தோளில் விழும் மாலையே..
இன்றைய பாடல் அற்புதமான மெலோடி பாடல். "உள்ளத்தில் நல்ல உள்ளம்" என்ற படத்தில் வரும் இந்த அழகான மெலோடி பாடலை திரு.கங்கை அமரன் இசையமைத்துள்ளார்.
இந்த பாடலை பாலு அவர்கள் மிகவும் திருப்தியாக பாடியிருப்பார். மற்ற பாடல்கள் எல்லாம் திருப்தியாக பாடவில்லையா என்று கேட்காதீர்கள்.
ஆவணி மலரே ஐப்பசி மழையே
1975 ஆம் ஆண்டு வெளிவந்த தொட்டதெல்லாம் பொன்னாகும் என்ற படத்தில் ஒரு அழகான பாடல். இந்தியாவின் வெள்ளைக்குயில் சுசிலாம்மவின் இனிமையான குரல் வென்மேகங்களில் தவழ்ந்து வந்து நம் மனதை தாலாட்டுகிறது. முக்கியமாக துவக்கத்தில் வரும் இருவருக் ஆலாபனையே நம் மனதை கொள்ளைக்கொண்டு போகும்.
7லொக்கு லொக்கு இருமலு
SP.பாலசுப்ரமணியம் இந்த மனுசன் யாருக்காகத்தான் பாடலை? ஒருத்தரையும் விட்டு வைக்கமாட்டீங்கறார். தெற்குத்தெரு மச்சான் என்ற படத்தில் தேனிசை தேவா அவர்களின் அமர்க்களமான இசையமைப்பில் பாடாலாசிரியர் காளிதாசன் வரிகளின் வண்ணத்தில்.
3மல்லிகை பூவினில்..
இந்த வரிகள் போல பல இடங்களில் வரும் பாலுவின் குரலில் மயங்காத உள்ளங்களூம் உண்டோ? உண்டோ?
///பிள்ளையின் சங்கீதம் அன்னையின் சந்தோசம்
அன்னையின் சந்தோசம் தந்தையின் உல்லாசம்
கோகுல கண்ணனோ கோமகள் ராதையோ
யார் வருவார்களோ யார் அறிவார்களோ
ம் ம்ஹஹஹ ஹஹஹஹ//
படம்: அவள் சுமங்கலிதான்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
வரு
சிவப்பு லோலாக்கு குலுங்குது
காதல் கோட்டை படத்தில் உள்ள இன்னொரு இனிமையான பாடல் இந்தச் சிவப்பு லோலாக்கு பாடல். ராஜஸ்தானில் ஒட்டகத்தின் மீது நாயக, நாயகியர் போகும் 1001-வது தமிழ்ப்படம் இது என்று நினைக்கிறேன்.
பாடலின் ஆரம்பத்திலும் இடையிலும் வரும் கோரஸ் ஹம்மிங் இனிமையாக இருக்கும்.
தேவுடா தேவுடா -- "சந்திரமுகி" படத்தின் 804 ஆம் நாள் விழா
இந்த பாடல் எல்லோரும் கேட்டு கேட்டு மனதில் பதிந்துபோன பாடல் தான். இருந்தாலும் இந்த தளத்தில் இந்த பாடலை இந்த சூழ்நிலையில் பதிவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
4பாட்டுக்காரன் பாடிபார்க்கலாம்
நான் என் பள்ளிப்பருவத்தில் வெளிவந்த இந்த "திக்குத்தெரியாத காட்டில்", "மதன மாளிகை" போன்ற படங்களை அப்போது ஒரு வித ஆர்வத்தோடு பார்த்த படம். அப்போதே தன் ஆனந்தமான குரலிலை (தற்போது மனோ வாய்ஸ் அப்போதே பாடிவிட்டார்) நான் மிகவும் அனுபவித்து கேட்ட பாடல்கள்.
இது ராஜகோபுரம் தீபம்
யாகூ பாலு ரசிகர்கள் குழுமத்தில் இருந்து திரு.கிருஷ்னா?? என்பவர் சென்ற மாதம் ஒரு பாடல் கேட்டார் அந்த பாடல் தான் இது டாக்ஸி ட்ரைவர் என்ற படத்தில் வரும் இந்த பாடல் "இது ராஜகோபுரம் தீபம் அகல் விளக்கல்ல" என்ற பாடல் மிகவும் அறிதான பாடல். இந்த படத்தின் மேலும் தகவல்கள் இருந்தால் தரலாம்.
