770 லண்டன் தமிழ் வானொலியில் பாலுஜியின் ஒலித்தொகுப்பு
![]()
ஜெர்மனியின் செந்தேன் மலர் திருமதி. ராகினி பாஸ்கரன் லண்டன் தமிழ் வானொலி
லண்டன் தமிழ் வானொலியில் பாலுஜியின் ஒலித்தொகுப்பு ஒலிஉலா வரவிருக்கிறது கூடிய விரைவில்.
பாடும் நிலா பாலு தளத்தின் மூலம் பாலுஜியின் அற்புதமான பாடல் தொகுப்புக்கள். கோவை சூரியன் பண்பலை, ஆல் இந்தியா ரேடியோ, ஆகிய வானொலிகளில் பாலுஜியின் சிறப்பு ஒலித்தொகுப்புக்கள் வந்துள்ளன இதோ இந்த ஒலித்தொகுப்பு கடல்
தாண்டி வாழும் நம் தமிழ்நெஞ்சங்களூக்காக பாலுஜியின் சிறப்பு கவிதை ஒலித்தொகுப்பு தான் இது. கூடிய விரைவில் லண்டன் தமிழ் வானொலியின் மூலமாக
வானவெளியில் வலம் வரகாத்திருக்கிறது அன்பர்களே ஆச்சரியமான விசயம் ஆகும். முதலில் இதை உருவாக்கிய இசைப்பிரியை பாலுஜியின் குரல் மீது பாசமிகு அன்பை கொண்டுள்ள மழலை கொஞ்சும் குரல்யாளினி தொகுப்பாளினி திருமதி. ராகினி பாஸ்கரன் அவர்களூக்கும், இந்த தளத்தின் மூலம் எனக்கும் அவருக்கும் பாலுஜி அவர்களூக்கு நன்றியை தெரிவிக்கும் வாய்ப்பை வழங்கிய வற்றாயிருப்பு சுந்தர் அவர்களூக்கும் என் மனமார்ந்த நன்றியை பெருமையுடன் தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
இனி திருமதி.ராகினி பாஸ்கர் அவர்களின் ரத்தின சுருக்கமான சிறிய ஓர் அறிமுகம் இவர் லண்டன் தமிழ் வானொலி மற்றும் டி.ஆர்.டி தமிழ் வானொலிகளின் நிகழ்ச்சி தொகுப்பாளினி, மழலை கொஞ்சும் குரல்யாளினி தன் கவிதைகள் மூலம் திரை இசைப்பாடல்களை வழங்கி வெளிநாடுகளில் வாஞ்சையுடன் வாழும் தமிழ் நெஞ்சகளூக்காக மகத்தான சேவை செய்கிறார். இவரின் அற்புதமான பணி பாராட்டுக் குரியது. சமீபத்தில் எனக்கு அறிமுகமான இவரிடம் நான் “டாக்டர் எஸ்.பி.பி மீது உங்கள் கொஞ்சும் குரலில் ஒரு கவிதை ஒலித்தொகுப்பு வழங்குங்கள் எங்களுக்காக” என்று அன்பு வேண்டுகோள் விடுத்தேன். அவர் இருக்கும் வேளை பளூவிலும் நடக்குமா என்ற சந்தேகத்துடன் தான் இருந்தேன். என்ன ஒரு ஆச்சரியம் ஒரே நாளில் அவர் மீது கொண்ட அன்பால் கவிதைகள் புணைந்து பாடல்கள் தேர்வு செய்து ஒலித்தொகுப்பாக வழங்கியது சாதாரணமான விசயமல்ல. அவர் கவிதைகள் மீது கொண்ட ஆர்வத்தை கண்டு பிரமித்துப்போனேன். எப்படி எப்படி முடியும் என்று இன்னும் கூட என் ஆச்சரியம் தீரவில்லை. அவர் தொகுத்துள்ள அதிக பட்ச பாடல்கள் இதுவரை இந்த தளத்தில் இடம் பெறவில்லை என்பதே சிறப்பு. அது மட்டுமல்லாமல் ஒலித்தொகுப்பை கேளூங்கள் அன்பரே என்று தொகுப்பையும் முதன் முதலாக அனுப்பியும் விட்டார். நான் அதை பாலுஜியின் அபிமானத்தை பெற்ற அன்பர்களூக்காக வழங்குவதில் அவருடன் சேர்ந்து நானும் பெருமை கொள்கிறேன். இப்பேர்பட்ட இசையன்பர்களை வழங்க காரணமாக இருந்த பாலுஜிக்கு நான் ஆயுள் முழுவதும் கடமைப்பட்டவனாவேன்.
கவிதைகளை எத்தனைபேருக்கு படிக்கப் பிடிக்கும், கேட்கப்பிடிக்கும்? எனக்குக் கேட்பது தான் இனிமை. வைரமுத்து அவர்கள் கவிதைகளை படித்தாலே மிகவும் அற்புதமாக இருக்கும் போதாதற்கு பாலுஜியின் கேட்டால்... அடெங்கப்பா.. வேணாம் உணர்ச்சி வயப்பட்டு ஏதாவது எழுதிவிடுவேன். தொகுப்பாளினி எவ்வளவு அனாயசமாக கவிதைகளை குற்றால அருவியாய் கொட்டுகிறார் என்று கேட்டுத்தான் பாருங்களேன்.
இனி கவிதைச்சோலைக்குள் நுழையலாமா அன்பர்களே..
|
துவக்கமே அமர்க்களமாக துவங்குகிறார் தொகுப்பாளினி..திருமதி. ராகினி பாஸ்கரன் அவர்கள்.
ஜெர்மனியின் செந்தேன் மலரே....
உலகம் முழுவதும் வியாபித்து விலா நோக வேலை செய்யும் அன்பு தமிழ் வாழ் நெஞ்சங்களின் இசைரசனையையும்,அவர்களின் இசைஆர்வத்தையும் அவ்வளவு சீக்கிரம் கூண்டுக்குள் அடைத்து வைத்த கிளி போல் யாரும் கட்டிவைத்து விட முடியாது என்று சொல்லாமல் சொல்லி மிகவும் அனாயசமாக இந்த பாடலை தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார் அவரின் அற்புதாமான கவிதை பூங்கொத்தாக தொடுத்திருக்கிறார்.
1.குயிலப்பிடிச்சு கூண்டிலடைச்சு
யாரை பார்த்து பிரம்மிக்கின்றது உன் இதயம்
இசையும் கவியும் சேரும் இடம் மாறியதே
கடவுள் குற்றம் எனில் நீ என் செய்வாய் நான் என் செய்வேன்
வற்றிய நதியில் துருப்பிடித்த படகாய்.. நம் காதல் ஆனது..
2. இது குழந்தை பாடும் தாலாட்டு.. (இல்லை கொஞ்சும் குழந்தை பாடும் கவித்தாலாட்டு)
மேகத்தின் இருளின் மின்னல் போடும் அட்டகாசத்தை விட
உன் வார்த்தை கொட்டியது என் காதினில் இடியாய்
காத்திருந்தேன் காத்திருந்தேன் நீ ஒதுங்கி ஒதுங்கி சென்று விட்டாய்
என் காதலை சொன்னேன்.. என்னிடம் இதயமே இல்லை என்கின்றாய்
3.மேகம் தான் இதில் மழையே இல்லை (அபூர்வமான பாடல் அமர்க்களமாக)
என்னை நெருங்கிய வசந்தமே உண்மை
சொல்லத் தெரியாத உதட்டின் மொழியே
என் மனதில் இருக்கும் ஆசைகளை
எடுத்துரைத்த முடியாத இதயம்
ஊமையாய் இருப்பதைக்கண்டு
என் கோழைத் தனத்தை பார்த்து
வெட்கி நிற்கின்றேன் எனக்கு
காதல் தேவை தானா என்று..
4.பூங்கொடிதான் பூத்ததம்மா (இல்லை ஜெர்மனியின் செந்தேன் மலர் பூத்தது)
உன் பின்னே நிழலாய் பின் தொடர்ந்தேன்
நீ தந்த தண்டனையா இது ஜன்னல் திறக்கப்படவில்லை
சலங்கையின் ஓசைகள் மட்டும் கேட்க்கின்றதே
பாதாளச் சிறையில் என்னை தள்ளிவிட்டு
நடமாடும் பெண்ணே ஏன் என்று புரியவில்லை
கேள்விகளை தொடுத்து பதில் தெரியாத
புதிராய் கதவுகளை திறக்க சாவியை
தொலைத்த பாவி நான் உன்னை மீட்பதற்க்கு
இரும்புச்சாவியாய் இவரை அழைத்து வந்தேன்..
5.நானும் உந்த உறவை தேடி வந்த பறவை (பறவை மட்டுமா இந்த பாசக்கார பயல்களூம் தான்)
சங்கீதத்தின் ஸ்வரங்களில் ஏழிசை கீதமாய் வாழ்ந்தவளே
என்னை தடுமாற வைத்துவிட்டாய் என் வாழ்வுதனை
ஒவ்வொரு வினாடி பொழுதும் உன்னை
படைத்திட்ட கண்கள் உறங்க மறுக்கின்றதே
என் குரல் கேட்டால் உன் முகம் மலர்ந்திடும்
என்ற காலத்தை எரித்துவிட்டாய் இன்று
எரிவது நீயல்ல... நான்....
6.ஏழு ஸ்வரமும் இங்கே தடுமாறுது (உன் குரலை நேசிக்காதவர்களூக்கு)
பேசாதே நீ.. நான் பேசிய நாட்களெல்லாம்
நீ பேச மறுத்தாய் நான் பேச நேரமில்லை
நீ அழைப்பு விடுக்கின்றாய் அன்று நீ கேட்ட படலை
வழி மறுத்து உன் வாசமாக்கிவிட்டு நான் வாடிவிட்டேன்
என்ன சுகம் தர முடியும் உன்னால் எனக்கு
சுதந்திரமாய் நீ இருக்கையில் உதிர்ந்த மலர் உனக்கு எதற்கு
வாழிய பல்லாண்டு வாழிய வாழியவே.
