அங்கம் புது விதம் அழகினில்
ஆலாபனை மற்றும் ஹம்மிங் பாட்டுக்கள் பாடுவது என்றால் பாலு அவர்களூக்கு அவ்வளவு அலாதி பிரியம். இதோ இந்த பாடலின் முதலில் வரும் ஆலாபனை ஒரு வித வித்தியாசமான உணர்வை நமக்கு ஏற்படுத்தும். நம்மை அப்படியே ஒரு பெரிய காலியான அறையின் நடுவே அமர்த்திவிடும் அங்கு பாடல் கேட்பது போல் தோன்றும்.
2ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்பே
குழந்தைகளூக்கு யோசனை சொல்லும் பாடல்கள் நிறைய வந்திருக்கின்றன. பாலு அவர்கள் பாடிய இந்த பாடல் தீர்க்க சுமங்கலி என்ற படத்தில் வருகின்றன.
2என்னோடு பாட்டுப் பாடுங்கள் # 9
இந்த வார நிகழ்ச்சி அருமையானதொன்று. பங்கேற்றவர்களும் சளைக்காது நன்றாகப் பாடினார்கள். நடுவராக விஸ்வநாதன், ராமமூர்த்தி இரட்டையர்களில் ஒருவரான திரு.ராமமூர்த்தி. அடிக்கடி மெல்லிசை மன்னர் கூட இல்லாததைப் பற்றிச் சொல்லிக் குறைப்பட்டுக்கொண்டேயிருந்தார்.
4என்னோடு பாட்டுப் பாடுங்கள் # 8
ஏனோ தெரியவில்லை. 24-பிப் நிகழ்ச்சியும் 3-மார்ச் நிகழ்ச்சியும் வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை. இரண்டாவதாக இதற்கு முந்தைய நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக்கொண்ட போட்டியாளர்களை ஒப்பிடும்போது இந்தப் பாகங்களில் பங்கெடுத்தவர்கள் ஒரு மாற்று குறைவு என்றே எனக்குத் தோன்றியது.
1என்னோடு பாட்டுப் பாடுங்கள் # 7
24-பிப்ரவரி அன்று ஒளிபரப்பான என்னோடு பாட்டுப் பாடுங்கள் நிகழ்ச்சியைப் பதிவு செய்யாமல் விட்டுவிட்டது வருத்தத்தைத் தந்தது. இருந்தாலும் நண்பர் கோவை ரவீ அவர்கள் அந்நிகழ்ச்சியின் ஒலிக்கோப்பைப் பதிவு செய்து அனுப்பியிருந்தார். 24-பிப்ரவரி அன்று ஒளிபரப்பான முதல் பகுதியின் ஒலிக்கோப்பு இதோ.
ஆரம்பம் இன்றே ஆகட்டும்
1970 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் வெளிவந்த
படம் காவியத்தலைவி. முதன் முதலில் ஹோட்டல் ரம்பா படம் மூலம் அத்தானோடு பேசி என்ற பாடலை பாலு அவர்களிடம் சோடியாக இணைந்து பாடியவர் எல்.ஆர்.ஈஸ்வரி அவர்கள்
பொதுவாகவே ஈஸ்வரி குரலில் ஒரு வித கிக் இருக்கும்.
என் அன்பே அன்பே
//உன் காதல் மாளிகை நான் அல்லவோ..ஓ ஓ..// என்று ஜானகி மேடமும்,
//உன் ராகமாலிகை நான் அல்லவோ..ஓ ஓ.. // பாலு அவர்களூம்..
பாடல் வரிகளை ஒருவர் மாற்றி ஒருவர் இசையின் கடலில்
நீந்தி விளையாடும் அழகை கேளுங்கள்.
பாலுவின் பாமாலை தொகுப்பு # 3
போனால் போகட்டும் என்று விடமுடியாததும் மேலும் போனால் என்றும் கிடைக்காததுமான உங்கள் பொன்னான ஒரு மணிநேரத்தை... சந்தனத்தில் மணக்கவைத்து.. பாலாற்றில் தோய்த்து எடுத்து.. பஞ்சாமிர்தத்தில் அபிஷேகம் செய்து..
3நீராழி மண்டபத்தில்..
எஸ்.எம்.சுப்பையா நாயுடு, வாலி அவர்கள்
நீராழி மண்டபத்தின், இசைதர்பாரில் வீற்றிருக்க
பீ.சுசீலா, பாலு அவர்களின் குரல்கள்
நாட்டிய நர்த்தனமிட....நம்மையெல்லாம்
அந்த இசைதர்பாருக்கே அழைத்து செல்கிறது
எம்.ஜி.ஆர்,, வாணிஸ்ரீ நடிப்பில்
இந்த தலைவன் படப்பாடல்.. கேளுங்கள்..
ஊர்கோலம் போகின்ற..
ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக காணும்
ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று
ஊர்கோலம் போகின்ற கிளிக்கூட்டம் போல
கோவை ரசம் ஊற்றெடுக்கும் பாலுவின் குரலுடன்
பூச்சுடும் நிலமங்கை எல்.ஆர்.ஈஸ்வரியின் வசீகர குரலும்
இணைந்து வழங்கும் இனிமையை காண
அமைதியை நாடும் நமக்காக...
பாலுவின் பாமாலை தொகுப்பு # 2
"கீதநதி" பாலுவின் பாமாலை தொகுப்பு 2
தங்களின் பொன்னான ஒரு மணி நேரத்தை, தங்கம்போல மெருகேற்றி ஜொலிக்க வைக்க மீண்டும் திரு. யாழ் சுதாகரின் வசீகரிக்கும் கவிதை குரலில் கீதநதியாய் பாலு அவர்களின் இனிமையான 13 பாடல்கள். திரு.
பாலுவின் பாமாலை தொகுப்பு.# 1
"உங்கள் ரசிகன்" யாழ் சுதாகர் இந்த பெயரை பலபேர் இலங்கை ரேடியோவிலும், சென்னை எப்.எமிலும் பலதடவை கேட்டிருப்பீர்கள். மேலும் பாலு யாகூ ரசிகர் குழுவின் உறுப்பினர் "உங்கள் ரசிகன்" இந்த பெயரை அனைவரும் தெரிந்துவைத்திருப்பீர்கள். இவர் பார்வையில் பாடும் நிலா பாலுவின் பாமாலை தொகுப்பு சினிமா பாடல்கள் ஆல்பம்.
9ஏ.சி. தான் குளிரெடுக்க
மைக் மோகன் நடித்த உயிரே உனக்காக என்ற பாடலை ஏற்கனவே கேட்டிருக்கிறோம். இதோ மீண்டும் ஒரு அற்புதமான மெலோடி பாடல். கேளுங்கள் ஜானகி மேடமும் பாலுஅவர்களூம் சேர்ந்து தங்கள் இனிமையான குரல்களால் பாடிய மெய்மறக்கச்செய்யும் பாடல்.
5ஆவதும் பெண்ணாலே......
டாக்டர் எஸ்.பி.பாலு அவர்களின் சார்பாகவும் அவரின் ரசிகர்கள் சார்பாகவும்
"மகளீர் தின நழ்வாழ்த்துக்கள்" தெரிவிப்பதில் மகிச்சியடைகிறோம்.
டைரக்டர் விசு நடித்து இயக்கிய படம் திருமதி ஒரு வெகுமதி. மகளிர் தின சிறப்பாக இந்த பாடலை வழங்குவதில் பெருமையடைகிறேன்.
மீசை வெச்ச ஆம்பளைகெல்லாம்
டைரக்டர் கே.பாக்யராஜின் உதவியாளாராக இருந்தவர் டைரக்டர் பாண்டியராஜன் ஆண்பாவம் படத்தில் ஒரு கலக்கு கலக்கியவர். ஜாடிகேத்த மூடி படத்தில் நடித்தவர்.
