர்களில் 30 சதவீதம் தான் அதுவும் பாலு யாகூ ரசிகர் குழுவில் அதிகம் கேட்டிருப்பார்கள் என்று நினக்கிறேன். பெண்களை வர்ணிக்கும் பல பாடலகளை கேட்டிருப்பீர்கள் ஆணால், அத்திபூத்தது போல் எப்பவாவது வந்திருக்கும் இது போன்ற பாலு அவர்கள் பாடும் இந்த தனிப்பாடல் அத்திப்பூத்தது என்ற படத்தில் வருவது. இந்த தகவல் தவிர, படத்தில் யார் நடித்தார்கள், யார் டைரக்டர் யார் தயாரிப்பாளர், யார் இசையமைப்பாளார் என்று இதுவரை எனக்கே தெரியவில்லை. இந்த தகவலை பெற பெரும் முயற்சி செய்தேன்/கிறேன். எனக்கு
தெரிந்த நண்பர்கள் பலரிடம் முட்டி மோதி கூடப்பார்த்துவிட்டேன். ங்கே???? என்று பெரிதும் யோசிக்கிறார்கள். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்து இந்த பதிவின் சுட்டியை பாலுவிற்கே அனுப்பி கேட்டுவிடலாம் என்று முடிவுக்கு வந்துவிட்டேன். இந்த ஒரு சின்ன விஷயத்துக்காக அவரை தொந்தரவு செய்வதில் எனக்கு சிறிதும் உடன்பாடு கிடையாது, இருந்தாலும் அவருக்கே நினவில் இருக்குமா என்பது எனக்கு சந்தேகம். அவருடைய
பாடல்களில் அவரின் இனிமையான குரல், அனுபவித்து பாடும் திறமை இவையுடன் மற்றொன்றும் அவரின் முக்கியமான மூலதனமாக உள்ளது. அது என்னவென்றால் மறதி ஆமாம் நண்பர்களே, மறதி அவருக்கு முக்கியமான ஒன்று அதனால் அவருக்கு நினவுக்கு வர அதிக வாய்ப்பில்லை. (மறதி) இதை பற்றி ஏன் சொல்கிறேனென்றால் ஒரு காலத்தில் ஒரு நாளில் பல பாடல்கள் பதிவு செய்தவர் அந்த நட்களில் ஒரு பாடலின் மெட்டில்
பாடிய பாடலை அந்த ஒலிபதிவு கூடத்திலேயே மறந்து விட்டு போய்விட வேண்டும். இல்லையென்றால் அந்த பதிவின் மெட்டு அடுத்த பாடலை பாடும் போது மிகவும் அவருக்கு சிரமமாக இருக்கும். இந்த தகவலை என்னிடம் நேரிலே தெரிவித்த ஒன்று. இருந்தாலும் என் கேள்வியை அவர் நிச்சயம் படிப்பார் பதில் அனுப்புவார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன். அவரிடம் பதில் வந்தவுடன் விவரங்கள் தருகிறேன். அதற்குள் உங்களுக்கு யாருக்காவது
தெரிந்தால் தெரிவியுங்கள் உங்களுக்கு நன்றியுடையவனாக இருப்பேன்.

**முக்கியமான குறிப்பு: பாடலின் ஒலி அதிகமாக இருக்கும் அதனால் ப்ளேயரின் ஒலியின் அளவை உங்களுக்கு தேவையான அளவுக்கு வைத்துக்கொள்ளவும். என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். -- கோவை ரவீ.

கன்னிப்பெண்ணே..ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..ஏ
கன்னிப்பெண்ணே..ஏ..ஏ.ஏ.ஏ.
கன்னிப்பெண்ணே..ஏ..ஏ.ஏ..ஏ

கன்னிப்பெண்ணே..உன் உடலில்
பொன்னோளி வீசுதடி
அதைக்கண்டுவிட்ட
கண்ணிரண்டும் கூசுதடி

கன்னிப்பெண்ணே..உன் உடலில்
பொன்னோளி வீசுதடி
அதைக்கண்டுவிட்ட
கண்ணிரண்டும் கூசுதடி
பெண்ணழகு காவியம் பேசுதடி
கன்னிப்பெண்ணே..உன் உடலில்
பொன்னோளி வீசுதடி

சிட்டு போல் பறந்து வரும் பெண்ணடி
ஆ ஆ ஆ ஆ ஆ..ஆ ஆ ஆ ஆ ஆ

சிட்டு போல் பறந்து வரும் பெண்ணடி
சிலை போல நிற்பதும் ஏனடி
நீ சிலை போல நிற்பதும் ஏனடி

கொட்டிப்பார் பொன்னாக்கும் மண்ணடி நீ
கொட்டிபார் பொன்னாக்கும் மண்ணடி
தொடுத்திட்டாள் கணையாகும் கண்ணடி
நீ தொடுத்திட்டாள் கணையாகும் கண்ணடி

கன்னிப்பெண்ணே..உன் உடலில்
பொன்னோளி வீசுதடி
அதைக்கண்டுவிட்ட
கண்ணிரண்டும் கூசுதடி

குங்குமச்சிவப்பு உன் இதழ் சாயமோ

குங்குமச்சிவப்பு உன் இதழ் சாயமோ
கொல்லாமல் கொல்லுவதும் நியாயமோ
என்னை கொல்லாமல் கொல்லுவதும் நியாயமோ

தங்கையினால் மங்கை உந்தன் தாதியோ
தங்கையினால் மங்கை உந்தன் தாதியோ
அது சிந்தும் மொழி நீ விடுத்த சேதியோ

பட்டுப்போல் உன்னுடல் மெண்மையடி
பட்டுப்போல் உன்னுடல் மெண்மையடி
உன்னை கட்டிக்கொண்டு நிற்பதும் பெண்மையடி

மொட்டுப்போல் பற்கள் வெண்மையடி
மல்லி மொட்டுப்போல் பற்கள் வெண்மையடி
மொழிகின்ற சொல்லெல்லாம் உண்மையடி
நான் மொழிகின்ற சொல்லெல்லாம் உண்மையடி

கன்னிப்பெண்ணே..உன் உடலில்
பொன்னோளி வீசுதடி
அதைக்கண்டுவிட்ட
கண்ணிரண்டும் கூசுதடி
பெண்ணழகு காவியம் பேசுதடி
கன்னிப்பெண்ணே..உன் உடலில்
பொன்னோளி வீசுதடி

கன்னிப்பெண்ணே..ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..ஏ
கன்னிப்பெண்ணே..ஏ..ஏ.ஏ.ஏ.
கன்னிப்பெண்ணே..ஏ..ஏ.ஏ..ஏ

3 comments:

Balu, Vera Yaaru said...

Film Name : Kanni Penn
Banner : Sathya Films (Then, It was Sathya Films, not movies)
Releasing Date : 11/09/1969 (Me, Yet to give birth then :-) )
Music Release date : 12/07/1969
Producer : if it's Sathya films banner, then ofcourse RM Veerappan

Story & Screenplay : RMVe taken care of Screenplay too along with an aditional work of Story with SMST (Sathya Movies Story

Team) members of S.Jagadhesh and V.Laxmanan (V stands for Vidwan)

Dialogues : RK. Shanmugam (RKS is famous for his sharp dialogues in SMST)

Director : A.Kasilingam

Hero : Another Sathya Movies without MGR, if so, the next option is Bond, James Bond, Jaishankar.

Co-acting :, Sivakumar, Laxmi, Vanishri.. MUSIC : Mellisai (Alias) MSV, he is the only greatest Mastero of TFM, noone else

so called

Singers : TMS, Sirgazhi Govindarajan, SPB, the Great, P.Sushila, S.Janaki, my Darling, and LR Eshwari.

Fact file : This movie only introduced the greatest Pair of TFM, SPB-SJ duets, for the song "Powrnami Nilavili", Im (not only

me, but many almost everyone) craze of this exordinary pair.

But Ravi sir, I doubt w'r this song is from the movie Kannipenne, I think its from School master, (But I doubt)

krishnan said...

பாலு அவர்கள் குரலில் பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் என்ற பாடலும் இந்த படத்தில் தானே உள்ளது
ஆம் எனில் இசை எம்.எஸ்.வி அவர்கள்
நடிப்பு ஜெய் சங்கர் லக்ஷ்மி இயக்கம் ஏ.காசி லிங்கம்.

கோவை ரவீ said...

அன்பின் பாலா, கிருஷ்னன்

ரெண்டு பேரும் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை ஏதேதோ சொல்றீங்களே இது நியாயமா?

Followers

பகிர்க