6அடி அழகிய கொடியே ஆடடி
ஒரு காலத்தில் இந்த பாட்டெல்லாம் சக்கைப்போடு போட்ட பாடல். செல்வி என்ற படத்தில் இரண்டு நாய் குட்டிகளுக்காக ஒரு டூயட் "இளமனது ஒரு கனவு" பாடல் பாலு அவர்கள் பாடியிருந்தார் (இந்த தளத்தில் ஏற்கெனவே பதிந்துள்ளோம்).
3பொன் வீணையே என்னோடு வா..
பாடும் நிலா பாலு தளத்தில் தொடர்ந்து வருகை தந்து எங்களை தன்னுடைய 'பின்' னூட்டத்தால் உசுப்பி உற்சாகப்படுத்தி வரும் (உஷா சங்கர், ராகவன் சார், கானாபிரபா சார் மற்றும் தமிழ்மண பதிவாளர்கள் வரிசையில் இந்த மாதத்தில் முதலாவதாக வந்த 'உஷா சங்கர்' அவர்களூக்கு வாழ்த்துக்கள்.
12நலம் நலமறிய ஆவல்
1996-இல் வந்த காதல் கோட்டை படம் அதில் காட்டப்பட்ட புதுமையான காதலுக்காக பரபரப்பாக ஓடியது - பேசப்பட்டது. தேவயானிக்கும் அஜீத்துக்கும் அவர்களது திரை வாழ்வில் ஒரு மைல் கல்லாகவும் அமைந்தது. இயக்குநர் அகத்தியன் மீது மக்களது கவனத்தைத் திருப்பியது.
5ஐ லவ் யூ..ஐ லவ் யூ..
பாலு அவர்கள் அந்த காலத்திலே எப்படி அமர்க்களமான ஜாலியான பாடலை பாடி பட்டையை கிளப்பியிருக்கிறார் கேளுங்கள். 1981ஆம் ஆண்டு வெளிவந்த "கோட்டீஸ்வரன் மகள்" என்ற
படத்தில் வரும் இந்த பாடல். உங்களையும் காதலிக்கிறார் "சுஜாதா ஐ லவ் யூ" சுஜாதா என்ற இடத்தில் உங்கள் பெயரை போட்டுக்கொள்ளலாம்.
பொன்னென்றும் பூவென்றும்
ம்ம்ம்ம்ம் ஆஹாஆஆஆஆ.. ம்ம்ம்ம்ம் ஆஹாஆஆஆஆ ஆஹா ஆஹா பாலுவின் ஹம்மிங்க்காகவே இந்த பாடலை கேட்டுட்டே இரூக்கலாம். பாடல் வரிகளை கவனியுங்கள் இன்னும் இன்னும் கேட்டுட்டே இருக்கலாம். காதுல இருக்கிறா ஹெட்போன் இறங்காது.
6சந்திக்கத் துடித்தேன் பொன்மானே
இந்தப் பாடலை அனுப்பி உதவிய ஆயிரம் பேர்கொண்ட அபூர்வ சிகாமணிக்கு நன்றி. ஏன் இந்தப் பாடலை நான் அதிகமாகக் கேட்கவில்லை என்று யோசித்தபோதுதான் புரிந்தது - இந்தப் பாடல் படத்தில் சேர்க்கப்படவே இல்லை என்பது. ஆனால் அருமையான இனிமையான பாடல் இது.
10ஜாதிகள் இல்லையடி பாப்பா
இது வேதம் புதிது படத்தில் வரும் குட்டிப் பாட்டு ('குட்டி' பாட்டு என்று தப்பாகப் படிக்கக் கூடாது. 'ப்'பணும்!).
பாடலை எழுதிய கவிஞர் யாரென்று கேட்கும் ஆத்மாக்கள் சுயவிலாசமிட்டு அஞ்சல்தலை ஒட்டி ஒரு ஏர் மெயில் அனுப்பவும்.
மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்
1969 ஆம் ஆண்டு வெளிவந்த படம் பால்குடம் என்ற படத்தில் ஓர் அழகான பாடல் பாலு அவர்கள் பல்லவியே ஒரு வித வித்தியாசமாக அனுபவித்து பாடியிருப்பார். அதை எப்படி சொல்வது? (கொஞ்சுண்டு திரு.பி.பி.சீனிவாஸ் அவர்களீன் குரல் சாயல் தெரிகிறதல்லாவா?) அழகான வரிகள் //உன்னை எதிர்பாக்கும் மனமென்னும்
ஊஞ்சல் இன்றே நீ வருக...
முள்ளில்லா ரோஜா
1971 ஆம் ஆண்டு வெளிவந்த மூன்று தெய்வங்கள் படத்தில் வரும் இந்த பாடலைக் கேட்டவுடன் விரைவாக கொசுவத்தி சுழல ஆரம்பித்திவிடும். பாலு அவர்களின் ஆரம்பகால மெலோடி குரலுடன், வெள்ளை குயில் சுசீலாம்மாவின் குரல் மிகவும் இனிமையாக நம் மனதை கிறங்கடிக்கும்.
