Friday, August 31, 2007

520. அவளொரு மேனகை

சிவரஞ்சனீ..... என்று பாலு ராகமாக இழுக்கும் அவளொரு மேனகை பாடல் சிவரஞ்சனி படத்தில் வருவது என்று நினைத்துக் கொண்டிருந்தேன் - நிறைய தளங்களில் படத்தின் பெயர் 'நட்சத்திரம்' (1980) என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து சிவரஞ்சனி என்று ஒரு நடிகை இருந்தார். கமல்ஹாஸனின் கலைஞனில் போதை அடிமையாய் வந்து மாடியிலிருந்து விழுந்து செத்துப் போவாரே அவர்தானே?

இந்தத் தனிப் பாடலில் பாலு ஒவ்வொரு வார்த்தையையம் கனகம்பீரமாகவும் அதே சமயத்தில் இனிமை குன்றாது பாடிக் கலக்கியிருப்பார். ஒவ்வொரு சிவரஞ்சனி ஆலாபனையிலும் அவரது குரலின் வீச்சு அபாரமாக இருக்கும். ஓரிடத்தில் 'அபிமான' இன்னொரு இடத்தில் 'அவளொரு' என்று குரலின் பாவத்தைச் சட் சட்டென்று மாற்றிப் பாட எப்படித்தான் முடிகிறதோ இவருக்கு!

பாடலின் மெட்டே வித்தியாசமாக இருக்கிறது இந்தப் பாட்டில். ஊகிக்க முடியாதவாறு சரணத்தின் மெட்டு வரிக்கு வரி மாறிக்கொண்டே போகிறது. இசை ஷங்கர் கணேஷ் அவர்கள்.

'பார்வையில் குளிரும் மார்கழி மாதம்' - என்ற வரியைப் பார்த்தால் வைரமுத்து எழுதியது போன்று தோன்றியது எனக்கு.

அவளொரு மேனகை என் அபிமான தாரகை
அவளொரு மேனகை

கலையெனும் வானிடை மின்னும் தேவதை
கலையெனும் வானிடை மின்னும் தேவதை
காவிய வடிவோடு நடமாடும் பொன்மகள் ரஞ்சனி
சிவரஞ்சனி.. சிவரஞ்சனி

கரும்புகள் தேன்மொழி அரும்புகள் புன்னகை
கரும்புகள் தேன்மொழி அரும்புகள் புன்னகை
என் கனவிலும் ஆடிடும் அவளின் கலை
மனம் நினைக்கின்றது சுகம் பிறக்கின்றது
மனம் நினைக்கின்றது சுகம் பிறக்கின்றது
அவள் போல் இங்கே எவரும் இல்லை

அவளொரு மேனகை என் அபிமான தாரகை
அவளொரு மேனகை
சிவரஞ்சனி.. சிவரஞ்சனி

காவியப் பாதம் ஆயிரம் பேதம்
அவளது நாதம் தமிழ்ச்சங்க கீதம்
காவியப் பாதம் ஆயிரம் பேதம்
அவளது நாதம் தமிழ்ச்சங்க கீதம்
பார்வையில் குளிரும் மார்கழி மாதம்
பார்வையில் குளிரும் மார்கழி மாதம்
அதிகாலையில் வரும் பூபாள நாதம்

அவளொரு மேனகை என் அபிமான தாரகை
அவளொரு மேனகை
சிவரஞ்சனி.. சிவரஞ்சனி

அவள் சிங்காரப் பூங்குழலாவணி மேகம்
தேனுலாவிடம் கல்யாணி ராகம்
அவள் சங்கீத பாவம் கங்கையின் தேகம்
தாமரைப் பூவின் சூரிய தாகம்
காலமே அவள் விழிகள் சொன்னபடி ஆடுமே
தாளமே அவள் கால்கள் கேட்டபடி தாவுமே
முடியோ ஆலயச் சங்கொலி
இடையோ அசைந்திடும் கிண்கிணி
என்ன சொல்லி என்ன பாட
கம்பனில்லை கவிதைபாட
என்ன சொல்லி என்ன பாட
கம்பனில்லை கவிதைபாட ஆஆஆஆஆ

அவள் தஞ்சைத் தரணியில் கொஞ்சும் அழகிய கோவிலன்றோ
நான் அவளது பக்தனன்றோ

அவளொரு மேனகை என் அபிமான தாரகை
அவளொரு மேனகை
சிவரஞ்சனி.. சிவரஞ்சனி

Aval Oru Menakai.m...

10 comments:

G.Ragavan said...

சுந்தர், இது ஒரு அருமையான பாடல். நட்சத்திரம் என்ற படத்திலிருந்து. இது தெலுங்குப்படத்தின் தமிழ் வடிவம். தாசரி நாராயணராவ் தெலுங்கில் எடுத்தார். அவரே அதைத் தமிழிலும் எடுத்தார்.

தெலுங்கில் சக்ரவர்த்தி இசையமைப்பாளர். அதே மெட்டு தமிழில் சங்கர் கணேஷ் வழியாக வந்திருக்கிறது. ஆக..மெட்டுக்குச் சொந்தக்காரர் சக்கரவர்த்தி.

அதே போல பாடலை இயற்றியவர் கவியரசர். இந்தப் பாடல் வரிகளைப் போலவே வைரமுத்து வேறொரு பாடலில் எழுதியிருந்தாராம். அதாவது "தாமரைப் பூவின் சூரிய தாகம்" என்று. ஆனால் தற்செயலாக இந்தப் பாட்டை ரேடியோவில் கேட்டாராம். ஆகையால் உடனே ரெக்கார்டிங்கிற்கு முன்னால் அவர் எழுதிய பாட்டிலிருந்த "தாமரைப் பூவின் சூரிய தாகம்" என்ற வரிகளைத் திருத்தி விட்டார்ராம். கவியரசரைப் பார்த்து இவர் எழுதி விட்டார் என்று சொல்லி விடக் கூடாதல்லவா. இதை வைரமுத்து ஒரு பேட்டியில் சொன்னார்.

Seemachu said...

சுந்தர், எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு இது. பதிந்ததற்கு நன்றிகள்.

இது நட்சத்திரம் படம். 1980-ல் வந்தது. ஸ்ரீப்ரியா ஹீரோயின். இதுல அவங்க ஒரு சினிமா நடிகையாக நடிச்சிருப்பாங்க. பாட்டெல்லாம் நல்லா இருக்கும். இன்னும் ரெண்டு மூணு பாட்டு இதுல இருக்கு. இது ஸ்ரீப்ரியா வே தயாரிச்ச படம். இதுல எல்லா முன்னனி நட்சத்திரங்களும் (சிவாஜி கணேசன் உட்பட) ஒரு கெளரவ வேடத்தில் நடிச்சாங்க...

இந்தப் பாட்டு சீன் நல்லாருக்கும். ஸ்ரீப்ரியாவுக்கு சிறந்த நடிகை பட்டம் தரும் போது ஒரு ரசிகன் பாடுவது போல இருக்கும்..

நல்ல பாட்டு..

இதுல வர்ற இன்னொரு பாட்டு "பொன்னாங்கண்ணி பூத்து வந்ததோ .. புன்னகையில் தெரியுது கண்ணே.." ன்னு நல்லாயிருக்கும்...எங்கியாவது இந்தப் படம் வீடியோ கிடச்சால் வாங்கி வையுங்க.. வந்து வாங்கிக்கிறேன்..

அன்புடன்,
சீமாச்சு...

தஞ்சாவூரான் said...

கலக்கிப் போட்டீங்க..

Anonymous said...

Hi Sunder,
this is from Natchatiram movie only. Sri priya acted in that film. In telugu Sivaranjani, and Jayasudha acted in telugu. The same song is in telugu also sung by our gr8 S.P.B. only. The rhythm of song will be so nie and it is a high pitch song with melodious included. Thank u for giving this song to us.

N.Usha, Hyd.

Covai Ravee said...

சுந்தர், இந்த பாடல் தெலுங்கில் சிவரஞ்சனி படம் பார்த்து விட்டு, தமிழில் நட்சத்திரம் இந்த பாடலுக்காகவே (டப்பிங் படம் தான்) பலமுறை என் பள்ளிப்பருவத்தில் பார்த்த ஞாபகம் பாலு மீது அபாரமான அன்பு வைத்தது இந்த பாடல் மூலம் தான். தெலுங்கில் எப்படி பாடினாரோ அதேபோல் அந்த கம்பீரம் சிறிதும் குறையாமல் தமிழிலும் வழங்கியிருப்பார். இந்த பாடலை பதிய வேண்டும் இருந்தது உங்கள் ட்ராப்டில் பார்த்தது நீங்களே எழுதட்டும் என்று இருந்து விட்டேன்.

magisivappa said...

What a song Sundar. This is one of the songs that I loved in the past. Thanks for raking my memory to the past. I remember this song word by word and the modulations that HE made for almost each word.

Thank you Sundar

வற்றாயிருப்பு சுந்தர் said...

ஜி.ரா.

தகவல்களுக்கு மிக்க நன்றி.

//தெலுங்கில் சக்ரவர்த்தி இசையமைப்பாளர். அதே மெட்டு தமிழில் சங்கர் கணேஷ் வழியாக வந்திருக்கிறது. ஆக..மெட்டுக்குச் சொந்தக்காரர் சக்கரவர்த்தி.//

ஹிஹி - நோ கமெண்ட்ஸ்.

//அதே போல பாடலை இயற்றியவர் கவியரசர். இந்தப் பாடல் வரிகளைப் போலவே வைரமுத்து வேறொரு பாடலில் எழுதியிருந்தாராம். அதாவது "தாமரைப் பூவின் சூரிய தாகம்" என்று. ஆனால் தற்செயலாக இந்தப் பாட்டை ரேடியோவில் கேட்டாராம். ஆகையால் உடனே ரெக்கார்டிங்கிற்கு முன்னால் அவர் எழுதிய பாட்டிலிருந்த "தாமரைப் பூவின் சூரிய தாகம்" என்ற வரிகளைத் திருத்தி விட்டார்ராம்.//

அருமையான தகவல்.

//கவியரசரைப் பார்த்து இவர் எழுதி விட்டார் என்று சொல்லி விடக் கூடாதல்லவா.//

சொன்னால்தான் என்ன? அதில் என்ன இழுக்கு இருக்கிறது? Great men think alike என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதானே - unless he thinks Kaviyarasar is not a great man!

நன்றி.

வற்றாயிருப்பு சுந்தர் said...

சீமாச்சு ஸார்.

பின்னூட்டத்திற்கும் தகவல்களுக்கும் நன்றி. பின்னூட்டத்தைக் கூர்ந்து படிச்சப்போ ஒண்ணு விளங்கிச்சு. அது என்னங்கறதை நேர்ல பாக்கறப்போ சொல்றேன்! ;-).

வற்றாயிருப்பு சுந்தர் said...

தஞ்சாவூரான், நன்றி.

Usha, thanks for the details.

ரவீ - தெலுங்குலயும் தமிழ்லயும் பார்த்தீங்களா? படம் அவ்வளவு நல்லாவா இருந்தது? தகவலுக்கு நன்றி.

மகி மேடம். நன்றி. ஆனால் இந்தப் பாட்டைத் திரும்பப் பாடுவது அவ்வளவு சுலபமல்ல - அத்தனை சங்கதிகளை வைத்து பாலு கலக்கியிருக்கிறார்.

sunson said...

Though not sure which version (telugu/tamil) was released first, the tune is almost the same for both versions. MD for telugu version is Ramesh Naidu.

Followers

பகிர்க