மேகத்தை கிழித்துக்கொண்டு வரும் மின்னல் குரலாக வாணிஜெயராம் குரல் வருவது அக்கா படத்தில். பாலுஜியும், வாணிம்மாவும் ஒரு வித காந்தசக்தியுடன் அழகான மெலோடியாக இந்த பாடலை வழங்கியிருப்பார்கள். கொஞம் செவி சாய்த்து அனுபவித்து தான் பாருங்களேன்.

1

குதூகலம் என்று ஒரு உணர்வு இருக்கிறதே, கேட்கையில் நம்முள் அதை எழுப்புமிந்தப் பாடல்.

பாலுவும் ஜானகியும் சரி- அவர்கள் பாடும் விதத்தைக் கேட்கும்போதே - It is so sweet that I can't bear any more - என்று சொல்லவேண்டும் போலத் தோன்றுகிறது. திகட்டத் திகட்ட இனிமையாகப் பாடுகிறார்கள்.

2

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நடித்த படம் ஸ்வதேசி. பெயருக்கு தகுந்தார் போல படம் எப்படி எடுத்திருப்பார்களோ என்ற பயத்திலே ரசிகர்கள் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்களோ தெரியவில்லை.

ஸ்ரீதேவியும் கோயான் கோபுவும் ஹெலிகாப்டரில் வர, மஞ்சள் நிற சிறிய விமானத்தில் ஹெலிகாப்டரை கமல் சுற்றிச் சுற்றி வர, இருவரும் போட்டிப்பாடலாகப் பாடிக்கொள்ளும் இந்தப் பாடலை பாலுவும் ஜானகியும் அருமையாகப் பாடியிருப்பார்கள். வாகனத்தை மாற்றியிருந்தால் சுற்றி வருவது சிரமம்.

1

நடிகர் முத்துராமன் அவர்கள் நடித்த பழைய படம் "காலங்களில் அவள் வசந்தம்" பிரபலமான பாடலின் பல்லவியே படத்தின் பெயராக வைத்தால் நன்றாக ஓடும் என்று வைத்துருப்பார்கள் என்று நினைக்கிறேன். நான் படம் பார்க்கவில்லையாதலால் இந்த பாடல் காட்சி சுத்தமாக மறந்துவிட்டது யாரவாது தகவல்கள் தரலாம்.

2

'குருவில் குரு' என்று மதுரை குரு திரையரங்கத்தில் குரு படம் திரையிடப்பட்டபோது பேசிக்கொண்டோம். பெத்தானியபுரத்தில் இருக்கிறது குரு திரையரங்கம். அந்தப் பக்கம் மதி, இந்தப் பக்கம் குரு, இரண்டிலொன்றில் கட்டாயம் கமல் படங்கள் வெளியாகும்.

வணிகரீதியாக வெற்றிபெற்ற சரியான மசாலா படம் குரு (1980).

2

நூறாவது நாள் (1984) சத்யராஜுக்குப் புகழ்தந்த மற்றுமொரு படம். மொட்டைத்தலையில் வந்த மனிதர் மிரட்டியிருப்பார். அவரது மிரட்டல் நடிப்பிற்கு முன்பு மோகன் மைக்கோடு தலைமறைவாகியிருப்பார். நளினி நாயகி. விஜயகாந்தும் நடித்திருக்கிறாரா என்ன?

பாலுவும் ஜானகியும் இந்தப் பாடலை அருமையாகப் பாடியிருப்பார்கள்.

6

'கல்லூரி மாணவன்' முரளி, கூடப்படிக்கும் சார்லி, விவேக், கெளசல்யா நடித்த காலமெல்லாம் காதல் வாழ்க படத்தின் பாடல்கள் மென்மையாக ஒலிக்கக்கூடியவை. 'ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்' பாட்டை ஹரிஹரன் அருமையாகப் பாடியிருப்பார்.

