ரஜினிசார் பாடல் கேட்டு அதிக நாட்கள் ஆனபடியால் ஓர் அழகான அமைதியான பாடல் கேட்போம் என்று எனக்கு தோனித்து. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த கை கொடுக்கும் கை படத்தின் பெயரே அழகாக இருக்கும். பாடலைப்பற்றி கேட்கவே வேண்டாம்.

2

சின்னக்குயில் சிட்டுவுடன் (சித்ரா) பாலு அவர்கள் பாடிய ஒரு அழகான டூயட் பாடல். தங்கத்தின் தங்கம் என்ற படத்தில் அழகான வரிகளுடன் பாடல் எழுதி அசத்தலான இசையும் கோர்த்து தந்துருக்கிறார் "ஏ புள்ளே கருப்பாயி" ராஜ்குமார் அவர்கள். நம்மையறியாமல் தாளம் போடவைக்கும் பாடல்.

4

பாலு அவர்கள் பாடிய இந்த பாட்டு நிலாப்பெண்ணே என்ற படத்தில் வருகிறது. இந்த பாடல் ஒரு வித வெறுப்போடு பாடும் பாடல். படத்தை நான் பார்த்ததில்லை. இந்த படத்தின் தகவல்கள் யாருக்காவது தெரிந்தால் தயவுசெய்து தெரிவிக்கலாம்.

4

நடிகர் விஜயகாந்த் அவர்களின் படப்பாடல்கள் இந்த தளத்தில் அதிகம் இடம் பெறவில்லை அவர் படத்திலும் இனிமையான பாடல்கள் ஏராளமாக உள்ளன. இந்த தளத்தின் உரிமையாளர் "வற்றாயிருப்பு" சுந்தருக்கு நான் ரொம்ப கடமைப்பட்டுள்ளேன்.

3

v

ராஜ்குமார் இசையமைப்பில் ஒரு சோகப்பாடல் கேட்போமா? ரெயிலுக்கு நேரமாச்சு படத்தில் வரும் "போறவளே பொன்னுதாயி" என்ற இந்த சோகப்பாடல் என் மனதை உலுக்கிய பாடல். ராஜ்குமார் அற்புதமான இசையமைப்பில் பல பிரபலமான பாடல்கள் உள்ளன. அவையெல்லாம் தேடி பிடித்து பதிய வேண்டும்.

3

ஏதோ.. அதில் ஏதோ.... அதை நானும் நினக்கின்றேன்,, ஏனோ அது ஏனோ.. அதை நானும் ரசிக்கின்றேன். என்னமாதிரியான அழகான பாடல். இந்த பாடலை பதிவாளர் திரு. ஜி. ராகவன் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்..

படம்: கண்மணிராஜா

நடிகர்: சிவக்குமார்

பாடியவர்கள்: எஸ்.பி.பாலு, பி.சுசீலா

ஓஓஓஓஒ.. ஹோஓஓஓஓ

ஓஓஓஓஒ..

4

நடிகர் ரகுவரன் ஒரு படத்தில் ஐந்து நிமிடத்திற்க்கு ஒரே வார்த்தையை மறுபடி, மறுபடியும் சொல்லி பலத்த கைத்தட்டல் வாங்கி பிரபலமானார் எந்த படம் என்று நினவுக்கு வரவில்லை. அந்த வசனம் "ஐ நோ ஐநோ" என்ற வசனம்.

8

படம் பேர் என்னவோ கருப்பு வெள்ளைதான். இந்த பதிவை பார்ப்பதற்க்கு கலர் கலராக இருக்கும் படங்களை பாட்டுடன் கேளுங்கள்.

படம்: கருப்பு வெள்ளை

பாலு, சித்ரா

இசை: தேவா

பாடலாசிரியர்ள் காளிதாசன்

ஓஒ ஸ்வர்னமுகி..

3

கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் வரிகளில் பாலு, சித்ரா ஆகியோரின் மந்திரக் குரல்களில் நம்மை அப்படியே சொக்கவைக்கும் பாடல் இந்த இதழில் கதை எழுதும் நேரமிது. லலிதா ராகத்தில் இந்தப் பாடலை இசைஞானி அமைத்திருக்கிறார் என்று அறிகிறேன். சீதாவும் கமலும் அழகான கவிதையாகக் காட்சியளிப்பார்கள் இந்தப் பாடலில்.

