இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பாலு அண்ணா!

எஸ்.பி.பியின் இனிய இரவு
பாடும் நிலாவும் பரம ரசிகனும் ஒலி முன்னோட்டம் 1

நம் தலையை சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் பகல் பூராவும் வெளியில் தலை காட்டாமல் அலுவலகத்திலும், வீட்டிலும் பதுங்கி தங்கள் வேலையை மும்முரமாக செய்துகொண்டிருநக்கும் இசைப்பிரியர்கள் தினமும் இரவு நேரம் 10மணி எப்போது வரும் என்று மிக ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். ஏனென்றால் தற்போது கோவையில் நான்கு சிற்றலை வானொலி நிலையங்கள் இயங்கிக்கொண்டிருந்தாலும் முதன் முதலாகக் கால் பதித்து கோவை மக்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட வானொலி சூரியன் எப்.எம் 93.5 .
இவர்களின் நிகழ்ச்சிகளில் மிகவும் புகழ் பெற்றது ”இனிய இரவு, இரவின் மடியில்” என்ற ஓர் அற்புதமான, அசத்தலான, அமைதியான, குளிர்ச்சியான நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியின் ஸ்வாஸ்வத (ஆதர்ச) அறிவிப்பாளர் “டிஜிடல் வாய்ஸ்” என்று செல்லமாகக் கோவை ரசிகர்களாலும் மற்றும் இசைப்பிரியர்களாலும் அழைக்கப்படும், ரசிகர்களது பேரபிமானத்தைப் பெற்ற அறிவிப்பாளர் (ரேடியோ ஜாக்கி) திரு. ஆர்.ஜி. லக்ஷ்மி நாராயணா அவர்களைத் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது.
வசீரக காந்தக் குரலையுடைய திரு. ஆர்.ஜி.எல்.என் அவர்கள் கோவை மக்களுக்கு இரவில் தன் குளிர்ச்சியான தாலாட்டும் குரலால் காலத்தால் மறக்க முடியாத திரையிசைப் பாடல்களையும், புகழ் பெற்ற சினிமா காட்சிகளையும் ஒலிபரப்பி (அக்காலத்தில் மொத்த சினிமாவையும் கூம்பு ஒலிபெருக்கிகளில் ஒலிபரப்பும்போது காட்சிகளுக்கிடையில் காட்சி மாறுவதை உணர்த்த வரும் 'ட்ர்ர்ர்ர்ர்ரியோங்' என்ற ஒலி இன்னும் காதில் ஒலிக்கிறது.. திருவிளையாடல்!!!), அதுவும் ரசிகர் விரும்பியபடி ரசிகர்களே தேர்ந்தெடுத்துத் தயாரித்த ஒலிக்கோப்புகளை ஒலிபரப்பி, தன் காந்தக் குரலால் இரும்பான இதயம் கொண்ட கோவை மக்களின் இதயத்தை இழுத்து தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்றால் மிகையாகாது.
அந்த அன்புக் கட்டுப்பாட்டில் அசந்து போயிருக்கும் கோவை டாக்டர் எஸ்.பி.பி ரசிகர்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க, சினிமாவில் அன்றும், இன்றும், என்றும் தன் மென்மையான வெண்ணெய்க் குரலால் இசை ராஜாங்கம் நடத்தி வரும் டாக்டர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பற்றி ஓர் நிகழ்ச்சி தயாரித்து தர அவர் பெருந்தன்மையுடன் இசைந்துள்ளார். அதன் முன்னோட்டமாகத்தான் இந்த சிறிய ஒலிக்கோப்பு.
'அப்படி என்னதான்யா.. சொல்லப்போகிறார்..?' என்று நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது. 1970, 1980 & 1990 களில் என்னைப் போன்ற திரையிசையை ரசித்து வரும் அன்பர்களுக்கு பாலுவைப் பற்றிய தகவல்கள் தெரிந்து இருக்கும் இப்பதிவின் நோக்கம் தற்போது நேரங்காலம் பார்க்காமல் உலக அளவில் பரந்து விரிந்து கணிணியே தவமென இருக்கும் இளைய தலைமுறை பாலுவைப் போன்ற வாழும் வரலாற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். இது ஒரு சிறிய ஒலி முன்னோட்டம் தான். இந்த அரிய பெரிய நிகழ்ச்சி “பாடும் நிலாவும் பரம ரசிகனும்” என்ற தலைப்பில் வரவுள்ளது. எப்போது? எப்போது? எப்போது? என்று ஆவலுடன் கேட்கத் தூண்டுகிறதல்லாவா? பொறுமையுடன் இருங்கள் "இனிய இரவில்" கூடிய விரைவில்! நானும் உங்களுடன் மிக்க ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன். நிகழ்ச்சி ஒலிபரப்பாகும் நாள் நிச்சயம் நமக்கும் நமது அன்பான பாலுஜிக்கும் ஒரு மறக்கமுடியாத நாளாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இப்போதைக்கு இந்தச் சிறிய ஒலிக்கோப்பைக் கேளுங்கோ கேளுங்கோ கேட்டுக்கிட்டே இருங்கோ.
- கோவை ரவீ
8 comments:
Great news. Thanks for sharing. Keep us posted on updates.
Sincere Regards,
Ashok Ramamoorthy
Moderator, Yahoo Fans Group and
Treaurer, SPB Fans Charitable Foundation, Chennai
Great news. Thanks for sharing. Keep us posted on updates.
Sincere Regards,
Ashok Ramamoorthy
Moderator, Yahoo Fans Group and
Treaurer, SPB Fans Charitable Foundation, Chennai
ரவீ
என்ன சொல்றதுன்னு தெரியலை. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.
நிகழ்ச்சியை எப்படியாவது ஒலிப்பதிவு செஞ்சு வலையேத்துங்க.
ரொம்ப நன்றி.
வாங்க சுந்தர்,
//நிகழ்ச்சியை எப்படியாவது ஒலிப்பதிவு செஞ்சு வலையேத்துங்க//
நிச்சயம் நிச்சயம் ப்ளேயரில் பதிவு செய்தோ அல்லது அவர்களிடம் ஒலிக்கோப்பு வாங்கியோ பதிவு செய்துவிடுவேன். அதுவரை எனக்கும் தூக்கம் வராது. அவர்கள் நமது பாடும் நிலா பாலு தளத்தை பார்த்துதான் இந்த வாய்ப்பு வந்தது. விட்டுடுவேனா?
//அவர்கள் நமது பாடும் நிலா பாலு தளத்தை பார்த்துதான் இந்த வாய்ப்பு வந்தது//
அப்படியா? ரொம்ப சந்தோஷம் ரவீ.
இன்னும் புதிய தளங்களுக்கு (நாம் போன வாரம் பேசியபடி) இத்தளத்தை எடுத்துச் செல்ல வேண்டும். திட்டம் வரைவு வடிவில் இருக்கிறது. கூடிய சீக்கிரம் செயல்படுத்திவிடுவோம்.
மக்களுக்கு ஆனந்த அதிர்ச்சியாக அது இருக்கும்! :-)))
நன்றி.
சுந்தர் சார்,
//திட்டம் வரைவு வடிவில் இருக்கிறது. கூடிய சீக்கிரம் செயல்படுத்திவிடுவோம்.//
சீக்கிரம் செயல்படுத்திவிடுவோம்ல..?..?
//மக்களுக்கு ஆனந்த அதிர்ச்சியாக அது இருக்கும்! :-)))//
பின்னே? யாரு பாலுஜியா கொக்கா..
ஈழத்தில் இருந்து தமிழன்பன் தி.கி.துஷி
மிகவிரைவில் அந் நிகழ்ச்சியின் ஒலிப்பதிவை வலையேற்றுங்கள் அத்துடன் தரவிறக்கம் செய்யவும் வழியமைக்கவும்.
உளமார நன்றி.
Post a Comment