614வந்தது வசந்த காலம்: பாலுஜி தரிசனம் 3
கோவையில்: பாலுஜியின் தரிசனம் இறுதி பகுதி # 3
பாலுஜியிடம் கேள்விகளை தொடுக்க மிக ஆவலாக இருந்த ரசிகர்களூக்கு புத்துணர்ச்சிதர தேநீர் இடைவெளி விடப்பட்டது. எல்லோரும் தேநீர் அருந்தலாம் வாங்க என்று கிரிதர் சார் மைக்கில் அறிவித்தார். ரசிகர்கள் தங்கள் இருக்கையை விட்டு நகர்ந்தால் தானே? இது சரிபட்டு வராது என்று, நான் திரு. கிரிதர் ராஜாவிடம் சொன்னேன் பாலுஜியையும் தேநீர் அருந்த அழைத்து செல்லலாம் இல்லையென்றால் யாரும் இருக்கும் இடத்தை விட்டு நகரமாட்டார்கள் என்றேன். அதன் படி பாலுஜியும் தேநீர் அருந்தினார், துள்ளிக்குதித்து பின்னாடியே சென்ற ரசிகர்கள், அவர் குரலை ரசிப்பது போல் குலாப் ஜாமூனையையும் ரசித்து, ருசித்து மென்மையாக வயிற்றுக்குள் தள்ளினார்கள் தொடர்ந்து வெங்காய பக்கோடாவையையும் ஒரு கை பார்த்துவிட்டு தேனீர் அருந்தி தங்களை உற்சாகப்படுத்திக்கொண்டார்கள். அங்கேயும் ரசிகர்கள் முன்னேயும் பின்னேயும் நின்று கொண்டு போட்டோகிராபர் திரு.ஸ்ரீதரிடம் சைகயில் ஒரு போட்டோ எடுங்க என்று கெஞ்சி அவரை அன்புத்தொல்லை செய்துகொண்டிருந்தார்கள்.
அதற்குள், சென்னை நண்பர்கள் முன்னமே எழுதி வாங்கியிருந்த அடுத்த நிகழ்ச்சிக்கான கேள்விகளை மும்மரமாக தேர்ந்தெடுத்து கொண்டிருந்தார்கள். ரசிகர்களின் ஒவ்வொரு கேள்விகளுக்கும் பொருமையாக பதிலை தந்து கொண்டிருந்தார் பாலுஜி. ரசிகர்கள் தினசரி நாளிதழ் நிருபர்களூக்கு வேலை வைக்காமல் அற்புதமான கேள்விகளை கேட்டு அசத்தலான பதில்களை பெற்றார்கள் நிருபர்கள் முன்சீட்டில் உட்கார்ந்திருந்தவர்கள் ரசிகர்களின் ஆர்வத்தால் கடைசி வரிசையில் தள்ளப்பட்டு அவர்கள் அதைபெரிது படுத்தாமல் பாலுஜி சொல்லும் தகவல்களை ஆர்வத்துடன் குறிப்பு எடுத்துக்கொண்டார்கள்,
அவர்கள் எடுத்த குறுப்பிகளில் சிலவற்றை நாளிதழில் உடனே பிரசுரித்து எங்களூக்கு உற்சாகமூட்டியது என்றும் மறக்கமுடியாத ஒன்று. அவருக்கு பாலுஜி ரசிகர்கள் சாரிட்டி சார்பாக கிரிதர் பரிசு கொடுத்து நன்றியை தெரிவித்துக்கொண்டார். இதோ அந்த கட்டிங் செய்தி....

மேலும் பல கேள்வி பதில்கள் ஏற்கெனவே ஆங்கில பதிவில் திரு. தாசரதி சார் மிக அற்புதமாக விளக்கமாக எழுதியிருக்கிறார். இதோ அதன் சுட்டி.http://spbindia.blogspot.com/2008/02/annual-meet-with-spb-for-year-2007-17th.html கேள்வி பதில்களில் முக்கியமானது பாலுஜி ஒரு கேள்வி கேட்டு ரசிகர்கள் பதில் சொன்னார்கள். அந்த கேள்வி நீங்கள் நேரம் காலமில்லாமல் வேலை செய்து சம்பாதிக்கும் பணத்தில் என் பெயரில் ரசிகர்குழுவாக அமைத்து சேர்ந்து நல்ல காரியங்கள் செய்து வருகிறீர்கள். என் பெயரில் ஏன் செய்ய வேண்டும்? என்று ரசிகர்களை டென்சன் படுத்தினார்.
அதற்கு பல பேர் பதில் தந்தார்கள். அதில் ஒருவர் நீங்களூம் நேரம் காலம் பாராமல் மிக மிக அழகான பாடல்களை தங்களின் இனிமையான குரலில் எங்களூக்கு வழங்குகிறீர்கள். உங்கள் குரல் தான் எங்களூக்கு தனிப்பட்டமுறையில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது, சோதனை நேரங்களில் அமைதியான ஆறுதல் தருகிறது. உங்கள் மெலோடி பாடல்களால் எங்களையே மறக்க வைக்கிறீர்கள். இவ்வளவு எங்களூக்ககாகச் செய்யும் நீங்கள். எங்களால் இயன்ற உதவிகளை உங்கள் பெயரால் செய்ய ஆசைப்படுகிறோம் என்று. கோவை, விஜயலக்ஷிமி ஜிவ்ல்லரி உரிமையாளர், ரசிகர் திரு. விஜயகுமார் அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு சொன்னது எல்லாரையும் பிரமிக்க வைத்தது.
மேலும், ஒரு நபர் ஒரே வார்த்தையில் “ஏனென்றால் நாங்கள் எல்லோரும் உங்களை காதலிக்கிறோம்” என்றார். அதற்க்கு பாலுஜி இந்த வார்த்தைக்கு நான் ஒன்னும் சொல்ல முடியாது செய்யுங்க, செய்யுங்கன்னு சிரித்துக்கொண்டே சொன்னது எல்லோரையும் சொக்கவைத்தது. அதை தொடர்ந்து என்னை நோக்கி கோவையில் 1980ல் இருந்தே முதன் முறையாக என் அனுமதியுடன் எனக்கு ரசிகர் குழு அமைத்து நடத்தி வரும் ரவீந்திரன் இவர் தான் என்று என்னை சபையில் அறிமுகப்படுத்தியது. என்னை எங்கோ கொண்டு போய்விட்டது எங்கே என்று என்னால் மகிழ்ச்சியை எழுத முடியவில்லை அவ்வளவு மகிழ்ச்சி. உடனே நான் தாங்கள் தான் அனுமதி எனக்கு தந்துள்ளீர்கள் என்று சொன்னதற்க்கு, ஆமாம், ஆமாம் நீங்க ரசிகர் குழு வைத்துவிட்டு அப்புறம் என்கிட்ட வந்து அனுமதி கேட்டீங்க பொழச்சு போங்கன்னு அப்போது அனுமதி கொடுத்துட்டேன், என்று தமாஷ் செய்தார். (அவரிடம் ஒரு கேள்வி கேட்டு உடனுக்குடன் ஹாஷ்யமாக பதில் பெற்றவர்கள் அதிகம்பேர், அவரிடம் விரிவான, விளக்கமாக சராசரி மனிதனுக்கும் புரியும்படி உடனே பதில் தரும் திறமையை யாரிடம் நான் கண்டதில்லை). அப்போது தான் எனக்கு நன்றாக உறைத்தது அம்மாம்ல்ல அனுமதி வாங்கின பிறகு தானே வைக்கனும் என்று. 1980ல் நாங்க இருந்த ஆர்வத்தில் எங்கே அவர்கிட்ட போய் அனுமதி வாங்கறது அவரை பார்ப்பதே ரொம்ப கஷ்டம் கோவைக்கு ஒரு வீடியோ கடை திறப்பு விழாவிற்கு வந்த போது வாங்கினது. எங்கே அப்போதெல்லாம் நினவு வரும்?. அப்போது நாங்கள் இருந்த சூழ்நிலை இன்று பல பேர் வந்துள்ளது போல் அவருடன் பேசனும், ஒரே ஒரு போட்டோ எடுக்கனும் மேலும் அவரிடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்ற அதே நோக்கம் தான் எங்களூக்கு அப்போது இருந்தது.
கோவை ராதாகிருஷ்னன் அவர்கள் குடும்பத்துடன் வந்து பல கேள்விகளை கேட்டு அசத்தினார். அவரை ஆயிரம் நிலவே வா, பனிவிழும் மலர் வனம் பாடலை பாடச்சொல்லி பாடவைத்து மகிழ்ச்சியடைந்தார்கள். அதன் பிறக்கு பாலுஜிக்கு நினவு பரிசு சாரிட்டி சார்பாக வழங்கப்பட்டது.
பெங்களூரில் இருந்து வந்த திரு. ஆர்.ஜி.நாராயணன் பாலுஜி பாடிய பாடல்கள் தலைப்பை வைத்து அவரின் உருவங்களை வரைந்து கொண்டு வந்து பாலுஜியிடம் வழங்கி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார். அவரின் திறமையை எல்லோரும் கைத்தட்டி பாராட்டினார்கள்.
அதன் பிறகு பாலுஜி ரசிகர்கள் சாரிட்டி பவுண்டேசன் நிர்வாகிகள் அறிமுகப்படுத்தினார் கிரிதர் சார்.
Mr. Sehsathri, Chennai
Mr.G.Dasarathi, Chennai
Mrs.Mathumitha, Chennai
Mr.Asok, Chennai
முடிவாக, கிரிதர் ராஜா அவர்கள் பாலுஜி ரசிகர்கள் நடத்தும் ஆன்லைன் பாடல்கள் தளங்களான கீழ்க்கண்டவற்றை அறிமுகப்படுத்தி குறிப்பிட்டது எல்லோருக்கும் உதவியாக இருந்தது.
1. பாலுஜி அவர்களால் துவக்கப்பட்டு ரசிகர்குழுவின் முன்னாள் மாடரேட்டர் திரு. எஸ்.பாலசுப்ரமணியம் அவர்களீன் முயற்ச்சியில் இயங்கிவரும் 10 ஆண்டுகள் நிறைவுபெற்ற முதல்மதிப்பெண் பெற்ற மானவர்கள் நடத்தும் ப்ராடிஜி www.prodigyhub.org தளத்திற்க்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், ஆர்குட்டில் தளத்தில் எஸ்பிபி ரசிகர்கள் கலந்துரையாடல் தளத்திற்க்கும் வாழ்த்து தெரிவித்தார்.
2. அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் வசித்து வரும், பெப் சுந்தர், தன்பங்காளிகளூடன் 3 ஆண்டுகளாக அவர் நடத்திவரும் மைஎஸ்பிபி ப்ளாக் ஸ்பாட் (www.myspb.blogspot.com) , எஸ்பிபி இந்தியா ப்ளாக்ஸ்பாட் (www.spbindia.blogspot.com), எஸ்பிபி வாய்ஸ் ப்ளாக்ஸ்பாட் (www.voiceofspb.blogspot.com), ஆகிய தளங்களில் கிட்டத்தட்ட 650 பாடல்கள் ஆன்லைனில் உள்ளன. அந்த பதிவுகளில் பாடல், பாடலின் வரிகள், அவற்றை அவர்கள் ரசித்தவிதம் மற்றும் கலைஞர்களின் படங்கள் விரிவாக வழங்கி அற்புதமான சேவை செய்து வருகிறார் அவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
3. மேலும், நான் வசங்கும் பாலுஜி அவர்கள் பாடிய திருக்குறள் மற்றும் அதன் விளக்கங்களூடன் எஸ்பிபிகுறல் ப்ளாக்ஸ்பாட் (www.spbkural.blogspot.com) என்ற பெயரில் ஒரு தளமும், எஸ்பிபிடிவோ ப்ளாக் ஸ்பாட் (www.spbdevo.blogspot.com) என்ற அவர்பாடிய பக்திப்பாடல்கள் தளம் ஒன்றும் இணைய தள ரசிகர்களூக்காக ஆன்லைனில் வழங்கிவருகிறேன். அதற்கும் வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், திரு.கார்த்திக் (www.inspbvoice.blogspot.com) மற்றும் பலர் பல ஆன்லைன் பாடல்கள் தளம் வழங்கி வருகிறார்கள். குறிப்பாக மும்பையில் இருந்து விமானத்தில் வந்து கலந்துகொண்ட திரு. விகாஸ் அவர்கள் பாலுஜி www.zukaas4u.multiplay.com பாடிய ஹிந்தி பாடல்கள் தொகுப்புத்தளம் வழங்கிவருகிறார். அவருக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
மேலும் கிரிதர் அவர்கள், கடந்த 3 வருடங்களாக சென்னையிலும், பெங்களூரிலும் நடைபெற்ற சந்திப்புகள் அடங்கிய ஒளிக்கோப்புகள் அடங்கிய டிவிடி க்களையும், புதிய பாடகர்ளுக்கான தகவல்களையும், பாடல்கள் பாடிய போது தான் பெற்ற அனுபவத்தையும் ஒலிக்கோப்பாக சிடியில் அறிமுகப்படுத்தினார். இந்த மேற்கண்ட டிவிடி மற்றும் சிடிக்களை விரும்புவோர். கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு தொடர்பு கொண்டு தகவல்கள் தெரிந்து கொள்ளலாம். திரு.அசோக் சென்னை Ashok R (Accounts) - TLS Chennai
அத்துடன் சந்திப்பு மிக்க மகிழ்ச்சியுடன் முடிவு அடைந்தது. பாலுஜி, எல்லோரிடமும் நன்றி தெரித்து விடைபெற்றுக்கொண்டார். நிகழ்ச்சி நல்லபடியாக முடிந்த சந்தோசத்தில் இந்த பாடல் போல் இனி என் மனம் துள்ளிக்குதித்தது.. ஏனென்றால் விமானம் ஏறும் முன் மீண்டும் 20 நிமிடம் பாலுஜியிடம் பேச வாய்ப்பு வந்தது. அந்த சந்திப்பில் ஒரே ஜாலிதான் போங்க.
பாலுஜியுடன் ப்ரசன்னா சென்னை
முடிவில் அனைவருக்கும் பாலுஜி நன்றி தெரிவித்தார்.
இந்த பாடல் கோப்பு வழங்கிய திரு. ஆர்.ஜி.நாரயனன், பெங்களூர் அவர்களுக்கு நன்றி.
படம்: புதியவன்
பாடல்: வந்தது வசந்த காலம்
இயக்குனர் அமீர் ஜோன்
தயாரிப்பாளர் கே. பாலச்சந்தர்
கவிதாலயா புரொடக்ஷன்ஸ்
நடிப்பு முரளி, அனிதா
இசையமைப்பு வி. எஸ். நரசிம்மன்
வெளியீடு ஆகஸ்ட் 18, 1984
நாடு இந்தியா
மொழி தமிழ் Get this widget | Track details | eSnips Social DNA
வந்தது வசந்த காலம்
வ்வா வ்வா
பூமியில் புதிய கோலம்
வ்வா வ்வா
ஹோ ஹோ
சந்தன மரங்கள் தோறும்
வ்வா வ்வா
மன்மத குயில்கள் பாடும்
இளமையே எழு
பறவையே தொடு
ஒரு காதல் சங்கீதம் பாடு
வந்தது வசந்த காலம்
வ்வா வ்வா
பூமியில் புதிய கோலம்
வ்வா வ்வா
ஹோ ஹோ
சந்தன மரங்கள் தோறும்
வ்வா வ்வா
மன்மத குயில்கள் பாடும்
ஹோ உஹ் ஹோ உஹ்
ஹோ உஹ் ஹோ உஹ்
வ்வா வ்வா வ்வா வ்வா
மின்னலை பிடிக்க வேண்டும்
மேகத்தை உடுத்த வேண்டும்
வானத்தில் பறக்க வேண்டும்
ஆயிரம் சிறகு வேண்டும்
பருவமே படை சிறைகளை உடை
இது கன்னன் சொல்லாத கீதை
மின்னலை பிடிக்க வேண்டும் ஹேய்
மேகத்தை உடுத்த வேண்டும் ஹோய்
வானத்தில் பறக்க வேண்டும் ஹோய்
ஆயிரம் சிறகு வேண்டும்
ஹோ உஹ் ஹோ உஹ்
ஹோ உஹ் ஹோ உஹ்
வாலிப கரங்கள் சேர்த்தேன் ஹெய்
வாழ்க்கையை திறந்து பார்த்தேன் ஹாய்
நாளைய கேள்வி கேட்பேன்
நாடிய கலைகள் காப்பேன்
புதியவன் இவன் புரட்சியில் எவன்
இவன் ஆட்டம் காணாத ராஜன்
வந்தது வசந்த காலம்
வ்வா வ்வா
பூமியில் புதிய கோலம்
வ்வா வ்வா
ஹோ ஹோ
சந்தன மரங்கள் தோறும்
வ்வா வ்வா
மன்மத குயில்கள் பாடும்
ஹோ உஹ் ஹோ உஹ்
ஹோ உஹ் ஹோ உஹ்

13 comments:
Dear Ravi uncle
Interesting Sujatha voda thodar onnu paditha thirpthi ( Indru avar nammodu illai - aanal avar padaipukal endrum maraka mudiyathavai).
Thanks for sharing the photo taken near the reception posing me with Baluji ...
Enna irunthalum thamizhla padikarathulla oru thani santhosham thaan , athu yennu theriyala ...
Luv and Live with Music
Prasan
ரவீ
எனக்கு வர்ற கோவத்துக்கு உங்களைக் கன்னாபின்னான்னு பாராட்டணும்னு தோணுது! :-)
ரொம்ப நாளா பாலுஜியோட தரமான புகைப்படங்கள் இல்லையேன்னு வருத்தப்பட்டுக்கிட்டு இருந்தேன். நல்ல தரமான படங்களைப் இந்த மூன்று பதிவுகள்ளயும் கொடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.
அவர் சிரிக்கறமாதிரி இருக்கற படத்தைச் சொடுக்கிப் பெரிதாக்கிப் பாத்துக்கிட்டு இருந்தேன். என் பொண்ணு வந்து கணிணி திரையை எட்டிப் பார்த்தா. பாலுஜி படத்தைப் பார்த்ததும் 'ஹை எஸ்பிபி அங்க்கிள் - ஐ லவ் யூ'ன்னு கத்திட்டு அப்படியே திரையைக் கட்டிப்புடிச்சுக்கிட்டா! :-)
மத்தபடி பாலுஜி கூடவே இருக்கற சந்தர்ப்பம் வாய்ச்ச உங்க எல்லாரையும் நினைச்சு ரொம்ப பொறாமையாவும் இருக்குங்கறதயும் சொல்லிக்கறேன்.
மறுபடியும் ரொம்ப நன்றி
hi Ravi Sir,
romba nallave explain panni irukkenga, S.P.B.Sir coimbatore varavai...parkaadavangalukku kooda idai padichaa anda ekkam theernduvidum. romba nanri anaivar saarbilum...
hi Ravi Sir,
romba nallave explain panni irukkenga, S.P.B.Sir coimbatore varavai...parkaadavangalukku kooda idai padichaa anda ekkam theernduvidum. romba nanri anaivar saarbilum...
hi Ravi Sir,
romba nallave explain panni irukkenga, S.P.B.Sir coimbatore varavai...parkaadavangalukku kooda idai padichaa anda ekkam theernduvidum. romba nanri anaivar saarbilum...
Excellent picture and explanations.Thank you.We had an opportunity to see him in concert some years ago.We really enjoyed it.
Ramya
ஹாய் பிரசன்னா,
//Interesting Sujatha voda thodar onnu paditha thirpthi ( Indru avar nammodu illai - aanal avar padaipukal endrum maraka mudiyathavai).//
அடடா அப்படீங்களா சுஜாதா சாரின் எழுத்துக்கள் எனக்கும் ரொம்ப பிடிக்கும். அந்த கனேஷ், வசந்த் படைப்புக்களை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா? அன்புக்கு நன்றி.
சுந்தர் சார்,
//ரொம்ப நாளா பாலுஜியோட தரமான புகைப்படங்கள் இல்லையேன்னு வருத்தப்பட்டுக்கிட்டு இருந்தேன். //
இந்த பாராட்டு திரு.வெங்கியின் நண்பர் திரு.ஸ்ரீதர் சாருக்கும் 6 மணி நேரம் போராடி தளத்தில் ஏற்றிய திரு. தாசரதி சாருக்குதான் போய் சேரவேண்டும். அற்புதமான வேலை.
//என் பொண்ணு வந்து கணிணி திரையை எட்டிப் பார்த்தா. பாலுஜி படத்தைப் பார்த்ததும் 'ஹை எஸ்பிபி அங்க்கிள் - ஐ லவ் யூ'ன்னு கத்திட்டு அப்படியே திரையைக் கட்டிப்புடிச்சுக்கிட்டா! :-)//
நிகழ்ச்சியில் கொஞ்சம் அசந்தா எல்லோரும் அதாவது ஆண், பெண் ரசிகர்கள் என்றும் பாராமல் பாலுஜியை கட்டி பிடித்து ஐ லவ் யூ சொல்லியிருப்பார்கள். காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் போதி திட்டிட்டே இருந்தார். இருந்தாலும் ஒரு நபர் கேள்வி பதில் பகுதியில் நாங்கள் எல்லோரும் உங்களை லவ் பன்றோம் என்று சொன்னது நிகழ்ச்சியின் ஹைலைட் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
//மத்தபடி பாலுஜி கூடவே இருக்கற சந்தர்ப்பம் வாய்ச்ச உங்க எல்லாரையும் நினைச்சு ரொம்ப பொறாமையாவும் இருக்குங்கறதயும் சொல்லிக்கறேன்.//
இதுக்குதான் சாமி எனக்கு 28 வருடம் ஆயிற்று. ரொம்ப அதிகம் இல்ல? இருந்தாலும் அப்போது ஏற்பட்ட மகிழ்ச்சி இந்த சந்திப்பும் போதும் ஏற்பட்டது. தங்கள் அன்புக்கு நன்றி.
உஷா மேடம், நன்றி, நன்றி, நன்றி. உங்களுக்கு தான் இந்த மூன்றும். ஏனென்றால் அதிகம் செலவு செய்து ஹைத்ராபாதில் இருந்து ரொம்ப சிரமப்பட்டு அங்கும் இங்கும் அல்லாடி ரூம் கிடைக்காம எப்படியோ உங்கள் கணவருடன் நிகழ்ச்சிக்கு வந்து சேர்ந்தீங்களே அதுவே ரொம்ப சந்தோசம். இதை விடவா நான் எழுதியதில் வந்திருச்சு?..
Dear Ravee Sir,
Ungaloda nigazchi thoguppu muzhusa mudiyattumennu ivvlo naal wait pannittu irunden. kalakkitteeenga Ravee Sir. SuPerBbbbbbb. Prasanna sonna mathiri oru thodarkathai padicha anubavam. vaazhthukkal.
Anbudan
Madhu
மது மேடம்,
வாங்க... வாங்க.. நீங்களூம், ப்ரியா மேடமும் செய்யாததா நான் செஞ்சுட்டேன். இன்னும் ஒரு பதிவு போடலாம் அந்த அளவுக்கு விஷயங்கள் உள்ளன. நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் 20 நிமிடம் பாலுஜியுடன் பேச வாய்ப்பு கிடைத்தது. அந்த சந்திப்பில் முழுவதும் என்னைப்பற்றியும், பாஸ்டனில் உள்ள சுந்தர், வெங்கிடகிருஷ்னா அவர்களை பற்றியும் தான் பேசினோம் அதையும் எழுதினால் சுயதம்பட்டம் ஆகிவிடும். (ஏற்கெனவே சுந்தர் சார் என்மீது ரொம்ப பொறாமையால் இருக்கிறார்!) அதனால் இத்துடன் நிறுத்தி கொண்டேன். இந்த மூன்று பதிவுகளை தாங்கள் எல்லோரும் நேரம் ஒதுக்கி படித்ததே பெரிய விஷயம். சுந்தர், ப்ரசன்னா, உஷா மற்றும் எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
Ravee Sir
Fine compilation. Prasanna solvadhu pola tamizh-la padikkaradhu thani sugam dhaan. Thanks sir
Rgds
Vijayakrishnan
விஜய்கிருஷ்னன் சார் வாங்க, சவுக்கியமாக சென்னை போய் சேர்ந்தீங்களா? பொதுவாகவே பதிவுகள் மேலோட்டமாக படித்து பார்த்துவிட்டு போய்விடுவார்கள். நீங்கள் எல்லோரும் உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி படித்து மறுமொழி தருகீறீர்கள் மிக்க சந்தோசம். வருகைக்கு நன்றி. இனியும் பல பாடல்கள் வருது அடிக்கடி வாங்க.
Dear Shri.CR ,
Your sharp response to events and linking our Guruji with them is wonderful !
Guruji Bless you !
regards,
udhayabhanu
வாங்க உதயபானு,
பாலுஜி கோவை விஜயத்தை நீங்கள் புதிய வருடம் என்று குறிப்பிட்டு குழுவில் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தீர்களே அவை எனக்கு மிக்க மகிழ்ச்சியை தந்தது. மீண்டும் என்னை உற்சாகமூட்டியதற்கு மிக்க நன்றி. கோவையில் பாலுஜியுடன் பேசியது என்னை மீண்டும் அவருடன் இருக்கும் அன்பை நெருக்கமாக்கியது. அதற்கு வழிவகுத்து கொடுத்த சென்னை நண்பர்களுக்கு மிக்க நன்றி. இந்த தளத்திற்க்கு அடிக்கடி வாங்க சந்தோசமா இருங்க.
Post a Comment