8

இரவு முழுதும் ஆடம்பர வீடுகளில் படகுக் கார்களுடன் ரோஜாக்கள் பரப்பப் பட்டிருக்க சுந்தரிகள் சூழ்ந்திருக்க கையில் மதுபானத்துடன் உல்லாசமாக உலவிய வழக்கமான கனவுகளிலிருந்து விடுபட்டுக் கண்விழித்துக் காலையில் எழுந்ததும் புலமைப் பித்தனின் இந்தப் பாடலை ஒரு முறை கேட்டோமானால் தலைக்கேறிய பித்தம் தெளிந்து நிஜத்த

"எங்க சின்ன ராசா" என்ற படம் டைரக்டர் கே.பாக்யராஜ் அவர்கள் டைரக்சனில் வெளிவந்த படம். இதோ இதில் பாமரனுக்கும் புரியும் படியான எளிமையான வரிகள் கொண்ட ஒரு சோகப்பாடல்.

6

1975 ஆம் ஆண்டு மெல்லிசை மன்னர் இசையமைப்பில் வெளிவந்த "வாழ்ந்து காட்டுகிறேன்" படம். அமர்க்களமான படம் மீண்டும் பாலு அவர்களுடன் சேர்ந்து பாடிய சுசீலாம்மா அவர்களின் குரலின் குயிலினிமையில் மயங்காத மனங்களும் உண்டோ..

இந்த பாடலைப் பற்றி என்னத்தேதான் சொல்றது போங்க..

2

சென்ற வாரம் 12.5.07 சனிக்கிழமையன்று டாக்டர்.எஸ்.பி.பி, திரு.கங்கை அமரன், திரு.எஸ்.பி.பி.சரண், மற்றும் திரு.வெங்கிட்பிரபு ஆகியோரின் கலக்கலான பேட்டி காபி வித் அனு நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. அந்த நிகழ்ச்சி ஆங்கில தளத்தில் ஒலிபரப்பப்படும்.

பூவுக்குள் ஒர் பூகம்பம் என்ற படத்தில் இசையமைப்பாளர் திரு.சங்கீதராஜன் இசையமைப்பில் பெயருக்கேற்றார் போல் அழகான ஒரு மெட்டமைத்த பாடல் இது. கோவை சூரியன் எப்.எம்மில் ரேடியோ ஜாக்கியாக இருக்கும் திரு. ரவிவர்மா விற்கு மிகவும் பிடித்தமான பாடல்.

6

பழைய அழகான மெலோடி பாடல் இது. 1970ஆம் ஆண்டு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசையமைப்பில் வெளிவந்த "மாலதி" படத்தில் சுசீலா மேடம் தன் குயில் குரலில் அழகாக பாடியிருப்பார். இந்த வரிகளை கேட்டால் "சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்.. சுகமோ சுகம்..

10

இந்த வெயில் காலத்தில் ஒர் அற்புதமான பாடல் திக்குத்தெரியாத காட்டில் என்ற படத்தில் வருகிறது. "குளிரடிக்குதே கிட்ட வா கிட்டவா என்ற பாடல்" சார் சார் கொஞ்சம் இருங்க இந்த பாடல் வேகாத வெயிலில் சுற்றிவருபவருக்கு இல்லை.(சீதோஸ்னம் யு,எஸ்.ல் எபபடி என்று தெரியவில்லை) ஏ.சி.

3

உடல் வியர்க்க விறுவிறுக்கக் கோடலியால் மரம் வெட்டிக் கொண்டிருக்கிறார்கள் தொழிலாளர்கள். கடந்து போகிறார் கர்நாடக இசைப் பாடகப் புலி பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளையின் பிள்ளை! 'சாமி. உங்க அப்பா பாடறத எங்களால கேக்க முடியலை.

1

கடந்த ஒரு வாரமாக அரிதான மெலோடி பாடல்கள் கேட்டோம். அதில் சுவாரசியமாக மறுமொழியில் அவரவரின் கருத்துக்களை வெளியிட்டு வாதிட்டவர்களூக்கு கூல் செய்யதான் இந்த பாட்டு. மற்றவர்கள் கம்ன்னு பாட்ட கேட்டுட்டு கமுக்கமா போய்டுங்க.

5

டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி அவர்களை இன்று எவ்வளவு பேர் நினைவு வைத்திருப்பார்கள் என்று தெரியவில்லை.

