இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பாலு அண்ணா!
மாணவிகளுக்கு இலவச கணினி பயிற்சி, இதோ அவர்களூக்கு வழங்கப்பட்ட கணினியின் படங்கள்.
கோவை சேவா நிலயத்தின் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளூக்கு இலவச கணினி பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கோவை பாலுஜி ரசிகர்கள் சார்பில் ரசிகர்கள் ஆத்மாஸ் திரு. ஆனந்த் ஸ்ரீனிவாசன், ஆத்மாஸ் திரு. சுந்தர் ஸ்ரீனிவாசன் அவர்கள் குழுவினரும், கோவை பாலுஜி ரசிகர்களூம் உபயோகப்படுத்தப்பட்ட ஏழு கணினிகள் வழங்கி மாணவிகளூக்கு இலவச கணினி பயிற்சி வழங்க பாலுஜியின் பிறந்த நாளில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளியின் தலைமை ஆசிரியை, மற்றும் சேவா நிலைய இணை செயலாளர் திருமதி. ஜெயஸ்ரீ மற்றும் கீதா ஆகியோர் எஸ்.பி.பி ரசிகர்கள் சேவையை பாராட்டினர்.
இதோ இந்த நிகழ்ச்சியுடன் சேர்ந்து அழகான இனிமையாடலும் கேளூங்கள்.
மனம் என்னும் நாட்டிய மேடை
படம்: ஓர் ஊமையின் ராகம்
2 comments:
Dear Ravi,
Thanks for the pictures.
Please convey, Mr. Ananth and Sunder my heartiest gratitudes for their big hearts. God bless you all.
Affectionatelyan
SPB.
Sent from BlackBerry® on Airtel
எங்கள் அன்பின் இனிய ராகமே டாக்டர் பாலு அண்ணா, நமஸ்காரம்.
எல்லாம் நீங்கள் தந்த பிச்சை தான். இது போல் நிறைய செய்ய வேண்டும் என்ற ஆவல் உள்ளது. அதற்கு நீங்கள் சொன்னது போல் கடவுள் எல்லா உதவிகளூம் நிச்சயம் செய்வார் என்ற நம்பிக்கை எங்களூக்கு உண்டு. ஏனென்றால் நாங்கள் உங்கள் அபிமானத்தை பெற்ற ஜீவன்கள். அதே கடவுள் உங்களூக்கு நீண்ட ஆயுளை தந்து மேன் மேலும் தங்களின் குரலால் எங்களூக்கு பல பல புதிய பாடலகள் தரவேண்டும் அதற்கு கடவுள் அருள் புரிய வேண்டும் என்று ப்ரார்த்தனை செய்கிறோம்.
இப்படிக்கு உங்கள் அன்பைப்பெற்ற..
கோவை ரவீ மற்றும் கோவை ரசிகர்கள் ஆத்மாஸ் ஆனந்த், ஆத்மாஸ் சுந்தர் மற்றும் ஆத்மாஸ் குழுவினர்.
Post a Comment