எங்க போய் சொல்லுவேன்
மனிதன் தன் வாழ்க்கையில் அன்றாட வேலையில் அலுவலகத்திலோ, வீட்டிலோ பல அனுபவங்கள் அப்போது தன் மனதில் நிகழும் சோகங்களை பல நேரம் இப்படி நினப்பதுண்டு. அவை தான் இந்தபாடல் பல்லவியான "எங்கே போய் சொல்லுவேன் என்னன்னு சொலுவேன்" என்ற பாடலைப்பற்றி தான் இந்த பதிவு.
1சோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்
அந்த காலத்தில் நடிகர் பிரபுவிற்காகவே இந்த மாதிரியான அழகான பாடல்களை தாயாரிப்பாளர்கள் சேர்த்தார்களோ என்னவோ!...
10ஆழ்கடலில் தத்தளித்து
1982ஆம் வருடம் தேசிங்கு ராஜெந்திரன் டைரக்சனில் வெளீவந்த ராகம் தேடும் பல்லவி படத்தில் நடிகர் சங்கர், அனுபமா ஆகியோர் நடித்த படம். சங்கர் டி.ராஜெந்தர் ஓரிரு படங்களில் நடித்தவர். இவரின் திறமையை டி.ஆர் சரியாக பயன்படுத்த படவில்லை போலும்.
7வானம் நிறம் மாறும்
திரு. பாக்யராஜ் டைரக்சனில் வெளிவந்த தாவனிக்கனவுகள் படத்தில் மற்றுமொரு டூயட் பாடல்
வானம் நிறம் மாறும். இந்த பாடல் ஒரு இனம் புரியாத ஒரு சுகத்தை நம் மனதிற்க்கு ஏற்படுத்தும். நானும் பலமுறை கேட்டுப்பார்த்து கூர்ந்து கவனித்ததில்.
வா வா என் வீணையே
கமல் நடித்த சட்டம் படத்தில் மற்றுமொரு ஒரு அழகான காதல் வரிகளை கொண்ட பாடல். இந்த பாடலை பதிவில் போடாமல் இருந்தால் பாலு ரசிகர்கள் என்னை உண்டு இல்லைன்னு செய்து விடுவார்கள். இந்த படத்தில் அதிகபட்ச பாடல்கள் பாலுவுடன் வாணிஜெயராம் அவர்கள் தன்னுடைய வித்தியாசமான குரலில் பாடியிருப்பார்கள்.
4மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு
1974ஆம் ஆண்டு மெல்லிசை மன்னரின் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் வெளி வந்த
அத்தையா மாமியா என்ற படத்தில் பாலு அவர்கள் எல்.ஆர். ஈஸ்வரியுடன் சேர்ந்து பாடிய இந்த பாடலில் வரும் //மெதுவாய் தொட்டாட மணிவாய் முத்தாட.. வருவாய் என் கண்மணி//
இந்த வரிகளை அப்போதே எவ்வளவு ஜாலியாக பாடியிருகார் கேளுங்கள் நண்பர்களே.
சிறிய பறவை சிறகை விரிக்கத் துடிக்கிறதே
அந்த ஒரு நிமிடம் (1985) படத்தைப் பற்றிக் கேட்காதீர்கள்! நான் அழுது போடுவேன் ஆமா! 'அந்த ஒரு நிமிடம்தான்' என்று படத்தில் ஒரு வசனம் வரும். அது ஒன்றுதான் படத் தலைப்புக்குச் சம்பந்தமான ஒரே விஷயம்.
9தலைமகனே கலங்காதே
மிகமிகக்குறைந்த இசைக்கருவிகள் கொண்டு ஒரு பாடல் இது, சோகப்பிரியர்களுக்கு ஒரு அற்புதமான பாடல் கேட்பதற்க்கு முன் திருவண்ணாமலையார் மீது பாலு பாடிய அருணாச்சலனே, போன்ற பக்திப்பாடல்களின் ஆல்பத்தை பலபேர் கேட்டிருப்பீர்கள் அதிக பிரபலமான ஆல்பம்.
3அம்மம்மா சரணம் சரணம்
1984ஆம் வருடம் வெளிவந்த இசையமைப்பாளர் கங்கைஅமரன் அவர்களின் இசையில், கமல், மாதவியுடன் சேர்ந்து சரத்பாபு நடித்த சட்டம் ஒரு அற்புதமான படம். இரு நண்பர்களின் நட்பை அழகாக வெளிபடுத்தும் படம். இந்த படத்தில் அணைத்து பாடல்களூம் இனிமையாக இருக்கும். இந்த படத்தில் கமல் நடிப்பில் அசத்துவார்.
2ஓ மானே மானே மானே. .
1983ஆம் வருடம் வெளிவந்த நடிகர் திலகம் சிவாஜி கனேசன் மற்றும் பிரபு நடித்த படம் வெள்ளை ரோஜா படத்தின் பெயருக்கு ஏற்றார் போல் பாதிரியார் வேடத்தில் உஜ்ஜாலா சொட்டு நீலம் போட்டது போல் பளீர் என்று வெள்ளை அங்கியில், மெகா சைஸ் மூக்கு கண்ணாடியில் அமர்க்களமாக இருப்பார்.
திருத்தேரில் வரும் சிலையோ
திரு.யோகனந்த் டைரக்சனில், மேஸ்ட்ரோ இளையராஜா இசையமைப்பில் 1979ஆம் ஆண்டு வெளிவந்த நான் வாழவைப்பேன் என்ற படத்தில் "என்னோடு பாடுங்கள்" என்ற அருமையான பாடல் ஒன்றை என்னுடைய முன்பதிவில் கேட்டோம். இதோ மற்றுமொரு பாடல் "திருத்தேரில் வரும் சிலையோ" என்ற அழகான பாடல்.
4மாலை சூடும் வேளை
1984ஆம் ஆண்டு திரு.எஸ்.பி.முத்துராமன் டைரக்சனில் இளையராஜா இசையமைப்பில் வெளிவந்த ரஜினிகாந்த், ராதா நடித்த படம் நான் மகான் அல்ல. இந்த படத்தில் வரும் மாலை சூடும் வேளை என்ற இந்த பாடல் அழ்கான மெட்டு கொண்ட பாடல். பாலுவின் பாயாச குரலில் சரணங்களில் வரும் //கோடையில் நான் ஓடை தானே..
5இசை மேடையில்
மைக் மோகன் மிகப்பிரபலமாக இருந்த காலத்தில் வந்த படம் இளமைக்காலங்கள். இந்த படத்தில் சசிகலா கதாநாயகியாக நடித்திருப்பார். திரு. ஹரிவன்னன் டைரக்சனில் மேஸ்ட்ரோ இளையராஜ இசையமைப்பில் 1983ஆம் ஆண்டு வெளிவந்த படம்.
கன்னிக்கோவில்
வானவில் படத்தில் வரும் இந்த அழகான சிறிய பாடல் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும். பாடல் வரிகள் அருமையாக எழுதப்பட்டிருக்கும். குறிப்பாக //உங்கள் பெண்கள் பூமஞ்சள் சூட செய்தாயே எங்கள் பெண்களும் மாலைகள் சூட செய் தாயே// என்ற இந்த வரிகளில் பாடாலாசிரியரின் திறமை வெளிப்பட்டிருக்கும்.
1ஐ வாண்ட் டெல் யூ சம்திங்
ஓடாத படத்தில் பாலு பாடிய அனைத்து பாடல்களும் ஹிட் ஆன படங்கள் பல உண்டு. அதில் ஒரு படம் டைரக்டர் சி.வி.ராஜெந்திரன் டைரக்சனில் 1987ஆம் ஆண்டு வெளிவந்த ஆனந்த், இதில் எத்தனை அருமையான பாடல்கள் இருக்கின்றன.
மீண்டும் மீண்டும் வா
பிரபலமான ஷோலே இந்திப்படத்தில் அம்ஜத்கான் அற்புதமான வில்லன் கதாபாத்திரம்
செய்திருப்பார். அந்த காலத்தில் இவரைப்பற்றி பேசாதவர்களே இருக்க முடியாது. அந்த படம்
பல ஆண்டுகள் தென்னிந்தியாவில் சக்கைப்போடு போட்ட படம்.
மூங்கிலிலே பாட்டிசைக்கும்
தயாரிப்பாளர், நடிகர், வசனகர்ததா, இயக்குனர், இசையமப்பாளர் மற்றும் ஆல் இன் ஆல் அழகுராஜா திரு. விஜய் டி.ராஜேந்தர் பற்றி அதிகம் சொல்வதற்கில்லை. சமீபத்தில் புதுவருட டி.வி.நிகழ்ச்சிகளில் பேட்டியில் சொன்னது அவர் படத்தை பொருத்தவரையில் எதையும் ஸ்க்ரிப்டில் வைத்து செய்வதில்லையாம்.
கண்ணீர் சிந்தும் மேகம்
பல மனிதர்களுக்கு பலவகையான சோகங்கள், வேதனைகள் அவற்றையெல்லாம் உடனே
மறக்கடிப்பது ஒரு சோகமான இசை. அதுவும் காதல் ஜோடிகளூக்கு நல்ல சோகப்பாடல்
இருந்து விட்டால் கேட்கவே வேண்டாம். காதலில் தோல்வி அடைந்த காதலனுக்கு மட்டும் எங்கிருந்து தான் பொசுக்குன்னு தாடி வருமோ தெரியவில்லை சாமி.
அங்கும் இங்கும் பாதை உண்டு
//கல்லைக்கண்டால் கனியை கண்டால், கல்லும் இன்று மெல்லமெல்லக் கனியும் உண்ணைக்கண்டால் கதை எழுதி.. பழகிவிட்டால்.. முடிக்கமட்டும் தெரியவில்லை//. இந்த வரிகளில் தான் எத்தனை உண்மை. நான் ரசித்த பாலுவின் பாடல்கள் தமிழிலே கடல் போல இருக்கின்றன.
3தில்லு முல்லு தில்லு முல்லு
1981 ஆம் வருடம் டைரக்டர் கே.பாலசந்தர் அவர்கள் ரஜினிகாந்த் வைத்து ஒரு நகைச்சுவை படம் தந்தார் அந்த படம் தில்லு முல்லு என்ற மாபெரும் வெற்றி பெற்றப்படம்.
திரு.தேங்காய் சீனிவாசன், ரஜினிகாந்ததை வேலைக்காக பேட்டி காணும் காட்சிகள் யாராவது மறக்கமுடியுமா?.. ஒரே தமாஷ் தான் போங்க...
என்னவென்று சொல்வதம்மா
ரம்பை, ஊர்வசி போன்ற தேவலோக கன்னிகள் முனிவர் விஸ்வாமித்தரை ஆடி அவர் தவத்தை
கலைத்தார்கள் என்று புராணங்களில் நான் எப்பவோ படித்ததுண்டு. ஏன் படங்களில் கூட காட்சிகள் அமைத்திருப்பார்கள். இப்போது எதற்கு இந்த பழைய கதையென்று நினைக்கிறிர்களா? . அவசரப்டாதீங்க..
செங்கமலம் சிரிக்குது
நம் மனசையெல்லாம் கிறங்கடிக்கும் கில்பான்ஷ் தலைப்பை படங்களூக்கு வைப்பதில் கில்லாடி
டைரக்டர் கே.பாக்யராஜ் அவர்கள் எங்கிருந்து வந்தவர் கோவைக்காரராச்சே சொல்லவா வேண்டும். "தாவணி கனவுகள்" நினைத்தாளே ஒரே கிளுப்கிளுப்பாக இருக்கும்.