உள்ளத்தில் நூறு நினைத்தேன்
ஆமாம் இந்த வரிகளில் எவ்வளவு உண்மை பாலு அவர்களை பார்க்கும் போதெல்லாம் இந்த வரிகளைத் தான் //உள்ளத்தில் நூறு நினைத்தேன்... உன்னிடம் சொல்ல தவித்தேன்// என்று கேட்க நினக்கத்தோன்றும். ஆணால் அவரை பார்த்ததுமே எல்லாமே மறந்து விடும்..
3உன்னைத்தொடுவது இனியது
உத்தரவின்றி உள்ளேவா என்ற பாடலை சென்ற வாரம் கேட்டோம்.உன்னைத்தொடுவது என்ற இந்த இனிமையான பாடலில் வரும் //லலலல லலலல லாலாஆஆ... லலலலலலலலல லாலாஆஆ.. லலலல லலலல லாலாஆஆ.. லலலலலலலலல லாலாஆஆ// இந்த ஹம்மிங் ஒன்றே போதும் நம் உள்ளங்களை தள்ளாட வைக்க.
4வெற்றி மீது வெற்றி
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் 1970ஆம் ஆண்டு வெளிவந்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நடித்து வெற்றிபடம் 'தேடி வந்த மாப்பிள்ளை' படம்.
4உறவோ புதுமை நினைவோ இனிமை
எனக்கு நன்றாக நினவுக்கு வருகிறது கமல்ஹாசன் தலையில் கருப்பு கலர் குல்லா போட்டுக்கொண்டு சைக்களில் பாடும் பாடல் ஓர் பழைய பாடல் ஆடு புலி ஆட்டம் என்ற படத்தில் வரும் "உறவோ புதுமை" என்ற அழகான பாடல்.
2பாத கொலுசு பாட்டு பாடி
திரு.சத்யராஜ், சுகன்யா அவர்கள் நடித்து 1990 ஆண்டு வெளிவந்த திருமதி பழனிச்சாமி படம் செமி காமிடி படம் என்று நினக்கிறேன். படம் பார்க்கவில்லையாதலால் அதிகம் விவரிக்க வாய்ப்பில்லை.
12நீலக் குயில்கள் ரெண்டு மாலைப் பொழுதில் இன்று
கேட்கக் கேட்க அப்படியே நம்மை ஈர்க்கும் வசியப் பாடல் இது. ஆரம்ப ஹோய் ஹொய்யாவும் அதைத் தொடரும் இசையும் சரணத்தை முதலில் பாடும் குரலும் அந்தக் கால வானொலி நிகழ்ச்சிகளின் பாடல்களையும் (வயலும் வாழ்வும்) இசையையும் நினைவூட்டின! அப்புறம் பாலு ஆரம்பித்து அவரது தேனான குரலால் நம்மைத் தென்றலாய்த் தழுவுகிறார்.
11தூங்காதே தம்பி தூங்காதே
தூ.த.தூ. படத்தின் இந்த எளிமையான பாடல் எனக்குப் பிடித்தமானது. பாடல் வரிகளின் எளிமைதானே சாமான்யர்களிடம் பாடலைச் சேர்க்கிறது? இதே போல அமைந்ததாக உன்னால் முடியும் தம்பி பாடலையும் சொல்லலாம்.
2நான் ஒரு டிஸ்கோ டான்சர்
ஒரு வித்தியாசமான நடனமாடத் தூண்டும் சுறுப்சுறுப்பான, சூடேற்றும் பாடல் ஒன்றைக் கேட்போமா நண்பர்களே. ஏன் அந்த நாட்களில் இந்த மாதிரி டிஸ்கோ பாடல்கள் அதிகமாக காற்றினிலே மிதந்து வந்து இளஞர்களை மட்டுமல்லாமல் என்னையும், நான் இஸ்கூல் படித்த காலத்தில் இந்த மாதிரி பாடல்களை ரொம்பவே கவர்ந்தது.
நான் தான் டாப்பு
சூப்பர்ஸ்டார் படத்தில் பாலு அவர்கள் பாடிய எத்தனையோ மெலோடி பாடல்களைப்பாடியிருக்கிறார். இதோ இந்த பாடல் தனிக்காட்டு ராஜா என்ற படத்தில் வரும் பாடல் "நான் தான் டாப்பு" என்ற பாடல். இந்த படத்தில் சந்தனக்காற்றே என்ற ஒரு அழகான பாடலை ஏற்கெனவே சென்ற மாதம் கேட்டோம்.
2உத்தரவின்றி உள்ளே வா
திரு.டி.எம்.எஸ் அண்ணா, எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோருடன் சேர்ந்து பாலு அவர்கள் நான்கு வரிகள் பாடிய ஓர் கலக்கலான பாடல் ஒன்றை கேட்போமா?. உத்தரவின்றி உள்ளே வா என்ற படத்தில் வரும் இந்த அமர்க்களமான பாடல் இப்போதும் கேட்க மிகவும் இனிமையாக உள்ளது. வெவேறு சுவையை உடைய பழங்கள் சாப்பிட்ட உணர்வு ஏற்பட்டது.