என்னோடு பாட்டுப் பாடுங்கள் # 6
10-பிப்ரவரியன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் 17-பிப்ரவரியன்று ஒளிபரப்பானது. மூன்றாம் சுற்றில் வேகமான தாளகதியில் அமைந்த பாடல்களைப் போட்டியாளர்கள் பாடவேண்டும்.
ராஜலக்ஷ்மி பாடியது "எலந்தப் பழம் எலந்தப் பழம் உனக்குத்தான்" என்ற பா.விஜய் எழுதிய பாடலை. நன்றாகவே பாடினார்.
வம்புல மாட்டிவிடாதீங்கோ
பாட்டு பாட ஆசைப்படும் புதிய பாடகர்களூக்காக வாராவாரம் சனிக்கிழமை மாலை 8.00 முதல் 9.00 மணிவரை ஜெயா டிவியில் ஒளிப்பரப்படும் என்னோடு பாட்டு பாடுங்கள் நிறைய தகவல்களை பாலு தந்திருப்பார். அவர்கள் ஒவ்வொருவரும் பாடல்களை எப்படி பாடவேண்டும் என்பதை அழகாக விளக்கம் தருவார்.
2அன்பே சுமந்து சுமந்து
டைரக்டர் உதயகுமார் டைரக்ட் செய்த படம் பொன்னுமணி நடிகர் கார்த்திக், சவுந்தர்யா நடித்தது. சவுந்தர்யாவை நினத்தாலே ஒரு வித சோகம் நம் மனதில் வந்துவிடும் அநியாயமாக ஒரு விபத்தில் தன் உயிரை இழந்தவர்.
3பூ மேடையோ பொன் வீணையோ
இசைஞானியின் வலதுகரமாக விளங்கிய V.S. நரசிம்மன் அவர்களின் இசையில் பாலுவும் ஜானகியும் பாடியிருக்கும் இப்பாடல் அருவி போல நம்மைப் பரவசப்படுத்தக் கூடியது.
மூக்குத்தி பூ மேலே காத்து
கே.பாக்யராஜ் டைரக்சனில் வெளிவந்த அழகான பெயருடைய படம் மௌனக்கீதங்கள், இந்த படத்தில் பாக்யராஜ், சரிதா நடித்திருப்பார்கள் சரிதா படத்தில் பாக்யராஜை சந்தேகப்பட்டு மிகவும் டார்ச்சர் கொடுப்பார். இந்த படத்தில் ஜானகி மேடம் குழந்தை குரலில் அற்புதமான ஒரு பாடல் பாடியிருப்பார்.
9என்னோடு பாட்டுப் பாடுங்கள் # 5
பிப்ரவரி 10-ந் தேதியன்று ஒளிபரப்பாகிய என்னோடு பாட்டுப் பாடுங்கள் நிகழ்ச்சி - நிகழ்ச்சியா அது? ஒரு கண்கொள்ளாக் காட்சி! என்ன மாதிரியாக நிகழ்ச்சியை நடத்துகிறார் பாலு! கரகோஷம் செய்ய இரண்டு கரங்கள் போதாது.
3என்னோடு பாட்டுப் பாடுங்கள் # 4 - சமூகம்?
"சினிமால பிரபலமானவர்கள் சொல்ற ஒவ்வொரு விஷயமும் லட்சக்கணக்கான மக்களை உடனடியா போய் சேரும்" என்று சொல்லிவிட்டு "அதனால கூடுமானவரை நல்ல விஷயங்களை அவங்க சினிமா மூலமா மக்களுக்குச் சொல்லணும்" என்று மிகவும் பணிவன்புடன் குறிப்பிட்டார் பாலு. அறிவுரை சொன்னதோடு அவர் நிறுத்திக்கொள்ளவில்லை.
1ஓ நந்தினி..ஈ..ஈ....
சுஹாசனி, பிரகாஷ்ராஜ் நடித்த நந்தினி என்ற ஒரு படம் வெளிவந்தது எல்லோருக்கும் நினவு இருக்கும் நேற்று (27.2.2007) தனியார் டி.வியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த படத்தில் பாலுவும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் கிட்டதட்ட இரண்டாவது கதாநாயகன் வேடம்.
3