இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பாலு அண்ணா!

Thursday, June 05, 2008

658பாடும் நிலாவும் பரம ரசிகனும் : வலைப்பதிவு வானொலியில் (முதன்முதலாக?)



62 ஆவது பிறந்த நாளை முடித்து தன் 63 ஆவது பிறந்த நாளை வெற்றிகரமாக தொடங்கும் என் இனிய அண்ணா டாக்டர் எஸ்.பி.பி அவர்கள் தான் பாடுவதற்கு முன் ஜாம்பவான்களின் பாடல்களை மிகவும் ரசித்திருக்கிறார். அதன் தொகுப்பு தான் இந்த பதிவு.

அப்போது பாலுஜி அவர்கள் சீனியர் கலைஞர்களின் குரலுக்கு பரம ரசிகன், தற்போது நான் பாலுஜியின் பரம ரசிகன். ஆக மொத்தத்தில் இருவருமே பரம ரசிகர்கள். இப்படியும் இந்த பதிவின் நோக்கத்தை எடுத்துக்கொள்ளலாம் அல்லவா நண்பர்களே?. இது எனக்காக நான் மட்டும் பதியப்பட்ட நிகழ்ச்சியல்ல. என்னைப் போன்றே உலகம் முழுதும் பரவியிருக்கும் கோடிக்கணக்கான பாலுஜி ரசிகர்களுக்காக இப்பதிவைச் சமர்ப்பணம் செய்கிறேன்.



பாடும் நிலாவும் பரம ரசிகனும் : ஒலிக்கோப்பு - 1

Get this widget Track details eSnips Social DNA


எனக்கு தெரியும்! நீங்கள் இந்தப் பதிவைத் திறந்தவுடன் ஒலிக்கோப்பின் முதல் பகுதியை
அழுத்தியிருப்பீர்கள். அப்படியே கேட்டுக்கொண்டே இந்த பதிவின் எழுத்துக்களையும்
படியுங்கள்.

முதலில், என் படைப்பை சூரியன் பண்பலை ஒலிப்பரப்பத் தகுதியாகத் தேர்ந்தெடுத்து வாய்ப்பளித்த சூரியன் பண்பலையின் நிறுவனத்தாரின் உரிமையாளருக்கும், மேலாளருக்கும், வானொலியின் ”இனிய இரவு இரவின் மடியில்” நிகழ்ச்சியின் அறிவிப்பாளர் கோவை ரசிகர்களால் “டிஜிடல் குரலோன்” என்று அன்பாக அழைத்து வரும் திரு. ஆர்.ஜி. லக்‌ஷ்மி நாராயாண அவர்களுக்கும், மேலும் நான் வழங்கிய ஒலிக்கோப்புகளை ஒவ்வொன்றையும் கேட்டு சிறந்த தகவல்களை தேர்ந்து எடுத்து தணிக்கை செய்து முழுமையான, அற்புதமான, அசத்தலான இனிய ஒலிக்கோப்பாக மிகவும் சிரமப்பட்டு உருவாக்க உதவிய என் இனிய நண்பர் கோவை மக்களால் “இனியவன்” சூரியன் பண்பலையில் இரவு முழுவதும் “நினைத்தாலே இனிக்கும்” புகழ் அறிவிப்பாளர் திரு. ரவி வர்மா அவர்களுக்கும் என் சார்பாகவும் என் அபிமான பாலுஜி சார்பாகவும் சிரம் தாழ்ந்த வணக்கங்களையும், நன்றியையும் பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

நாம் ஒரு கடைக்கு செல்கிறோம், அழகான ஒரு பொருளை வாங்குகிறோம், அல்லது ஒரு இனிமையான இசையைக் கேட்கிறோம். இவையனைத்திற்கும் பின்னால் அடங்கியிருப்பது இவற்றை உருவாக்கிய பலரின் உழைப்பின் வியர்வை. அதே போல என் ஒலிச்சேகரிப்புகளையும் என் எண்ணங்களையும் ஒரு தொகுப்பாக படைப்பாக வழங்கியதில் பலரது உழைப்பு அடங்கியிருக்கிறது. இதை இனிய ஒலித்தொகுப்பாக உருவாக்கி தேவையான இடத்தில் மிகபிரபலங்களின் பாராட்டுக்களையும் சேர்த்து இந்த ஒலிப்பதிவின் மகுடத்திற்கு மாணிக்கங்களாக அமைத்திருப்பது பெரும் சிறப்பு. இதன் பின்னால் தான் திரு. ஆர்.ஜி. லக்‌ஷ்மி நாராயணா அவர்களின் உழைப்பும், திரு. ரவிவர்மா அவர்களின் உழைப்பு நன்றாக தெரிகிறது. இருவருக்கும் என் நன்றியை தனிப்பட்ட முறையில் மறுபடியும் தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