2நானாக நானில்லை தாயே
நேரடிச் சண்டைகளில் சினிமாவில் காட்டுவது போல இம்மாதிரி நளினமான அசைவுகளை நான் கண்டதில்லை. சினிமாக்களில் கதாநாயகனும் வில்லன் கோஷ்டி ஆட்களும் சண்டை போடுவது பெரும்பாலும் ஒரு ஒத்திசைந்த நடனம் போன்று இருக்கும்.
9தாலாட்டு பிள்ளைஒரு தாலாட்டு
அச்சாணி படத்தில் வரும் ஒரு அருமையான தாலாட்டு பாடல் நான் எப்பவோ கேட்டது. இந்த பாடல் அழகான மத்யாமவதி ராகத்தில் அமைந்த பாட்டு. இந்த பாடல் ஏற்கெனவே திரு.தாசரதி சார் ஆங்கில தளத்தில் பதிந்துள்ளார்.
2அடி என்னடி ராக்கம்மா..????..
பாடல் தலைப்பை பார்த்து ஏமாந்து போய் இருப்பீர்களே. செவாலியே சிவாஜி சார் நடித்து மெல்லிசை மன்னர் இசையமைத்த பாட்டும் பரதமும் என்ற படத்தில் ஓர் அமர்க்களமான பாடல். இந்த மாதிரியான பாடல்களை இனிமேல் எப்போது கேட்கபோகிறோம். பாலு அவர்கள் பேசும் அந்த ஆங்கில வார்த்தைகள் உச்சரிப்பு அபாரம்.
2சின்ன புறா ஒன்று
பலவருடங்கள் கழித்து இந்த பாடலை எப்.எமில் அதிகாலை கேட்டேன். எப்படியும் இன்று பதிந்து விடவேண்டும் என்று ஆசையுடன் பார்த்தால் ஏற்கனெவே இந்த பாடலை பலபேர் இணையதளங்களில் பதிந்திருக்கிறார்கள். இருந்தாலும் நம் பாடும் நிலாவில் இந்த பாடல் இல்லாமாலா? என்று மறுபடியும் பதிந்திருக்கிறேன்.
16கெளரி மனோகரியைக் கண்டேன்
மழலைப் பட்டாளம் (1980) லஷ்மி (பாலசந்தரின் மேற்பார்வையில்) இயக்கி விஷ்ணு வர்தன், சுமித்ரா நடித்த படம். படத்தில் சில அருமையான பாடல்கள் இருக்கின்றன. அதிலொன்று வாணிஜெயராமும் பாலுவும் பாடிய இந்தப் பாடல்.
9பாலுவின் பாமாலைத் தொகுப்பு #6
இதற்கு முன் இந்த பதிவில் உங்கள் ரசிகன் திரு.யாழ் சுதாகர் சாரின் பாலு அவர்களின் பழைய பாடல்கள் கேட்டோம். இதோ இன்னுமொரு ஒரு தொகுப்பு இதிலும் நமக்கு தேவையான தீனியாக பழைய பொக்கிஷங்களை தோண்டி எடுத்து நம்முன் பழக்கடையாக படைத்திருக்கார் சுதாகர் சார்.
12அத்தி அத்திக்கா அத்தை மடி
சில நேரங்களில் பாடல் வரிகள், மெட்டமைப்பு பாடிய விதம் எல்லாம் கண்களில் ஒற்றிக்கொள்வது போல் இருக்கும். இளையதளபதி திரு.விஜய் நடித்தது ஆதி படம். படம் வெளிவருவதற்க்கு முன்பே நாம் இந்த பாடல் கேட்டதால் நன்றாக இருக்கிறதே எப்படி படமாக்கியிருக்கிறார்கள் என்று பார்ப்பதற்காகவே படத்துக்கு சென்றேன்.
2ஆறாரோ நான் பாடவோ
பாலு அவர்கள் பாடிய இதோ சோகம் கம் ஒரு தாலாட்டு பாடல் ஒவ்வொரு வரியும் நம் மனதை இந்த வரிகளைப்போல //ஆலையிட்ட கரும்பாக// சோகத்தில் பிழிந்துவிடும்.
காலம் மாறலாம் நம்....
இந்த பாடலை கேட்டால் நாம் காதல் செய்தோமோ அல்லது காதல் செய்கிறோமோ அது விஷயம் இல்லை நிச்சயம் இந்தபாடலை நம் உதடுகள் முணுமுணுக்காமல் இருக்காது அப்பேர்ப்பட்ட குரலை வாண் மேகங்களிலே தவழவிட்டு வலம் வரும் இனிமையான குரல் கொண்ட வாணி ஜெயராம் அவர்களின் குரலுடன் சேர்ந்து பாலு அவர்கள் பாடிய கலக்கலான அழகான காதல் பாட
11செவன் ஓ க்ளாக்...
நண்பர்களே, ஒரு சிறிய, பழைய கில்பான்ஷ் (அப்படின்னா என்னென்னு தயவு செய்து கேட்காதீங்க சார்) பாடல் கேட்போமா. "கலியுக கண்ணனில்" வரும் இந்த பாடல் ரொம்ப பழைய பாடலாகியதால் படம் பேரே எனக்கு சந்தேகமாக இருக்கிறது உங்களூக்கு நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை யாருக்காவது தெரிந்தால் தெரிவிக்கலாம்.
6