536கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
வைரமுத்து அவர்களின் அழகான வரிகளில் சோகப்பாடல் இந்த பாடல். என்றும் மார்க்கண்டேயன் திரு.சிவக்குமார் அவர்களின் அற்புத நடிப்பில் வெளிவந்த படம் மனிதனின் மறுபக்கம். இந்த பாடலில் பாலுஜியுடன் சேர்ந்து ஜானகியம்மா தங்கள் குரல்களில் இருவரும் நம் மனதை கலங்கடித்து நம் கண்ணில் நீர் கோர்க்க வைத்துவிடுவார்கள்.
1535இடியோசைகள் கேட்கட்டும்
பாலுஜி ஆவேசப்பாடல் கேட்டு அதிக நாட்கள் ஆகிவிட்டது போன்ற ஒரு பிரம்மை. கிழக்குக்கரை படத்தில் ஒரு ஆவேசப்பாடல் ஒன்றை கேட்கலாமே? அழகான ஆவேச வரிகளின் நடுவில் "ஹரிஹர நந்தினி" ஸ்லோகத்தை தொடர்ந்து ஒரு புல்லாங்குழலின் இனிமையான இசையும் நம் மனதை ஆக்ரமித்துக்கொள்கின்றன இந்த இடியோசைகள் கேட்கட்டும் பாடல்.
534தேன் மழையிலே தினம்
எப்பவோ கேட்ட பாடல் ஒன்று முரளி நடித்த படத்தில் ஒரு ஜாலியான பாடல் நம்மையும், நம் மனதையும் தேன் மழையிலே தினம், தினம் நனையவைக்கும் குரல் பாலுஜியின் குரல். ஆமாம் ரசிகர்களே "புதியவன்" என்ற படத்தில் கலக்கலான பாடல் இது. பாடலைக்கேட்டால் உங்களூக்கு அந்தநாள் நினவை உங்களாலே தடுத்து நிறுத்த முடியாது.
6533செந்தமிழ் தேன் மொழியாள்
பாலுஜி ரசிகர்களூக்கு தற்போது பெரிய ஆதங்கம் என்னவென்றால் பாலுஜி அதிகம் படங்களில் பாடுவதில்லையே என்பதுதான். அதனாலென்ன அவர் அதிகம் பாடவில்லையென்றால் என்னங்க. அதான் தினமும் அவர் குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறோமே.
11532ஜவ்வாது சந்தன பூவு
சட்டத்தின் திறப்பு விழா படத்தை எப்பவோ பார்த்த நினவு உள்ளது. காட்சிகள் எதுவுமே கண்முன் வரதயங்குகிறது. இந்த் பாடலை பாலுஜியும், ஜானகியம்மாவும் இருவரும் மிகவும் ஜாலியாக ஹஸ்கி குரலில் அமர்க்களமா பாடியிருப்பார்கள் ஒரு வித்தியாசத்திற்காக கேளூங்கள்.
531கவிதை பாடு குயிலே
இந்த பாடலை கேட்டாலே மைக் மோகன், ஜெயஸ்ரீ நடித்த தென்றலே என்னைத்தொடு படம் தான் நினவுக்கு வரும். எல்லோரும் சுத்தமாக மறந்து போயிருந்த ஜெயஸ்ரீ, சின்னத்திரையினில் திருவாளர் திருமதி நிகழ்ச்சியில் தொகுப்பாளனியாக விதவிதமான புடவைகளில் வந்து அவரது ரசிகர்களின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.
2530நந்தவனம் இந்த மனம்
கிழக்குக்கரை படத்தில் ஓர் அழகான மெலோடி பாடல் இது கேட்டு மகிழுங்கள். குறிப்பாக இரண்டாவதாக வரும் வரிகள் அனுபல்லவியோ அல்லது சரணமோ எனக்கு சரிவர தெரியவில்லை.
529நமக்குள் ஏன் அன்பே
மற்ற பிரபல பாடகர்கள் பாடும் பாடல் மெட்டுக்கள் நம்ம பாலுஜி பாடினால் எப்படி இருக்கும் என்று பல தடவை ஆதங்கப்பட்டிருக்கேன். அந்த ஆதங்கத்தை தீர்க்கும் வகையில் இன்று ஒரு பாடல் எனக்கு கிடைத்தது.