11

பாலு பாடிய அழகான அற்புதமான இனிமையான அதிகம் கேட்டறியாத பாடல்களில் இந்த

பாடலும் ஒன்று டில்லி பாபு இந்தப்படத்தை திரு. பாண்டியராஜன் நடித்து வெளிவந்த படத்தை

பார்க்காத அதிகபட்ச ரசிகர்களில் அடியேனும் ஒருவன். ஆகையால் காட்சி அமைப்பு எப்படி இருக்கும் என்று என்னால் நினத்து கூட பார்க்க முடியவில்லை.

5

இது நம்ம ஆளு டைரக்டர் கே.பாக்யராஜ் சாரின் படத்தில் வரும் இந்த பாடல் கே. பாக்யராஜ், ஷோபானா நடித்த பாடலைப்பற்றி ஒரே வரியில் விளக்கம்: பழைய வில்லன் நடிகர் திரு,வீராப்பா சொல்வது போல் ஒரே வார்த்தையில்

" ஹா ஹா ஹா ஹா ஹா ஹா சபாஷ் சரியான போட்டி"

அசத்தல்லான பாடல் அமர்க்களமாக கேளுங்கள்.

7

"சின்னப் பசங்க நாங்க" இந்தப்படத்தை யாராவது அதிகமாக கேள்விபட்டிருகிறீர்களா?

இந்த படத்தில் நடிகர் முரளியும் ரேவதியும் நடித்த படம். முரளி நடித்த படங்களில் பாலு அதிகம் பாடல்கள் பாடவில்லை. குறைந்த பாடல்களே பாடினாலும் அனத்துமே மிகவும் அருமையாக மெலோடி பாடல்கள்.

12

பாச மலர்கள் என்று விரைவாக வந்து விரைவாகத் திரையரங்கத்தை விட்டு ஓடிய அஹிம்சைப் படம் நினைவிருக்கிறதா? அடிதடி வெட்டுக்குத்து பஞ்ச டயலாக் குத்துப்பாட்டு என்று எதுவுமே இல்லாமல் படம் வந்தால் எப்படி தமிழ்கூறும் நல்லுலகத்தில் ஓடும்? அரவிந்தசாமி பரபரப்பாக இருந்த காலகட்டத்தில் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள ந

8

தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ ரஜினி படம் என்றாலே அறிமுகக் காட்சிப் பாடலை பாலு பாடியிருக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்! :-) விதிவிலக்காக வந்த சில படங்களின் அறிமுகப் பாடல்கள் பிற பாடகர்களின் குரலில் ரஜினிக்கும் நமக்கும் ஒட்டவே இல்லை! மற்ற பாடகர்களைக் குறை சொல்லவேண்டும் என்ற நோக்கத்த

19

நாம் சிறுவயதில் துவக்க பள்ளிக்கூடத்தில் படமும், பாடலும் என்று பாடம் படித்திருக்கிறோம் நினைவில் இருக்கின்றதல்லாவா? அதே போல் இந்த பாடலையும் கேளூங்கள். இந்த படம் நான் பார்த்ததில்லை, பாடலை பலவருடங்களூக்கு முன் கேட்டிருக்கிறேன். தற்போதுதான் திரு.தாசரதி மூலமாக தற்போது கேட்டேன். அழகான வரிகளைக்கொண்ட பாடல்.

3

நிச்சயமாக இந்த படத்தை நான் பார்க்கவில்லை. பாடல் பலமுறை கேட்டாலும் ஒருமுறை கூட சலிக்காத பாடல். ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு காலகட்டங்களின் வளர்ச்சியை பாலு அவர்கள் பல வித்தியாசமான கதாபாத்திரங்களுக்காக படங்களில் பாடியிருக்கிறார்.

7

சென்னை நிகழ்ச்சியில் பாலுவிற்க்கு நினவு பரிசு வழங்கிய யாகூ பாலு ரசிகர்கள் குழு நண்பர்கள் திருமதி.சௌம்யா பாலாஜி, திரு.வெங்கட், திரு. அசோக் மற்றும் குழுவின் நண்பர்கள்.

10

சூப்பர்ஸ்டார் ரஜினி சாரின் "சந்திரமுகி"யில் இருந்து ஒரு அசத்தலான பாடல். இந்த பாடல் தாமதமாக பதிவில் வருவதற்க்கு ஒரு காரணம் உள்ளது. அதை பிறகு பார்ப்போம்.

2
இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading