820 ஆயிரம் ஆயிரம் ஆசிகளில்

சீரான தாளத்துடன் அருமையான.. இனிமையான மெட்டுடைய பாடல் இது. இந்த படத்தை நான் பார்க்கவில்லை ஆகையால் இணையத்தில் தேடிப்பர்த்ததில் துரை படத்தின் அட்டகாசமான திரை விமர்சனத்தை கேபிள் சங்கர் தளத்தில் கண்டேன் அந்த தளத்திற்க்கு நன்றி. மேலும் இந்த ஒலித்தொகுப்பை வழங்கிய கோவைக்காரர் திரு.கோபாலகிருஷ்னன் அவர்கள் எனக்கு அனுப்பி வைத்தார். பா.நி.பா தளத்தின் தீவிர ரசிகர் மட்டுமல்ல பாலுஜியின் குரல் மீது அபிமான காதல் கொண்டவர் அவருக்கும் பாலுஜி ரசிகர்கள் சார்பாக மகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பாடல் அதிகம் வானொலிகளில் இடம் பெறவில்லை ஆகையால் பிரபலாமகவில்லை. இதோ இந்த பாடல் உங்கள் செவிகளூக்காக அதற்க்கும் முன் அந்த படத்தின் கேபிள் சங்கர் தளத்தில் வந்த திரை விமர்சனம் படித்தால் முழு படம் பார்த்த திருப்தி இருக்கும். பதிவாளரின் ஹாய்சமான விமர்சனம் என்னை கவர்ந்தது. அவருக்கு வாழ்த்துக்கள். இதோ விமர்சனம்.
ஓரு ராஜாவிடம் விசுவாசமான ஓரு தளபதி..தளபதிக்கு அழகான மனைவி, மகள், தளபதியை ஓரு தலையாய் காதலிக்கும் ராஜகுமாரி, தன் மகனிடம் அரசாட்சியை ஓப்படைக்க இஷ்டமில்லாமல் தளபதியை அடுத்த வாரிசாக அறிவிக்க, அரசரின் மகன் தனது ராஜா ஆசையின் காரணமாக தன் தந்தையை கொன்றுவிட்டு பழியை தளபதி மீது போட்டுவிட்டு அவனையும் அவன் குடும்பத்தையும் அழித்துவிட பணிக்கிறான். தளப்தி மட்டும் தப்பிவிட்டு ஓரு க்ளேடியேட்டர் ஆகி அவனது நாட்டுக்கே திரும்ப வந்து அரசனை கொன்று நல்லாட்சி த்ருகிறான்.. இது தான் க்ளேடியேட்டரின் கதை.
ராஜாவுக்கு பதிலாக ஓரு நல்ல அரசியல்வாதி, நேர்மையான அல்லக்கை ஹீரோ, ஹீரோவுக்கு நல்ல அழகான மனைவி, மகன், அரசியல்வாதியின் மகள் ஓரு தலையாய் ஹீரோவை காதலிக்கிறாள். அரசியல்வாதியின் மகன் அடுத்த முதல்வர் ஆக அசைப்பட்டு தன் தந்தையை கொன்று பழியை ஹீரோவின் மீது போட்டு போலீசை விட்டு என்கவுண்டர் செய்ய போக அதிலிருந்து தப்பித்த ஹீரோவுக்கு தான் யார் என்று மற்ந்து போய்விட, அதனால் தான் யார் என்றே தெரியாமல் அலைய, பின்னால் ஓரு மணிநேரத்திற்கு பின் ஞாபகம் வந்து தன் நிலைக்கு யார் காரணம் என்று கண்டுபிடித்து எல்லோரையும் கொன்று வென்று வெற்றி வாகை சூடுகிறார்.ஆவ்..ஆவ்..
பிக்சர் சூசினப்புடு நான் ஏன் அனுமானம் ஓஸ்துந்தி அண்டே..? சே.. என்ன தெலுங்குல எழுத ஆரம்பிச்சிட்டேன்..சாரி பக்கா மசாலா தெலுங்கு படம் பார்த்த பீல்ல எழுதிட்டேன்.
வர வர விவேக்குக்கு செல்ப் எடுக்க மாட்டேங்கிறது.. செம போர்.. அர்ஜூன் வழக்கம் போல ரோபோ போல் முகம் வைத்து தன்னுடய் சிக்ஸ்பேக்கை யெல்லாம் காட்டுகிறார். இவருக்கு இருக்கும் சிக்ஸ் பேக்கில் ஹீரோயின் கீரத்துக்கு கொடுத்திருந்தால் பார்க்க நன்றாக இருந்திருக்கும்.. மரபாச்சி பொம்மை போல் இருக்கிறார்.