7.வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது.. (ஹஹ...)
என்ன அன்பர்களே
கவிதைப்பா இனிக்கிறதா?
திருமதி.ராகினி பாஸ்கரின்
கொஞ்சும் மழலைக்குரலில் கேட்டால்
இன்னும் தேன்பாகாக தித்திக்கும்.
8.முகம் என்ன மோகம் என்ன.. (என்னவொரு இனிமை இதுதான் தித்திக்கும் தேன் சுவை என்பதா?)

தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவம்
ஒலித்தொகுப்பை மிகவும் சிரமப்பட்டு ஒலிப்பதிவு செய்து அனுப்பிய தொகுப்பாளினிக்கு அகில இந்திய பாலுஜி ரசிகர்கள் சார்பாக நன்றியை தெரிவிப்பதில் பெருமையடைகிறேன்.
அன்பர்களே.. பாலுஜியின் வித்தியாசமான குரல் பாடல்கள் விரைவில் இங்கே இதிலே.. ஒலிக்கோப்பு தொகுப்பாளினி திருமதி. ராகினி பாஸ்கரன். காத்திருப்புக்கள் என்றும் வீண்போவதில்லை.

9 comments:
paartheen unmaiyil santhoosam
எனது 25 நிகழ்ச்சிகள் ஓரே சீடியாக வெளிவந்துள்ளது
முக்கிய அறிவிப்பு
எனது 25 நிகழ்ச்சிகள் ஓரே சீடியாக வெளிவந்துள்ளது
முக்கிய அறிவிப்பு
(சில நாட்களில் மட்டும் எதிர்பாராத நிகழ்சி நேர மாற்றங்களின் காரணமா
லண்டன் தமிழ் வானொலில் எனது நிகழ்ச்சி லண்டன் நேரம் பகல் சுமார் 11மணிகும். ஜெர்மன் நேரம்.மதியம் சுமார் 12 மணிக்கும் இந்திய நேரம் பிற்பகல்-3.30 ஒலிபரப்பாகும்)
கேட்க முடியாத நேயர்களுக்கு ஒலிப்பதிவு அனுப்பி வைக்கப்படும்.
பிரான்ஸ் ரி ஆர் ரி தமிழ் ஒலியில் எனது நிகழ்ச்சி (குயில்தோப்பு) லண்டன் நேரம் மலை 5.20 க்கும் ஜெர்மன் நேரம் மாலை 6.20 க்கும் இந்திய நேரம் 9.50 க்கும் கேட்கலாம்
சற்லைற் வசதி இல்லாத வர்களுக்கு
இந்த நிகழ்ச்சியை நேரடி ஒலிப்பரப்பில் (LEVE) கேட்க கிழே உள்ள இணைப்பை அழுத்துங்கள்.
Rahini Baskaran,Germani
Dear Ravee
Thanks for the post - Baluji never ceases to amaze me!
வாங்க சுந்தர்..
ரொம்ப பிசியாக இருக்கீறீர்கள் போல... யாகூ குழு நண்பர்கள் யாரும் இன்னும் பார்க்கவில்லை போலும். இன்னும் கேட்ட்காதவரகள் அருமையான ஒலித்தொகுப்பை அதுவும் ஸ்டுடியோ பதிவு கோப்பை தவற விடுவார்கள்.
ராகினி மேடம்...
சரியான ஒலிப்பரப்பு நேரங்களை வழங்கியிருக்கிறீர்கள். நிச்சயம் பாலுஜி ரசிகர்கள் இணையத்திலாவது தேடி பிடித்து சிரமம் இல்லாமல் கேட்பார்கள் என்று நினைக்கிறேன். இது போன்ற ஒலித்தொகுப்புக்கள் வழங்குங்கள் நாங்கள் கேட்க தயாராக இருக்கிறோம். நன்றி.
ellorukkumnanri.
Akkarain Azhagu Tamil kavi Mozhiyil thoguthu Vazhangiya Tmt. Rahini Bashkaranin SPB Paadal thoguppu Ketka Anandham. London Vanolikku Nandri. Ketka Udhaviya Nanbar Covai Ravee avarkalukkum Nandri. Ulagengum Vazhum Tamil Uravukalukku Vanakkam. Vazhthukkal.
Jagadeesh
Coimbatore - 24
Tamil Nadu
from sri lanka very good oru jivantha en badal than
nizar
alnizar2@yahoo.com
Ravve from india nan srilanka but inkatta cina pona vatta so atta tamil verattau.nallama eppdi india irunku?evaryday itta wbside vattu song list panvan.
Shalu
Srilanka
nanrikal ungka varavuku
Post a Comment