4போட்டாலும் ஏறல....
உள்ளத்தில் நல்ல உள்ளம் இந்த படத்தின் தகவல்கள் தேடறதுகுள்ளே போதும் போதும் என்றாகி விட்டது. எப்படியோ தேடி பிடித்து விஜயகாந்த், .ராதா,, கவுண்டமணி, செந்தில் நடித்திருக்கிறார்கள் என்று ஓரளவுக்கு தகவல்கள் சேகரித்து பதிந்துள்ளேன். கானா பிரபா சார் மேலும் தகவல்கள் இருந்தால் தாருங்கள்.
3அடிச்சான் தவிலு..
எத்தனை நாளைக்குத்தான் சும்மா சும்மா காதல், சோகம் பாட்டு பிரியர்களுக்காக மாற்றி மாற்றி பதிவது. பாலு அவர்கள் கல்யாணம் செய்துக்க போறவங்களையும் விட்டு வைக்கவில்லை பாருங்கள். அவங்களுக்காகவே இந்த ஸ்பெஷல் பாட்டு(நிச்சயமா நிறையபேர் போர்க்கொடி தூக்கப்போறாங்க).
"தேவர்"ங்கறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா?
வேதம் புதிது படம் பரபரப்பலையை ஏற்படுத்திய படம். சத்யராஜ் ஏற்று நடித்திருந்த பாலுத் தேவர் பாத்திரம் அவருக்கு ஒரு மைல் கல். 'பாலு உங்க பேரு. தேவர் நீங்க படிச்சு வாங்கின பட்டமா?' - என்ற நெத்தியடிக் கேள்வி எங்கும் பேசப்பட்டது.
21தங்கச்சிக்கு சீமந்தம்..
ரொம்ப நாளாகவே தங்கச்சி செண்டிமெண்ட் பாடல் பதிய வேண்டுமென ஆசை அதிகமாக உள்ளது. முதலில், தங்கச்சி பாசத்தை சகலகலா வல்லவர் டி.ராஜேந்திரர் அதிக படங்களில் மிகவும் அழகாக காட்சிகளை வடிவமைத்து அவரின் படத்தில் தந்துருப்பார்.
"இசைக் குயில்" ஜானகி 50 ஆண்டுகளாக...!
ஜானகியம்மா திரையுலகில் பாடத் துவங்கி 50 ஆண்டுகளாகிவிட்டன. சமீபத்தில் :-) 1957-இல் விதியின் விளையாட்டு என்ற படத்தில் பின்னணிப் பாடகியாக அறிமுகமாகி 50 ஆண்டுகள் விடாது பாடிக்கொண்டிருக்கும் நமது இனிய இசைக் குயில் அவர்.
10நல்ல காலம் பொறந்திடுச்சு
இரண்டு நாள் முன்னாடி ஒரு சோகப்பாடல் கேட்டீர்கள் இன்னுமொரு வசனப்பாடல் இசையமைப்பாளர் திரு.கங்கை அமரன் எழுதி இசையமைத்த "என் தங்கச்சி படிச்சவ" படத்தில் ஒரு பாடல். பாடல் வரிகளில் வரும் வசனங்கலெல்லாம் நன்றாக இருக்கும் யாரு எழுதியது அவரேதான் கிண்டலுக்கும், சுண்டலுக்கும் கேட்க்கவா வேண்டும்.
2அந்தரங்கம் யாவுமே
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ரொம்ப நாளாக பதிவிற்காக காத்திட்டுருக்கே. என் மனசு எவ்வளவு பாடுபடும் சுந்தர் கொஞ்சமாவது யோசிச்சாரா? ஆமாம் நண்பர்களே இந்த பதிவு முற்றிலும் சுந்தருடையது. என்னுடைய பதிவும் ஒன்று இருக்கிறது. என்னால் காத்திட்டு இருக்கமுடியவில்லை.
11பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்
இதயக் கோவில் படத்தில் கிட்டத்தட்ட எல்லாப் பாடல்களையும் பதிந்துவிட்டோம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். இந்தப் பாடலைப் பதியவில்லை என்று சுட்டிக்காட்டிய உஷா சங்கர் அவர்களுக்கு நன்றி.
என்னைப் பாடல்களால் மயக்கிப் போட்ட படம் இதயக் கோவில்.
டேய் வேம்பு பைத்தியம் கியத்தியம்
போன வாரம் பாலு அவர்களூடன் சேர்ந்து மற்ற பிரபல பாடகர்கள் பாடிய பாடல்கள் கேட்டீர்கள். அதேபோல் இன்னும் அதிக பாடல்கள் உள்ளன மீதத்தை இன்னுமொரு வாரத்தில் பார்க்கலாம்.
5சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
தனிக்காட்டு ராஜா படத்தில் ரஜினியும் ஸ்ரீதேவியும் நடித்திருக்கிறார்கள் என்பதும் அதில் (வழக்கம்போல) பாலுவும் ஜானகியும் தேன்சிந்தும் குரல்களோடு பாடியிருக்கிறார்கள் என்பதும் தமிழ்கூறும் நல்லுலகு அறிந்ததே! ஆதலால் அதிகம் அறுக்காமல் அமைதியாக அந்தப் பாடலை (எத்தனை 'அ'!) இங்கே பதிவு செய்கிறேன்.
16சும்மா நில்லடா.. டோய்..
இந்த பாடலில் கவிஞர் வாலி அவர்களின் ஒவ்வொரு வரியிலும் இசைத்தளபதிகளின் விளையாட்டு அபரிமிதமாக இருக்கும். ஆமாம் நண்பர்களே தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் கேரள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி அவர்களும் சேர்ந்து நடித்த இந்த பாடல் காட்சியைப் பற்றி நான் அதிகமாக விளக்க போவதில்லை.
9அன்பு மலர்களே..
பாடல் வரிகள் சிரமம் இல்லாமல் தட்டச்சு செய்ய வேண்டுமென்றால் இதுபோல பாடல்களை தேர்ந்தெடுத்து பதிய வேண்டும். ஆமாம், நண்பர்களே பாலு அவர்களுடன் சேர்ந்து பாடிய மற்ற பாடகர்களின் ஜோடி பாடல்கள் இந்த வாரம் பதியலாம் என்று நினைத்து.
5வானுக்கு நிலத்தோடு
பாலு அவர்களின் இசையமைப்பில் சொந்த தயாரிப்பில் வெளிவந்த "உன்னைச்சரணடைந்தேன்" படம். இதில் அவரின் புதல்வர் திரு.எஸ்.பி.பி சரண் வில்லன் வேடமேற்று நடித்திருப்பார் கதாநாயகனாக திரு.வெங்கட் பிரபு நடித்திருப்பார் அருமையான கதாபாத்திரம் மிகவும் அழகாக செய்திருப்பார். இவர் திரு.கங்கை அமரனின் புதல்வர்.
5Hey Taxi Taxi!
1995-இல் வந்த இந்தப் படத்தினை சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கியிருக்கிறார். பிரபு ரஞ்சிதா குஷ்பூ 'எங்கியோ போயிட்டீங்க' சிவாஜி நடித்திருக்கிறார்கள்.
25நண்பனே எனது உயிர் நண்பனே
ரொம்பநாள் கழித்து கமல் படம் பாடல் கேட்கலாம் (சுந்தருக்கு கொண்டாட்டம் தான் ). மேலும், இந்த பாடலுக்கு சரியான விளக்கம் தருபவர் அவர்தான் பின்னூட்டத்தில் ஒரு கலக்கு கலக்குவார் என்று எதிர்பார்க்கிறேன்.
2பாலுஜிக்கு 61 ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்: ---ப்ராடிஜி பாலசுப்ரமணியம் குழு.
There is an adage in Tamizh Sivathodargalai vanangudhal, panividai seithal andha sivanuke panividai seivadharuku samam, which means worshiping and lionizing the aficionado and devotee of the Lord Shiva is very much equivalent to worship of Lord Shiva.
21அந்தி நேர தென்றல் காற்று
4.6.2007 திங்கள் அன்று பாலு பிறந்த இந்த 61 ஆவது அற்புத நாளில் அவரே அவருடைய ரசிகர்களை வாழ்த்தி பாடும் ஒரு பாடல் இந்த பாடல் இந்த நாளில் பதிவு செய்ய மிகவும் பெருமையடைகிறேன். இணைந்த கைகள் என்ற படத்தில் வரும் இந்த நம் மனதை தொடும் உருக்கமான இந்த பாடலை எப்போது கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல தோன்றும்.
5கொஞ்சும் மலர் மஞ்சம்
நான் பார்க்காத படத்தில் இருந்து ஒரு பாடல் என் மனதை சுண்டி இழுத்த பாடல். இந்த கோப்பை வழங்கிய பாலு ரசிகர் எனது இனிமை நண்பர் திரு.மோகன் வினோத் அவர்களூக்கு என் மனமார்ந்த நன்றி.
படம்; ஜனனி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியது: பாலு, வாணிஜெயாராம்
பாடலாசிரியர்: நேதாஜி.