767 மூணாம் பிறையே முத்தமிழே

தளபதி, இளைய தளபதி, புரட்சி தளபதி, இதய தளபதி இப்போ சின்ன தளபதி.. அடபோங்கப்பா... ”மூணாம் பிறையே முத்தமிழே - சின்ன தளபதி..” நிச்சயமா இந்த பாடலுக்கு படப்பெயர் இதே தாங்க. அருமையான ஒரு சோகப்பாடலுக்கு இப்படி ஒரு தலைப்பு. சரி படத்தகவல் பற்றி ஏதாவது இணையதளத்தில் கிடைக்குதா என்று தேடினால் எப்படி குட்டி கரணம் போட்டும் சின்ன தளபதி என்று தேடினால் மேலே இருக்காரே பரத் அவர் தான் டபக்கு டபக்குன்னு வந்து விழுறார். சரிங்க //பாலும் சோறும் நிலவைக் காட்டி உனக்கு ஊட்டவில்லை.. சங்கத் தமிழை சங்குல ஊத்தி தந்தது கொஞ்சமில்லை.. சொந்தம் வேறு ஒன்று பார்க்கல்ல சொர்க்கம் உன் சிரிப்பில.. அன்பை போல இன்றி மண்னில சொந்தம் எதுவும் இல்லை.. ஊருக்குள் குளிரு நடுங்கும் தளிரு போர்வை மூடட்டுமா.. என்றும் இன்னிசை பாடட்டுமா.. // இந்த இனிமையான வரிகளூக்காகவே கேட்டுட்ங்களேன். அப்படியே பாட்ட கேட்டுக்கொண்டே படத்தகவல் தாங்களேன்...
|
மூணாம் பிறையே முத்தமிழே
பொங்கும் வைகை நதியே ஆராரிரோ
தேனே தித்திக்கும் வானமுதே
தங்கத்தாமரை மடலே தாலேலோ
மடியில் பூத்த மல்லிகையே
எனக்கு தாயாக வந்தவளே ஹோய்
சொட்டும் மழைத்துளிதான்
தாளம் தட்டு தாலாட்டு
மூணாம் பிறையே முத்தமிழே
பொங்கும் வைகை நதியே ஆராரிரோ
மாமா அடிச்சதாரோ மல்லியப்பூச்செண்டாலே
அத்த அடிச்சாளோ அல்லிப்பூ தண்டாலே
யாரடிச்ச சொல்லிவிடு என் அன்னமே சொல்லிவிடு
பொன் அங்கிலில் தொட்டில் போட்டு தென்றலும் தூங்குதம்மா
அன்னக்கிளிகள் ஆலமரத்தில் கண்களை மூடுதம்மா
திண்ணை வானத்துல வென்னிலா ஹோய் மேக தோகை மூடுதே வண்னபூக்களெல்லாம் பூக்களெல்லாம் மௌனமாய் ஹோய்
செவிகள் மூடி தூங்குதே
என்னென்ன கனவு ஏதோ நினைவு கண்மணி தூங்கிடம்மா
இன்னும் நித்திரை நாடகமா
மூனாம் பிறையே முத்தமிழே
பொங்கும் வைகை நதியே ஆராரிரோ
மூனாம் பிறையே முத்தமிழே
இது யாரு கொம்பு யாரு கொம்பு ஐயன் கொம்பு
ஐயன் எங்கே பூப்பறிக்க பூ எங்கே
காயா போச்சு காய் எங்கே
காய் எங்கே பழமா போச்சு
பழத்த எங்கே தின்னுட்டா
அவன வெட்டுட்டா குத்துட்டா வெண்ணீர் காய்ச்சி ஊத்துட்டா
பாலும் சோறும் நிலவைக் காட்டி உனக்கு ஊட்டவில்லை
சங்கத் தமிழை சங்குல ஊத்தி தந்தது கொஞ்சமில்லை
சொந்தம் வேறு ஒன்று பார்க்கல்ல சொர்க்கம் உன் சிரிப்பில
அன்பை போல இன்றி மண்னில சொந்தம் எதுவும் இல்லை
ஊருக்குள் குளிரு நடுங்கும் தளிரு போர்வை மூடட்டுமா
என்றும் இன்னிசை பாடட்டுமா
மூணாம் பிறையே முத்தமிழே
பொங்கும் வைகை நதியே ஆராரிரோ
மடியில் பூத்த மல்லிகையே
எனக்கு தாயாய் வந்தவளே
சொட்டும் மழைத்துளிதான்
தாளம் தட்டு தாலாட்டு
சொட்டும் மழைத்துளிதான்
தாளம் தட்டு தாலாட்டு

0 comments:
Post a Comment