631சாமி கொடுத்த வரம்
”பூமணி” படம் பேரே அசத்தலா இருக்கு. இசை இளையரஜா இந்த பாடல் நடுவில் வரும் கோரஸ் பாடகர்களூடன் பாலுஜி அடிக்கும் லூட்டி இருக்கே அடெங்கப்பா சொல்லி மாளாது.
அபாரம் போங்க. படத்தை பார்க்கவில்லையாதலால் பாடல் காட்சி நினவில்லை. அதனாலென்னா பாடல் பாடியவிதமே காட்சியை நம் கண் முன்னாடி கொண்டு வந்துருமே.
630அன்றாடம் என் மனம்
”மரிக்கொழுந்து” படத்தை பார்க்கவே இல்லை. அதனால் என்னங்க? படம் எப்படி ஓடிச்சோ தெரியல இருந்தாலும் இந்த பாடலிலும் இனிமை இருக்கத்தான் செய்யுது. பல பாடல்கள் சில நேரங்களில் பல தடவை கேட்டு தட்டச்சு செய்திருக்கிறேன். இந்த பாடல் ஒரு தடவை கேட்டவுடனே பாடல் தட்டச்சு செய்துவிட்டேன்.
2629எத்தனைக்கோடி இன்பங்கள்.
வயசுப்பொண்ணு படத்தில் இது ஒரு வித்தியாசமான பாடல் அதிகம் பிரபலமாகாத பாடல். இந்த பாடலின் சிறப்பு கோரஸ் கேட்க மிகவும் இனிமையாக இருக்கும். இந்த படத்தை பார்த்ததாக நினைவு இல்லையாதலால் காட்சியை விவரிக்கமுடியவில்லை. இதன் சுவரசியமான தகவல்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன.
படம்: வயசு பொண்ணு
இயக்குனர் கே.
628அப்பன் பேச்சை கேட்டவன் யாரு?
பிரபு, ராதாரவி ஆகியோர் நடித்த சூரக்கோட்டை சிங்கக்குட்டி படத்தில் ஓர் அமர்க்களமான வித்தியாசமான பாடல் பாலுஜி தன் குரலில் வழங்கியிருக்கிறார் அனைவரும் கேட்டிருப்பீர்கள். நானே ரொம்ப நாள் கழித்து கேட்கிறேன் இதோ உங்கள் காதுகளூக்கும்...நிச்சயம் நீங்களூம் முணுமுணுப்பீர்கள்..
1627அப்பாடி பப்பாளி தான்
"தையல்காரன்" படத்தின் தகவல்கள் தேடி தேடி ரொம்பவும் வெறுத்துபோய் ஓய்ந்துதான் போனேன். இன்று ஒரு அதிசயம் இந்து தினத்தந்தி நாளிதழில் வரலாற்று சுவடுகள் பகுதியில் "தையல்காரன்" படத்தின் அபூர்வமான தகவல்கள் தந்திருந்தார்கள். எனக்கு ஒரு கிலோ அல்வா முழுவதும் சாப்பிட்டது போல் இருந்தது.
2626மலர்களே இதோ இதோ
இன்று அதிகாலை சூரியன் எப்.எம் ரேடியோவில் நமது பாலுஜி ரசிகர்களூக்காக பாடல் ஒலிபரப்பசொல்லலாம் என எஸ்.எம்.எஸில் ஒரு பாடல் கேட்டேன் எஸ்.பி.பி ரசிகர் ஆர்.ஜே. திரு. ரவிவர்மா அவர்கள் என் எஸ்.எம்.எஸ் படித்து "மலர்களே இதோ இதோ" என்ற இந்த பாடல் ஒலிபரப்பினார். அதன் பேசிய ஒலிபரப்பின் சிறிய ஒலிகோப்பு இதோ..
1625நான் வந்த இடம் ஒரு ராஜமாளிகை
தங்ககொலுசு என்ற படத்தில் இருந்து மற்றுமொரு அழகான பாடல். படம் பார்க்கவில்லையாதலால் காட்சியை அதிகம் விவரிக்க முடியவிலை. இந்த படத்தை பார்த்த புன்னியவான் யாரோ? நினவு இருந்தால் காட்சியை பகிர்ந்து கொல்லலாமே? இருந்தாலும், கண்களூக்கு குளிர்ச்சியாக இயற்க்கை காட்சி காண்பது போல் மனதுக்கு ரம்மியமாக இருக்கும்.
624என் பாட்ட கேட்டா போதும்
சின்னதம்பி பெரியதம்பி இந்த படத்தில் பிரபுவும் சத்யராஜுவும் அடிக்கற லூட்டி சொல்லி மாளாது அவர்களூக்கே எழுதியது போல இந்த பாடல் வரிகள் எழுதப்பட்டிருகும்.
4623என் காதலி யார் சொல்லவா
இரு இமயங்களின் இசை விளையாட்டை கேளுங்கள். தாஸண்ணா, பாலுஜிக்கு நன்றாக ஈடுகொடுத்து வெளூத்து வாங்குகிறார். சந்தோசமாக கொசு வத்தியை சுழல விடுங்கள் இசை பிரியர்களே...
படம்: தங்கத்திலே வைரம்
பாடியவர்கள்: கே.ஜே.
622ஒரு ராகதேவதை கடைக்கண்
இன்னிசைமழை (டப்பிங் படம் என்று நினைக்கிறேன்) இந்த படத்தின் பாடல்கள் ஒரு காலத்தில் எல்லோரையையும் மயக்கத்தில் வைத்திருந்த காலம். மிக அழகான இசையமைப்பு மேடைக் கச்சேரிக்காகவே எடுத்த படம் போல் இருக்கும். பாலுஜி இந்த மாதிரி பாடல்களில் புகுந்து விளையாடுவார்.
4621அங்கம் மிருதங்கம்
அங்கம் மிருதங்கம் என்ற ஓர் அழகான பழைய பாடல் நம்மை பெரிய சுருள்வத்தி மூலம் சுற்றவைக்கும் பாட்டு. இந்த பாடலின் தகவல்கள் சுவாரிசயமான தகவல்கள் யாருகாவது தெரிந்தால் தரலாம்.
4620ஒரு தேவதையை பார்த்து...
அழகான பாடல்கள் கொண்ட படம் மதுமதி. இதுவரை பாலுஜியின் மெலோடி கேட்டு வந்தீர்கள் வித்தியாச சுவைக்காக இதோ ஒரு கானா சாயலில் ஒரு பாடல். இசை யாருங்க அதுக்கென்றே அக்மார்க் முத்திரை பெற்ற எடுப்பார் கைப்பிள்ளை நம்ம தேனிசை தென்றல் தேவா சார் தாங்க.
619அந்த கஞ்சிக்கலயத்த...
நம் மனதை கொள்ளைக்கொண்டு போகும் ஒரு கிராமத்து சூப்பர் மெலோடி பாடல் கேட்போமா முத்துக்காளை என்ற படத்தில் வரும் இந்த கஞ்சிக்கலயத்த பாடலில் பாலுஜியும், ஜானகியம்மாவும் என்னாமாக குரலில் நடித்து பட்டைய கிளப்பியிருக்கிறார்கள். ரொம்ப நாள் கழித்து ஒவ்வொரு வரியையும் மிக மிக மிக ரசித்து ரசித்து கேட்டேன்.
1618சிவகாமி நெனப்பினிலே
மலையாள மம்முட்டியோடு பாசில் களம் இறங்கிய படம். நகைச்சுவையாக எடுக்கவா, த்ரில்லராக எடுக்கவா, கிராமத்து கதை மாதிரி எடுக்கவா என்று ரொம்பவே குழம்பி நம்மையும் குழப்பி இருப்பார்.
6617. திருமகள் தேடி வந்தாள்
இருளும் ஒளியும் படத்தில் ஒரு அட்டகாசமான பாடலை பாலு பாடியிருக்கிறார். காதில் கிசுகிசுப்பது போல பல்லவியை அவர் ஆரம்பிப்பதே மகா இனிமை. கூடவே ஆலாபனை செய்யும் பெண்குரல் சுசீலா என்று நினைக்கிறேன். கே.வி. மகாதேவன் அவர்கள் இசையில் நல்ல வெயிலில் லேசான மழையில் நனைந்த உணர்வை ஏற்படுத்துகிறது இப்பாடல்.
5616. பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு
இவள் ஒரு சீதை (1978) படத்தில் பாலு பாடியிருக்கும் இந்தத் தனிப்பாட்டு சுகமானது. இளமையான குரலில் இனிமையாக - வழக்கமான சேட்டைகளை ஓரங்கட்டிவிட்டு - அவர் பாடியிருக்கிறார். வி.குமார் இசையில் ஜகந்நாதன் இயக்கத்தில் வந்த படம் இது. விஜயகுமார், சுமித்ரா நடித்திருக்கிறார்கள்.
1615. ராஜா என்பார் மந்திரி என்பார்
Picture Courtesy : www.rajinifans.com
புவனா ஒரு கேள்விக்குறி ரஜினியின் 'நடித்து' வந்த அபூர்வப் படங்களில் ஒன்று. அவரை ஏகத்துக்கும் இயக்கியிருக்கும் எஸ்பி.முத்துராமனின் இயக்கத்தில் பு.ஒ.? வந்தது. ராஜாவின் ராஜாங்கத்தில் அசத்தலாகப் பாடல்களைப் பாடியிருப்பார் பாலு.
614வந்தது வசந்த காலம்: பாலுஜி தரிசனம் 3
கோவையில்: பாலுஜியின் தரிசனம் இறுதி பகுதி # 3
பாலுஜியிடம் கேள்விகளை தொடுக்க மிக ஆவலாக இருந்த ரசிகர்களூக்கு புத்துணர்ச்சிதர தேநீர் இடைவெளி விடப்பட்டது. எல்லோரும் தேநீர் அருந்தலாம் வாங்க என்று கிரிதர் சார் மைக்கில் அறிவித்தார்.