3

மொழி சமீபத்தில் பார்த்து மகிழ்ந்த அருமையான படம். ஏற்கெனவே நிறைய பதிவர்கள் விமர்சனம் எழுதிவிட்டபடியால் அதிகம் படத்தைப் பற்றி எழுதப் போவதில்லை. ஆனாலும் சில குறிப்புகள்.

3

கேப்டன் விஜயகாந்த் நடித்த கூலிக்காரன் படத்தில் ஓர் கலக்கலான பாடல். பாலுஜி பாடி இந்த மாதிரி பாடல்கள் தற்போது அதிகம் வருவதில்லையே எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.

6

தண்ணீர் கொடமெடுத்து என்ற ஒரு கலக்கலான பாட்டு ஏற்கெனவே இந்த தளத்தில் கேட்டிருக்கோம் யாகூ பாலு குழுவின் ரசிகர் திரு.எம்.ஜி.ராமச்சந்திரன் (நல்ல பேரைத்தான் வச்சிருக்கிறார்) வேண்டுகோளுக்கிணங்க இந்த பாடலை தேடிப்பிடித்து அவருக்கு வழங்கியுள்ளேன்.

4

காதல் பரிசு படத்தில் இன்னொரு முத்தான பாடல் - பாலுவும் ஜானகியும் பாடியது.

ஆரம்ப அதிரடி இசையைக் கேட்டு இது அடிதடிப் பாடல் போல என்று நினைத்து ஏமாந்த ஆத்மாக்களில் நானும் ஒருவன்.

3

பனிமலர் என்ற படத்தில் இருந்து பாலுஜி, ஜென்சி குரல்களில் ஓர் அழகான பாடல் இந்த டிசம்பர் மாத குளிரில் ஜில்லென்று கேட்கலாம். படம் சுத்தமாக பார்த்த நினவில்லல ஆதலால் யாரவது தகவல்கள் தெரிவிக்கலாம்.

11

நடிகர் திரு.ரஜினிகாந்தின் 58ஆவது பிறந்த நாளை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள் அனைவருக்கும் பாலுஜீ சார்ப்பாகவும் அவரின் அபிமான ரசிகர்கள் சார்ப்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். பொதுவாகவே பாலுஜி பாடல்களில் உயிரோட்டமான நடிப்பினை தருபவர் ரஜினி சார்.

1

இன்று பாரதியாரின் பிறந்த நாள் இந்த நாள் ஸ்பெஷலாக ஏற்கெனவே போடப்பட்ட பாடலை வழங்கி நினவுபடுத்துவதில் மிக்க மகிழ்ச்சி யடையிகிறேன்.

1

"இனி இம்மாதிரிப் படங்களில் நடிக்க மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன் - கமல்"

'கமல்-இளைஞிகளின் Heart-throb-காதல் இளவரசன்' என்ற ரீதியில் வந்த இன்னொரு படம் காதல் பரிசு. அம்பிகா, ராதா என்று இரண்டு நாயகிகள் (கமலின் படத்தில் துணை நடிகரொருவர் சொல்வது போல 'வாழ்வு தான்').

2

உலகநாயகன் கமல்ஹாசன் அவரின் நடிப்பில் வெளிவந்த சூப்பர் படம் "இரு நிலவுகள்" இந்த படத்தை எப்போ பார்த்தோம் என்று நினவே இல்லை. படம் பார்த்த ஞாபகம் இருக்கிறது. இந்த படத்தின் கதை வித்தியாசமாக எடுக்கப்பட்டிருக்கும் என்று மட்டும் தோன்றுகிறது.

5

பாலுஜியின் அதிதீவீர ரசிகர் ஆயிரம் பெயர் வாங்கிய அபூர்வ சிகாமணி திரு.எஸ்.பாலா அவர்கள் பல நாட்களாக என்னை கேட்டுக்கொண்டிருந்த ஓர் படத்தின் பாடல் இன்று பதிய நேரம் கிடைத்தது. இந்த பாடல் பதிய இத்தனை நாள் எடுத்துக்கொண்டதற்கே என்னை ஒரு வழி செய்திடுவார்.

