720 அனங்கன் அங்கஜன் அன்பன்


வெண்நிலவைக் குடைபிடித்து
வீசுதென்றல் தேர் ஏறி
மென் குயில்தான் இசை முழங்க
மீன் வரைந்த கொடியசைய
கண்கவரும் பேரழகி
கனகமணிப் பொற்பாவை
அன்ன நடை ரதியுடனே
அழகுமகன் வில்லேந்தி
கண் முல்லை, தாமரை,மா
தனி நீலம், அசோகமென
வண்ணமலர்க் கணை தொடுத்தான்
வையமெல்லாம் வாழ்கவென்றே!
இசையன்பர்களே... இந்த தொகையறா இந்த பாடலின் துவக்கத்தில் வருவது. ஒரு சின்ன வேலை உங்களூக்கும் இந்த ஒலிக்கோப்பில் இந்த பாடல் 2 ஆவதாக வரும். இது ஒரு வானொலியில் எனது ஒலித்தொகுப்பாகும். மற்ற பாடகர்க்ள் பாடிய 9 பாடல்களில் நமது பாலுஜி பாடிய பாடல் தான் ஹைலைட்டாக முன் நிற்கிறது என்று வானொலி அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயானா அவர்களின் கருத்து. அதையே முன் மொழிந்து வழங்குவதில் மிகவும் பெருமையடைகிறேன்.
10.01.2009 அன்று சனிக்கிழமை என் வாழ்நாளில் மீண்டும் ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி ஆம் அன்பு உள்ளங்களே கோவை சூரியன் பண்பலை, இரவின் மடியில் நிகழ்ச்சியில பூரண நிலா வந்த தினமான நிலா ஒளியில் ”பாடும் நிலாவின் பாலுவின்” அவரகளின் தொடர்புடைய நான் வழங்கிய ஒரு ஆக்கமான பாடல் தொகுப்பு ஒன்று ஒலிப்பரபப் பட்டது. என்னென்ன பாடல்கள் என்பதை ஒலித்தொகுப்பை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். (வையாதீர்கள் அய்யா)
இந்த ஒலித்தொகுப்பு மட்டுமல்ல எனது வானொலி நண்பர்களின் வித்தியாசமான ஒலித்தொகுப்பின் ஆக்கங்களை தேன் கிண்ண தளத்திலும் வாரம் ஒன்றாக வழங்கி வருகிறேன். அந்த ஒலித்தொகுப்புக்களை கண்ட “டிஜ்ஜிடல் குரலோன்” அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி. லக்ஷ்மி நாராயானா அவர்கள் பார்த்து பெரிதும் ஈர்க்கப்பட்டு நல்ல ஆதரவு தருகிறார்.
Mr.S.V.R.சுப்பையா
மேலும், எனது ஆருயிர் நண்பர் பாலுஜியின் ரசிகர் தமிழ்மண இணைய தள பதிவாளர் நமது சக பதிவாளர் நாம் பிரியமுடன் ”வாத்தியார் ஐயா” என்று அன்புடன் அழைக்கும் திரு. எஸ்.வி.ஆர். சுப்பையா அவர்கள் எனது ஒலித்தொகுப்பை கேட்டு தனது பல்சுவை தளத்தில் உடனே பதிந்தும் விட்டார். நான் இரண்டு வாரங்களாக பதிவாக போட காத்திருப்பது ஒரு முக்கியமான காரணத்திற்காக. அதற்குள், நான் பதிவில் சொல்ல வேண்டிய அணைத்தையும் வாத்தியார் அவர்கள் எழுதிவிட்டார். போதாதற்கு அறிவிப்பாளரை அலேக்காக தூக்கி உச்சத்தில் ஏற்றி வைத்துவிட்டார். அந்த பாராட்டு அறிவிப்பாளரின் குரலுக்கு கிடைத்த பாராட்டு. அறிவிப்பாளரின் போட்டோவை போடவேண்டும் என்று என்னிடம் வாத்தியார் ஐயா கேட்டார் என்னிடம் இல்லை அவரிடம் வாங்கி தருகிறேன் என்று தெரிவித்தேன். (ஆர்.ஜி.எல்.என் சார் சீக்கிரம் ஒரு போட்டோ ஒன்று அனுப்பிவைப்பீர்களா?) அவரின் குரலை கேட்டு பல இணைய அன்பர்கள் எப்படி இருப்பார் என்று? ஒரே ஏக்கமாக இருக்கிறார்கள். ஆகவே காத்திருபோம் அன்பர்களே. அவர் நிகழ்ச்சியில் அடிக்கடி சொல்லும் வார்த்தை தான் இது “காத்திருப்புக்கள் என்றும் வீண்போவதில்லை” ரொம்ப கரெக்டதான். காத்திருப்போம்.
என் நிகழ்ச்சியை நானே தேன் கிண்ணத்தில் போடுவதை விட நமது வாத்தியார் அவர்கள் அவரின் தளத்தில் வெளியிட்டது எனக்கு மிக்க மகிழ்ச்சியே அவரின் கருத்துக்களை பெருமையுடன் படித்து மகிழ்கின்றேன். இந்த ஒலித்தொகுப்பு உருவானதை
பற்றி சிலவற்றை சொல்லியே ஆகவேண்டும். வானொலியில் நான் புதிது ஆகவே எனது வானொலி நண்பர்கள் ஜாம்பவான்கள் திருப்பூர், அகிலா விஜயகுமார், மற்றும் சேலம் திரு. காசக்காரனூர் ராஜ்குமார் ஆகியோருடன் இணைந்து அவர்களின் சிறப்பான யோசனைகளூடன் ஊக்கத்துடன் உருவான ஆக்கம்தான் இந்த ஒலித்தொகுப்பு. இசையன்பர்களாகிய நாங்கள் ஒருங்கிணைந்து ஒரு கருங்கல்லாக எடுத்து அறிவிப்பாளரிடம் வழங்கினோம். அதை அவர் கைத்தேர்ந்த சிற்பி போல் தன் குரல் என்ற உளியால் அழகான ஒரு சிலையை வடிவமைத்து வழங்கியுள்ளார். எல்லாப்புகழும் என்னைவிட இவர்களுக்குதான் போய் சேரும். ஏற்கெனவே இந்த பதிவைப்பற்றி வாத்தியார் அய்யா அதிகம் பல்சுவை பகுதியில் எழுதியிருப்பதால் நான் இத்துடன் நிறுத்திக்கொண்டு. இந்த ஆக்கத்தை சிறப்பக ஒலிப்பரப்ப உதவியாக இருந்த அறிவிபாளர்கள் திரு. ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயானா அவர்களூக்கும், அவருக்கு பெரிதும் உதவியாக இருந்த திரு. ரவிவர்மா அவர்களூக்கும் என் மனமார்ந்த நன்றி.
அதுமட்டுமல்லாமல் நிகழ்ச்சி சென்றுக்கொண்டிருக்கும்போது குறுஞ்செய்திகள் அனுப்பி வாழ்த்துக்கள் சொன்ன இரவின் மடியில் ஆஸ்தான நேயர்களான ...
1. திருமதி.கவுரி, ராம்நகர்
2. திரு.ரசாக், சாய்பாபாகாலனி
3. திரு.ராமசாமி, பூலவாடி
4. திரு.பிரகாஷ், ஆவராம்பாளையம்
5. திரு. வி.எஸ்.பால்சந்திரன்
6. திரு. பி.என்.புதூர், ஆனந்த்
7. திரு. காசக்காரனூர் ராஜ்குமார்
8. திருமதி. சுகந்தி ரகுநந்தன்
9. திருமதி. காத்தியாயினி, பாரதியார் யுனிவர்சிட்டி
10. திரு.பாலு, வெள்ளக்கோவில்
11. திரு.சையத் ரசூல், செல்வபுரம்
12. திருமதி.உமாதேவி, கீரணக்கவுண்டன்பாளையம்
13. திரு. மஹாதேவன், பாலாக்காடு
வாழ்த்துக்கள் தெரிவித்த நேயர்களுக்கு நன்றிகள் உரித்தாகுக. மேலும், என் செல் பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்திய அன்பர்கள்..
1. திரு. அகிலா விஜயகுமார், திருப்பூர், 2. திரு. நடராஜன், உடுமலை, 3. திரு.கந்தசாமி, நரசீபுரம், 4. திரு. கௌசல்யா, காந்திநகர், 5. திரு.மோஹன சுந்தரம், திருப்பூர் 6. ஜி.டி.சித்தார்த்தன், பெரியநாயக்கன் பாளையம், 7. திரு. சக்தி ஆனந்த், சாய்பாபா காலனி, 8. திரு. ஜெகதீஸ், சுந்தராபுரம், 9. திரு. தேவராஜன், சுந்த்ராபுரம் மற்றும் திரு. கனேஷ், ஹோப் காலேஜ் ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
எனக்கு வாழ்த்து மடல் அனுப்பிய அனைத்து நபர்களில் என்னை கவர்ந்த மடல் இதோ..
