721 பாலுஜியின் பரவசப்பாடல் தொகுப்பு

//1. மௌனமான நேரம், சலங்கை ஒலி, 2. மாலை சூடும் வேளை, நான் மகான் அல்ல,
3. தேன் பூவே வா, அன்புள்ள ரஜினிகாந்த், 4. ரோஜாவை தாலாட்டும் தென்றல், நினைவெல்லாம் நித்யா, 5. கண்மணியே காதல் என்பது, ஆறிலிருந்து அறுபது வரை, 6. கீதம் சங்கீதம், கொக்கரக்கோ, 7. பூந்தளிர் ஆட, பன்னீர் புஷ்பங்கள், 8. இசை மேடையில் இந்த வேளையில், இளமை காலங்கள், 9. சந்தனம் காற்றே, தனிக்காட்டு ராஜா//
|
இந்த பாடலகள் தலைப்புக்கள் ஏற்கெனவே கேட்ட மாதிரி இருக்குதுன்னு நினைக்கிறீர்களா அன்பர்களே? அதிகபட்ச பாடல்கள் ஏற்கெனவே இந்த தளத்தில் வலம் வந்தவை தான். பாலுஜி அவர்கள் பாடிய தேனருவி போன்ற பாடல்களீல் குளித்தாலும் தெவிட்டாதே. தித்திக்கும் தேனருவி தான் இந்த ஒலித்தொகுப்பு. சரிங்க.. சரிங்க.. விசயத்துக்கு வருகிறேன்.
சென்ற வாரம் 25.01.2009 ஓர் ஞாயிறு இரவில் அமர்க்களமாக இந்த தொகுப்பை வழங்கியிருந்தார். இசையன்பர்களே இந்த ஒலித்தொகுப்பு தலைப்பிற்கேற்ப பரவசப்பாடல்கள் தான். ஜானகியம்மாவுடன் சேர்ந்து நம் மனதை மயக்கடிக்கும் குரலினில் பாலுஜி அவர்கள் வழங்கிய மெலோடி பாடல்களின் ஒலித்தொகுப்பு வழங்கியவர் பாலுஜியின் தீவிர ரசிகை
திருமதி. கீதாலட்சுமி நாராயணன் அவர்கள். வெகு வருடங்களாக தன் மனதில் அடக்கி வைத்த ரசனையை வானொலியில் வாய்ப்பு வந்ததும் கொட்டி தீர்த்துவிட்டார்கள்.
இந்த ஒலித்தொகுப்பில் அவரின் பாடல் தொகுப்புக்களை எப்படி ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என்று
செல்பேசியில் உடனே நேயர்களிடம் பேசி கருத்துக்கள் கேட்டது மிகவும் சந்தோசம். அறிவிப்பாளர் திரு.ரவிவர்மா நேயர்களிடம் ஒவ்வொருவரிடமும் பொதுவான கேள்வி கேட்டார். அது பாலுஜியின் குரல் எந்த நடிகருக்கு பொருத்தமாக இருக்கும்? என்று கேட்டதில் அதிக பட்சம் கமல்ஹாசனுக்குதான் மிகவும் பொருந்தும் என்று பிரதான நேயர் கீதா லக்ஷ்மி உடபட ஏக குரலாக சொன்னார்கள். உண்மைதான். அறிவிப்பாளர் என்னங்க ஒட்டு மொத்தமாக பேசி வைத்து சொல்கிறீர்களா? ஏன் ரஜினிகாந்து அவர்களூக்கு பொருந்தாதா? விட்டேனா பார் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டார். அதற்கு அவர்கள் இல்லையில்லை கமலுக்கு தான் மிகவும் பொருந்தும் என்று ஆணீத்தரமாக சொன்னார்கள்.
ரவிவர்மா சார் நான் உங்கள் பக்கம். பாலுஜியின் குரல் கமல் சாருக்கு மட்டுமல்ல, ரஜினிகாந்துக்கும் பாடும் போது எந்த வித குரல் வித்தியாசம் காட்டாமல் அவர்கள் பாணியில் கிட்டக்க கொண்டு வந்து எல்லாப்பாடல்களூம் பாடியிருப்பார் அவர்கள் பாணியில் திரையில் பார்க்கும் போது. பாலுஜியின் குரல் நன்றாக பொருந்தும் இந்த கருத்தை அவரே பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். ரஜினிகாந்துக்கு பாடிய அழகாக பொருந்திய பாடல்கள் ஏகப்பட்டது மலைப்போல் குவிந்து இருக்கிறது. எதச்சொல்றது எத விடுவது. உதாரணத்திற்க்கு அத்திந்தோம் சந்திரமுகி பாடல் ஒன்று போதும். குரலை மாற்றி பல
நடிகர்களூக்கும் பாடியிருக்கிறார். விஜயகாந்துக்கும் பொருந்தும் வகையிலும் பல பாடல்கள் பாடியிருப்பார். சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், வென்னிறாடை மூர்த்தி போன்றவர்களூக்கும் அவர் குரல் சாயலில் முழுவதும் குரலை மாற்றி பல பாடல்கள் பாடியிருக்கிறார். இது போல பல குரல்களில் பாடிய ஒலித்தொகுப்பையையும் கூடிய சீக்கிரம் வானொலியில் ஒரு ஒலித்தொகுப்பு ஒன்று வரவிருக்கிறது. இந்த பதிவின் ஆதாரமாக தெரிவிக்கவே அந்த ஒலித்தொகுப்பு வரவேண்டும் என்பது ஆசை.
இந்த ஒலித்தொகுப்பில் செல்பேசியில் தன்கருத்துக்களை தெரிவித்த இசையன்பர்கள் 1. திரு.மாரிமுத்து, அம்மாப்பாளையம், திருப்பூர் 2. திருமதி.கீதாலக்ஷ்மி, (பிரதான நேயர்), 3. திரு. மணி, கள்ளியம்புதூர், ஈரோடு மாவட்டம், 4. திரு. ரவி, 5. திரு. ராஜு
6. திரு.விஜயகுமார், ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த ஒலித்தொகுப்பு வழங்கிய பாலுஜி யாகூ குழுமத்தின் தீவிர ரசிகை திருமதி. கீதாலக்ஷமி அவர்களூக்கும். மிகவும் அழகாக, இனிமையாக, சீரான வெள்ளி நூலிழைப்போல் பேசிய எனது அருமை அன்பர் திரு. ரவிவர்மா அவர்களூக்கும் உலகளவில் விசாலமாக பரந்து இருக்கும் பாலுஜியின் ரசிகர்கள் சார்பாகவும், கோவை பாலுஜி ரசிகர்கள் சார்பாகவும் மற்றும் பாலுஜி சார்பாகவும் என் மனமார்ந்த நன்றி தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
வாழ்த்துக்கள் கீதா மேடம்.
ஒலித்தொகுப்பை வழங்கியவர்.
திருமதி. கீதா லக்ஷ்மி நாராயணன்
உப்பிலிபாளையம்
கோவை.

2 comments:
dear ravee..
ungal mail parthen... mikka magilchi...baluji solvathu pol ellamae god gift...
thanks.. ravivarma...
வாங்க ரவிவர்மா சார்
உங்கள் ஆதரவு தான் ரொம்ப முக்கியம். உங்கள் நிறுவனத்தாருக்கும் உங்களூக்கும் மிக்க நன்றி.
Post a Comment