611எங்க வீட்டில் தங்கத்தேரில்:பாலுஜி தரிசனம் 1
தெய்வ தரிசனம் : பாலுஜியின் அமர்க்களமான கோவை சந்திப்பு பகுதி :1
பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி ஞாயிறு அன்று கோவையில் எஸ்.பி.பி ரசிகர்களூக்காக, எஸ்.பி.பாலுஜியின் தரிசனம் அமர்க்களமாக கிடைத்தது. முதலில், என் அலுவலக வேலை பளு காரணமாக இந்த பதிவை தாமதமாக பதிவதற்க்கு மன்னிக்க வேண்டுகிறேன்.
பாலுஜியுடன் அன்று நான் அனுபவித்த ஸ்வாரசியமான இன்பங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
முதலில், அகில உலக எஸ்.பி.பி ரசிகர்கள் நடத்தும், எஸ்.பி.பி ரசிகர்கள் சாரிட்டி பவுண்டேசன் அமைப்பு சென்ற வருடம் பெங்களூரில் அதிகாரப்பூர்வமாக பாலுஜி அவர்களால் அனுமதி பெற்று துவக்கப்பட்டது. இருந்தாலும், 2004 ஆண்டு முதலே நற்பணிகள் துவக்கப்பட்டு விட்டது. சென்னையில் இரண்டு தடவை சந்திப்பும், ஒரு தடவை ரத்த தாண முகாமும் நடத்தப்பட்டது . சென்ற வருடம் பெங்களூரில் அற்புதமான ரசிகர் சந்திப்பு நடைப்பெற்றது குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. இனி கோவை வருகையை பற்றி பார்ப்போம்.
1980 ஆம் முதலே கோவையில் பாலுஜிக்கு ஒரு ரசிகர் வட்டம் இருந்து வந்தது. அந்த காலத்தில் பாலுஜி கொடிகட்டி பறந்த நேரம் அற்புதமான பாடல்கள் அதிக பாடியிருந்தாலும், அந்த சமயம் பயணங்கள் முடிவதில்லை, சங்கராபரணம், நினைவெல்லாம் நித்யா மற்றும் நினைத்தாலே இனிக்கும் போன்ற படத்தின் அழகான பாடல்கள் அகில உலக ரசிகர்களின் உள்ளங்களை ஆக்ரமித்து கொண்டுவிட்டார். நாங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா என்ன? கோவை பாலுஜி நண்பர்கள் மற்றும் ரசிகர் வட்டம் அன்று முதல் இன்று வரை நல்ல படியாகவே நடந்து வருகிறது.
சென்னை ரசிகர்கள் நிர்வாகிகளாக இருக்கும் சாரிட்டி பவுண்டேசன் அமைப்பின் நண்பர்கள் இந்த தடவை கோவையில் வைக்கலாமா என்று என்னிடம் கேட்ட போது சிறிது பயத்துடனனும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. இதுவரை சிறிய சிறிய நன்கொடைகள் தந்தாலும், கோவை ரசிகர்கள் பெரிய அளவில் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் என்னுள்ளே இருந்தது என்பது உண்மை. இதோ அதை செய்து முடிக்க ஓர் அற்புதமான வாய்ப்பு என்று மகிழ்ந்தேன். அதன் படி மிகவும் அற்புதமாகவும் பாலுஜி, ரசிகர் சந்திப்பு நடைப்பெற்றது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சந்திப்பு கோவையில் என்று முடிவு செய்யப்பட்ட முதலில் இருந்தே எனக்கு பொறுப்புகள் ஒதுக்கப்பட்டன. ஒரு மாதத்திற்கு முதலே கோவைக்கு வந்த திரு. சேஷாத்திரி அவர்களும் மற்றும் திரு. வெங்கி அவர்களூம் நிகழ்ச்சி நடைபெறும் இடமும், அனாதை இல்லம் தேர்வு செய்ய வந்து அவர்களின் அற்புதமான ஒத்துழைப்பை வழங்கியது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. நிகழ்ச்சி கோவையில் ரயில் நிலையம் எதிரே சந்தில் பல ஹோட்டல்களூக்கு இடையே இருந்த புதிய கிராண்ட் ப்ளாசா என்ற ஓட்டலில் நடைபெறுவது என்றும், 
கோவை கிராண்ட் ப்ளாசா ஹோட்டல்
சிரியன் சர்ச் ரோடில் உள்ள 100 பெண் குழந்தைகளை பராமரித்து வரும் கோவை சேவா நிலையத்திற்க்கும் பொருட்களை வழங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
கோவை சேவா நிலையம்
எல்லா ஏற்பாடுகளும் முன்னரே முடிவு செய்யப்பட்டபடி எந்த வித தடங்களும் இல்லாமல் நடைபெற்றது. நிகழ்ச்சி நடைபெறும் தேதி நெருங்குவது என் மனதை என்னென்னவோ செய்தது. ஒரு வித பதட்டம். நிகழ்ச்சி எல்லாம் நல்ல விதமாக நடைபெற வேண்டுமோ என்ற பயம் கூட இருந்தது. இந்த பயத்தை அடிக்கடி போக்கியவர் பாலுஜியின் நெடு நாளைய நண்பர் கோவை ரசிகர்கள் நல்ல வழிக்காட்டி திரு. ரமேஷ் சார் என் பயத்தை போக்கி தைரியத்தை வரவழைத்தார். அவர் செய்த உதவி மறக்க முடியாத ஒன்று.
