பாடல் பல்லவியே அமர்க்களமாக இருக்கும். ஒரு ஹோட்டலுக்குள் சென்று வெளூத்துகட்டுன பீலிங்க்ஸ்ப்பா. நிச்சயமாக இந்த படத்தை நான் பார்கவே இல்லை. தேங்காய் சீனிவாசன் நடித்தது என்று தெரிகிறது. யம்மாடி அண்ணனும், தங்கையும் பாடல்கள் நடுவில் அடிக்கற கூத்தை கேட்டீர்களென்றால். அறண்ட்ருவீங்க சார். அன்றே இந்த மாதிரியெல்லாம் கூததடித்திருக்கிறார்கள். கலக்கல் பாடல் அனுபவீங்க, இதுக்கு முன்னாடி எத்தனைப் பேர் கேட்டிருக்கீங்க?
இந்த பாடல் புது வருட ஸ்பெஷல் அயிட்டம்.

படம்: மாமான் மச்சான்
பாடியவர்கள்: டாக்டர்.எஸ்.பி.பி, எஸ்.பி.சைலஜா
ராயப்பேட்டை அய்யர் கடை ரவா தோசை நீ தான்
அதுக்கு மேலே தொட்டுக்க வைக்கிற தேங்காய் சட்னி நான் தான்
ராயப்பேட்டை அய்யர் கடை ரவா தோசை நீ தான்
அதுக்கு மேலே தொட்டுக்க வைக்கிற தேங்காய் சட்னி நான் தான்
துண்ண என்னை தோசை மூக்கை தொலக்குதண்ணே வாசம்
துண்ண என்னை தோசை மூக்கை தொலக்குதண்ணே வாசம்
இத்தப்பாடமே எத்தை எத்தையோ கூவிக்கினுக்கிறயே எங்க பாடு
பாடட்டுமா எப்படி பாடறனு சும்ம கேளு சும்ம ஜகா வாங்ஜறேன் பாரு ஹ
ராயப்பேட்டை அய்யர் கடை ரவா தோசை நீ தான்
அதுக்கு மேலே தொட்டுக்க வைக்கிற தேங்காய் சட்னி நான் தான்
ராயப்பேட்டை அய்யர் கடை ரவா தோசை நீ தான்
அதுக்கு மேலே தொட்டுக்க வைக்கிற தேங்காய் சட்னி நான் தான்
துண்ண என்னை தோசை மூக்கை தொலக்குதம்மே வாசம்
துண்ண என்னை தோசை மூக்கை தொலக்குதம்மே வாசம்
நைசா பூந்துட்ட தம்மத்துண்டு மனசுல
நாஸ்டா புடிக்கல நாளு நாளா உடம்புல
நைசா பூந்துட்ட தம்மத்துண்டு மனசுல
நாஸ்டா புடிக்கல நாளு நாளா உடம்புல
புரிஞ்சிக்கிட்டேன் கயிதே நான் போக்குவேனா பொய்தே??
புரிஞ்சிக்கிட்டேன் கயிதே நான் போக்குவேனா பொய்தே??
படிக்கட்டுமா நான் பாட்டு நான் பாய விரிச்சு போட்டு
பாய விரிச்சு போட்டு
ராயப்பேட்டை அய்யர் கடை ரவா தோசை நீ தான்
தோசை மேலே தொட்டுக்க வைக்கிற தேங்காய் சட்னி நான் தான்
துண்ண என்னை தோசை மூக்கை தொலக்குதண்ணே வாசம்
துண்ண என்னை தோசை மூக்கை தொலக்குதண்ணே வாசம்
டாப்ன்னா டாப்பு டக்கர்நன்னா டாப்பு
டூப்ப்ன்னா டூப் டுபாக்கூர் டூப்பு
டாப்ன்னா டாப்பு டக்கர்நன்னா டாப்பு
டூப்ப்ன்னா டூப் டுபாக்கூர் டூப்பு
டாவு அடிக்கனும் டைவ் அடிச்சேன் ஆத்தாடி
மாஞ்சா கவுத்துல மாட்டிக்கிட்ட காத்தாடி
டாவு அடிக்கனும் டைவ் அடிச்சேன் ஆத்தாடி
மாஞ்சா கவுத்துல மாட்டிக்கிட்ட காத்தாடி
மாமா என்னைப பாரு நான் மைலாப்பூரு தேரு
மாமா என்னைப பாரு நான் மைலாப்பூரு தேரு
வயது வந்த பொட்டை உன் சைசுகேத்த கட்டை
உன் சைசுகேத்த கட்டை
ராயப்பேட்டை அய்யர் கடை ரவா தோசை நீ தான்
தோசை மேலே தொட்டுக்க வைக்கிற தேங்காய் சட்னி நான் தான்
துண்ண என்னை தோசை மூக்கை தொலக்குதண்ணே வாசம்
துண்ண என்னை தோசை மூக்கை தொலக்குதண்ணே வாசம்
பார்த்தியா ஜகா வாங்கிட்டேன் அம்ம்மாஆஆ...