கற்பனை வானில் நீங்குகின்ற கதாநாயகி இனிமையான மெட்டு கொண்ட பாடல் எவ்வளவு வருடங்களாயிற்று இது போல மெலோடி பாடல்கள் கேட்டு அனுபவியுங்கள் அன்பு உள்ளங்களே.

5

ஹானஸ்ட்ராஜ் கேப்டன் விஜயகாந்த் நடித்த படம் பார்த்ததாக நினைவில்லை. இந்த பாடல் அதிகம் பிரபலமில்லை பாடல் வரிகள் கூட காரணமாக இருக்கலாம்.

1

ஆசை தீர பேச வேண்டும் உன்னிடத்தில் ஓர் இனிமையான பழைய பாடல் கேட்டுக்கொண்டே இருக்கலாம். நீங்களூம் கேட்டு அனுபவியுங்கள்.

//முகம் என்ன மோகம் என்ன.. விழி சொன்ன பாஷை என்ன பேர் என்ன// பல்லவியே மிகவும் இனிமையாக இருக்கும். பாட்டில் பாலுஜியும், ஜானகியம்மாவும் சேர்ந்து தங்கள் குரல்களில், என்னத்த சொல்ல பின்னி பெடலெடுத்ததிருப்பார்கள். கேட்டு மகிழுங்கள்.

3

அதர்மம் படம் சுத்தமாக எனக்கு நினைவில் இல்லை. இப்படி ஒரு இனிமையான பாடலை பாலுஜியும், சித்ரா மேடமும் தங்கள் குரலில் பாடியிருக்கிறார்கள், எப்படி குழந்தையை கொஞ்சுகிறார்கள் கேளூங்கள். படம் பார்க்காவிட்டால் என்ன? பாட்டு நமக்கு ஒகே தானே சார்? பின்னே என்னங்க இதையும் கேட்டுடுங்க...

7

அடபோங்கப்பா.. மனுசன் இதுபோல மனதை மயக்கும் மெலோடி பாடல்கள் எத்தனை தான் பாடியிருக்கிறாரோ தெரியவில்லை இந்த பாடல் இரண்டு நாட்கள் முன் எனக்கு கிடைத்தது. எப்பவோ கேட்ட நினவு படம் செங்கோட்டை பார்த்ததாக நினவு இல்லை. இருந்தாலும் இணையத்தில் தேடினால் ஏகப்பட்டப்பேர் ரசித்திருக்கிறார்கள்.

//பூமேடை குலுகுழுங்க போராட.. தேனோடைவழிய வழிய தானாகவே// என்ற பல்லவி கொண்ட இனிமையான பாடல் டாக்டர் எஸ்.பி.பாலுஜியின் இசைப்பயணத்தில் மற்றுமொரு ஏற்கெனவே கேட்ட பாடல் மீண்டும்...

5

"ஏழை வீட்டில் பூத்த காலை நேரப் பூவே" என்ற இந்த பாடல் எப்பக்கேட்டோம் ம் ம் ம் ம் ம்ஹும் சுத்தமா நினைவுக்கு வரமாட்டீங்குது. படப்பெயராவது கேட்டிருக்காமா? இல்லையிலை “அபிராமி” என்றவுடனே கமல் தான் நினைவிற்க்கு வருகிறார். சரி சரி பாட்டையாவது கேட்டு வைப்போம். ரொம்ப நல்ல பாட்குங்க.

பருவம் பாடும் பாட்டு உன் முகம் பார்த்து நிச்சயம் மொழி மாற்றம் செய்யப்பட்ட படத்தின் பாடல் போல் தான் உள்ளது. பாலுஜியின் குரலும் ஜானகியம்மாவும் குரலும் மிகவும் இனிமையாக இருக்கும். கேட்டுத்தான் பாருங்களேன்.

1

இதோ ஒரு கிளுகிளுப்பான பாடல் பாலுஜி சித்ரா குரல்களில் மனசை முச்சூடும் ஆக்ரமிக்கும். கேளூங்கள் சந்தோசமாக இருங்கள்.

நிலவுக்கு வயதென்ன பதினாறா இந்த அமர்க்களமான பழைய பாடல் கேட்கவே அசத்தலாக இருக்கும். ஏற்கெனவே இணையதளத்தில் பேசியிருக்கிறார்கள். ரொம்ப நாட்களாகவே பதிய வேண்டும் என்ற ஆசை இப்போது தான் நேரம் அமைந்திருக்கிறது. பாலுஜியின் குரலில் சரணங்கள் சரளமாக புகுந்து விளையாடும்.

வைகாசிப்பொறந்தாச்சி என்ற படம் பெயர் கேட்டவுடனே சட்டென அனைவருக்கும் வரும் பாடல் "தண்ணி கொடம் எடுத்து வந்தா தவிக்குது மனசு தவிக்குது” கேட்டவர் அனைவரின் உதடும் முணுமுணுக்கவைக்கும் பாட்ல். இதோ இந்த பாடலில் தன்னையும் அறியாமல் தாளம் போடவைக்கும் ரிதமிட்டாகாக பாலுஜி அசத்தியிருப்பார் மெட்டு அப்படி.

6

அடெங்கப்பா! இந்த பாடலின் பல்லவியை கேளூங்கள் கேட்டுட்டே இருக்கலாம். ஆமாங்க பல்லவியெ அமர்க்களமாக கிச்சடியும், அதற்க்கு பச்சடியும் பன்னியிருப்பார்கள் மன்னிக்கவும் கண்ட்ரோல் பன்னமுடியலங்க. ஹோட்டலில் போய் ஒரு வெஜிடேபில் கிச்சடி சாப்பிடனும். அந்த உனர்வை ஏற்படுத்திடுச்சு இந்த பாடல்.

2

படம் பெயர் பாலூட்டி வளர்த்தகிளி இருக்கட்டும். ஆனால் பாலுஜி குரலும் ஜானகியம்மா குரலும் ஒன்றோடு ஒன்று பாடல் வரிகளில் நெஞ்சில் பாலை வார்ப்பது போல் மெலோடி ராசய்யா மெட்டில் மெருகேற்றுகிறது. எத்தனை தடவை கேட்டாலும் தெவிட்டாத பாடல். மீண்டும் கேட்டு மகிழுங்கள்.

2

இந்த பாடலைப்பற்றிய ஒரு ஸ்வாரசியமான விளக்கமும் போட்டியும் வாசகர்களின் பதிலகளூம் 2005 லேயே மரவண்டு பதிவில் காலாச்சிருக்காங்க இதையே என் விளக்கமாகவும் படிச்சிடுங்க (ஹி..ஹி..

இந்த பாடலின் பல்லவியில் ஏற்கெனவே நமது வற்றாயிருப்பு காரர் ஒரு பாடல் பதிந்துள்ளார். இந்த பாடல் பதிவதற்க்கு முன் தகவல் தேடும் போது கொஞ்சம் மலங்க மலங்க விழித்தேன் ஏற்கெனவே தல போட்டுட்டாரே.. என்று அப்புறம் பாடல் வரிகள் பார்த்தவுடன் அடடே அது இதுவல்ல என்று ஆசுவாசபடுத்திக்கொண்டேன்.

3

இசையன்பர்களே இதோ அப்போதோ ஏழிசை வேந்தன் டி.எம்.எஸ் அன்ணாவும் தேன்குரல் தென்றல் பாலுஜியும் எப்படி போட்டி போட்டுக்கொண்டு பாடுகிறார்கள் கேட்டு மகிழுங்கள். ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்களா என்ன? டி.எம்.எஸ் அண்ணா சுருதிக்கு எப்படி எம்பி எம்பி எட்டி எட்டி பிடிக்க முயற்சி செய்கிறார் என்று கேளுங்கள்.

6

அழகே உன் பெயர் தானோ ஆமாஙக பல்லவியே அமர்க்களமாக இருக்கிறது. பாடல் சரனங்கள் கேட்பதற்க்கு அமர்க்களமாக இருக்கும். கேளுங்கள் சந்தோசமாக இருங்கள்.

2

பாடலை கேட்டால் டப்பிங் பாடல் மெட்டு தான் என்று தலையில் அடித்து சொல்லிடுவார்கள். பாடல் இறுதியில் சில வரிகள் காணாம போயிருக்கும் கரெக்ட்டான ஒலிக்கோப்பு கிடைத்ததும் மாற்றிவிடுகிறேன். அதுக்குள்ளே என்ன அவசரமோ? என்று இந்த தளத்தின் தல முணுமுணுப்பது கேட்குது.

மனுசன் இப்படியெல்லாம் பாடுறாரே? இந்த கில்பான்ஸ் பாட்டெல்லாம் எப்போ பாடினார் என்று யோசிக்க யோசிக்க இப்படியும் பாடியிருக்கிறாரா? என்று பாடல்களை கேட்க கேட்க சந்தோசத்தில் மனசு துடிக்குது தான். என்ன பன்றதுங்க படத்தை பார்க்கவில்லையே பாடலையாவது கேட்போம்.

இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading