விஜயகாந்த் படப்பாடல்கள் கேட்டு ரொம்ப நாளாச்சு சமீபத்தில் இந்த பாடல் கேட்டேன். கிராத்து மண்ணில் எடுத்தப்பாடல் என்று நினைக்கிறேன் என் ஆசை மச்சான் என்ற படத்தில் வருகிறது. பாடல் மெட்டு நம் மனதை எங்கெங்கோ அலைய வைக்கும் பாடல். பாலுஜி என்னமாக புகுந்து விளாயடுரார். நீங்களும் கேட்டுடுங்களேன்.

4

பாலுஜியின் பல பழைய பாடல்கள் இன்னும் பிரபல மாகாத பாடல்கள் முத்து மணி மாலை கீழ விழுந்து சிதறியது போல் எங்கெங்கோ இருக்கின்றன சமீபத்தில் நான் எப்பவோஓஓஓஓஓ கேட்ட பாடல சிலது கிடைததது. ஆஹா மனுசன் எப்படித்தான் பாடினாரோ? இன்னும் எனக்கு ஆச்சரியத்தை தருகிறது.

உள்ளம் போ என்றது இந்த பாடலின் துவக்க இசையே வேறு ஒரு மெட்டை நினைவுபடுத்தும் என்னவாக இருக்கும் என்று யோசிப்பதற்குள் பல்லவி வந்து நம் மனதை கலங்கடிக்கும். எல்.ஆர்.ஈஸ்வரியின் அமர்க்களமான குரலுடன் பாலுஜியும் கலக்கலாக பாடியிருப்பார். இந்த பாடல் ஞானஒளி என்ற படத்தில் வருகிறது.

7

"இருந்தாக்கா அள்ளிக்கொடு" ஆமாங்க திரைப்பாடல்களுக்கு பஞ்சமா என்ன? குமிஞ்சு கிடக்கே. அள்ளிக்கொடுத்த்ற வேண்டியதுதான். இப்படி துவங்கும் பாடல் நாயகனில் (புதுசு தாங்க) படத்தில வருது.

இனிமையான பாடலுடைய இந்த படத்தை எத்தனைபேர் பார்த்திருக்கீங்க கைகள் தூக்குங்க?. (நான் தப்பிச்சேன்பா ஏன்னா நான் பார்க்கவில்லை) நடிகர் கே.ராஜன் என்பவராம் எத்தனைப்பேருக்கு தெரியும்? அதையும் சொல்லிடுங்க. இந்த படத்தின் தகவல்கள் தேடுவதற்க்குள் தாவு கழண்டிடுச்சு.

2

நிலவே நீ சாட்சி இந்த படத்தில் அமர்க்களமான மெலோடி பாடல்கள் நிறைய உண்டு சுசீலாம்மாவின் குரலுக்காகவே ஓடிய படம். 1979ஆம் வருடம் மெல்லிசை மன்னர் இசையமைப்பில் வெளிவந்த இந்த படம் அந்த காலத்தில் எல்லோரையும் தன் இனிமையான பாடல்களால் கவர்ந்த படம் நிலவே நீ சாட்சி. படத்தின் காட்சிகள் நினவுக்கு வர மறுக்கின்றன.

5
இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading