732 ஆசை போவது விண்ணிலே

பாடல் என்றால் இப்படிதான் தான் இருக்கவேண்டும். எப்படி என்கிறீர்களா? என்னவொரு அழகான மெட்டு ஆர்பாட்டமில்லாத தாளம் எங்கேயோ எப்போதோ கேட்ட மெட்டு போல் இருக்கிறது என் பள்ளி பருவத்தில் கேட்ட பாடல்கள் இவை. சீரான வரிகள் கேட்டு பாருங்கள் பாலுஜி எவ்வளவு அமர்க்களமாக வார்த்தை சுத்தமாக பாடியிருக்கிறார். இதுபோல் பாடல்கள் என்றால் நமக்கு கேட்டு வரிகள் தட்டச்சு செய்ய குதுகுலம் தான். ஆஹா..ஆஹா.. சரணங்களில் வரும் சீரான தாளம் மறக்க முடியவில்லை அனுபவியுங்கள் அன்பர்களே. இந்த தளத்தில் ஒரு நேயர் திரு. மகேஷ் அவரகள் சென்ற பதிவில் ஒரு வேண்டுகோள் விடுத்தார். பதிவில் பாலுஜியைப் பற்றி தகவல்கள் மற்றும்
கேள்விகள் கேட்கலாமே என்று இணையதள அன்பர்கள் தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் என்று ஒரு யோசனையை வழங்கினார். இந்த தளம் ஆரம்பிக்கும் போதே இந்த யோசனை இருந்தது தான். அதிக பட்ச பாலுஜி நேயர்கள் அவரைப் பற்றிய தகவல்கள் அறிந்து
வைத்து இருப்பார்கள் இருந்தாலும் அறிதான புதிதான தகவல்கள் தரலாம் அதுமட்டுமல்லாமல் பதிவில் இடம் பெறாத கலைஞ்சர்களின் பெயர்களூம் கேள்வியாக கேட்கலாம் தெரிந்த அன்பர்கள் வழங்கலாம். ஒரு நல்ல யோசனையை வழங்கிய திரு. மகேஷ் அவர்களுக்கு மிக்க நன்றி. இனி வரும் பதிவுகளில் முடிந்த வரை தகவல்களூம் சேர்க்கப்படும்.
|
படம்: நாம் பிறந்த மண்
பாடியவர்: எஸ்.பி.பி
கதை: ராஜசேகர்
சிவாஜிகனேசன், கமலஹாசன், கே.ஆர்.விஜயா
இசைள் எம்.எஸ்.விஸ்வநாதன்
இயக்குநர்: வின்செண்ட்
வருடம்: 7 அக்டோபர் 1977
ஆசை போவது விண்ணிலே
கால்கள் போவது மண்ணிலே
ஆசை போவது விண்ணிலே
கால்கள் போவது மண்ணிலே
பாலங்கள் போடுங்கள் யாராவது
பாடி ஆடுங்கள் இன்றாவது
பாலங்கள் போடுங்கள் யாராவது
பாடி ஆடுங்கள் இன்றாவது
இங்கு கான்கின்ற சொர்க்கங்கள்
இரண்டில் ஒன்றான வர்க்கங்கள்
இங்கு கான்கின்ற சொர்க்கங்கள்
இரண்டில் ஒன்றான வர்க்கங்கள்
சட்டம் இல்லாத சங்கங்கள்
தர்மம் தாளாத தங்கங்கள்
கட்டிடம் ஜொலிக்கிறது
அஸ்திவாரம் அழுகிறது
ஆசை போவது விண்ணிலே
கால்கள் போவது மண்ணிலே
யாரும் சிந்தட்டும் கண்ணீரை
நீங்கள் தெளியுங்கள் பன்னீரை
யாரும் சிந்தட்டும் கண்ணீரை
நீங்கள் தெளியுங்கள் பன்னீரை
இருட்டில் எப்போதும் இன்பங்கள்
வெளிச்சம் வந்தால்தான் துன்பங்கள்
இன்பங்கள் தூங்குவதில்லை
துன்பங்களூம் அப்படித்தான்
பத்து பதினொன்னு பன்னிரண்டு
சொத்து பலகோடி நமக்குண்டு
பற்ற வையுங்கள் இப்போது
பாவம் சந்திப்பது எப்போது
உழுதவர்கள் வாடுகிறார்கள்
அறுத்தவர்கள் ஆடுகிறார்கள்
ஆசை போவது விண்ணிலே
கால்கள் போவது மண்ணிலே
பாலங்கள் போடுங்கள் யாராவது
பாடி ஆடுங்கள் இன்றாவது
தெய்வம் சிலநேரம் சிந்திக்கும்
மண்ணில் கார்வேரை மன்னிக்கும்
தெய்வம் சிலநேரம் சிந்திக்கும்
மண்ணில் கார்வேரை மன்னிக்கும்
இந்த மன்றத்தில் ஆடுங்கள்
அந்த மன்னிப்பை கூறுங்கள்
இறைவாஆஆஆஆ.... என்னை மன்னித்துவிடு

4 comments:
Ippadi Oru Inia ariya padal ketka vaithadharku Nandrigal Nanbar Ravindran.
Ippadi Oru Ariya Inia padal Ketka Vaithadharku Nanbar Ravindran avarkaluku NANDRIGAL
Ippadi oru inia ariya padal ketka vaithadharku Nadrigal Nanbar Ravindran.
vaanga Jagadeeshs sir
nandri nandri nandrikal
Post a Comment