708 அம்பிகையே உன்னை நம்பிவந்தேன்
மேலே உள்ள படத்தைப்போலவே கலக்கல் பாடல் இது. இந்த பாடல் ரொம்ப வருஷத்துக்கு முன் கேட்டது ஒலிக்கோப்பு கிடைத்தவுடன் உடனே பதிந்துவிட்டேன். ஏனென்றால் பாடல் அப்படி பாடலுக்கு விளக்கமே தேவையில்லை. பாலுஜி முழுவதும் கச்சேரி ஸ்டைலில் என்னமாக பட்டை கிளப்புகிறார். நீங்களூம் கேளூங்கள் மகிழ்ச்சியாக இருங்கள்.
2707அடடா ஒர் உயிர் துடிக்குது
அடடா ஒர் உயிர் துடிக்குது இந்த பாடல் மீனாட்சி படத்தில் யார் நடித்து தெரியவிலலை மேயர் மீனாட்சி தான் எனக்கு தெரியும். இருந்தாலும் அழகான சோகப்பாடல் //புள்ளீயிட்ட பொன்மேனி ஈஈஈஈஈஈ.. புள்ளீயிட்ட பொன்மேனி கொள்ளியிடும் நாளாச்சோ.. .. வெள்ளிமணி தேரோட்டம் நின்னாச்சோ..
706ஆனந்தமே அலைபாயுதே
//அழகு வானில் தாரகை அமுதம் போலே தேவதை, அழியாத கதையாக வந்தாள், கனவிலே வந்தவள் கருத்திலே நின்றவள்// அழகான வரிகள் இனிமையான குரலில். உண்மையிலேயே தேன் தேங்கும் மலர் தான்.
705தொடங்கும் தொடரும் புது உறவு
பாடல் துவக்கத்திலேயே மெலொடி இசையின் ஆக்கிரமிப்பு அட்டகாசமாக ஆரம்பமாகும். பாடல் முழுவதுமும் பல்லவி வரும் போதெல்லாம் சீராக வருவது இந்த பாடலின் சிறப்பு. பழைய இசையமைப்பாளர் சத்யம் என்று நினைக்கிறேன். போதாதற்க்கு பாலுஜியும் சுசீலாம்மாவும் பலாசுளைகளை தேனில் முக்கி முக்கி நமக்கு தேவார்மிதமாக தருகிறார்கள்.
1704பாலுஜி, வைரமுத்து சென்னை இசை நிகழ்ச்சி
பாலுஜி, வைரமுத்து சென்னை இசை நிகழ்ச்சி
சென்னையில் வித்தியாசமான இசை நிகழ்ச்சி ஒன்று 16.11.2008 ஞாயிறு அன்று நடந்தது. நிகழ்ச்சியில் பாடல்கள் எழுதிய அனுபவங்களை கவிஞர் வைரமுத்து ரசிகர்களூடன் பகிர்ந்து கொண்டார்.
703 மங்கை ஒரு திங்கள்
// போதை மொழி பனங்கள் தங்கபுறாக்கள் தவழ் இனங்கள், ஆசை மிகும் கணங்கள், அவள் ஜாடை விதங்கள், கனிகள் தந்த இதழ்கள், உயிர் கவிகள் தந்த வரிகள், கிளிகள் தந்த மொழிகள், என்னை கிள்ளூம் அவள் தடைகள்//
ஆஹா ஆஹா மனதை அலைபாயவைக்கும் வரிகள் இது சாம்பிள் தான் பாடல் மூச்சூடும் ”கள்' கள்'ன்னு பின்னி பெடலெடுக்கின்றன பாடல
701 ஒண்ணும் தெரியாத பாப்பா
சுறுசுறுப்ப்ப்ப்ப்ப்பான ஓரு கலக்கல் பாட்டு அடெங்கப்பா ஏழு நிமிட பாட்டு இது. பாலுஜியும், ஜானகியம்மாவும் அதிரடியா பாட்டா தந்துருக்காங்க. கூடவே நாம் பாடியதாலே நம்ம வாய் மட்டுமல்ல ஆடாமலே காலெல்லேம் வலிக்கறப்போல ஓரு உணர்வு.
//முக்காப் பணம் தந்து உக்காரனும்..
700உன் காதோடு காதொரு சேதி
//தினம் ஆயிரம் கற்பனை நெஞ்சோடு, பல ஆனந்த கனவுகள் கண்ணோடு, இளம் ஆடவன் பார்வைகள் பொல்லாது, அதன் ஆசைகள் எல்லையில் நில்லாது, அதுதான் பருவத்தின் துடிப்பு//
வாலியின் அழகான கற்பனை வரிகள் அண்ணனும், தங்கையும் இருவரும் தங்கள் குரலில் இசையுடன் இசைந்து நம் மனதையும் துடிக்க வைக்கிறார்கள்.
699கனி முத்தம் பதிந்தது
இனிமையான காதல் பாட்டை கப்டி ஆடுவது போல் ஓர் கலக்கலாக பாடி சுசீலாம்மவும் பாலுஜியும் வரிக்கு வரி என்னமாதிரி மாத்தி மாத்தி கலக்குறாங்க கேளுங்க. பாடலுக்கும் படத்தின் பெயருக்கும் என்ன சம்பத்தம் பாருங்க அப்போதே இதுபோல் தலைப்பு வைத்திருக்காங்க.
1698வருவாயா வேல்முருகா
//வருவாயா வேல்முருகா என் மாளிகை வாசலிலே, மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும் மங்கையின் கோவிலிலே//
சரணங்களுக்கு நடுவில் இனிமையான மனதை மயக்கும் ஆலாபனைகளை கேளுங்கள். அண்ணன் தங்கை பாடலிலும் இதுபோல் கேட்க கலக்கல் தான். இன்று கந்தசஷ்டி விரதம் முருக கடவுள் கோவில்களில் கோலாகல விஷேசம்.