நான்கு சுவர்கள் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

தென்னக ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர் நடித்து சக்கைப்போடு போட்ட படம் நான்கு சுவர்கள்.

4

முதலில் இந்தியாவின் பெரிய விருதான “பத்மபூஷன்” விருதை பெற்ற தென்னிந்தியாவின் லதாமங்கேஷ்கர் பி.சுசில்லாம்மாவிற்க்கு பாலுஜி ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இதோ ஒர் பாலுஜியுடன் பாடிய இனிமையான பாடல்.

அண்ணன் தம்பிகள் மூவரை சுற்றிப் பின்னப்பட்ட கதை.

இந்த பாடல் வரும் படத்தின் தகவல்கள் இணையத்தில் தேடினால், சொன்னதை செய்வேன் பெயரா? அல்லது என்ன தவம் செய்தேனா? ஒரே குழப்பமாக உள்ளது பாலுஜி, சுசிலாம்மவின் இனிய குரல்களில் ”லல்ல லல்ல லல்லலலலலாஆஆ, லல்ல லல்ல லல்லலலலலாஆஆ” என்ற ஹம்மிங் ஒன்று போதும். அந்த குழப்பத்தில் இருந்து மீட்டு கொண்டுவர..

6

எனக்கு பசியெடுக்கிற நேரம் வந்தா பாலுஜி பாட்ட கேட்பேன். உங்களூக்கு பசியெடுத்தா?? என்ன செய்வீங்க?? தகவல்கள் தேடுவீங்களா?? (என்னடா இதுன்னு?? யோசிக்காதீங்க சார். இந்த படத்தின் தகவல்களூம் கிடைக்கல்ல அதான்) பழைய படத்தகவல்கள் இணையத்தில் பஞ்சம் போல். அம்மா தாயே! அய்யா சாமி!! ப்ளிஸ் ஹெல்ப் மீ.....

6

1978ஆம் வருடம் வெளிவந்த “சீர்வரிசை” படம் சுத்தமாக மறந்துவிட்டது. இந்த படத்தில் பாடல்கள் அனைத்துக் தேன் மழை தான் போங்கள். இந்த பாடலில் முக்கியத்துவமே ஹம்மிங் தான் சூப்பர். முத்துராமன், லதா நடித்திருக்கிறார்கள்.

2

இந்த பாட்டு வரும் படத்தை இணையத்தில் தேடித் தேடி ஓய்ந்து போய்ட்டேன். அழகான பாடல். யாராவது உதவிக்கு வாங்கப்பா.

2

”அந்த ஒரு நிமிடம்” இது உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த படம் (சுந்தர் நீங்க போடுவீங்கன்னு எத்தனை நாள் தான் காத்திருப்பது ஒரு அழகான பாடல் அனாவசியாமாக காத்து கிடக்கக்கூடாதேன்னு நானே பதிஞ்சுட்டேன் ஹி ஹி ஹி).

5

எப்போதும் பாலுஜி பாட்டு பாட்டு என்று பதியப்படும் இந்த தளத்தில் ஒரு வித்தியாசத்திற்க்காக ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி நிச்சயம் யாரையும் மனது புண்படுத்துவதற்காக பதியப்படவில்லை.

3

இந்த தளத்திற்கு தொடர்ந்து வருகை தந்து எங்களூக்கு ஆதரவுதந்து உற்சாகத்தை ஏற்படுத்தும் அனைத்து ரசிகர்களூக்கும், குறிப்பாக பாலுஜி ரசிகர்களுக்கு கோவை பாலுஜி ரசிகர்கள் சார்பாகவும், பாலுஜி ரசிகர்கள் சாரிடபில் பவுண்டேசன் சார்ப்பிலும் இனிய "பொங்கல் நல்வாழ்த்துக்களை" தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன

2

சூரியகாந்தி படம் 1973 ஆம் வருடம் வெளிவந்தது மனைவி மீது அபாரமான நம்பிக்கை கொண்டு பாராட்டி பாடும் பாடல் இது நடிகர் முத்துராமன், ஜெயலலிதா அவர்கள் நடித்த கருப்பு வெள்ளை படம். பாடலில் பாலுஜியின் இனிமையான குரலுக்கு நடுவே ஜெயலலிதா அவர்களின் மென்மையான ஆங்கில வசனங்கள் பாடலுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.

3

வண்டிச் சக்கரம் படத்தின் கதையாசிரியர் வினு சக்ரவர்த்தி. அவரோடு, சில்க் ஸ்மிதா, சிவக்குமார், சரிதா நடித்திருக்கிறார்கள். வா மச்சான் வா, வண்ணாரப் பேட்டை என்ற சென்னைச் செந்தமிழ்ப் பாடல் இடம் பெற்ற படம்.

ஷங்கர் கணேஷ் இசையில் பாடல்கள் இனிமையானவை.

2

புதுநெல்லு புதுநாத்து (1991) படத்தில் நடிகை அஸ்வினி அறிமுகமானார். சுகன்யாவும் நடித்திருக்கிறார். வரும் இந்தப் பூப்பாடலைப் பார்ப்போம். பாரதிராஜா + இளையராஜா என்று இரண்டு ராஜாங்கங்கள் ஜோடிசேர்ந்தால் என்ன நடக்கும் என்று பல படங்களில் பார்த்திருக்கிறோம்.

7

நாடகமே உலகம் (1979) படத்தில் வி.குமார் அவர்களின் இசையில் பாலுவும் வாணிஜெயராமும் சப்த ஸ்வரங்களில் பொழிந்து தள்ளியிருக்கும் இந்தப் பாடலைக் கேட்டால் புன்னகை வராதிருக்குமா? இந்த இனிய சங்கீதத்தின் தாலாட்டைக் கேளுங்கள்! எழுதியது கவியரசர் கண்ணதாசன் என்று நி்னைக்கிறேன்.

ஆஹா..

3

இந்த பாடல் ரொம்ப நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன். சமீபத்தில் பாடல் கோப்பு கிடைத்தது போதாதற்கு சென்ற வாரம் எ.பா.பா வில் ஒரு பெண்மணி பாடி தளத்தில் பதிய வேண்டும் என்ற ஆசையை மேலும் அதிகப்படுத்திவிட்டார். இந்த படத்தில் 5 இசையமைப்பாளர்கள் இசையமைத்து சாதனை படுத்தியிருந்தார்கள்.

9

வெள்ளி மலரே அழகான பல்லவியுடன் தொடங்கும் இந்தப் பாடல் நடிகர் பிரசாந்து நடித்து வெளிவந்த "ஜோடி" படத்தில். இந்த பாடலின் முக்கிய சிறப்பே ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பு குறிப்பாக பாடலின் தபேலாவின் இசை கேட்பவர்களின் விரல்களும் தன்னையறியாமல் தாளம் போடவைக்கும்.

6

ஞாபகம் வருதே சமீபத்தில் வெளியான படம் என்று நினைக்கிறேன். சென்னை-28 இன் வெற்றியில் குளிர்காய நினைத்தார்கள் போலும். விளைவு - 20:20 யில் வெற்றியடைந்த இந்திய அணி பின்பு மண்ணைக் கவ்வியதுபோல ஆயிற்று! :-(

சரண், வெங்கட் பிரபு நடித்திருக்கிறார்கள். K.S. ராஜ் இயக்கியிருக்கிறார்.

2

உலாத்தல்: ஒபரா ஹவுஸில் பாடிய நிலா பாலு

நன்றி : கானா பிரபா

இது இன்னொரு (கடைசி) அருமையான பாடல் - தனிப்பாடலாக பாலு கலக்கியிருப்பார். இதயதாமரை படத்திலிருந்து - ஷங்கர் கணேஷ் இசையில்.

3

இதுவம் இன்னொரு நல்ல பாட்டு - இதயதாமரை படத்தில். பாலு அட்டகாசமாகக் கம்பீரமாகப் பாடியிருக்கிறார்.

4

'மிஸ்டர் சந்திரமெளலீ' என்று கூவி எல்லாரையும் மெளனராகத்தில் கவர்ந்திழுத்தவர் கார்த்திக். ரேவதியோடு அவர் வரும் காட்சிகளனைத்தையம் ரசிகர்கள் நன்றாகவே ரசித்தார்கள். 'ஆச்சா? போட்டுச் சாத்து' - என்று அதே பாணியில் படமெடுத்து ஒழிப்பதுதானே வழக்கம்?. அதைத்தான் செய்தார்கள். வந்தது இதயதாமரை (1990).

3

சன் ம்யூக்கில் மிட்நைட் மசாலா என்ற குடும்ப நிகழ்ச்சியில் வெகுகாலமாக ஒளிபரப்பான பாட்டு இது. 'அது எப்படி உனக்குத் தெரியும்?' என்று மரியாதை ராமன் கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது ஆமாம். மிட்நைட் மசாலா என்றதும் ஒரு சிறிய சம்பவம் நினைவுக்கு வருகிறது.

2

பூங்காக்களில் அதிகம் கண்டுகொள்ளப்படாமலிருந்த "பூக்களைப் பறிக்காதீர்கள்" என்ற வாசகம் எல்லாரது கவனத்தையும் அன்பையும் பெற்றது இப்படம் வந்ததற்குப்பிறகு என்று சொன்னால் மிகையில்லை. 'பூக்களத்தான் பறிக்காதீங்க' பாடல் இன்னும் ரீங்கரித்துக்கொண்டேயிருக்கிறது.

4

பாலுஜி, சுசீலாம்மா குரலில் ஒரு சுறுசுறுப்பான பாடல் ஒன்று எமனுக்கு எமன் படத்தில் இருந்து கேட்ப்போம்.

இந்த பாடல் வரும் படமும் பார்த்ததாக நினவில்லை. இணையத்திலும் கிடைக்கவில்லை. தகவல்கள் தரலாம்.

பாலைவனச் சோலை (1981) என்ற பெயருக்கேற்றாற்போல் வறட்சியான கதைகளை எடுத்து தமிழ்த்திரையுலகை ஒழித்துக்கட்டிக்கொண்டிருந்த படங்களின் மத்தியில் பசுமையாக வந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த படம். ராபர்ட் ராஜசேகர் இயக்கியிருக்கிறார்.

4
இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Loading