613வரவேண்டும் மஹராஜன்: பாலுஜி தரிசனம் 2
பாலுஜியின் அமர்க்களமான கோவை சந்திப்பு பகுதி : 2
நிகழ்ச்சியன்று, 17ஆம் தேதியன்று காலையிலே சென்னையில் இருந்து ஒரு பெரும் படை ரயில் நிலையத்தில் வந்து இறங்கியது. அதை தொடர்ந்து ஹைத்ரபாத், மும்பை, பெங்களூர், பொள்ளாச்சி இருந்தும் ரசிகர்கள் கலந்து கொள்ள கொள்ளை ஆவலாக வந்தனர்.
நான் காலை 11.30 மணிக்கு, சாரிட்டியின் முதல் நிர்வாகி திரு. கிரிதர் ராஜா அவர்கள் (இவர் பாலுஜியின் மருமகன் என்பது குறிப்பிடுவதில் மகிழ்ச்சியடைகின்றேன்) பெங்களூரில் இருந்து வருகை தந்தார். பல தடவை விமான நிலையத்திற்க்கு வரவேண்டாம் என்று அன்பு கட்டளையிட்டாலும். நானும், எனது கோவை புதிய ரசிகர் திரு. ஆனந்த் அவர்களூம் காரில் அவரை வரவேற்க்க சென்றோம். பாலுஜி 12.45 விமானத்தில் வருகிறார் என்று தகவல். திரு.கிரிதர் ராஜா சாரை அவரகளின் திருமணத்தில் அவரைப் பார்த்தது, அதற்கு பிறகு சென்னையில் நிலவும் மலரும் நிகழ்ச்சியில் சில நிமிடங்கள் பேச வாய்ப்பு கிடைத்தது. என்னை நினைவில் வைத்திருப்பாரோ என்ற சந்தேகமும் இருந்தது. இருந்தாலும், பாலுஜியை பார்க்கும் அதே ஆவலுடன் கிரிதர் சாரையையும் எதிர்பார்த்தேன். பெங்களூர் விமானம் 45 நிமிடம் தாமதமாக வந்தது. விமானநிலையத்தில் தூரத்திலே என்னை அடையாளம் கண்டு கொண்டது எனக்கு மிக்க மகிழ்ச்சியை தந்தது. ஒரு மணி நேர இடைவெளியில் நாம் பாலுஜியை வரவேற்க்க முடியாமல் போய்விடுமோ அச்சத்தில் இருந்த எனக்கு கிரிதர் சார் ஒரு நல்ல தகவலை சொன்னார். மாமா 15 நிமிடத்தில் வந்துவிடுவாரே ஒன்றாகவே சென்று விடலாமே என்று யோசனை சொன்னார். நான் சொன்னேன் நாம் போகலாம் சார் மாமாவை அழைத்து செல்ல திரு ரமேஷ் அவர்கள் வந்து கொண்டிருக்கிறார் என்றேன் நீங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளல்லாமே என்றேன். பரவாயில்லை சேர்ந்தே போகலாம் என்றார். அதற்குள்ளே பாலுஜி அவர்களின் விமானமும் வந்தது. அவர் வருகையை எதிர்பார்த்து தவித்தேன் தூரத்தில் அவரைக் கண்டதும் 25 வருடத்திற்க்கு முன் இதே விமான நிலையத்தில் பாலுஜியை வரவேற்க்க படை சூல மலர்மாலைகளுடன் சென்றது இன்றும் என் கண் முண் வருகிறது அதுமட்டுமல்லாமல் என் கால்பாதங்களுக்கு கீழ் பூமி நழுவுவது போல் ஒரு பிரம்மை ஆகாயத்தில் பறப்பது போல இருந்தது அதே உணர்வு ஏற்பட்டது. முதல் தடவை அதற்கு பின் பல தடவை அவரை வரவேற்க நண்பர்கள் படை சூழ சென்றதும் அதை தொடர்ந்து ஒவ்வொரு முறையும் அவரிடம் நன்றாக வாங்கிக்கட்டிகொண்டதும் வேறு விஷயம்.
பாலுஜி விமானத்தில் இருந்து மிகவும் சிரமப்பட்டு தான் நடந்து வந்தார், சோர்வாக இருந்தது நன்றாகவே நடையில் தெரிந்தது. ஏனென்றால் முதல் இர்ண்டு நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தார். முன்னரே கிரிதர் ராஜா அவர்கள் பாலுஜியிடம் உடல் நிலை சரியில்லாமல் வரவேண்டாம் நிகழ்ச்சி மற்றொரு நாள் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார். (எங்கள் வயிற்றிலும் புளியை கரைத்தார்) அதற்கு அவசியமில்லாமல் பாலுஜி, இல்லையில்லை என்னை பார்க்க பல ஊர்களில் இருந்து வருகை தருகிறார்கள், இப்போது என் உடல் நிலை பரவாயில்லை நிகழ்ச்சி வருகிறேன். என்று சொன்னதும், நிகழ்ச்சி நடை பெறும் போதும் குறிப்பிட்டதும். அவர் தன் ரசிகர்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்று நினைத்து புல்லரித்து போனேன். என்னைப்பார்த்ததும், நான் வரவேற்றேன் என் அருகில் வந்தவுடன் என்னங்க கேப்டன் சவுக்கியமா? (அன்று நான் வழக்கம் போலவே கல்ப் தொப்பி அனிந்திருந்தேன்) என்றார். பாருங்க, யார் யாரையை கேப்டன் என்பது ? சார் நீங்க தான் எங்களூக்கு கேப்டன் என்று சொல்ல நினைத்தேன் அதற்குள் கூட்டம் சேர்ந்ததால். அவரை பத்திரமாக காருக்கு அழைத்து சென்று. ஹோட்டலுக்கு அனுப்பிவைத்தோம். அந்த காரின் பின்னேயே திரு.ஆனந்த் காரின் மஞ்சள் பறவை பறந்தது.
எப்போதும் போலவே காரில் இருந்தே என் கைப்பேசியில் இருந்து திரு. அசோக், திரு.சேசாத்திரி இருவருக்கும் வருகிறோம் என்ற தகவல்கள் பறந்தன. எளிமையான வரவேற்புடன் நிகழ்ச்சி நடைபெறும் ஹோட்டலிலே தங்கினார். அவருடன் ஹோட்டலில் 20 நிமிடம் பேச வாய்ப்பு கிடைத்தது பொதுவாக தன் பழைய கோவை நண்பர்களிடம் நினைவுகூர்ந்து பேசியது மகிழ்ச்சியை தந்தது. பேச்சின் நடுநடுவே திரு. ஆனந்த் அவர்களையையும் மீறி எட்டி எட்டிப்பார்த்து தொலைகாட்சியில் இந்தியா, ஆஸ்திரேலியா கிரிகெட் போட்டியை பார்த்துகொண்டே பேசியது. அவர் கிரிக்கெட் மீது வைத்திருக்கும் அதீதமான காதலை புரிந்து கொண்டேன்.
பாலுஜிக்கு வருகைக்கு முன், 3.00 மணியளவில் கோவை சேவா ஆசிரமத்திற்கு அழைத்து செல்லலாமா என்று திரு. சேஷாத்திரி என்னிடம் தெரிவித்தார் முன்னமேயே சொல்லவில்லையா என்று கூட என்னிடம் செல்லமாக கடிந்து கொண்டார். அதற்கு எந்தவித மூடில் வருகிறார் தெரியவில்லை ஹோட்டல் வந்ததும் சொல்லலாம் என்றேன். அவரிடம் தகவல் தெரிவித்ததும் சரி என்றவுடன் நமது சென்னை நண்பர்கள் பரப்பானாகள்.
மாலை 3.00 பாலுஜியுடன் கிளம்பினோம் கோவை சேவா நிலையத்திற்க்கு குழந்தைகள் “வணக்கம் ஐயா” கோசத்துடன் பாலுஜியை வரவேற்றது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
முதலில் அங்கு சேவா நிலையம் நடத்தி வரும் 96 வயதில் மூதாட்டி அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டது அவர் பணிவை காட்டியது. இந்த வயதிலும், அந்த சேவா நிலையத்தை நடத்தி வருகிறார் என்று கேட்டு அதிசயப்பட்டு போனார். பாலுஜியிடம் அவர் ரசிகர்கள் வழங்கும் பொருட்களின் போட்டோ ஆல்பத்தை வழங்கினேன் பார்த்து மகிழ்ச்சிடைந்தார். குழந்தைகளூடன் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அப்போதும் அவரின் நகைச்சுவை உணர்வு விட்டு போகவில்லை போட்டொ கிராபர் திரு. ஷ்ரிதர் அவர்களிடம் குழந்தைகள் போட்டோவில் நன்றாக விழவேண்டும் என்றார். குழந்தைகள் ஆவல் மிகுதியால் பாலுஜியை அடிக்கடி திரும்பி பார்க்க எல்லோரையும் கேமராவை பாருங்கள் அப்போது தான் உங்கள் முகம் தெரியும் என்று சொல்லி ஷ்ரிதர் இன்னும் இரண்டு படங்கள் எடுங்கள் சேர் மீது ஏறி எடுங்கள் என்று சொன்னவுடன் தொடர்ந்து குழந்தைகளே இப்போது பாருங்கள் அவர் தொப்புகடீர் என்று விழுவார் என்று சொன்னது அவரின் சூழ்நிலை நகைச்சுவையை உணர்வை நன்றகவே உணரமுடிந்தது. பொதுவாகவே புதிய நபர்களிடமும் ஜாலியாக பேசுவார் பழைய நண்பர்களிடம் கேட்கவே வேண்டாம் அதிகம் உரிமை எடுத்துகொண்டு மிக ஜாலியாக பேசுவார் அவரிடம் பழகுபவர்களுக்கு தான் அவரின் குழந்தைதனமான மனம் புரியும். மேலும், குழந்தைகளின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க ”நலம் வாழ எந்நாளூம் நல் வாழ்த்துக்கள்” என்ற அழகான பாடலை பாடி குழந்தைகளை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார். பொதுமக்கள் கூட்டம் சேரத்துவங்ககியதுமே பாலுஜி டென்சன் ஆவதற்குள் பாலுஜியை ஆசிரமத்தை விட்டு கிளம்பிக்கொண்டு காரில் ஏற்றி நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்க்கு கிளம்பினோம்.
