835 எண்ணமெனும் ஏட்டு நான் பாடும்

//எண்ணமெனும் ஏட்டு நான் பாடும் பாட்டு// என்ற அழகான பாடலை இந்த தளத்தின் தீவிர ரசிகர் ஹேமாஸ்ரீ கேட்டுள்ளார் அவர் விருப்பத்தின் பேரில் இந்த பாடல் நமக்காக. ஹேமா ஸ்ரீ மேடம் //வைகைநதி ஓரம் பொன்மாலை நேரம் காத்தாடுது.. ஆமா.. கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது..// நீங்க கேட்ட பாட்டு அருமையான பாட்டு.. கரெக்ட் இது கரெக்ட். எனக்கு பிடித்த இனிமையான வரி இதோ //ஒரு சோலைப் புஷ்பம் தான் திரு கோயில் சிற்பம் தான்.. ஒரு சோலைப் புஷ்பம் தான் திரு கோயில் சிற்பம் தான்
இதன் ராகம் தாளம் பாவம் அன்பைக் கூஊஊஊஊஊறு// அபாரம் போங்க.
|
படம்:ரிக்ஷாமாமா
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி,டாக்டர்.எஸ்.ஜானகி
நடிகர்:சத்யராஜ்
எண்ணமெனும் ஏட்டு நான் பாடும் பாட்டு நீ வாழ்கிறாய்
நித்தம் வரும் .. அய்யய்யோ கொஞ்சம் இருங்க கொஞ்சம் இருங்க
என்னங்க பாடிறீங்க? அப்படியில்ல.. நான் பாடுறேன் பாருங்க
ம்ஹ்ஹ் வைகைநதி ஓரம் பொன்மாலை நேரம் காத்தாடுது
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது
இது அன்பின் வேதன் அதை நாளும் ஓதும்
இது அன்பின் வேதன் அதை நாளும் ஓதும்.. காத்தேஏஏஏஏ
வைகைநதி ஓரம் பொன்மாலை நேரம் காத்தாடுது..
ஆமா..
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது..
கரெக்ட் இது கரெக்ட்
மாலை மழை மேகம் தன்னை மெதுவாய் அழைத்தே
துணை வரவேண்டும் என்று தூது சொல்லத்தான்
மூண்டுவரும் மோகம் தன்னை மடலாய் வரைந்தேன்
நினவுகள் பூத்த வண்ணம் நானும் மெல்லத்தான்
ஒரு சோலைப் புஷ்பம் தான் திரு கோயில் சிற்பம் தான்
ஒரு சோலைப் புஷ்பம் தான் திரு கோயில் சிற்பம் தான்
இதன் ராகம் தாளம் பாவம் அன்பைக் கூஊஊஊஊஊறு
வைகைநதி ஓரம் பொன்மாலை நேரம் காத்தாடுது..
யாரின் மனம் யாருக்கு என்று இறைவன் வகுத்தான்
இருமனம் சேர்வது இங்கு தேவன் சொல்லித்தான்
பூஜைக்கிது ஏற்றதென்று மலரைப் படைத்தான்
தலைவன் மாலை இன்று சூடிக்கொள்ளத்தான்
ஓர் நெஞ்சின் ராகம் தான் விழி பாடும் நேரம்தான்
ஓர் நெஞ்சின் ராகம் தான் விழி பாடும் நேரம்தான்
இது அன்பின் வேதன் அதை நாளும் ஓதும்.. காஆஆற்று
வைகைநதி ஓரம் பொன்மாலை நேரம் காத்தாடுது
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது
இது அன்பின் வேதன்
அதை நாளும் ஓதும்
இது அன்பின் வேதன் அதை நாளும் ஓதும்.. காத்தேஏஏஏஏ
வைகைநதி ஓரம் பொன்மாலை நேரம் காத்தாடுது
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது

2 comments:
Arpudhamaai Oru Maalai Nera Thendral veesiyadhu pola irundhadhu. Pattu Thalaivanukku oru "Balae".
Anbudan,
V. Gopalakrishnan,
Coimbatore.
hemasri: Hai Anna Thanks a lot.
Post a Comment