இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பாலு அண்ணா!

Sunday, May 25, 2008

652 பாடும்நிலாவும் பரம ரசிகனும்:ஒலிமுன்னோட்டம் முதல், இரண்டாவது பகுதி



தினமும் இரவு 10 மணி முதல் - 11 மணி வரை ஒலிபரப்பப்பட்டு வரும் இனிய இரவு இரவின் மடியில் சூரியன் சிற்றலையில் பாலுஜியின் ஓர் நிகழ்ச்சி வரப்போகிறது என்பது நீங்கள் யாவரும் அறிந்ததே மீண்டும் டிஜிட்டல் குரலோன் ஆர்.ஜே. திரு. ஆர்.ஜி. லக்ஷ்மி நாராயனா அவர்கள் இதோ மறுபடியும் அவர் குரலில் ஒரு சிறிய ஒலிமுன்னோட்டம் ஒலிபரப்பி நம் ஆவலை அதிகப்படுத்திவிட்டார். இதில் என்னதான் இருக்கிறது நீங்களே கேளுங்கள். கூடிய சீக்கிரம் சிற்றலையில் இந்த நிகழ்ச்சியின் முழுவடிவம் ஒலிபரப்பப்பட்டதும் பதிவேற்றப்படும். அதுவரை உங்களூடன் சேர்ந்து நானும் மிக மிக ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன். : கோவை ரவி



பாடும் நிலாவும் பரம ரசிகனும் : ஒலிமுன்னோட்டம் முதல், இரண்டாவது பகுதி.

Get this widget | Track details | eSnips Social DNA

2 comments:

கிரி said...

SPB யின் குரலின் வளம் இன்னும் அப்படியே இருப்பது கடவுள் கொடுத்த வரம் என்றே கருதுகிறேன்.

சென்னை 600028 ல் அவர் பாடிய யாரோ யாருக்குள்.... என்ற பாடல் முதல் முறை கேட்ட போது நான் யாரோ ஒரு புது முகம் என்றே நினைத்தேன், எனென்றால் குரலில் இன்னும் அந்த இளமை இருந்தது, அதில் அவர் அந்த பாடலின் இடையே வரும் "கேள்வி" என்ற சொல்லை சொல்லும் போது தான் பாடுவது SPB என்று கண்டுபிடித்தேன்.

இதை போல குரல் வளம் அனைவருக்கும் அமையுமா என்பது சந்தேகமே !!

Covai Ravee said...

வாங்க கிரி சார்,

//சென்னை 600028 ல் அவர் பாடிய யாரோ யாருக்குள்.... என்ற பாடல் முதல் முறை கேட்ட போது//

உங்களைப்போலேயே நான் இந்த பாடலை கேட்டபோது BGM இசை ட்ரம்ஸ் மட்டும் பிரதானமாக வைத்து தலைவர் பாடியிருக்கிறாரே எடுபடுமா? என்று நினைத்தேன் மீண்டும் மீண்டும் பாடலை கேட்டவுடன் தான் சின்னக்குயிலுடன் சேர்ந்து என்னமாக பாலுஜி பாடியிருக்கிறார் என்று அதிசயத்தேன். அந்த யேஏஏஏஏ... ஏ பாடலுக்கு ஹைலைட்டாக அமைந்துவிட்டது.