10 நிமிட பயணத்திலும் கிரிக்கெட் வர்ணனையை கேட்க அவர் தவறவில்லை நண்பரின் காரில் எப்.எம் தேடி பிடித்து கேட்டார் ஸ்டேசன் கிடைப்பதற்க்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடமும் வந்து விட்டது. இருந்தாலும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்க்கும் செல்ல 15 நிமிடம் தாமதமாகிவிட்டது. பாலுஜிபார்க்க அவரின் ரசிகர்கள் மிக ஆவலுடனும், ஏக்கத்துடனும் உணர்ச்சி பிழம்பாக காத்திருந்தது பார்க்க ஆசையாகவும் இருந்தது கண்கொள்ளா காட்சியாகவும் இருந்தது. 
கோவை பாலுஜி நண்பர்கள் ரசிகர்கள் சேர்ந்து அவரை வரவேற்பு அழைப்பிதழுடன் வரவேற்றோம். வருகை தந்த அனைவருக்கும் வரவேறப்பு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
முதலில் நிகழ்ச்சி நிரல் நிகழ்ச்சி வழங்கப்பட்டது. திரு. அசோக் அவர்களின் அருமையான பக்தி பாடலுடன் துவங்கியது. முன்னதாக சாரிட்டி சார்பாக மலர் கொத்து வழங்கி வரவேற்பு வழங்கப்பட்டது அதை தொடர்ந்து, கோவை பாலுஜி நண்பர்கள் ரசிகர்கள் குழு சார்பாக மலர் கொத்து வழங்கி வரவேற்ப்பு தரப்பட்டது,
சென்னை ரசிகர்கள் திரு.அசோக், திரு.ஷேசாதிரி மற்றும் திருமதி. மதுமிதா மேடம்
கோவை ரசிகர்கள்: திரு. ராமானாதன், திரு.சேஷாதிரி மற்றும் கோவை ரவீ
தொடர்ந்து, ரசிகர்கள் நெடுநாளான கனவான அவருடன் போட்டோ எடுத்துகொள்ளவேண்டும் என்ற கனவு நினைவானது, குறைந்த நேரம் காரணமாக நான்கு, நான்கு பேராக அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். ஒவ்வொரு ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் போது அவர் பேசிய நகைச்சுவை பேச்சுக்கள் அபாரம் இங்கு எல்லாவற்றையும் எழுத முடியாது. அந்த அனுபவத்தை அதை நேரில் அனுபவித்து பார்த்தால் தான் புரியும் (குறிப்பு: இதன் வீடியோ ஒளிக்கோப்பு தகவல் பின்னர் குழுவில் தரப்படும் தேவைப்பட்டவர்கள் முன் பதிவு செய்து வாங்கிக்கொள்ளாலாம்).
கோவை சேவா நிலையத்திற்க்கும் குழந்தைகளிடம் பாலுஜி வழங்கும் பொருட்கள்
பின்னர், சாரிட்டி சார்பில் கடந்த 4 வருடங்களாக நடைபெற்ற நற்பணிகளை ஸ்கிரினில் காண்பித்தார்கள். வாசித்தும் காண்பித்தார்கள். இவற்றை ஆங்கில தளத்தில் திரு. தாசரதி சார் மிகவும் விளக்கமாக எழுதியுள்ளார். இங்கே சுட்டீ http://spbindia.blogspot.com/2008/02/annual-meet-with-spb-for-year-2007-17th.html
அதை தொடர்ந்து, 

பிரபல பாட்கர்கள் திரு. பாலமுரளீ கிருஷ்னா, பாடகி திருமதி. சின்னகுயில் சித்ரா மற்றும் தபேலா இசைக் கலைஞர் திரு. பிரசாத் ஆகியோர் பாலுஜியைப் பற்றி புதிதான அருமையான தகவல்களூடன் நினவு கூர்ந்து பேசியபோது கூடியிருந்த ரசிகர்களை பரவசப்படுத்தியது. எல்லோரும் மகிழ்ச்சியின் எல்லைக்கே போய்விட்டார்கள் என்று அவர்களின் முகமே காட்டியது.
