Sunday, May 17, 2009

775 ஞாபகம் இல்லையோ என் தோழி



ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல மெலோடி புதிய பாடல் கேட்டேன். நம்ம நண்பர்களூக்கு வழங்காமல் இருக்கலாமா? ஞாபகங்கள் என்ற ஒரு படம் வரபோகுதுங்கோ நடிகர் வேறு யாரும் அல்ல பரவச பாடலாசிரியர் திரு.பா.விஜய் தான். அவர் வரிகளைலே இந்த பாடல் அமர்க்களமான மனதை கொள்ளைக்கொண்டு போகும் வயலின் பின்னணி இசையில் பாலுஜி குரல் கொஞ்சி கொஞ்சி விளையாடுகிறது. கேட்டுத்தான் பாருங்களேன்..

கேட்பதற்க்கு முன்.. சில...

பாலுஜியின் அன்பைப்பெற்ற அதிதீவிர ரசிகர் ஆயிரம் பேர் (தலை இல்லை) வாங்கிய அபூர்வசிகாமணி என்று எங்களால் அன்புடன் அழைக்கப்படும்

எஸ். பாலசுப்ரமணியம், நந்தினி
ஆகியோரின் திருமணம் வருகின்ற 22.05.2009 அன்று வெள்ளிகிழமை சென்னையில் அடையாரில் உள்ள விஜயராஜா திருமண மண்டபத்தில் நடக்கிறது மணமக்கள் இருவரும் மண மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துவோம்.

அதென்ன ”ஆயிரம் பேர் வாங்கிய அபூர்வசிகாமணி” என்று கேட்கத்தோன்றுகிறது தானே? இந்த தளத்தில் நான் எப்போது பதிவுகள் வழங்கினாலும் தவறாது வருகை தந்து நான் செய்யும் தட்டச்சு இலக்கணப்பிழைகளை சுட்டி காட்டி திருத்துவது அவர் கடமை. அவரிடம் நான் நிறைய கற்றுக்கொண்டேன். சமீபகாலமாக வருவதில்லை நிறைய தவறுகள் செய்கிறேன் போல? மனுசன் எப்படியோ போகட்டும் என்று விட்டு விட்டார் போல அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மறுமொழிக்கும் ஒவ்வொரு பெயரில் அதுவும் பாலுஜி பாடிய பிரபல பாடலகள் தலைப்பில் தான் வரவார் ஆரம்ப கால பதிவுகளில் பார்த்தால் உங்களுக்கு புரியும். அதனால் ”ஆயிரம் பேர் வாங்கிய அபூர்வசிகாமணி” என்ற இந்த பெயர். என்னை செல் பேசியில் தொடர்பு கொண்டு திருமணத்திற்க்கு வரவில்லையென்றால் தெரியும் செய்தி அப்புறம் ப்ளாக்கில் ஒரு பதிவும் போட முடியாது என்று மிரட்டியும் விட்டார். பாலுஜி யின் மீது பைத்தியகாரமான அன்பை பொழிபவர். பாலுஜி பாடல்கள் என்றால் அவர் குரலின் மீது அப்படி யொரு மயக்கம். அவருக்கு பாலுஜியின் தகவல் பெட்டகம் என்று கூட அழைப்போம். இன்று திருமணம் செய்து வாழப்போகும் பாலுவிற்க்கு நீடுழி வாழ்க வாழ்க என்று , எஸ்.பி.பி. சாரிடபில் பவுண்டேசன், வெப்மாஸ்டர் திரு.கிரிதர் ராஜா சார்பாகவும், மாடேரட்டர்ஸ் அனைவரும் சார்பாகவும், கோவை ரசிகர்கள் சார்பாகவும், யாகூ பாலுஜி ரசிகர்கள் குழுவின் அனைவரின் சார்பாகவும் அவருக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த புது பாடல் ஒலிக்கோப்பையும் பாடல் வரிகளையும் எனக்கு வழங்கிய ஹைத்ராபாத் உஷா மேடத்திற்க்கும் நன்றி தெரிவித்துக்கொண்டு அவருக்கும், புதுமாப்பிளை திரு. எஸ்.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.

Get this widget | Track details | eSnips Social DNA


Photo:Thanks to Indiagliz.com

படம்: ஞாபகங்கள்
பாடலாசிரியர்:பா.விஜய்

ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி
ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி
ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி

சொல்லாமல் சுமையானது
சோகங்கள் சுகமானது
ஏதோதோ நினைவோடுதடி
சில பார்வைகள் நீ பார்ப்பதும்
வார்த்தைகள் நீ தந்ததும்
நெஞ்சோடு நிழலாடுதடி

ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி
ஞாபகம் இல்லையோ என் தோழி

கவிஞன் எழுதிய எழுதிய
அழகிய அழகிய கவிதை நீ
உனக்கென உருகிய உருகிய
முகிலினை விலகிய நிலவு நீ
எழுதிய என் பார்வை உனதில்லையா
தழுவிய உன் ஸ்வாசம் எனதில்லையா ஆஆஆஆ

நேற்றெல்லாம் நிஜமானது
காற்றெல்லாம் சுகமானது
கண்ணெல்லாம் கனமாகிறது
சிலநாட்கள் தான் அழகானது
காலங்கள் இதமானது
எல்லாமே க..ன..வா..கிறது

ஒரு முறை கண்களில் பார்த்தது
ஒரு யுகம் வாழ்ந்தது நெஞ்சமே
இருதயம் விடுவதும் அழுவதும்
தொடுவதும் சுடுவதும் போதுமே

இதுவரை என் பேனா நின்றதில்லை
உன்பெயர் சொல்லாமல் சென்றதில்லை

ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி
ஞாபகம் இல்லையோ என் தோழி

ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி
ஞாபகம் இல்லையோ என் தோழி

சொல்லாமல் சுமையானது
சோகங்கள் சுகமானது
ஏதோதோ நினைவோடுதடி

சில பார்வைகள் நீ பார்ப்பதும்
வார்த்தைகள் நீ தந்ததும்
நெஞ்சோடு நிழலாடுதடி

ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி
ஞாபகம் இல்லையோ என் தோ...ழி...

3 comments:

usha said...

ஆங்கிலத்தில் இந்த பாட்டை வெளியிடறேன்னு சொன்னீங்க? கடைசியில் தமிழில் போட்டுடீங்க :O

Covai Ravee said...

உஷா மேடம் ஆங்கில தளத்தில் சென்று பாருங்கள்.

Anonymous said...

Dear SPB Fans,

Here is today's newsline about our beloved SPB in today's Hindu Supplement "Cimema Plus" (Chennai Edition)

Popular Tamil Film Critic S.R.Ashok Kumar has written a review on the Tamil Film "Gnabagangal" (translates to "Memories") in today's above supplement. This has a mention about our SPB as follows ::

The climax song "Gnabagam Illayo Thozhi....", in particular, is sure to fetch another award for singer S.P.Balasubramaniam , whose golden voice seems to suit all the actors in the industry - young or old

This is for all of you to savour and relish

warm regards,
Dasaradhi

Followers

பகிர்க