1

ராஜாராஜேஸ்வரி படத்தில் இருந்து ஓர் அற்புதமான பாடல் இந்த படம் பாடகி திருமதி. டி.கே.கலா தயாரித்த படம் என்று நினைக்கிறேன். சென்னையில் பாலுஜியின் பவுண்டேசன் சாரிட்டி சார்ப்பில் டிசம்பர் 2ஆம் தேதி ரத்த தாணம் நடைபெறவுள்ளது.

3

மைக் மோகன் படங்களில் பாடல்களூக்கு பஞ்சமே இல்லாமல் இருக்கும் போதாதற்கு அவர் பாடலுக்கு நடிக்கும் விதம் இருக்கே அப்பப்பா மனுசன் ரொம்ப ரொம்ப ரசிச்சு நடிப்பார்.

3

ராகதேவதை இந்த படம் மொழிமாற்றம் படம் என்று நினைக்கிறேன். "விதாத நினைவினில்" இந்த பாடல் எனக்கு கேட்ட நினவு இல்லை. முதல் முறை கேட்பதால், பாலுஜியும், சுசீலாம்மாவும் பாடலை பாடிய விதம் அருமையாக இருந்தது. ஒரு தளத்தில் கேட்ட பாடலை தங்களின் செவிக்கும் வழங்குவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

4

ரொம்ப நாட்கள் கழித்து இந்த பாடல் ரேடியோவில் கேட்டேன். டைரக்டர் உதயகுமார் படத்தில் பாடல்களுக்கு மிகவும் முக்கியத்துவம் தருவார். அந்த வகையில் பாலுஜிக்கு ஓர் செமி சோகப்பாடல் தந்து நம் மனதையும் கலங்கடிக்கிறார். கேட்டுப்பாருங்கள் வித்தியாசமாக இருக்கும்.

2007, அக்டோபர் மாதம் 13ஆம் தேதி அன்று சென்னையில் லக்ஷ்மன் ஸ்ருதி குழுவினரின் ஓர் இன்னிசை நிகழ்ச்சி நடைப்பெற்றது. 'நினைத்தால் இனிக்கும்' என்ற தலைப்பில்

நடைபெற்ற இந்த இன்னிசை நிகழ்ச்சியில் பாலுஜியுடன் சேர்ந்து குழுவின் பாடகர்கள் அருமையாக பாடி நிகழ்ச்சி சிறப்பித்தார்கள்.

4

நடிகை சிவக்குமார், பிரமிளா இருவரும் நடித்த அரங்கேற்றம் படம் ஒரு குஷாலான படம்தான். இந்த படத்தில் இப்படி ஒரு பாட்டு வருவது ஒன்றும் தவறில்லை. திரு.வி,குமார் சாரைபற்றி சென்ற வாரம் எ.பா.பா வில் பாலுஜி ரொம்பவும் சில்லாகித்து சொன்னது.

4

மற்றுமொரு பாலுஜி, வாணிஜெயாராம் குரலில் அழகான ஒரு பாடல் சின்னப்பூவே மெல்லப்பேசு என்ற படத்தில் வரும் இந்த பாடல் இசையமைப்பாளர் ராஜ்குமார் அவர்கள் எழுதி இசையமைத்தது. பாடலின் இசையமைப்பும் மெட்டும் காதுகளூக்கு தேன் குயில் வந்து தேன் துளிகளை சொட்டுவது போல் மனதிற்கு இனிமையாகவும், இதமாகவும் இருக்கும்.

4

என் இதய ராணி தேகம் ஓர் இனிமையான ராகம் என்னவொரு ஆழகான பல்லவி. நாலு பேருக்கு நன்றி இந்த படத்தில் வரும் இந்த மெலோடியான பாடல் என் தலையை போட்டு பிய்த்துக்கொண்டேன் காட்சியமைப்பு கண் முன் வந்தால்தானே? யார் நடிகர்கள் என்று கூட மறந்து விட்டது.