பாடும் நிலாவும் பரம ரசிகனும் : ஒலிக்கோப்பு - 2

Get this widget Track details eSnips Social DNA


இந்த ஒலிக்கோப்பை கேட்டவருக்கு சில தகவல்கள் முரண்பாடாக தெரியலாம். முற்றிலும் உண்மை தான் இந்த ஒலிக்கோப்புகள் எல்லாம் ஐந்து வருடங்களுக்கு முன் சேகரித்தவை. இந்த ஒலிக்கோப்புகளை, பாலுஜியின் தீவிர ரசிகர்கள் பெரும்பாலோரும் கேட்டிருப்பார்கள். சில பேர் மட்டும் அறிந்திருக்க முடியாது அவர்களுக்காகவும் (இந்த பதிவை நான் எழுதும் போதே பாலுஜி ரசிகர்கள் சில பேர் என் செல்பேசியில் தொடர்பு கொண்டு எங்கே சார் இந்த ஒலிக்கோப்புகளை பிடித்தீர்கள் என்று கேட்டது எனக்கு ஆச்சரியம் தான் உண்டாயிற்று ), சூரியன் பண்பலை “இனிய இரவு இரவின் மடியில்” நேயர்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேஎன். இவர்களுக்காக தான் இந்த ஒலித்தொகுப்பு. மேலும் இனிய இரவு நிகழ்ச்சியின் சாராம்சமே பழைய பாடல்கள் ஒலிபரப்புவது தான். ஆகையால் நேயர்களூக்கு இந்த தொகுப்பு ஓர் வித்தியாசமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். மேலும் அவர்களுக்கு இந்த இனிய இரவு மகிழ்ச்சியான அமைதியான நிம்மதி தந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இனி பாடல்கள் வழங்கிய சிறப்பை பாராட்டியே தீரவேண்டும். பாலுஜி பாடிய பாடாத பாட்டுக்கள் 14 அடங்கிய தொகுப்பை வழங்கினேன். ஒலிப்பரப்பு முடிந்ததுமே சில நண்பர்கள் டி.எம்.எஸ் அண்ணா பாடல்கள் பாடவில்லையா என்று கேட்டார்கள். (போதாதற்கு திரு. லக்‌ஷ்மி நாராயாணா பல்லடம், டி.எம்.எஸ் ஆடியோ வீடியோ கடையின் விளம்பரத்தை தந்து டி.எம்.எஸ் அண்ணாவின் ரசிகர்களை ஆசையை தூண்டி விட்டார்) நான் சொன்னேன் “பாவாடை தாவணியில்” பாடல் உள்ளது ஒரு மணி நேர நிகழ்ச்சியில் நேரம் போதாததால் நிகழ்ச்சியில் சேர்க்க முடியாமல் போய்விட்டது என்று நினைக்கிறேன், நான் வழங்கிய கோப்புகள் தொடர்ந்து 3 நாட்கள் ஒலிப்பரப்பலாம். சில தவிர்க்க முடியாத காரணங்களாக சில பாடல்கள் சேர்க்க முடியவில்லை. அந்த பாடல்களும் கேட்க மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த இனிய இரவின் நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமே நேயர்களுக்கு மனதிற்கு அமைதி ஏற்படுத்தும் மகிழ்ச்சியான பாடல்கள் ஒலிப்பரப்புதான் என்று நான் தெரிந்துகொண்டேன். அதன் படியும் பாடல்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம். ஒவ்வொரு பாடலுக்கும் இடையில் திரு. ஆர்.ஜி. லக்ஷிமி நாராயணா அவர்களின் காந்தக் குரல் கேட்பவர்களின் இரும்பான இதயத்தை இதமாக இழுத்து தன்வசம் வைத்துகொண்டது என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த ஒலிப்பரப்பின் மூலம் அவர் நிகழ்ச்சியில் சொன்னது போல் மேலும் சில இனிய இரவு புதிய நேயர்கள் சேர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு சிகரம் வைத்தார் போல் பாலுஜி பாடீய சினிமா பாடல்களில் பலவற்றை தொகுப்புக்கு தகுந்தவாறு பாடல்களை தந்தது அறிவிப்பாளரின் ரசிப்பின் தன்மை பாராட்டகுரியது. ஜிகினா வேலை என்பார்களே அது போல் நிகழ்ச்சி தொகுப்பில் அவர் பாடிய சினிமா பாடல்கள் மானிக்கங்களாக ஒளிர்ந்து மின்னியது நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக அமைந்து எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

மேலும், அறிவிப்பாளர் உங்கள் இனியவன் திரு. ரவிவர்மா அவர்கள் பாடும் நிலா பாலு இந்த பாடல் தளத்தை பார்த்து தான், இந்த நிகழ்ச்சி பதிய வேண்டும் ஆர்.ஜி. லக்‌ஷ்மி நாராயணா அவர்களின் விருப்பத்தை என்னிடம் தெரிவித்து ஓர் பாடல் தொகுப்பை வழங்குங்கள் என்று அன்புடன் கேட்டு ஓர் நல்ல வாய்ப்பு தந்து உதவினார். இதில் அவரின் உழைப்பு வெறும் வாய் வார்த்தைகளால் சொல்லமுடியாது. அவருக்கும் பாலுஜி சார்பாகவும் அவர்தம் ரசிகர்கள் சாரபாகவும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், எனது ஆருயிர் நண்பர் பாலுஜியின் ரசிகர் தமிழ்மண இணைய தள பதிவாளர் வாத்தியார் என்று அன்பாக அழைக்கப்படும் திரு. எஸ்.வி.ஆர். சுப்பையா இந்த நிகழ்ச்சி கேட்டவுடன் இரவோடு இரவாக அடுத்தநாள் காலையில் வெளியூர் செல்லும் வேலை இருந்த போதிலும். தன்னுடைய அழகான விமர்சனத்தை தகவல்களை ஒரு பதிவாக எழுதி தமிழ்மணம் இணைய தளத்தில் பதிந்தது, என்னை புல்லரிக்க வைத்தது. இதே போல் சென்ற மாதம் கோவையில் பாலுஜி, மெல்லிசை மன்னர்கள் நடத்திய ஒரு இசைக்கச்சேரியின் முழுவிமர்சனத்தையும் உடனுக்கு உடன் இணைய தள வாசகர்களுக்காக வழங்கியது மறக்க முடியாது. அவரின் இந்த அபார திறமைக்கு தலை வணங்குகிறேன் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த ஒலி நிகழ்ச்சியின் தகவல்கள் ஐந்து வருடத்து முன்னதாக இருந்தாலும் இப்போதும் கேட்க மிகவும் இனிமையாக மனதிற்கு சுகமாகவும் இருந்தது. நான் இந்த கோப்புகளை ஐந்து வருடங்களாக எப்போது கேட்டாலும் இறுதியில் பாலுஜியின் நன்றி தெரிவிக்கும் பகுதி வந்தால் என்னையறியாமல் என் கண்களின் ஆனந்த கண்ணீர் வந்துவிடும். ஏன் பாலுஜிக்கே மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வந்துவிடுகிறதே கவனித்தீர்களா...?.....? இல்லையென்றால் மறுபடியும் ஒலிக்கோப்பை ஓடவிட்டு கேளுங்கள். நிச்சயம் உங்கள் மனதிற்க்கு ஒரு வித நிம்மதி கிடைக்கும்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் இடம் பெறும் என் ரசிப்பு முற்றிலும் வற்றாயிருப்பு சுந்தரின் ரசிப்பு திறன் ஆகும் ஏற்கெனவே இதே தளத்தில் பதியப்பட்டவை தான். புதியதாக நாங்கள் எதுவும் வித்தை செய்து விடவில்லை அவசரமாக கேட்டதால். பாலுஜியின் பிறந்த நாளில் ஒலிப்பரப்பினால் பாலுஜிக்கு நாம் மரியாதை செய்ததாக இருக்குமே என்று அவசரத்தில் ஏற்பாடு செய்தது.

பாடும் நிலாவும் பரம ரசிகனும் : ஒலிக்கோப்பு - 3

Get this widget Track details eSnips Social DNA


இத்தனை நேரம் தங்களின் விலைமதிப்பற்ற நேரத்தை ஒதுக்கி இந்த பதிவை படித்து, பாடல்கள் கேட்டு, தங்கள் மனதில் ஏற்படும் இனம் புரியாத எண்ணங்களையும் வழங்கி (உங்கள் மனதில் தோன்றியவற்றை வழங்கிவிட்டீர்கள் தானே? ஹி ஹி ஹி ) ஆதரவு உற்சாக தந்ததற்கு மிக்க நன்றி.

குறிப்பு: ஒலிப்பரப்பு நடைபெறும் போது பதிவு செய்யப்பட்டதால், முழு ஒலிக்கோப்பின் நீளம் கருதி மூன்று ஒலிக்கோப்பாக பிரித்து வழங்கியிருக்கிறேன். ஒலிக்கோப்பின் ஒலியின் தரம் சிறிது குறைவாக இருப்பதால் வாசகர்கள் தங்கள் தேவைக்கேற்ப ஒலியின் அளவை கூட்டி வைத்துக்கொள்ளலாம். நடுவில் சின்ன சின்ன விளம்பரங்கள் வரும் தவிர்க்க முடியவில்லை அது இருந்தால் தான் இந்த பதிவே சிறப்பாக இருக்கும். திரு. ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயணா மற்றும் பாலுஜியின் இருவரின் குரலுக்காகவே எத்தனை நேரமானாலும் திரும்பவும் திரும்பவும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

நன்றி, வணக்கம்.

பதிவு: வற்றாயிருப்பு சுந்தர், கோவை ரவீ
குரல் : டிஜ்ஜிடல் குரலோன் அறிவிப்பாளர். திரு. ஆர்.ஜி. லக்‌ஷ்மி நாராயானா சூரியன் பண்பலை
ஒத்துழைப்பு: உங்கள் இனியவன் அறிவிப்பாளர் திரு. ரவி வர்மா சூரியன் பண்பலை

பாலுஜி பாடல்கள் நிகழ்ச்சியில் ஒலிபரப்பட்ட பாடல்கள்

1. ஆசையே அலைபோல - திரு. திருச்சி லோகநாதன்
2. கண்ணே கலைமானே - திரு. கே.ஜே.யேசுதாஸ்
3. நிலவே என்னிடம் - திரு. பி..பி.ஸ்ரீனிவாஸ்
4. சொல்லத்தான் நினைக்கிறேன் - திரு. எம்.எஸ்,விஸ்வநாதன்
5. ஓரு நாள் போதுமா - திரு. பாலமுரளி கிருஷ்னா
6. தேவன் கோவில் மணியோசை - திரு. சீர்காழி கோவிந்தராஜன்
7. காலையும் நீயே - திரு. ஏ.எம்.ராஜா

நிகழ்ச்சியில் நேரமின்மை காரணமாக விடுபட்ட பாடல்கள்.

unsungspb


8. பாவடை தாவணியிலே - திரு. டி.எம்.சவுந்திரராஜன்
9. என்னை தாலாட்ட வருவாளா - திரு. ஹரிஹரன்
10. ஹம்மா ஹம்மா - திரு. ஏ.ஆர்.ரஹ்மான்
11. பூங்காற்று திரும்புமா - திரு. மலேசியா தேவன்
12. ராசாத்தி உன்னை - திரு. ஜெயச்சந்திரன்
13. தென்பாண்டி சீமையிலே - திரு. இளையராஜா, திரு.கமல்ஹாஸன்
14. தூளியிலே ஆட வந்த - திரு. மனோ

இதுவரை கேட்காதவர்கள் வசதிக்காக வழங்கபட்டுள்ளது.

நன்றி.

28 comments:

வற்றாயிருப்பு சுந்தர் said...

Dear Ravee,

This is wonderful and I'm extremely happy to hear this program!

Thanks a lot for all your great efforts and thanks to Suryan FM for broadcasting this program. They have really put the pieces together very nicely!

I really wish they broadcasted all the unsung songs - anyway, this is just a great beginning. I wish we get more such programs - especially from blogs to Radio in the future!

Thank you everyone for your great efforts behind this successful program.

Anonymous said...

Dear Ravi Sir

Really you have done a wonderful job sir. A very beautiful programme and compiled very well. Only one complaint sir. Suriyan FM has tried to give all the things in one hour. The song, speeches by various stars, advertisements etc. As a result the songs were broadcast only half. They could have divided the programme into 2 parts and the songs could have been broadcast fully. Well done Sir. Regards

N. Ramanathan

Anonymous said...

All, I ran out of words and was tongue tied while listening to the program. A million thanks to Covai Ravee for making this possible. This is THE BEST PROGRAM I ever listened to in my life! Ravee - My heartiest thanks to you and Suryan FM for broadcasting this program. Looking forward for the audio upload in our blog. Thank you Sundar.

Anonymous said...

Dear Sir

Is it possible to get the CD of the same. I can give my address in Chennai and you can send the same.

Regards

Balaji

அறிவன்#11802717200764379909 said...

ஒலிக்கோப்புகளை ப்ளே செய்தால் ஒன்றும் நிகழவில்லையே,வேறு ஏதாவது செயலியை தரவிறக்க வேண்டுமா?

வற்றாயிருப்பு சுந்தர் said...

அறிவன்

ஒன்றும் செய்யத் தேவையில்லை - Play யைச் சுட்டினால் ஒலியைக் கேட்க முடியும். ஒரு வேளை உங்களால் கேட்கமுடியாமலிருந்தால். கீழே சுட்டிகளைத் தந்திருக்கிறேன்.

http://www.esnips.com/doc/56c2ec82-feb1-4396-bb3e-3c10f9ceab01/SFM-LN-SPB-62-A

http://www.esnips.com/doc/656933c9-145b-4212-b77c-23663490b135/SFM-LN-SPB-62-B

http://www.esnips.com/doc/6018732d-f222-4444-aa44-221656968d46/SFM-LN-SPB-62-C

நன்றி.

Covai Ravee said...

Sri. Sunder,

All credits goes to You and Baluji only. I welcome your affectionaly feedback. Thx for your immediate reply.

Mr.Ramanathan sir,

//Suriyan FM has tried to give all the things in one hour. The song, speeches by various stars, advertisements etc//

You are correct sir what can we do? Yingha vaayppu vanthathe periya vishayam. But nerya response irunthathu. Ungal varukaikkum replykkum nandri.

Balaji sir,

All unsung songs are available in market. Pls chek it. If you not get it pls mail to me personally. I can arrange and send to you.

Arivan sir,

Player working freely to me also. Kindly check out audio line in. Dont worry if you like pls mail to me personally i will arrange to send to you.

Anonymous said...

Dear Balu Sir

Wishing you and praying the almighty to give you a long healthy life to make millions of fans like me to keep on hearing your voice. There is no end to this greedy wish. As I am writing this mail I am mesmerised by your magical voice after hearing KANNE KALIMANE in a special programme broadcast by SURIAN FM 10 pm -11pm. This song is a super hit song sung by Yesudoss Sir, but it is 100 percent more lively when hearing in your voice. After this followed great hits like ORU NAL PODHUMA all of them more attractive in your magical voice growing younger day by day. Sir wishing you and your family all the very best in this world to keep us all happy. Regards
N. Ramanathan
Coimbatore

Anonymous said...

Dear Ravi Sir,

Wow. what a great time for us, while hearing this episode which had broadcasted in Suriyan Fm.

Firstly thanks to SURIYAN FM for broadcasting this episode about the Legend in the Play back singing world. Thanks to Mr.RG.Narayanan & Mr.Ravivarma.

Then my very special thanks to you sir, for putting lots of effort for giving us a wonderful treat to the ears.

I wish Suriyan Fm to broadcast even more programmes in future too.
All the best for the Suriyan Fm.

K.Venkataramanan.

Anonymous said...

Dear Sir,

I am very greatful to you for giving me the great opportunity to listen to the telecast Surian in FM radio in CBE on the Birthday of our Guruji.

I had just listened to the 3 episodes which you had given to this group.

I really dont have words to praise your effort on bringing this great Telecast.

You had given us the wonderful birthday treat for all the members of this group.
We all are really lucky to have you as a member of this group.

I would like to Thank Mr.R.G.LAKSHMI NARAYANAN (DJ) OF THIS EPISODE for being presented so nicely. On behalf of this Prestigious Group, i again congratulate & Thank him.