பாராட்டு
அன்பு உள்ளம் கொண்ட கோவை ரவி அவர்களூக்கு,
ஆருயிர் உள்ளம் கொண்ட உடுமலை நடரஜன் பாரட்டுமடல்!
இரவின் மடியில் நிகழ்ச்சியில் 283ஆவது வார நேயராக கல்ந்தீரே!
ஈடு இணையில்லை மகனே உமது கருத்துத் கோர்வைகளூக்கு!
உண்மையாக மக்களின் இன்றைய ரசிப்பினையறிந்து - நல்ல
ஊன்று கோலான பாடல்களை சரித்திரச்சுவையுடன் தந்தீரே
எவ்வளவோ வாரங்கள் கழித்து கருத்துடன் பாடல்கள் வாராத என
ஏங்கி இருந்த நெஞ்சங்களுக்கு நல்ல நிம்மதி கிடைத்தது!
ஒரு நாளிலே கேட இன்றைய பாடல் ஓடிப் போகிறது இன்றே!
ஓராயிரம் முறை கேட்டாலும் பழைய பாடல் ஒன்றிப்போகிறது உள்ளத்துடன் என்றும்!
ஐயமுறச் சொல்கிறேன் நல்ல அருமையான விளக்கங்கள்!
ஔவை அளித்த ஆத்திச்சூடியின் அறிவே இளஞ்சிறார்களுக்கு!
அஃதறிந்த உமது பாடல்களின் அருமையே அணைத்து நேயர்களுக்கு!
எமக்கும், அன்புடன்
கே.நடராஜன்
(ஓய்வு பெற்ற-வட்டாசியர்-உடுமலை)
நாள்:12.1.2009
ஸ்ரீ தாமரையம்மன் இல்லம், 10,குமரன் வீதி, உடுமலைப்பேட்டை
தொலை பேசி:95-4252-220164, அலைபேசி:98433 20164
இந்த வாழ்த்து கடிதத்தி அனுப்பிய மதிப்பிற்குரிய ஐயா திரு.நடராஜன் அவர்களுக்கு என் இதயங்கனிந்த நன்றி.
இந்த ஒலிக்கோப்பை 12.12.2009 தேதி வரை நமது இணைய தள இசையண்பர்கள் 275 பேர் தரவிறக்கம் செய்து கேட்டுள்ளார்கள் அவர்களூக்கும் நன்றி. இணையத்தொடர்பில் கேட்கமுடியாதவர்கள் தயவு செய்து தரவிறக்கம் செய்து கேட்கலாம். (TRACK DETAILS க்ளிக் செய்தால் தரவிறக்கம் செய்யலாம்)
|
படம்: கண்காட்சி
நடிகர்: சிவக்குமார், பத்மனி
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி, எல்.ஆர்.ஈஸ்வரி
இயக்குநர்: ஏ.பி.நாகராஜன்
இசை: கே.வி.மகாதேவன்
அனங்கன் அங்கஜன் அன்பன்
வசந்தன் மன்மதன் என்றும்
வணங்கும் என் உயிர் மன்னவா
அனங்கன் அங்கஜன் அன்பன்
வசந்தன் மன்மதன் என்றும்
வணங்கும் என் உயிர் மன்னவா
மண் உயிர் பிம்பம்
வழங்கும் உன் புகழ் சொல்லவா
கதம்பம் சென்பகம் தங்கும்
கருங்கூந்தல் கவின் பொங்கும்
கனிந்து ஓங்கும் பெயர் கன்னியே
கதம்பம் சென்பகம் தங்கும்
கருங்கூந்தல் கவின் பொங்கும்
கனிந்து ஓங்கும் பெயர் கன்னியே
அன்பெழுந்தங்கம் கலந்தின்பம் தரும் கன்னியே
ஆடலும் பாடலும் அன்பின்
ஊடலும் கூடலும் இன்பம்
தேடலும் உன் செயல் அல்லவா
ஆடலும் பாடலும் அன்பின்
ஊடலும் கூடலும் இன்பம்
தேடலும் உன் செயல் அல்லவா
நீ இல்லையென்றால் வாடிடும் வையகம் அல்லவா
அழகு தமிழே பழகும் இசையே
அமுத நிலையே உனது செயலால்
அந்தரங்க சிந்து பாடுவார்
அழகு தமிழே பழகும் இசையே
அமுத நிலையே உனது செயலால்
அந்தரங்க சிந்து பாடுவார்
சந்ததம் காதல் மந்திரத்தை தினம் நாடுவார்
மனம் கொஞ்சும் மலர் மஞ்சம்
அடைந்துள்ளம் குளிர் தங்கம்
கலந்தன்பின் நலம் காணுவோம்
குணம்கொள் பெண் அனங்கே உன்
மனம் கொண்டே மனம் தந்தேன்
இணைந்தொனறாய் சுகம் காணுவோம்
கலந்தன்பின் நலம் காணுவோம்
இணைந்தொனறாய் சுகம் காணுவோம்
மன்னா வா..
கண்ணே வா..
நீ வா.....
வாஆஆஆஆ
அனங்கன் அங்கஜன் அன்பன்
வசந்தன் மன்மதன் என்றும்
வணங்கும் என் உயிர் மன்னவா

7 comments:
பாலுஜியின் தகவல்கள் அருமை. மிக்க நன்றி.
Geetha
ravi ithe pol isai arasi s.janaki avarkalkku edhum blogirunthal theriyappadutthungal
Dear Shabi...
http://www.janakiamma.blogspot.com/
Pls go through here is Gread Janakiamma blog. Listern and enjoy.
thanks ravi/neengal ratchasan enra padatthil varun kiliye ilamkliye padal ketturukkireerhala SPB yin then voice super song kettuvittu padividungal idhu en viruppa padalum kooda
Dear Shabi,
Nichayam neengal ketta padal viraivil varum. Nandri.
ரவீந்திரா....... உமது பாடல் தொகுப்பும், விளக்கமும் மற்றவர்கள் உணர முடியா வண்ணம் உயரத்தில் இருக்கிறது.... இசையின் ஆழம் அறிந்தவர்கள் மட்டுமே உமது முத்தையும் உணர முடியும். இசைக்காக தன்னை அர்பணிக்க ஒரு 'தனி மனது' தேவை. அது உமக்கு இருப்பதாக தெள்ள தெளிவாக புரிகிறது. தொடரட்டும் உமது இசை பணி.
ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயாணா
ஆஹா இன்று 19.01.209 காலை 8.00 மணியளவில் மின்னஞ்சல் பெட்டியை திறந்ததும் உங்கள் கடிதம். மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி ஆர்.ஜி.எல்.என் சார். உலகளவில் உள்ள என் இசையண்பர்கள் உங்க்ள் குரலில் மனதை பரிகொடுத்துவிட்டார்கள். நமது சூரியன் பண்பலை இனிய இரவு மற்றும் இரவின் மடீயில் நேயர்களீன் வித்தியாசமான தொகுப்புகள் நிச்சயம் உலகளவில் அவர்களின் திறமைகளை உங்கள் குரல் மூலம் கொண்டு செல்ல நான் ஒரு ஏணியாக இருப்பேன் இது சத்தியம். இதற்கு உங்கள் ஒத்துழைப்பு வேண்டும். இணையத்தில் நான் பதிவதால் ஏதாவது பிரச்சனைகள் உருவாகும் என்று உங்களூக்கு மனதிற்க்கு தோன்றினாலும் எனக்கு உடனே தெரிவியுங்கள் நான் நிறுத்திக்கொள்கிறேன். இதைப்பற்றி தங்களின் கருத்துக்களை த்ரிவியுங்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பேன்.
//ரவீந்திரா....... உமது பாடல் தொகுப்பும், விளக்கமும் மற்றவர்கள் உணர முடியா வண்ணம் உயரத்தில் இருக்கிறது.... இசையின் ஆழம் அறிந்தவர்கள் மட்டுமே உமது முத்தையும் உணர முடியும். இசைக்காக தன்னை அர்பணிக்க ஒரு 'தனி மனது' தேவை. அது உமக்கு இருப்பதாக தெள்ள தெளிவாக புரிகிறது. தொடரட்டும் உமது இசை பணி. //
24 மணி நேரமும் இசை சிந்தனையிருந்தால் தான் ஓரளவுக்கும் நாம் வெளிப்படுத்தமுடியும் என்பது என் கருத்து. எல்லாப்புகழும் அந்த இறைவனுக்கும், என் அபிமான பாட்கர் பாலுஜிக்கே போய் சேரும். அவரால் தானே உங்களை போன்ற அன்பு உள்ளங்கள் இனிய நண்பர்களாக கிடைத்தார்கள். உங்கள் ஆதரவால் என் இசைப்பணி என்றும் என்றென்ன்றும் தொடரும்.
Post a Comment