2528ரவி வர்மன் ஓவியமோ
புதுவயல் இந்த படத்தை நான் பார்த்ததாக சிறிதும் நினவில்லை. இசையமைப்பாளர் திரு. அரவிந்த் எனது நண்பர் கோவையில் அதிக மேடை நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார். தாசண்ணா குரலில் கலக்குவார். சினிமாவில் இசையமைக்கும் ஆர்வத்தில் தன் வேலையை விட்டு விட்டு நுழைந்தவர்.
1526நான் தான் உங்கப்பண்டா
எத்தனை நாளைக்கு காதல், சோகப்பாடலாக கேட்பது இதோ ஒரு வித்தியாசத்திற்காக ஒரு சண்டை பாடல் கேட்போம். பத்மஸ்ரீ கமல் ஹாசன் நடித்த ஒரு படம் ராம் லக்ஷ்மன் அபாரமான கமர்ஷியல் படம். இந்த படத்தில் கமல் புகுந்து விளையாடியிருப்பார், பாடலில் பாலுஜி தன் அதிரடி குரலால் விளையாடியிருப்பார்.
527என் உயிரின் உயிரே ஆஆ
ரொம்ப நாளாயிடுச்சுங்க சோகப்பாடல் கேட்டு. பிரபலமான சோகப்பாடல்கள் என்றால் திரு.டி.ராஜேந்தர் படத்தில் தான் கேட்க வேண்டும். சர்வ சாதாரணமாக பாடல் எழுதி அநாயசமாக மெட்டைபோட்டு பட்டையை கிளப்பிவிடுவார். நின்ற இடத்திலேயே கைக்குகிடைத்ததை வைத்துக்கொண்டு தாளம் போடுவதில் கில்லாடி.
525வீடு மனைவி மக்கள்
டைரக்டர் விசு படமென்றால் கவலையே இல்லாமல் பார்க்கபோகலாம். படம் பார்க்க ஜாலியாக இருக்கும். பார்ப்பவர்களை நன்றாக யோசிக்க வைக்கும் இயக்குநர் மட்டுமல்ல மனதைதொடும் செண்டிமெண்ட் காட்சிகள் எடுப்பதில் வல்லவர். வீடு மனைவி மக்கள் ஒரு குடும்பத்தில் நடைபெறும் அன்றாட நிகழ்ச்சிகள் பற்றி எடுத்திருப்பார்.
2524அத்த பொண்ணு வாடி
இதோ புதுப்பாடகன் படத்தில் மற்றுமொரு அழகான கிராமத்து சூழ்நிலையில் அமைந்த பாடல். கேட்டு மகிழுங்கள்.
523எனக்கென பிறந்தவ
நடிகர் பிரபு, குஷ்பு நடித்த ஓர் அழகான பாடல் கொண்ட படம் கிழக்குகரை பாடல் அழகான மெட்டுடன் நம்மை கிறங்கடிக்கும். எனக்கென பிறந்தவ என்ற பல்லவியே அமர்க்களமாக இருக்கும். சரணங்களைப் பற்றி கேட்கவே வேண்டாம் தலைவர் பட்டைய கிளப்பி இருப்பார். படத்தை பார்க்கவில்லலயாதலால் அதிகம் விவரிக்க முடியவில்லை.
1522ஹேய் உள்ளத்தில் என்னென்ன
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் எஸ்.பி.பாலு அவர்களின் அழகான இசையமிப்பில் துடிக்கும் கரங்கள் பாடல் கேட்போம். இசையமைப்பு கேட்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும் நம்மை அப்படியே லேசாக காற்றில் தூக்கிக்கொண்டு செல்வது போல் பிரம்மை ஏற்படும்.
521மோசக்காரனா நான்
தெலுங்கு பட உலகில் பட்டைய கிளப்பிக்கொண்டு ஓடிய படம் இது. தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வந்த போது தமிழ்நாட்டிலும் புழுதியை கிளப்பியது. இந்த நேரங்களீல் தான் அத்க பட்ச தெலுங்கு மொழி மாற்றம் படங்கள் வந்தன என்று நினக்கிறேன்.
6