We are looking forward for more presentations about our Guruji in future also.

My SPECIAL PRANAMS TO YOU SIR. KEEP UP THE GOOD WORK.

REGARDS

K.VENKATARAMANAN.

Anonymous said...

Dear Covai Ravi Sir,

PNPR programme is SuPerB !

You have once again shown your multitasking capabiliteis by organising a Nice programme for Guruji Dr.SPB Sir.

Congrats.

Thanks and Regards,
Tha.Vu.Udhayabhanu

Anonymous said...

Covai Ravee Avargale,

They say something in Tamil which translates to "Even if it is late, it is the latest" in English. I have been late in listening to this Suriyan Radio Presentation of 4th June 2008 but I am trying to present my latest comments I thought it would be easy to comment, but alas, I am at a loss for words to express the uniqueness of this great radio presentation. Only a true and great fan of SPB can make such a program possible. Dear Covai Ravee, HATS off to YOUR initiative and efforts & ably supported by Sundar as I understand. What a way to celebrate the LEGEND's birthday by presenting a program which is a dextrous mixture of events that took place in the Singer's life during the different periods of his life and making it come as a live show and that too presenting along with his UNSUNG songs series. The Suriyan FM presenter Mr.Lakshmi Narayan and Mr.Ravi Varma have added life and soul to the program through wonderful editing and presentation. The base voice of Lakshmi Narayan seems to add beauty to the effect of the night. Congratulations. Eventhough, I have been one of those fortunate fans who had seen the 30 years celebration of our SPB's singing career and heard all 14 unsung songs of HIS, the way a mix of the two were presented by SURIYAN FM was simply astouding. We could feel the truth and sincerity in SPB's voice when he expressed his thanks to all HIS seniors and forerunners in the Industry, to all those who had paved the path for HIM and to the FANS One would have felt our hairs bristle on listening to Kalaignar Karunanidhi, S.Janaki & Vaali praising our GURUji. We would have rejoiced listening to the popular songs of other singers in our LEGEND's sweet, melliflous & expressive voice. And finally the way some of his other songs were interlaced into the program. It is superb. For eg. the "naan oru medai paadagan..." (i am a stage singer.....) seems to accurately present the views which he used to express at many occasions. It says "i have learnt very little and still have a lot to learn" "I go to wherever there is music". It applies to HIM the song "madai thiranthu......" - is a true depiction of an aspiring artiste and suits his state of that period when he was trying to make a name for himself in the industry the song "paadum bothu naan......" - talks about his songs and himself as well and we can go on adding the positives of all the songs presented in endless time. I stop now to once again congratulate the team of Covai Ravee, Sundar, Suriyan's Lakshmi Narayan & Ravi Varma for a memorable and unique presentation on the memorable day of our LEGEND. This year's celebrations have started off really great. KEEP it up HATS off to Sundar for making available the complete series of UNSUNG songs on Esnips to all the Fans.

regards, Dasaradhi, Chennai

Covai Ravee said...
This post has been removed by the author.
Anonymous said...

Dear Mr.Ravee and All Fans,

I am sorry Ravee I was not in station to send the mail to you immediately after the programme. But it is really a different show and the songs that you have slected is too good.

No doubt the songs of other singers to listen in our loving voice is excellent it is only possible by our great SPB.

First song of Asaiye Alai Pole, Kalayum Neeye Malayum Neeye, Nilave Eannidam nerugathey, Sollathan Ninaikiren all are great and once i forget every thing when I listen the songs in the radio

Next to that the song of Kanne kalaimane, Deven Kovil Maniyosai, Oru Nal Poduthuma are also too good and no words.

Then the song of Padum Pothu nan thendral Katru and Vetri Nitchayam is a situation songs which are touching.

But only one small suggession for improvements is the recording has to be improved as a great fans of SPB and there are very obvious recording mistakes and if it has been imporved it is no doubt it one of the memorable programme. Thanks for you once again.

Yours

Mahesh Kumar, Coimbatore

Anonymous said...

Excellent Song selection and wonderful program Ravi Sir.

Hats Off to you and it is great to hear Guruji's voice in old songs. Really 'Nilave ennidam' is superb and tops the list.

Regards
Balaji, Chennai

Anonymous said...

Dear Ravi Sir !!

I already having an account with esnips.com (csvishwanthan@ gmail.com) but unfortunately i cant download the song. May be i dont know the procedure. So if you guide me, it will be very greatful to you.

Thanks and sorry for interrupting you again.

Viswam Iyer, Cochin

Anonymous said...

தண்ணீர் பந்தல்
4.6.2008

சூரிய பண்பலையின் இனிய இரவின் புதிய வரவான அன்பு நேயர் திரு.ரவீந்திரன் அவர்களுக்கு அகிலா.விஜயகுமார் முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்றைய இனிய இரவின் SPB பற்றிய நிகழ்ச்சி அருமையாக இருந்தது. தங்களது எழுத்தின் தாக்கம் குறைவாக இருப்பினும் SPB தாங்கள் கொண்ட மதிப்பின் தாக்கம் நிறைவாக இருந்தது. ஏதோ வழக்கம் போல் பாடகரைப் பற்றிய புகழாரங்கள் செய்திகள் என்று இல்லாமல் புதுமையான முறையில் நிகழ்ச்சி அமைய எண்ணம் கொண்டமைக்கு எனது சார்பாகவும் மற்ற பண்பலை நேயர்கள் சார்பாகவும் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன் (றோம்), ஆக்கம் மிகவும் நன்றாக அமைத்த அறிவிப்பாளர் RGL அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியினை தெரிவிக்கிறேன். மேலும் இது போன்ற ஆக்கங்களை கொண்டுவர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவண்
தண்ணீர் பந்தல் அகிலா என். விஜயகுமார்
திருப்பூர் - 641 652.

Anonymous said...

கோவை
5.6.2008

இனிய இரவின் மடியில் பண்பலையில் இனிக்கும் பாடல்களின் தொகுப்பை தந்து இதயத்தை சுத்தப்படுத்திய அருமை நிகழ்வு!.

இம்மாதிரி பாடல்கள் கேட்டு வாழ்ந்த் பார்க்கத்துடிக்கிறேன் தொகுப்பை படைத்தவர்க்கு நன்றி.!. வாழ்த்துக்கள்

தடாகம் ஆறுச்சாமி
(சுகம் மருந்தகம்)
தேவராயபுரம் அஞ்சல்
கோவை - 641 109

Anonymous said...

அன்புள்ள திரு. பாடும் நிலாவின் ரசிகர் ர.ரவீந்திரன் அவர்களூக்கு என் வணக்கம். இவ்வளவு இனிமையான குரல்களில் பாடல்களை ரசிக்க (காலையும் நீயே மாலையும் நீயே) (நிலாவில்) ரசித்த பாடல்களை இரவுகளில் இனிமை, சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்வதற்க்கு வார்த்தைகளில்லை பாடும் நிலவைப்பற்றி சொல்ல, எழுத ( அமைதில்லாத நேரத்திலே) அந்த ஆண்டவன் என்னை படத்துவிட்டான் ஏற்கனவே எனக்கு பிடித்த அந்த வரி SPBன் குரலில் தேனமுதானது. ஆயிரம் நிலவை வரவழைத்த அந்த நிலா (62) ஆண்டுகளை (பாடும் போது தென்றல் காற்றாகவும், தேவன் கோவில் மணி ஓசையின் பாடலில் சீர்காழியின் தென்றலான க்குரலையும் SPB யையும் 26 வயதாக நினவு நிருத்தி பார்க்க ஏதுவாக அமைந்தது உறங்கவில்லை விழிகள் கண்ணே கலைமானே பாடலில். நான் பாட இன்றொரு நாள் போதுமா - மிக அருமை SP Balu வின் இசை மழையில் நனைய வாழ்க்கை ஒரு வானம்பாடியானது. நீங்கள் எந்த அளவு ஒரு கலைஞனுக்காக தங்களை வறுத்தி கொண்டு உள்ளீர்கள் என்பதை புரிந்த நான் வரையும் மடல். உங்களது பயணம் தொடர வாழ்த்துக்கள் அந்த GREAT SINGER GENIUSஐ பற்றி மீண்டும் மீண்டும் கலந்து கொண்டு Suriyan FM மூலமாக என்னை மகிழ வைக்க தங்களை கேட்டுக்கொள்கிறேன்.

டி. கனேஷ்
56, தாஷ்கண்ட் வீதி
B.R. புரம்
பீளமேடு அஞ்சல்
கோவை - 4.
போன் 99420 59422

Covai Ravee said...

அன்புள்ள அகிலா விஜயகுமார், திரு.டி.கனேஷ், திரு. ஆறுச்சாமி

அனைவருக்கும் என் வணக்கம்.
தாங்கள் எல்லோரும் கோவை திருப்பூர் வாசிகள் தாங்கள் இனிய இரவு எஸ்.பி.பி நிகழ்ச்சி கேட்டு அதிசியப்பட்டுருக்கிறீர்கள். நீங்கலள் இனிய இரவு நேயர்கள் என்று உங்கள் கடிதம் மூலம் தெரிந்து கொண்டேன். உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. எல்லாப்புகழும் எஸ்.பி.பிக்கே போய் சேரும். அடிக்கடி இந்த தளத்திற்க்கு வாங்க அழகான இனிமையான பாடல்கள் வரவிருக்கின்றன. நன்றி.

Anonymous said...

என்.கந்தசாமி, நரசீபுரம்,
கோவை-641109

அன்பு நெஞ்சமே,

S.P.பாலசுப்ரமணியத்தின் தொகுப்பை கோவை சூரியன் FMல் கேட்டு மகிழ்ந்தேன். எனது பாராட்டுக்கள். இருமுறை உமது வீதிக்கு வந்து உம்மை சந்திக்க இயலவில்லை. சரியான முகவரி இல்லை என்றே எண்னுகிறேன். இக்கடிதம் கிடைத்தவுடன் எம்மோடு தொடர்பு கொள்ளவும் மீண்டும் எனது பாராட்டுக்களை தெரிவித்து விடை பெறும்.

அன்பு நெஞ்சம், என்.கந்தசாமி

Covai Ravee said...

என் கந்தசாமி அவர்களே, வணக்கம்.

உங்கள் அன்பான கடிதம் கிடைத்தது. பாராட்டுக்களுக்கு நன்றி.

//இருமுறை உமது வீதிக்கு வந்து உம்மை சந்திக்க இயலவில்லை. சரியான முகவரி இல்லை என்றே எண்னுகிறேன்//

முகவரி எல்லாம் சரியாக தான் உள்ளது இல்லையென்றால் உங்கள் கடிதம் கிடைத்திருக்காதே. உங்களூக்கு சரியான வழிசொல்லியிருக்கமாட்டர்கள். இருந்தாலும் உங்களை நேரம் கிடைக்கும் போது தொடர்புகொள்கிறேன். உங்கள் அன்புக்கு நான் அடிமை. எல்லாபுகழும் பாலுஜிக்கே போய் சேரும்.

Anonymous said...

ravee sir...FM program was excellent. It was neatly organized and very nice content.was inspiring.. Pray God you hard work earns you more and more recognition...
Thanks
venkatakrishna, bostton

Covai Ravee said...

Krishna sir,

Thanq very much for wishings. All credits goes to one only our Guruji.

Anonymous said...

sir,

ungal aakatthai ketten... adu mudal thangalai todarbu kondu paaraatta vendum endru ninaitthirunden. akila vijayakumar than thangaludaiya e-mail adds kodutthar. naan iingu kodutthulla adds sendru paarungal... pin comments anuppungal... ok ?

Rajkumar, Salem

G.Ragavan said...

ரவி, இந்தப் பதிவை இப்பத்தான் பார்த்துக் கேட்க முடிஞ்சது. அடடா! என்னவொரு தொகுப்பு. மிக்க நன்றி. மிக்க நன்றி. மிக்க நன்றி. ஏற்கனவே பிரபலமான பாடலைப் பாடுவது என்பது ஒருவகையில் சிரமம்தான். என்னதான் பாடினாலும் முன்பு பாடியது போல இல்லையென்று சொல்லி விடுவார்கள். ஆனால் உண்மைப் பாடகர்கள் அந்த விமர்சனத்தையும் வெற்றி கொள்வார்கள் என்பதற்கு இந்தப் பதிவும் தொகுப்பும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. மீண்டுமொருமுறை நன்றி. நன்றி. நன்றி. :)

Covai Ravee said...

GR Sir

Unga comments thuvakkathile ethirparthen lateaaka vanthalum latestaaha thanthullierekal. hi hi. mikka nandri. MRR sir oru link unga email idkk anupiruken pathu pathil eluthungal

vishal said...

hai super