அடுத்தது சுவாசரியமான கேள்வி பதில்களுடன்... அதுவரை இந்த பழைய பாடல்..கேளுங்கள்.
படம்: பகடை பண்ணிரண்டு
பாடகர்கள்: பாலுஜி, சுசீலாம்மா
இசை: சக்ரவர்த்தி
|
வரவேண்டும் மஹராஜன்
தரவேண்டும் சுபராகம்
வரவேண்டும் மஹராஜன்
தரவேண்டும் சுபராகம்
இளங்காற்றில் பின்னல் இட்டு
இதமான தொட்டில் கட்டு
இளங்காற்றில் பின்னல் இட்டு
இதமான தொட்டில் கட்டு
மஹராணி நெஞ்சில் ஊஞ்சலாடு
வரவேண்டும் மஹராணி
தரவேண்டும் சுகராகம்
வரவேண்டும் மஹராணி
தரவேண்டும் சுகராகம்
இளங்காற்றில் பின்னல் இட்டு
இதமான தொட்டில் கட்டு
இளங்காற்றில் பின்னல் இட்டு
இதமான தொட்டில் கட்டு
மஹராஜன் நெஞ்சில் ஊஞ்சலாடு
கையோடு கைசேர்த்து கல்யாணக்கோலம்
கண்ணாடி முன்னாலே ஆனந்த ஜாலம்
கையோடு கைசேர்த்து கல்யாணக்கோலம்
கண்ணாடி முன்னாலே ஆனந்த ஜாலம்
இதழில் சொல்லும் மந்திரம் ஒன்று
இனிக்க வைத்தது சுவையும் இன்று
கண்ணா எந்தன் கட்டளை கண்டு
கதை படிக்குது காதலுக்கு இன்று
காணாததை கண்டேன் இன்ப கண்ணா
வரவேண்டும் மஹராணி
தரவேண்டும் சுகராகம்
பூப்போட்ட மஞசங்கள் பல்லாண்டு பாட
பொழுதோடு சுகம் கண்டேன் நெஞ்சங்கள் கூட
பூப்போட்ட மஞசங்கள் பல்லாண்டு பாட
பொழுதோடு சுகம் கண்டேன் நெஞ்சங்கள் கூட
இரவு என்பது இன்பங்கள் கொள்ள
உறவு என்பது உடலுக்கு அல்ல
நிலவு என்பது சாட்சியும் சொல்ல
நெருப்பை கொல்லுங்கள் தென்றலை வெல்ல
ராதை போல் நானே கிருஷ்ன தேவா
வரவேண்டும் மஹராணி
தரவேண்டும் சுகராகம்
இளங்காற்றில் பின்னல் இட்டு
இதமான தொட்டில் கட்டு
மஹராணி நெஞ்சில் ஊஞ்சலாடு
வரவேண்டும் மஹராஜன்
தரவேண்டும் சுபராகம்..ம்ம்..ம்ம்

4 comments:
ரவி சார்
கலக்கல் பதிவு, பாலு சாரின் தரிசனம் குறித்த விபரங்கள் நன்றாகப் பதியப்பட்டிருக்கின்றன. வரும் ஏப்ரல் தன் தங்கை சைலஜா, மற்றும் சரணுடன் மீண்டும் சிட்னி வருகின்றார் நம்ம பாடும் நிலா.
Vaanga Prabha sir,
Ithy en Nedunaal kanavu sir, pathivukalil thappum thavarum nerya irukkum ungal mathiri naan professional ezhuthalar illai. innum oru pathivu wait pannuthu.
thangalin anbukku nandri.
April varukirara athuvum shyalamma, saranudan avarukenna sir munna vida ippa payangara busy schedulil irukkar annal entha schdulailum aalai paarthalum, ninaivu paduthinalum manushan marakkama pesuvar. eg: sunder sir bostonil naan ingirunthu arimuhapaduthinenam paarungal koothai.. sundarum naanum inni adikadi varuvom.
ரவீ
மறுபடியும்.... பொறாமையாக இருக்கிறது இதைப் படிக்கப் படிக்க. நான் அங்கு இல்லையே என்று மிகவும் ஆதங்கமாக இருக்கிறது. அதனால் என்ன - நீங்கள் முன்னின்று அருமையாக நடத்தியிருக்கிறீர்கள்.
பதிவுக்கும் புகைப்படங்களுக்கும் நன்றி.
Ravi uncle
Marupadium kannu munnadi Kosuvarthi sural ...Nadathunga ...
Luv and Live with Music
Prasan
Post a Comment