போட்டோவில்: பாலுஜி, நண்பர்கள் திரு.பார்த்தசாரதி, பாலுஜி, திரு.ரமேஷ்,மற்றும் நான்
நிகழ்ச்சி தேதியும் நெருங்கிவிட்டது. முன்னரே நாளிதழில் ரசிகர் சந்திப்பு என்று வெளியிட்டது மிகவும் சுலபாமாக இருந்தது. நிகழ்ச்சிக்கு குறிப்பிட்ட நபர்களே சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததால். திட்டமிட்டபடி எல்லாம் நன்றாக அமைந்தது. 

நிகழ்ச்சி முதல் நாளே எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது. ஏற்பாட்டை கவனிக்க முதல் நாளே சென்னை திரு. சேஷாத்திரி அவர்களூம், பெங்களூர். திரு. ஆர்.ஜி. நாராயணன் அவர்களூம் வருகை தந்தது. எனக்கும் மேலும் உற்ச்சாகத்தை ஏற்படுத்தியது.
திரு.சேஷாத்திரி, சென்னை, மற்றும் திரு. ஆர்.ஜி.நாரயணன், பெங்களூர்
பாலுஜியின் தரிசனம் தொடரும்.... அதுவரை தங்கத்தேரின் திருவிழாவை கேளுங்கள்...
எங்கவீட்டில் தங்க தேரில் இந்த மாதம் திருவிழா!!! ஆமாம்... ஆமாம்..
எங்களூக்கு (கோவை ரசிகர்களூக்கு) பிப்ரவரி 17ஆம் தேதி இன்று தான் திருவிழா..
படம்: அருனோதயம்
பாடல்: எங்க வீட்டில் தங்கத்தேரில்
நடிகர்கள்: முத்துராமன், லக்ஷ்மி
இசை: கே.வி.மஹாதேவன்
பாடாலசிரியர்: கண்ணதாசன்
பாடகர்கள்: பாலுஜி, சுசிலாம்மா
|
எங்க வீட்டு தங்கத்தேரில் இந்த மாதம் திருவிழா
இன்று நாளை எந்த நாளும் இன்பதேவ
திருவிழா.. திருவிழா..திருவிழா..
சிரிப்பு வந்தது அது சிரிப்பதல்ல
உன்னை மெல்ல அழைப்பதென்பது
அழைப்பு வந்தது அது அழைப்பதெல்ல
பெண்னை மெல்ல அணைப்பதென்பது
கோபம் வந்தது அது கோபமல்ல
காலம் பார்கும் ஊடல் என்பது
கோபம் வந்தது அது கோபமல்ல
காலம் பார்கும் ஊடல் என்பது
கொஞ்ச வந்தது வெட்கம் கொஞம் வந்தது
ஆஹா ஹா ஆஹா ஓஹோ ஒஹோ
எங்க வீட்டு தங்கத்தேரில் இந்த மாதம் திருவிழா
இன்று நாளை எந்த நாளும் இன்பதேவ
திருவிழா.. திருவிழா..திருவிழா..
போகச்சொன்னது கால் போகும்போது
கண்ணும் நெஞ்சும் பார்க்க சொன்னது
பேச சொன்னது வாய் பேசும் போது
நானம் வந்து வந்து மூட சொன்னது
தழுவ சொன்னது கை தழுவும் போது
என்ன வந்து நழுவ சொன்னது
தழுவ சொன்னது கை தழுவும் போது
என்ன வந்து நழுவ சொன்னது
தயக்கம் வந்தது பெண்ணின்
பழக்கம் வந்தது..
ஆஹ ஹா ஆஹஹா ஒஹோ ஒஹோ..
எங்க வீட்டு தங்கத்தேரில் இந்த மாதம் திருவிழா
இன்று நாளை எந்த நாளும் இன்பதேவ
திருவிழா.. திருவிழா..திருவிழா..
அன்னவாஹனம் போல ஆடி ஆடி
வருவதுதான் பெண்ணின் சீதணம்
தர்மதரிசனம் அதை தலைவன்
மட்டும் காண்பதுதான் தெய்வ தரிசனம்
கன்னிமோஹனம் என்னை கட்டி கட்டி
இழுப்பதற்கு என்ன காரணம்
கன்னிமோஹனம் என்னை கட்டி கட்டி
இழுப்பதற்கு என்ன காரணம்
என்ன காரணம் நெஞ்சின் எண்ணம் காரணம்
ஆஹ ஹா ஆஹஹா ஒஹோ ஒஹோ..
எங்க வீட்டு தங்கத்தேரில் இந்த மாதம் திருவிழா
இன்று நாளை எந்த நாளும் இன்பதேவ
திருவிழா.. திருவிழா..திருவிழா..

6 comments:
Hello Ravi uncle
Eagerly waiting for Dharisanam Pagudhi 2
Luv and Live with Music
Prasan
ரவீ
பதிவுக்கும் புகைப்படங்களுக்கும் நன்றி. கொடுத்து வைத்த ஆள்தான் நீங்கள். பார்க்கலாம் அவரை அடுத்த முறை சந்திக்க எப்போது எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கிறது என்று.
ரொம்ப நன்றி. அடுத்த பாகத்தைச் சீக்கிரம் போடுங்க.
ஹலோ பி.வி,
இன்னும் சுவாரசியமான தகவல்கள் இருக்குங்க காத்திருந்து படிங்க. வருகைக்கு நன்றி.
சுந்தர் சார்,
சந்திப்பு முடிந்ததும் திரும்பவும் பாலுஜியுடன் 20 நிமிடம் பேச வாய்ப்பு கிடைத்தது. என்மீது ஒரு கிலோ ஐஸ் வைத்துவிட்டார் போங்கள். உதாரணம்: உங்களுக்காக ஒரு சிடியில் கையெழுத்து வாங்கும் போது சொன்னது இது. சதீஸ் (அவர் மருமகனை இப்படிதான் கூப்பிடுவார்) ரவீ இங்க உக்காந்துட்டு பாஸ்டனில் உள்ள சுந்தரை இவர் தான் அறிமுகப்படுத்தினார் என்றார். (பாருங்கள் நீங்கள் தான் உலகமெல்லாம் என்னை அறிமுகப்படுத்தினீர்கள்) இருந்தாலும், உங்களை எப்படி நினைவு வைத்திருக்கிறார் பாருங்கள். எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. நீங்களும் அவருக்கு நெருங்கியவர் ஆயிவிட்டீர் ஐயா. மகிழ்ச்சி தானே? சிடி அனுப்பினேன் கிடைத்தவுடன் மின்னஞ்சல் செய்யவும். உங்கள் ஏக்கம் நிச்சயம் நிறைவேறும். நன்றி.
Hi Ravee Sir
I got this song only today froma friend. One of my friends told me that in your blog you have put my photo [from the hotel room] and said Sheshadhri and I came a day before and helped you. Naan yenna help sir panninen. Onnum illai. Pannadhellaam Sheshadhri Sir um neengalum dhaan. Chumma vandhu ottikitten. Idhai perusa potta unga periya manasukku indha paattu. Enjoy pannunga
Thanks & Regards
RG
Thanq very much for RGN sir,
//Naan yenna help sir panninen. Onnum illai. Pannadhellaam Sheshadhri Sir um neengalum dhaan. Chumma vandhu ottikitten//
Mothal thadavaiya covaikku vanthu oru naal neenga oor suthi paarkara plan vittutu engakooda autovil sutheeneenga. Unga ponnana time engakitta spent pannineengala marakkamudiyma?
Post a Comment