796 முகம் பார்த்த கண்ணாடி ரசம்

//வசந்தத்தின் ரோஜாப்பூ .... வசந்தத்தின் ரோஜாப்பூ சருகாய் உதிரும், கருகும்
இலை உதிர்காலம் வந்ததோ.. வசந்தத்தின் ரோஜாப்பூ சருகாய் உதிரும், கருகும்
இலை உதிர்காலம் வந்ததோ.. சரியோ தவறோ ஒரு நாள் கலந்தோம்.. உலகம் முழுதும் அதிலே மறந்தோம்.. அது இன்று பொய்யாய் போனதோ.. நான் கண்ட கனவு என்று எல்லாம் ஆனதோ//
ஆஹா.. ஆஹா.. அற்புதமான சரணங்கள். சூப்பர் சோகம்ப்பா..
படம்: அவசரக்காரி
பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி
இயக்குனர் கே. எஸ். மாதங்கன்
தயாரிப்பாளர் ஏ. ரத்னம், ஆனந்த் கிரியேஷ்ன்ஸ்
நடிப்பு மோகன் குமார், ரூபா சக்ரவர்த்தி
இசையமைப்பு சங்கர் கணேஷ்
வெளியீடு ஜூன் 5, 1981
|
முகம் பார்த்த கண்ணாடி....
முகம் பார்த்த கண்ணாடி ரசம் போனது எப்போது
உறவான காதல் நெஞ்சில் பிரிவென்ன இப்போது
முகம் பார்த்த கண்ணாடி ரசம் போனது எப்போது
உறவான காதல் நெஞ்சில் பிரிவென்ன இப்போது
காதலுக்கு ஜாதி என்ன பேதம் என்னடி
காதலுக்கு ஜாதி என்ன பேதம் என்னடி
ஒரு நாள் உறவில் கலந்தாள்
மறு நாள் என்னையே பிரிந்தாள்
ஒரு நாள் உறவில் கலந்தாள்
மறு நாள் என்னையே பிரிந்தாள்
முகம் பார்த்த கண்ணாடி ரசம் போனது எப்போது
உறவான காதல் நெஞ்சில் பிரிவென்ன இப்போது
வசந்தத்தின் ரோஜாப்பூ ....
வசந்தத்தின் ரோஜாப்பூ சருகாய் உதிரும், கருகும்
இலை உதிர்காலம் வந்ததோ
வசந்தத்தின் ரோஜாப்பூ சருகாய் உதிரும், கருகும்
இலை உதிர்காலம் வந்ததோ
சரியோ தவறோ ஒரு நாள் கலந்தோம்
உலகம் முழுதும் அதிலே மறந்தோம்
அது இன்று பொய்யாய் போனதோ
நான் கண்ட கனவு என்று எல்லாம் ஆனதோ
முகம் பார்த்த கண்ணாடி ரசம் போனது எப்போது
உறவான காதல் நெஞ்சில் பிரிவென்ன இப்போது
காதலுக்கு ஜாதி என்ன பேதம் என்னடி
காதலுக்கு ஜாதி என்ன பேதம் என்னடி
விழி சிந்தும் கண்ணீரோ...
விழி சிந்தும் கண்ணீரோ மழை போல் தினமும் பொழியும்
உனக்கு இன்று பன்னீரானதோ
விழி சிந்தும் கண்ணீரோ மழை போல் தினமும் பொழியும்
உனக்கு இன்று பன்னீரானதோ
கடலில் அமைதி ஒரு நாள் வரலாம்
மனதில் அமைதி இனிமேல் வருமோ
பதில் கண்ணீர் சொல்லடி
வாழ்வுக்கு இனி என்ன அர்த்தம் சொல்லடி
முகம் பார்த்த கண்ணாடி ரசம் போனது எப்போது
உறவான காதல் நெஞ்சில் பிரிவென்ன இப்போது
காதலுக்கு ஜாதி என்ன பேதம் என்னடி
காதலுக்கு ஜாதி என்ன பேதம் என்னடி
ஒரு நாள் உறவில் கலந்தாள்
மறு நாள் என்னையே பிரிந்தாள்
ஒரு நாள் உறவில் கலந்தாள்
மறு நாள் என்னையே பிரிந்தாள்

2 comments:
Dear Mr. Ravee,
Thanks for another beautifully delivered song by SPBji. I am also in the same age group like you and I remember seeing this picture in Arul Theatre.
Hats off to your service.
Regards,
V. Gopalakrishnan
Coimbatore.
Dear Sir,
I understand that you are on line now. You are very fast Sir. Immediately you have gathered somehow
Telugu Actor Murali Mohan's photo and loaded the Mazhai Tharumo En Megam Song gallary.
Thanks for the Mugam Paartha Kannadi song. I love that song very much. We are of the same age group.
I remember seeing the movie Avasarakkari in Arul Theatre in those days.
Regards,
V. Gopalakrishnan
Coimbatore
Post a Comment