சில நல்ல கதைகளை உல்டா செய்யும் போது இப்படி கொத்து புரோட்டா போல் ஆகிவிடுவது உண்டு, இவ்ர்களும் ஓழுங்காய் பண்ணாமல், அதனால் நல்லா பண்றவங்களையும் பண்ண்விட மாட்டாஙக.. அது போலத்தான் துரையும்..
திரை விமர்சனம் உதவி: நன்றி.கேபிள் சங்கர் தளம்
படம்: துரை
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி
நடிகர்:அர்ஜுன்
இசை: இமான்
|
ஆயிரம் ஆயிரம் ஆசிகளில் வாங்கிய வீடு இது
அந்த ஆண்டவன் வாழ்ந்திட ஆசைபடும் ஆலய தோட்டமிது
தினந்தோறும் பூக்கிறதே ஒரு கோடி புன்னகையே
தேவதைகள் வந்து கோலமிடும் ஒரு அதிசய வீடு இது
ஆயிரம் ஆயிரம் ஆசிகளில் வாங்கிய வீடு இது
அந்த ஆண்டவன் வாழ்ந்திட ஆசைபடும் ஆலய தோட்டமிது
செல்லப்பிள்ளையை தோளில் தூக்கிக்கொண்டு
ஒரு சந்தையிலே ஆஹா சுற்றையிலே
பூமாலைகள் சூட்டிய மாமன்னன் போலே
தோன்றுமடா ஏய் தோன்றுமடா
செல்ல மனைவியை தோட்டத்தின் ஓரத்திலே
ஆஹா கொஞ்சுகையில்.. ஆஹா கொஞ்சுகையில்
அதை பார்த்திட்ட பிள்ளைகளின் கேலிக்கு பூக்கும்
வெட்கத்துக்கு ஏய் விலையென்ன
போதுமடா போதுமடா வேறென்ன வேனுமடா
நூறு ஜென்மம் எடுத்தாலும் இந்த செல்லங்கள் போதுமடா
ஆயிரம் ஆயிரம் ஆசிகளில் வாங்கிய வீடு இது
அந்த ஆண்டவன் வாழ்ந்திட ஆசைபடும் ஆலய தோட்டமிது
ஒரு தாயினை போலே பார்த்துக் கொள்வாள்
ஓ மனைவியே ஓ மனைவியே
ஆஹா தூக்கிட தோன்றும் வேளையில் ஏங்க
எங்களைத்தான் இனி எங்களைத்தான்
அந்த வார்த்தையை கேட்டு மேனியெல்லாம்
ஆஹா சிலிர்க்குமே ஆஹா சிலிர்க்குமே
அட வீதியை நோக்கிய வாசலிலே
அவள் நின்றிடுவாள் அவள் நின்றிடுவாள்
ஆம்படையான்?? வந்ததுமே இழுத்து அணைத்தாளே
உழைத்து வந்த ஆண் தன்மகனை
அவள் முத்தத்தில் துடைப்பாளே
ஆயிரம் ஆயிரம் ஆசிகளில் வாங்கிய வீடு இது
அந்த ஆண்டவன் வாழ்ந்திட ஆசைபடும் ஆலய தோட்டமிது
தினந்தோறும் பூக்கிறதே ஒரு கோடி புன்னகையே
தேவதைகள் வந்து கோலமிடும் ஒரு அதிசய வீடு இது
ஆயிரம் ஆயிரம் ஆசிகளில் வாங்கிய வீடு இது
அந்த ஆண்டவன் வாழ்ந்திட ஆசைபடும் ஆலய தோட்டமிது

3 comments:
Dear Raveeji,
Thanks for posting my favourite song & including my name in the brief.
The line 'Podhumada Podhumada Verenna Venumada' tells how enjoyingly SPBji has rendered it.
V. Gopalakrishnan,
Coimbatore.
Vanakkam Mr. Ravee,
"Aayiram aayiram aasigalai vaangiya veedu idhu" a flashback
song sung by SPBji in the film 'Durai' acted by Arjun. When you close your eyes and imagine
the lyrics of the song, you will just love it. The song is about Arjun's house, wife and son and
their happiness. Music by Iman.
Anbudan, Gopal.
வாங்க கோபால கிருஷ்னன் சார்..
இந்த பாடலை நான் எப்பவோ கேட்டது சுத்தமாக நினைவில்லை இது போல் புதிய படங்களில் ஒவ்வொரு பாடலை பாலுஜி பாடியிருப்பார் அதை தேடி பிடிச்சு கொடுங்க சார் இந்த பாடலை போன்று. நம் இணைய தள நண்பர்களூக்காக் பதிவிடுகிறேன். உங்கள் உதவிக்கு நன்றி. அழகான இனிமையான பாடல்.
Post a Comment