இசையன்பர்களே ஒரு விறுவிறுப்பான குத்துப்பாட்டு கேட்போமா? இந்த பாடலின் பல்லவியே அமர்க்களமாக இருக்கும். இந்த பாடல் கேட்க்கும் போது உங்கள் தலை, கை மற்றும் உடம்பு தாளத்திற்கேற்றார் ஆடியே தீரும். ஆடவில்லையென்றால்.. ஆடவில்லையென்றால் என்னத்த சொல்ல.. ஆடும் சார் ஆடும்...

அது சரிங்க..

6

சமீபத்தில் என் கைக்கு கிடைத்த இந்த பாடல் பற்றி படத்தகவல்கள் கிடைக்கவில்லை

இனிமையான, அருமையான டப்பிங் படப்பாடல் போல் கேட்க நன்றாக தான் இருக்கிறது. பல்லவியே அமர்க்களமாக இருக்கிறது. // சின்ன சின்ன மழைத்துளி மெல்ல மெல்ல பருவம் மீறவே.. செங்கனி போலே குலுங்குது பருவத்தின் தேகமே..

தளபதி, இளைய தளபதி, புரட்சி தளபதி, இதய தளபதி இப்போ சின்ன தளபதி.. அடபோங்கப்பா... ”மூணாம் பிறையே முத்தமிழே - சின்ன தளபதி..” நிச்சயமா இந்த பாடலுக்கு படப்பெயர் இதே தாங்க. அருமையான ஒரு சோகப்பாடலுக்கு இப்படி ஒரு தலைப்பு.

//வளைக்கரம் உன்னை வளைக்குது மெல்ல.. மனசுல உள்ள வெவரத்த சொல்ல

பெஞ்சாதி நீயிங்கு ஆனபின்னாலே.. பஞ்சாங்கம் பார்க்கனுமா..// பாலுஜியும், சித்ராமேடமும் இந்த பாட்டுல கலக்குறாங்கப்பா.. பல்லவியே அமர்க்களம்...இனிமையான பாடல் கேட்டு மகிழுங்கள்.

//பூவரசன் பூவே பூவின் தேனே அடிபொன் மானே..நாவரசன் பாடும் பாடல் தானே அது செந்தேனே..கன்னி எழுது கவிதை முழுதும்.. புன்னகையில் தாளம் போடும் கோலம் தான்

கையில் எழுத ஏடு கொடுத்தாய்.. உன் உடலில் தாகம் தீரும் நேரம் தான்.. வீணை மடியில் விரலின் தயவில் மெல்லிசையை..

ராஜராஜ சோழன் படமென்றாலே அனைவருக்கும் ஒரு சேர நினைவிற்க்கு வருவது நடிகர் திலகத்தின் செமத்தியான நடிப்பும் அடுத்தது “ஏடுதந்தானடி தில்லையிலே” என்ற பாடல் தான் பட்டென்று நினைவுக்கு வரும். இந்த பாடலை எத்தனை பேர் கேட்டிருப்பார்கள் என்று இப்போதெல்லாம் கணக்கு எடுக்க முடியாது.

4

இசையமைப்பாளர்: திரு. ஜெர்ரி அமல்தேவ்

நடிகர் ரகுமான் அவர்கள் நடித்த இந்த நினைவோ ஒரு பறவை படத்தில் வருகிறது இந்த மெலொடியான பாடல். ஆமாங்க தலமுடிய பிச்சுககாதீகங்க 1986ஆம் ஆண்டு தயாரித்த இந்த படம் வெளிவரவே இல்லைங்க ஹி.. ஹி..

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த வறுமை நிறம் சிகப்பு படத்தில் பாலுஜியும் ஜானகியம்மாவும் ஒரு இனிமையான பாடலை பாடியிருப்பார்கள். அந்த பாடல் சிப்பி இருக்குது முத்து இருக்குது திறந்து பார்க்க என்ற பாடல் பட்டி தொட்டியெல்லாம் கலக்குச்சு ஏன் இன்றும் கூட பாலுஜி தன் நிகழ்ச்சியில் பாடி பட்டையை கிளப்புகிறார்.

மோகன்லால் நடித்த படம் கேரளாவில் சக்கைபோட்ட படம். இந்த படத்தில் பாலுஜி டப்பிங் கொடுத்துள்ளார் என்று கேள்விப்பட்டேன். இந்த பாடல் மொழி மாற்றம் செய்த பாடலோ என்னவோ தெரியவில்லை?. சில இடங்களில் இசையும் வரிகளூம் சேர்ந்தால் போல் வருவதால் வரிகளை தாளம் ஆக்ரிமித்து விடுகிறது. பாடல் வரிகள் சரியாக புரியவிலலை.

//லட்டு தான் சிட்டு இவள் தொட்டுத்தா தொட்டு.. இளம் தேகம் மனம் வேகம் சரசம் ஆடட்டும்.. முத்தமிடும் ங்கொய்யா ஹொய்யரா ஹொய்யா..ஒரு மெத்தையிட வேணும் ஹொய்யாரா ஹொய்யா.. தேனிருக்கும் இது ஆடை நிலா.. தேர்ந்தெடுக்கும் ஒரு கோடை விழா..

2

அறிதான பாடல்களை கூட சல்லடை போட்டு தேடிப்பிடித்து விடலாம் போலிருக்கிறது இந்த பாடலின் படத்தின் தகவல்கள் கலைஞர்கள் யார் யாரென்று இணையத்தில் தேடுவதற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது.

2

//கன்னித் தமிழோ கம்பன் கவியோ.. மின்னல் சரமோ புது மேக ரதமோ.. அழகே கொஞ்சும் மேனகை.. விழிகள் தந்த தாரகை.. மண்ணில் வந்த ரம்பை அவள்.. மங்கை அந்த கங்கை மகள்.. தேவதை ஊர்வசியோஓஓஓஓ.. பூவோ பெண் பொன்வண்ணமோ///

இப்படி அழகான வரிகளில் தொடங்கும் இந்த பாடல் அபிராமி படத்தில் வருகிறது.

4
இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading