Tuesday, August 25, 2009

821 விதி என்ற நாடகம் தெய்வம் போடும்



நம் வாழ்க்கையிலே நாம் ஒன்றும் நினைப்போம் தெய்வம் ஒன்று நினைக்கும் இது ஓவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் உருவாவது. இறைவன் விதி என்ற பெயரில் போடும் நாடகத்தின் சோகக்கதையை உணர்த்து பாடல் இது. //தாலி சொந்தம் தாய்க்கு இல்லை..கணவன் பந்தம் வெறுத்தாள் இல்லை
மகன் இருந்தும் அதை சொல்லாமல்.. மனைவிகளாய் சுகம் இல்லாமல்..தனிமரமாய் ஒரு ஆண் உள்ளம்..தன் தவறால் சிலை போல் வாழும்..
போராட்டம் வாழ்வானதே..பூந்தோட்டம் காடாக மாறிப்போனதே// இந்த வரிகள் பாலுஜியின் குரலில் அழுத்தமான சோகத்தை வெளிக்கொணரும் சுகமான சோகபாடல்.. கேட்டு மகிழுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA



படம்: போக்கிரி பொண்ணு
பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி
இசை:எஸ்.ஏ.ராஜ்குமர்

விதி என்ற நாடகம் தெய்வம் போடும்
விடை தேடும் உள்ளங்களோ தினமும் வாடும்
உயிரோடு உறவாடும் சோகமோ
துணை சேர வழி தெய்வம் என்று காட்டுமோ

விதி என்ற நாடகம் தெய்வம் போடும்
விடை தேடும் உள்ளங்களோ தினமும் வாடும்
ம்ம்ம்ம்ம..ம்ம்ம்ம்ம..ஓஓஓஓ..

தாலி சொந்தம் தாய்க்கு இல்லை
கணவன் பந்தம் வெறுத்தாள் இல்லை
மகன் இருந்தும் அதை சொல்லாமல்
மனைவிகளாய் சுகம் இல்லாமல்
தனிமரமாய் ஒரு ஆண் உள்ளம்
தன் தவறால் சிலை போல் வாழும்

போராட்டம் வாழ்வானதே
பூந்தோட்டம் காடாக மாறிப்போனதே

விதி என்ற நாடகம் தெய்வம் போடும்
விடை தேடும் உள்ளங்களோ தினமும் வாடும்
ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்.. ஹாஆஆஆஆ..

விதை போட்டது மரமானது
விதி வந்து தான் விளையாடுது
சொந்தங்கள் பகையாய் மாற
உள்ளங்கள் தனியாய் வாழ
அட இறைவா இது சரிதானா
ஏன் பிரித்தாய் இது முறைதானா

தீயாகும் உள்ளம் வெந்து வாடுமா
எதிர்காலம் வந்து ஒன்று சேர்த்து பார்க்குமா

விதி என்ற நாடகம் தெய்வம் போடும்
விடை தேடும் உள்ளங்களோ தினமும் வாடும்
ம்ம்ம்ம்ம..ம்ம்ம்ம்ம..ஓஓஓஓ..

3 comments:

Gopal said...

Sir,

Kaalathaal Azhiyaadha sugamaana 'Pathos' song. Nandri.

V. Gopalakrishnan,
Coimbatore.

Mohan Kumar said...

Nice Sad Song Sir... Thank u 4 Posting

Mohan Kumar

Covai Ravee said...

//Kaalathaal Azhiyaadha sugamaana 'Pathos' song. Nandri//

கோபாலகிருஷ்னன் சார் இது போல் செமி சோகம் புல் சோகங்கள் உள்ளன தேடி பிடித்து போடனும்.

வருகைக்கு நன்றி மோகன் குமார்.

Followers

பகிர்க