2

தீபாவளி திருநாளில் அதிகபட்ச எல்லா தொலைக் காட்சி சிறப்பு காட்சிகளில் "பொல்லாதவன்" படத்தின் எங்கேயும் எப்போதும் ரீமிக்ஸ் காட்சிகள் எப்படி படமாக்கினார்கள் என்று போட்டு போட்டு தாக்கிவிட்டார்கள். அந்த படத்தில் பல பாடல்கள் இருக்கும் போது. இந்த பாடலை பற்றி தான் அதிகம் விவரித்து ஒளிப்பரப்பினார்கள்.

6

ஓர் பழைய பாடல் கேட்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. வாணி மேடத்தின் குரல் சில நேரங்களீல் நம் மனதை என்னென்னவோ செய்துவிடும் அதுவும் பாலுஜியுடன் சேர்ந்து பாடும் அந்த ஷார்ப் குரல் நம் பழைய நினவுகளை கிளறி நம்மை சொர்க்கத்துக்கே அழைத்து சென்றுவிடும்.

5

மழை எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம் - மழையில் நனைவதும்தான். ஆனால்..

மொட்டை மாடியில் சில்லிட்ட இரவில் கண்சிமிட்டும் நட்சத்திரங்களையும் ஒளிவீசும் நிலாவையும் பார்த்துக்கொண்டு அரட்டையடித்துக்கொண்டே என்னையறியாமல் தூங்கிப்போன வாழ்வின் சுகமான தருணங்களை நினைத்துக் கொள்கிறேன்.

4

முத்துராமன் காலஞ்சென்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். நடிகர் கார்த்திக் இவரது மகன் ஆவார். இவர் 1960-1970களில் முண்ணனி நடிகராக இருந்தார். நவரச திலகம் எனவும் அழைக்கப் பட்டார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

2

'குட்டி' என்ற பெயரில் பஞ்ச் டயலாக் எதுவும் இல்லாமல், நூறு பேரை ஒரே சமயத்தில் மாட்ரிக்ஸ் பாணி சண்டைக் காட்சியில் வீழ்த்தாமல், எளிமையாக வந்து, அழகாக நடித்து, எல்லார் மனதையும் விஜய் கொள்ளையடித்த படம் துள்ளாத மனமும் துள்ளும் (1999).

3

இந்த பாடலின் துவக்கமே அபாரமாக இருக்கும். துவக்கத்தில் இசைமைப்பாளரின் சந்திரபோஸின் குரல் நம்மை எங்கோ ஒரு கேரளா கடற்கரைக்கு அழைத்து செல்வது போல் இல்லாமல். நம்மையே படகில் அமர்ந்து துடுப்பு போடவைக்கும் அருமையான மெட்டுகொண்ட பாடல். ஆமாம், நீலக்குயில்கள் ரெண்டு பாடல் தான் அது.

4

இந்த பாடலின் துவக்கமே அலாதியான ஹம்மில் பாலுஜி பட்டைய கிளப்பியிருப்பார். பாடல் காட்சியில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் நடிப்புக்கு சொல்லவும் வேண்டுமா?. அந்த மேக்கப்பில் சும்மா கும்மென்று இருப்பார் தங்கையாக வரும் சுமித்ரா அவருக்கு ஈடு கொடுத்து நன்றாக நடித்திருப்பார்.

6

தமிழ்திரையிசைக்கு மிகவும் தாமதமாகக் கிடைத்த பெரும் பொக்கிஷம் பாடகர் ஹரிஹரன். தமிழ்த் திரையுலகத்தில் தனது முதற் பிரவேசத்துடன் அவரையும் அறிமுகம் செய்து வைத்த இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு தமிழ்த் திரையுலகம் மிகவும் நன்றிக் கடன் பட்டிருக்கிறது.

2

குறிப்பு: இந்த பாடலின் விளக்கம் தட்டச்சு செய்து பதிந்து பிறகு தான் மின்சாரப் பிரச்சனையால் காரணமாக விளக்கம் விடுபட்டு போயிருந்தது பார்த்தேன். தாமதமாக பதிந்ததற்கு மன்னிக்கவும்.

6
இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading