Friday, February 27, 2009
735 நல்ல நாளூம் பொழுதுமா

நல்ல நாளூம் பொழுதுமா ஆமாங்க இன்று எனக்கும் உங்களூக்கும் நல்ல நாள் தான் 5 பாடல்கள் தொடர்ந்து கேட்கறீங்களே. கே.வி.எம் மாமா அவர்களின் இனிமையான பாடல் இது. ஜாமாய்ங்க. மெட்டு எங்கோயோ கேட்ட மாதிரி இருக்குதானே?
நல்ல நாளூம் பொழுதுமா
மலர்கின்ற பருவத்திலே
நடிகர்: ராஜசேகர், வனிதா
இயக்குனர்: எல்.வைதியநாத்
தயாரிப்பாளர்: எஸ்.பரமேஸ்வரன், ராஜ பிரியா
இசை: கே.வி.மகாதேவன்
வருடம்: 1980
|
நல்ல நாளூம் பொழுதுமா
நாட்டுப் பூவின் ஜோசியம்
நான் நெனச்ச நெனப்ப போல
நடக்கப்போகுது காரியம்
பார்த்து புடிச்ச மாமா
இனி பரிசம் போடலாமா
பார்த்து புடிச்ச மாமா
இனி பரிசம் போடலாமா
பார்த்து புடிச்ச மாமா
இனி பரிசம் போடலாமா
கொள்ளைகாட்டு வெள்ளாடு
அது குரல் கொடுத்தது உன்னோடு
கொள்ளைகாட்டு வெள்ளாடு
அது குரல் கொடுத்தது உன்னோடு
ஆடு போல தள்ளாடு
அடி அழகு பொண்ணே நீயாடு
ஆடு போல தள்ளாடு
அடி அழகு பொண்ணே நீயாடு
நல்ல நாளூம் பொழுதுமா
நாட்டுப் பூவின் சோசியம்
நான் நெனச்ச நெனப்ப போல
நடக்கப்போகுது காரியம்
பார்த்து புடிச்சேன் கண்ணு
அது பரிசம் போடும் பொண்ணு
பார்த்து புடிச்சேன் கண்ணு
அது பரிசம் போடும் பொண்ணு
ஆவாரம்பூ காத்தோரம் நதி
அலங்கப்போகும்?? ஆத்தோரம்
மீதி வந்தது காதோரம்
சேர்ந்து வந்தது ஆதாரம்
ஆவாரம்பூ காத்தோரம் நதி
அலங்கப்போகும்?? ஆத்தோரம்
மீதி வந்தது காதோரம்
சேர்ந்து வந்தது ஆதாரம்
கொத்து மல்லிகை பூவாட்டம்
அந்த் குமரன் கோவில் தேராட்டம்
கொத்து மல்லிகை பூவாட்டம்
அந்த் குமரன் கோவில் தேராட்டம்
சுத்திவந்தது நீரோட்டம்
சும்மா சும்மா போராட்டம்
நல்ல நாளூம் பொழுதுமா
நாட்டுப் பூவின் ஜோசியம்
பார்த்து புடிச்சேன் கண்ணு
அது பரிசம் போடும் பொண்ணு
பார்த்து புடிச்சேன் கண்ணு
அது பரிசம் போடும் பொண்ணு
பார்த்து புடிச்சேன் கண்ணு
அது பரிசம் போடும் பொண்ணு
குமரி பூவில் வண்டாட இடை
குலுங்கி குலுங்கி கொண்டாட
இரண்டு உயிரும் ஒன்றாக
நாம் இருந்து பார்போம் நன்றாக
குமரி பூவில் வண்டாட இடை
குலுங்கி குலுங்கி கொண்டாட
இரண்டு உயிரும் ஒன்றாக
நாம் இருந்து பார்போம் நன்றாக
மஞ்சள் முகமும் கனியாக பூ
மலர்ந்த மேனி கண்ணாக
மஞ்சள் முகமும் கனியாக பூ
மலர்ந்த மேனி கண்ணாக
இரவும் பகலும் ஒண்ணாக நம்
இளமை இன்னும் பொண்ணாக
நல்ல நாளூம் பொழுதுமா
நாட்டுப் பூவின் ஜோசியம்
நான் நெனச்ச நெனப்ப போல
நடக்கப்போகுது காரியம்
பார்த்து புடிச்ச மாமா
இனி பரிசம் போடலாமா
பார்த்து புடிச்சேன் கண்ணு
அது பரிசம் போடும் பொண்ணு
பார்த்து புடிச்ச மாமா
இனி பரிசம் போடலாமா
Posted by
Covai Ravee
at
6:35 AM
0
comments
Links to this post
Labels: Balu
734 சின்ன பொண்ணு நானும்

படம்: ஆளப்பார்த்து மாலை மாத்து
பாடியவர்கள்; எஸ்பி.பி, சுஜாதா
படத்தை நான் பார்க்கவில்லை தகவல்கள் தெரிந்த்வர்கள் தராலமே? இனிமையான பாடல். கேட்டு மகிழுங்கள்.
|
சின்ன பொண்ணு நானும் தனியா நிக்குறனே
தன்னந்தனியாக தவிச்சு நிக்குறனே
குப்புராசா மாமா கூட வரட்டுமா
கூட வந்து நானும் சோடி சேரட்டுமா
குப்புராசா மாமா கூட வரட்டுமா
கூட வந்து நானும் சோடி சேரட்டுமா
சின்ன பொண்ணு நீயும் தனியா நிக்குனுமா
தன்னந்தனியாக தவிச்சு நிக்குனமா
சின்ன பொண்ணு நீயும் தனியா நிக்குனுமா
தன்னந்தனியாக தவிச்சு நிக்குனமா
குப்புராசு நானும் கூட வரட்டுமா
கூட வந்து உன்னை சோடி சேரட்டுமா
குப்புராசு நானும் கூட வரட்டுமா
கூட வந்து உன்னை சோடி சேரட்டுமா
நேத்து பழைய ரோட்டுலதான்
மொதமொத நான் பார்த்தேன்
பாலக்காட்டு பருவ பொண்ணு மனசுகுள்ளே ஏக்கம்
ஊட்டிமலை உருளைக்கிழங்கு என்னை தேடி வந்து
ஆட்டம் என்ன உன் மனசுல வயசுபுள்ள சொல்லு
என்னவோ தோனுது என்னானு தெரியல
என்னவோ தோனுது என்னானு தெரியல
தெரிஞ்சா சந்தோசம் தான்
தினமும் கும்மாளம் தான்
தெரிஞ்சா சந்தோசம் தான்
தினமும் கும்மாளம் தான்
சின்ன பொண்ணு நானும் தனியா நிக்குறனே
தன்னந்தனியாக தவிச்சு நிக்குறனே
குப்புராசு நானும் கூட வரட்டுமா
கூட வந்து உன்னை சோடி சேரட்டுமா
குப்புராசா மாமா கூட வரட்டுமா
கூட வந்து நானும் சோடி சேரட்டுமா
அன்னக்கிளி உன் நெனப்பு ஆறுதலா இருக்கும்
சொன்னபடி நான் நடப்பேன் கவலையெல்லாம் எதுக்கு
பொம்பளைங்க மனசுகுள்ளே பகைவன்?? தான் இருக்கு
புரிஞ்சா அதுபோதும் கவலையில்லை எனக்கு
அடுத்தது ஆவணி இனி ஏண்டி தாவனி
ஹஹ அடுத்தது ஆவணி இனி ஏண்டி தாவனி
முடிஞ்சா மாலை ஒண்ணு
கட்டுங்க தாலி ஒண்ணு
முடிஞ்சா மாலை ஒண்ணு
கட்டுங்க தாலி ஒண்ணு
சின்ன பொண்ணு நீயும் தனியா நிக்குனுமா
தன்னந்தனியாக தவிச்சு நிக்குனமா
குப்புராசா மாமா கூட வரட்டுமா
கூட வந்து நானும் சோடி சேரட்டுமா
போடு குப்புராசு நானும் கூட வரட்டுமா
கூட வந்து உன்னை சோடி சேரட்டுமா
லலலா லலலா லலலலலாஆஆஆஆ
லலலா லலலா லலலலலாஆஆஆஆ
லலலா லலலா லலலலலாஆஆஆஆ
லலலா லலலா லலலலலாஆஆஆஆ
Posted by
Covai Ravee
at
6:29 AM
0
comments
Links to this post
Labels: Balu
733 இங்கே இங்கே இங்கே

இங்கே இங்கே இங்கே இதோ ஒரு கலக்கல் பழைய பாடல் இன்று வரும் எல்லாபாடல்களூம் இந்த் தளத்தின் நான்காவது வருட துவக்க விழா சிறப்பு பாடல்கள். ஆமாம் அன்பர்களே சென்ற 6.2.2009 அன்று இந்த தளத்தின் மூன்று வருடம் முடிந்து நான்காவது ஆண்டில் துவங்க்குகிறது. கோவை பாலுஜி விசிட் மற்றும் ஹைத்ராபத் சந்திப்பு என்ற பிசியில் சுத்த்மாக மறந்து விட்டேன். (சுந்தர் சார் நீங்களாவது நினவு படுத்தி ஒரு பதிவு போட்டிருக்கலாமே? மறந்தோட்டோம்) பரவாயில்லை. அதனாலே இன்று ஒரே மூச்சோடு உட்கார்ந்து பாடல் சேகரித்து குறைந்த பட்ச பதிவுகள் போட்டு கலக்கிடறேன். அன்பர்களே இன்னும் அதிகம் கேட்கபடாத பதிவுகள் காத்திருக்கிறது. பதிவு போட்டவுடனே அகில உலகம் முழுவதும் குறிப்பாக துபாய், அமெரிக்க, சிங்கப்பூர், சென்னை, பெங்களூர், திருச்சி, திருப்பூர், கொச்சின் ஆகிய பாலுஜி ரசிகர்கள் தவறாது வருகை தருகிறார்கள் அவர்களூக்கு சுந்தர் சார்பாக என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் ஆத்ரவு தந்து எங்களை உற்ச்சாகப்படுத்துங்கள்.
படம்: மாடி வீட்டு ஏழை
சிவாஜிகனேசன், ஸ்ரீப்ரியா, சுஜாதா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
இயக்குநர்: அமிர்தம்
வருடம்:22.08.1981
|
இங்கே இங்கே இங்கே
இந்த உலகங்களின் எல்லை இங்கே
இரவில் மலர்ந்திருக்கும் முல்லை இங்கே
இனிய மொழி பேசும் பிள்ளை இங்கே
இனிமை இனிமை அது தொல்லை இங்கே
இங்கே இங்கே இங்கே
சிம்மக் குரல் கொண்ட கலைஞன் இங்கே
ராஜ நடை போடும் மறவன் இங்கே
சிம்மக் குரல் கொண்ட கலைஞன் இங்கே
ராஜ நடை போடும் மறவன் இங்கே
நவரச பாவனை நடிகன் எங்கே
நல்ல மனிதர்களின் ஒருவன் இங்கே
ஆஆ...ஆஆஆஆ..ஆஆஆஆ
ஆஆ...ஆஆஆஆ..ஆஆஆஆ
இந்த உலகங்களின் எல்லை இங்கே
இரவில் மலர்ந்திருக்கும் முல்லை இங்கே
இனிய மொழி பேசும் பிள்ளை இங்கே
இனிமை இனிமை அது தொல்லை இங்கே
இங்கே இங்கே இங்கே
மஞ்சள் வண்ண மாங்கனி
மின்னல் இடை மோகினி
முத்து மொழி பைங்கிளி
தத்திவரும் பூங்கொடி
ஆடும் உன்னோடு தான்
ஆடும் உன்னோடு தான்
கன்னி எனும் தாமரை
கண்ணம் அதில் தேன்மழை
சின்னஞ்சிறு புன்னகை
சிந்துகின்ற மேனகை
பாடம் பண்னோடுதான்
உன்னை அழைத்தது ஆசை நெஞ்சம்
தன்னை மறந்தது தோகை கொஞ்சம்
நல்ல இளமையின் வேகம் இங்கே
உள்ளம் வீணையின் ராகம் அங்கே
இங்கே இங்கே இங்கே
மொட்டு விட்ட மல்லிகை
தொட்டு விட புன்னகை
கிட்ட வந்து தென்றலை
எட்டி எட்டி சென்றது
ஏக்கம் என்னாவது
ஏக்கம் என்னாவது
அத்தை பெற்ற பிள்ளையோ
அள்ள அள்ள கண்மணி
மெத்தையிட சொலவதோ
என்னை இந்த பொன்மணி
மோகம் பொல்லாதது
பென்கள் பிறந்தது நீதான் கொஞ்ச
மன்ணன் பிறந்தது நான்தான் கெஞ்ச
கன்னிமலருக்கு நானா தென்றல்
மஞ்சள் நிலவுக்கு நானா மேகம்
இங்கே இங்கே இங்கே
இந்த உலகங்களின் எல்லை இங்கே
இரவில் மலர்ந்திருக்கும் முல்லை இங்கே
இனிய மொழி பேசும் பிள்ளை இங்கே
இனிமை இனிமை அது தொல்லை இங்கே
இங்கே இங்கே இங்கே
Posted by
Covai Ravee
at
3:30 AM
2
comments
Links to this post
Labels: Balu
732 ஆசை போவது விண்ணிலே

பாடல் என்றால் இப்படிதான் தான் இருக்கவேண்டும். எப்படி என்கிறீர்களா? என்னவொரு அழகான மெட்டு ஆர்பாட்டமில்லாத தாளம் எங்கேயோ எப்போதோ கேட்ட மெட்டு போல் இருக்கிறது என் பள்ளி பருவத்தில் கேட்ட பாடல்கள் இவை. சீரான வரிகள் கேட்டு பாருங்கள் பாலுஜி எவ்வளவு அமர்க்களமாக வார்த்தை சுத்தமாக பாடியிருக்கிறார். இதுபோல் பாடல்கள் என்றால் நமக்கு கேட்டு வரிகள் தட்டச்சு செய்ய குதுகுலம் தான். ஆஹா..ஆஹா.. சரணங்களில் வரும் சீரான தாளம் மறக்க முடியவில்லை அனுபவியுங்கள் அன்பர்களே. இந்த தளத்தில் ஒரு நேயர் திரு. மகேஷ் அவரகள் சென்ற பதிவில் ஒரு வேண்டுகோள் விடுத்தார். பதிவில் பாலுஜியைப் பற்றி தகவல்கள் மற்றும்
கேள்விகள் கேட்கலாமே என்று இணையதள அன்பர்கள் தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் என்று ஒரு யோசனையை வழங்கினார். இந்த தளம் ஆரம்பிக்கும் போதே இந்த யோசனை இருந்தது தான். அதிக பட்ச பாலுஜி நேயர்கள் அவரைப் பற்றிய தகவல்கள் அறிந்து
வைத்து இருப்பார்கள் இருந்தாலும் அறிதான புதிதான தகவல்கள் தரலாம் அதுமட்டுமல்லாமல் பதிவில் இடம் பெறாத கலைஞ்சர்களின் பெயர்களூம் கேள்வியாக கேட்கலாம் தெரிந்த அன்பர்கள் வழங்கலாம். ஒரு நல்ல யோசனையை வழங்கிய திரு. மகேஷ் அவர்களுக்கு மிக்க நன்றி. இனி வரும் பதிவுகளில் முடிந்த வரை தகவல்களூம் சேர்க்கப்படும்.
|
படம்: நாம் பிறந்த மண்
பாடியவர்: எஸ்.பி.பி
கதை: ராஜசேகர்
சிவாஜிகனேசன், கமலஹாசன், கே.ஆர்.விஜயா
இசைள் எம்.எஸ்.விஸ்வநாதன்
இயக்குநர்: வின்செண்ட்
வருடம்: 7 அக்டோபர் 1977
ஆசை போவது விண்ணிலே
கால்கள் போவது மண்ணிலே
ஆசை போவது விண்ணிலே
கால்கள் போவது மண்ணிலே
பாலங்கள் போடுங்கள் யாராவது
பாடி ஆடுங்கள் இன்றாவது
பாலங்கள் போடுங்கள் யாராவது
பாடி ஆடுங்கள் இன்றாவது
இங்கு கான்கின்ற சொர்க்கங்கள்
இரண்டில் ஒன்றான வர்க்கங்கள்
இங்கு கான்கின்ற சொர்க்கங்கள்
இரண்டில் ஒன்றான வர்க்கங்கள்
சட்டம் இல்லாத சங்கங்கள்
தர்மம் தாளாத தங்கங்கள்
கட்டிடம் ஜொலிக்கிறது
அஸ்திவாரம் அழுகிறது
ஆசை போவது விண்ணிலே
கால்கள் போவது மண்ணிலே
யாரும் சிந்தட்டும் கண்ணீரை
நீங்கள் தெளியுங்கள் பன்னீரை
யாரும் சிந்தட்டும் கண்ணீரை
நீங்கள் தெளியுங்கள் பன்னீரை
இருட்டில் எப்போதும் இன்பங்கள்
வெளிச்சம் வந்தால்தான் துன்பங்கள்
இன்பங்கள் தூங்குவதில்லை
துன்பங்களூம் அப்படித்தான்
பத்து பதினொன்னு பன்னிரண்டு
சொத்து பலகோடி நமக்குண்டு
பற்ற வையுங்கள் இப்போது
பாவம் சந்திப்பது எப்போது
உழுதவர்கள் வாடுகிறார்கள்
அறுத்தவர்கள் ஆடுகிறார்கள்
ஆசை போவது விண்ணிலே
கால்கள் போவது மண்ணிலே
பாலங்கள் போடுங்கள் யாராவது
பாடி ஆடுங்கள் இன்றாவது
தெய்வம் சிலநேரம் சிந்திக்கும்
மண்ணில் கார்வேரை மன்னிக்கும்
தெய்வம் சிலநேரம் சிந்திக்கும்
மண்ணில் கார்வேரை மன்னிக்கும்
இந்த மன்றத்தில் ஆடுங்கள்
அந்த மன்னிப்பை கூறுங்கள்
இறைவாஆஆஆஆ.... என்னை மன்னித்துவிடு
Posted by
Covai Ravee
at
3:10 AM
4
comments
Links to this post
Labels: Sivaji MSV, SPB, எம். எஸ். விஸ்வநாதன், கமல்
731 இளையராணி இவள் அழகு தனி
இதோ ஒரு பழைய பாடல் சுராங்கனி என்ற படத்தில் இருந்து //இளையராணி இவள் அழகு தனி.. எங்கே உன் பயனம் இனி சுராங்கனி .. சுராங்கனி... மயிலினம் ஆட மானினம் ஓட
மீனினம் மெல்ல நீரினில் துள்ள..// என்று துவங்குக்ம் பல்லவியே பரவசப்படுத்தும். சரணங்கள் ந்ம்மை எங்கெங்க்கோ கொண்டு செல்லும். பாடல் எப்பவோ நான் கேட்டது இப்போது கைக்கு கிடைத்தது. கேட்டு மகிழுங்கள். (யார் நடிகர்கள் என்ற தகவல்கள் தெரிந்தவர்கள் தராலாமே?)
படம்: சுராங்கனி
பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி, சைலஜா
|
இளையராணி இவள் அழகு தனி
எங்கே உன் பயனம் இனி சுராங்கனி
சுராங்கனி...
மயிலினம் ஆட மானினம் ஓட
மீனினம் மெல்ல நீரினில் துள்ள
இளையராணி இவள் அழகு தனி
எங்கே உன் பயனம் இனி சுராங்கனி
சுராங்கனி.....
கட்டழகு கண்ணம்மா
சொல்லழகி செல்லம்மா
நடையழகி நல்லம்மா
எங்கே போறே சொல்லம்மா
இளையராணி இவள் அழகு தனி
எங்கே உன் பயனம் இனி சுராங்கனி
சுராங்கனி...
இன்பத்தின் எல்லை
வேறென்றும் இல்லை
காதலின் தொல்லை
உன்னை விடவில்லை
இளையராணி இவள் அழகு தனி
எங்கே உன் பயனம் இனி சுராங்கனி
சுராங்கனி..
ஆயிரம் என்னம்
எத்தனை வண்ணம்
பேதையின் உள்ளம்
சிந்த்னை வெள்ளம் ஆஆஆ
இளையராணி இவள் அழகு தனி
எங்கே உன் பயனம் இனி சுராங்கனி
சுராங்கனி..
சுராங்கனி..
முறிந்தது உறவு
நிரந்தர பிரிவு
கலைந்தது கனவு
நெருங்குது முடிவு
எங்கே உன் பயனம் இனி சுராங்கனி
எங்கே உன் பயனம் இனி சுராங்கனி
சுராங்கனி.. சுராங்கனி..
Posted by
Covai Ravee
at
3:07 AM
0
comments
Links to this post
Labels: Balu
Monday, February 23, 2009
730 ஏ.ஆர்.ரஹ்மான்ஜிக்கு ஜே..

ஏ.ஆர்.ரஹ்மான்ஜிக்கு ஜே..
இரண்டு ஆஸ்கர் விருதுகள் பெற்ற இசையமைப்பாளர் திரு. ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களூக்கு அகில உலக பாலுஜி ரசிகர்கள் சார்பாகவும், கோவை ரசிகர்கள் சார்பாகவும் வாழ்த்துக்கள்.
|
இந்த தளத்தில் துவக்க காலத்தில் அதாவது 16.02.2006 அன்று பாஸ்டன் சுந்தர் அவரக்ளால் பதியப்பட்ட “காதல் ரோஜாவே” என்ற பாடல் எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தேனிசை மெலோடி பாடல். ரஹ்மான்ஜியின் தமிழில் முதல் படமான ரோஜா இந்த படத்தில் இருந்து மீண்டும் காதல் ரோஜாவே பாடலை வழங்கி அவருக்கு வாழ்த்து சொல்வதில் மிக்க் மகிழ்ச்சியடைகிறோம்.
என்றும் அன்புடன்
கோவை ரவி, வற்றாயிருப்பு சுந்தர், பாஸ்டன்
Posted by
Covai Ravee
at
12:39 AM
6
comments
Links to this post
Friday, February 20, 2009
729 ஹோ ராஜா, ஹோ ராணி வண்ண ராஜா

படம்: சுராங்கனி
பாடியவர்கள்: டாக்டர். எஸ்.பி.பி, எஸ்.பி.சைலஜா
அழகான பல்லவியை கொண்ட இந்த பாடலின் மெட்டை கேட்டால் ஏற்கெனவே வேறு
ஒரு பாடல் மெட்டு நினைவுக்கு வருகிறது மனதில் இருக்கிறது உதட்டிற்க்கு வரமாட்டேன்கிறது. பாடலில் சரணங்களின் மெட்டு மெய் மறக்க செய்யும். குறிப்பாக //அணைப்போமா.. இணைப்போமா...// கேட்க மிகவும் இனிமையாக இருக்கும்.
|
ஹோ ராஜா, ஹோ ராணி வண்ண ராஜா
உன் இள்மையை அள்ளி அள்ளி தா ராஜா
ஹோ ராணி, சுராங்கனி
ஜொலிக்கும் உன் மேனி ஹோய்
இனிக்கும் பால் தேனி
கோதுமை அல்வா நீ..
கண்ணோடு கையை கையோடு கையை
நெஞ்சோடு நெஞ்சை அணைப்போமா
இதழோடு இதழை
நூலோடு தேனை தீயோடு பஞ்சை இணைப்போமா
அணைப்போமா, இணைப்போமா
ஹோ ராஜா, ஹோ ராணி வண்ண ராஜா
உன் இள்மையை அள்ளி அள்ளி தா ராஜா
ஹோ ராணி, சுராங்கனி
ஜொலிக்கும் உன் மேனி ஹோய்
இனிக்கும் பால் தேனி
கோதுமை அல்வா நீ..
நான் தரும் மோக்ம தீராத மோகம்
தனியாத தாகம் தனிந்திடுமா
நான் ஆடும் மேகம் வேறேது பூலோகம்
இனிமே தான் சொர்க்கம் தெரிந்திடுமே
தனிந்திடுமா... தெரிந்திடுமே..
ஹோ ராஜா, ஹோ ராணி வண்ண ராஜா
உன் இள்மையை அள்ளி அள்ளி தா ராஜா
ஹோ ராணி, சுராங்கனி
ஜொலிக்கும் உன் மேனி ஹோய்
இனிக்கும் பால் தேனி
கோதுமை அல்வா நீ..
மூலிகை பலநூறு கலந்தது பாலாறு
வாசனை பன்னீரு வேடிக்கையோ
ஜில் என்ற பன்னீரு அருகினில் வா பாரு
களியாட்டம் பலநூறு வாடிக்கைத்தான்
வேடிக்கையோ....வாடிக்கைத்தான்
ஹோ ராஜா, ஹோ ராணி வண்ண ராஜா
உன் இள்மையை அள்ளி அள்ளி தா ராஜா
ஹோ ராணி, சுராங்கனி
ஜொலிக்கும் உன் மேனி ஹோய்
இனிக்கும் பால் தேனி
கோதுமை அல்வா நீ..
Posted by
Covai Ravee
at
4:16 AM
1 comments
Links to this post
Labels: Balu
Thursday, February 19, 2009
728 தந்தத்திலே செய்த நிலா

புதிய படமான மகேஷ், சரன்யா மற்றும் பலர் படத்தில் வித்யாசாகரின் இசை சூப்பர் தொடர் மெட்டு குறிப்பாக பாடலில் வரும் கிடாரின் இசை நெஞ்ச அள்ளிக்கொண்டுபோகும். // நாளூம் நலமுடன் நீ வாழ்கவே வளமுடன்// தந்தை மகள் பாசத்தை உணர்த்தும் அருமையான பாடலை அமர்க்களமாக பாடியிருப்பார் பாலுஜி. கேட்டு மகிழுங்கள்.
படம்: மகேஷ், சரன்யா மற்றும் பலர்
நடிகர்கள்: சந்தியா, சக்தி, கீர்த்தி சாவ்லா, டேனியல் பாலாஜி
பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி
இசை: வித்யாசாகர்
|
தந்தத்திலே செய்த நிலா எங்கள் தங்கத்தேரு என்றும் உலா
தாவனிப்பூ நடந்து வர அன்று எங்களுக்கு திருவிழா
தந்தத்திலே செய்த நிலா எங்கள் தங்கத்தேரு என்றும் உலா
தாவனிப்பூ நடந்து வர அன்று எங்களுக்கு திருவிழா
என்றும் பாதம் போல உன்னை எங்கள் பாசம் இங்கு தாங்கும்
உந்தன் பாதத்தோடு பேச இந்த சலங்கை கூட ஏங்கும்
நாளூம் நலமுடன் நீ வாழ்கவே வளமுடன்
தந்தத்திலே செய்த நிலா எங்கள் தங்கத்தேரு என்றும் உலா
தாவனிப்பூ நடந்து வர அன்று எங்களுக்கு திருவிழா
செல்லக்குறும்புகள் சின்ன சினுங்கல்கள்
அந்த நிமிடங்கள் நெஞ்சில் ஊறுமோ
எங்கள் இமைகளே இன்று குடையினில்
உந்த உறவிலே வெயில் காயுமோ
அன்பில் வீட்டை ஆளூம் போது
அன்னை இங்கு நீதானே
தங்கைக்காக வாழும் போது
அண்ணன் கூட நாய் தானே
நாளூம் நலமுடன் நீ வாழ்கவே வளமுடன்
தந்தத்திலே செய்த நிலா எங்கள் தங்கத்தேரு என்றும் உலா
தாவனிப்பூ நடந்து வர அன்று எங்களுக்கு திருவிழா
சின்னப்பறவையே உந்தன் நிழலுக்கும்
இங்கு நாங்களே சிறகாகுவோம்
எந்தன் தோட்டத்தில் வந்த வாழைக்கும்
இனி நாங்களே விழுதாகுவோம்
உள்ளங்கையில் ரேகைட்யை போல உள்ளம் என்றும் மாறாது
தொட்டில் போடும் தூர உன்னை விட்டு போகாது
நாளூம் நலமுடன் நீ வாழ்கவே வளமுடன்
தந்தத்திலே செய்த நிலா எங்கள் தங்கத்தேரு என்றும் உலா
தாவனிப்பூ நடந்து வர அன்று எங்களுக்கு திருவிழா
Posted by
Covai Ravee
at
3:02 AM
1 comments
Links to this post
Labels: Balu
Tuesday, February 17, 2009
727 ரசிகன் ரசிகன் ரசிகன்..பகுதி 1 மற்றும் 2


ரசிகன் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஒலித்தொகுப்பு -1
|
சுமார், ஆறு மாதங்களூக்கு முன் சென்னையில் இருந்து திரு. மணிவண்ணன் என்பவர் எனது கையடக்க பேசியில் தொடர்பு கொண்டு உங்கள் பதிவுகளை இணையத்தில் பார்த்திருக்கிறேன். அதை குறிப்பிட்டு பாலுஜியின் ரசிகன் நிகழ்ச்சி ஒன்றை கலைஞ்ர் தொலைக்காட்சியில் பிரதி வாரம் ஞாயிறு அன்று ஒளிப்பரப்பி வருகிறது. அதற்கு, தாங்கள் ரசிகன் ஒரு நிகழ்ச்சியை தாருங்கள் அன்புடன் கேட்டுக்கொண்டார். நான் சென்னை நண்பர்களிடம் தெரிவித்து இந்த வாய்ப்பை பயன்படுத்துங்கள் நமது பாலுஜி ட்ரஸ்டிற்க்கு மிகவும் உதவியாக இருக்கும். என்று சொன்னதுடன் மிக ஆர்வத்துடன் கலந்து கொண்ட
சென்னை மற்றும் நாமக்கல் கோவை ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சில தவிர்க்க முடியாத காரணங்களால் நான் கலந்து கொள்ள் முடியவில்லை அதனால் மிகவும் வருந்தினேன். ஏனென்றால் நிகழ்ச்சி மிக அற்புதமாக அமைந்திருந்தது.

நிகழ்ச்சி தொகுப்பாளர்: திரு. பி.எஹ்.அப்துல் ஹமீது
நிகழ்ச்சியின் நடுவர்: திரு. மாணிக்க விநாயகம்
முதலில் பாலுஜி அவர்கள் தன் ரசிகர்கள் பற்றிய தன் மனதில் தோன்றிய கருத்துக்களை
தெரிவித்த ஒளீக்காட்சி காட்டப்பட்டது..
சென்னை அணி 1 >> அசோக், யுவராஜன், ராம்சந்தர்
நாமக்கல் அணி >> சேஷாத்திரி, நாராயணன், எஸ்.பாலாஜி
காஞ்சிபுரம் அணி >> பிரசன்னா, கார்த்திக் ராஜா, ஆரோக்யராஜ் ஜெனிபர்
கோவை மாநகர் அணி >> விஜய்கிருஷ்னன், ஸ்ரீனிவாசன், ராஜ்மோகன்
மேற்கண்ட 4 அணிகளூம் மிகவும் உற்சாகத்துடன் இருப்பதை தொலைக்காட்சியில் காணமுடிந்தது, அந்த அணிகளிடம் திரு.பி.எஹ் அப்துல் ஹமீது அவர்கள் கேட்ட கேள்விகளூக்கு திரு. அசோக், எஸ்.பாலாஜி, திரு.பிரசன்னா திரு. சேஷாத்திரி திரு. கார்த்திக் ராஜா, திரு. விஜய் கிருஷ்னன் மற்றும் ஸ்ரீனிவாசன் ஆகியோர் அமர்க்களமான பதில்கள் தந்து கலக்கிவிட்டனர். அந்த சம்பாசனைகளை நான் எழுத்து வடிவில் இங்கு தரஇயலும ஆனால் ஒலிக்கோப்பு இருக்கும் போது நான் எழுதுவதை விட தங்கள் காதிலேயே கேட்டால் உங்களூக்கு ஓர் உற்சாகமாக இருக்கும். அதனால் அதிகம் உங்களை சோதிக்க விரும்பாமல் முதலிலேயே ஒலிக்கோப்பின் ப்ளேயரை தந்துவிட்டேன். தரவிறக்கம் செய்யும் வகையில் வழங்கப்பட்டுள்ளதால் தாங்கள் தரவிறக்கம் செய்து கேட்டு மகிழுங்கள்.
குறிப்பாக, சென்னை அணியில் அதிரடியுடன் பாலுஜியின் பாடல் கேள்விகளூக்கு அவள் ஒரு நவரச நாடகம் என்றா பாடலை அசத்தலாக பாடிய திரு. அசோகிற்க்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது அவர் இந்த மேடையின் வாய்ப்பை நல்ல விதமாக பயன்படுத்யிருக்கிறார் அவருக்கு என் வாழ்த்துக்கள்.
நாமக்கல் அணியில் திரு.எஸ்.பாலாஜி அவர்கள் ஏற்கெனவே பல பக்தி பாடல் ஆல்பங்கள் வழங்கியிருப்பதால் அவரும் எந்தவித டென்சன் இல்லாமல் பாலுஜியின் லேட்டஸ்ட் பாடலான யாரோ யாரோடு யாரோ என்ற பாடலை சிறிதும் அலட்டிக்காமல்
பாடியது அனைவரையும் அசத்தியது. அவருக்கும் நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.
காஞ்சிபுரம் அணியில் திரு.ஆரோக்யராஜ் அதிரடியுடன் எங்கேயும் எப்போதும் என்ற பாடலை பாடி அனைவரையும் தாளம் போட வைத்துவிட்டார்.
கோவை மாநகர் அணியில் திரு.ஸ்ரீனிவாசன் பாடும் வாணம் பாடி பாடல் கேள்வியில் சரணவரிகள் கிடைக்காமல் மெட்டை விடாமல் பாடி திணறினாலும் முடிவில் பல்லவி பிடித்து பாராட்டை பெற்றார். திரு. ராஜ்மோகன் அவர்கள் தளபதி பாடல் ராக்கம்மா கையை தட்டு என்ற பாடலை மிகவும் பாலுஜி ஸ்டைலில் ரசித்து பாடியது ஆச்சரியமாக இருந்தது. அவருக்கும் வாழ்த்துக்கள்.
மேலும், இந்த ஒலிக்கோப்பில் இறுதியில் நடுவர் திரு. மாணிக்க விநாயகம் அவர்கள் பாலுஜியை பற்றி பொதுவான கேள்விகள் கேட்டார். அந்த பகுதியும் அவர் பாடிய பாலுஜியின் பாடலும் வெற்றி பெற்ற காஞ்சிபுரம் அணீக்கு பரிசு வழங்கும் பகுதியும் துரவதிர்ஷ்டமாக மின்தடை ஏற்பட்டு பதிவு செய்ய முடியவில்லை. அதற்காக வருந்துகிறேன் . நமது அன்பர்கள் எவரேனும் ஒளீக்காட்ட்சியாக பதிவு செய்திருந்தால் அதைக் காண ஆவலுட்ன் நானும் காத்திருக்கிறேன்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
அடுத்த வார பகுதிகாக இனி உங்களூடன் நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இந்த நிகழ்ச்சியை மிகவும் இனிமையாக தொகுத்து வழங்கிய திரு. பி.ஹெச். அப்துல் ஹமீது வழக்கம்போல் அனைவரின் அவருடைய பாணீயில் வழங்கி உள்ளத்திலும் மகிழ்ச்சியை உருவாக்கினார்.
இந்த முதல் எபிசோடை மிகவும் திறமையுடன் இயக்கிய திரு. மணிவண்ணன் அவர்களுக்கும், தயாரித்த நிறுவனமான கிரேவ்டி நிறுவனத்தாருக்கும் அகில உலக பாலுஜி ரசிகர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
ரசிகன் ரசிகன் ரசிகன் ஒலித்தொகுப்பு 2
|
ரசிகன் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஒலித்தொகுப்பு -2
அன்பு உள்ளங்களே..
சென்ற வாரம் 15.02.2009 ஞாயிறு அன்று நமது கலைஞர் தொலைக்காட்சியில் காலை 11 மணி முதல் 12 மணி வரை பத்மஸ்ரீ டாக்டர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் ரசிகன் என்ற அருமையான நிகழ்ச்சி முதல் பகுதி ஒளிப்பரப்பட்டது. இதை பாடும் நிலா பாலு தளத்தில் பதிவாக ஒலிக்கோப்புடன் வழங்கினேன். இதோ இந்த பதிவில் நேற்று 22.02.2009 அன்று காலை 11 மணி முதல் 12 மணி வரை 2 ஆவது பகுதி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வேலூர், சேலம் மற்றும் சென்னை மாவட்டங்களில் இருந்து நமது யாகூ குழுவின் ரசிகர்கள் சிறப்பாக பங்கேற்றனர்.
வேலூர் மாவட்டத்தில் இருந்து திரு.விஜயகுமா, திரு.பாலாஜி, திருமதி.ஆ.லக்ஷ்மி ஆகியோரும், சேலம் மாவட்டத்தில் இருந்து திரு.ஆர்.துரைராஜ், திரு.கோகுலகிருஷ்னன், திருமதி.ரமாதேவி மேலும் சென்னை 2 அணியில் இருந்து திரு.சி.பாலாஜி, திரு.பிரகாஷ்,திரு.ஏ.எஸ்.நடராஜன் ஆகியோரும் மற்றும் சென்னை 3 ஆவது அணியில் இருந்து திரு.ஏ.ராமன், திரு.எம்.நடராஜன், திரு. பாலாஜி ஆகியோரும் கலந்து கொண்டு இந்த 2ஆவது பகுதியை மிகவும் சிறப்பாக வழங்கினார்கள். இனி ஒவ்வொரு குழுவும் எப்படி தன் திறமை காட்டினார்கள் என்று தாங்கள் ஒலிக்கோப்பில் தரவிறக்கம் செய்து கேட்கலாம். இருந்தாலும் முன்னோட்டமாக சில குறிப்பிடுவனவற்றை நான் எழுத விரும்புகிறேன்.
வேலூர் மாவட்ட அணியில் இருந்து திரு. விஜயகுமார் பல தொலைக்காட்சி மேடைகளில் தன் குரல் திறமையை வெளிகாட்டியுள்ளார். இந்த மேடை அவரின் அபிமான பாலுஜியின் ரசிகன் நிகழ்ச்சியில் தனிப்பட்ட திறமையை முன் நிறுத்தி மிகவும் அசத்தலாக வழங்கினார். எல்லாகேள்விகளூக்கும் அழகாக நறுக்கு தெரித்தார் போல் சரியான பதில்கள் தந்தது பாராட்டபட வேண்டிய ஒன்று. மேலும் அவர் மடை திறந்து என்ற பாடலையும், தனித்திறமை
சுற்றில் கலகல வென் கவிதைகள் என்ற பாடலையும் மிகவும் மிகவும் சிறப்பாக பாடி தன் பங்கை செவ்வனே செய்து பாலுஜியின் மீதுள்ள தன் அபிமானத்தை காட்டினார். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. அவருக்கும் அவருடன் இருந்த மற்ற அன்பர்களூக்கும் வாழ்த்துக்கள்.
சென்னை 2 அணியில் திரு. ஆர். துரைராஜ் அவர்கள் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவர் அவருடன் சேர்ந்து ரமா தேவி அவர்களும் பாலுஜியின் ஆதிகால பாடலான ஆயிரம் நிலவே வா என்ற அடிமைப்பெண் பாடலை மிகவும் அனுபவபூர்வமாக உணர்ந்து பாடி கேட்பவர்களின் மனதை கொள்ளைக்கொண்டார் அதுமட்டுமல்லாமல் நடுவரின் சிறப்பான பாரட்டையும் பெற்றார். சென்னை 2 வது குழுவினருக்கும் வாழ்த்துககள்.
சென்னை 3 அணியில் பாலுஜியைப்போலவே உடல் வாகுவை போன்ற ரு.ஏ.எஸ்.நடராஜன் அவர்களின் புதுபுதுஅர்த்தங்கள் படத்தின் பாடலான கேளடி கண்மணி என்ற எனக்கு மிகவும் பிடித்த மெலோடி பாடலை மிகவுன் ரசித்து பாடி அசத்தினார். அவருடன் திரு. சி.பாலாஜியும் பாலுஜியின் சாரிட்டி பவுண்டேசன் பற்றிய தகவல்களை சொன்னது. அதை நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு.பி.எச். அப்துல் ஹமீது அவர்கள் வெகுவாக பாராட்டி சொன்னது அசத்தலாக இருந்தது. அத்துடன் சாரிட்டி பவுண்டேசனில் எப்படி உறுப்பினராக சேர்வது என்ற வீடியோ க்ளிப்பிங் காண்த்தும் அதில் திரு. அசோக் அவர்கள் விளக்கமாக எடுத்துரைத்தது புதிய ரசிகர்கள் சேர்வதற்க்கு மிகவும் உதவியாக இருந்தது.
சேலம் மாவட்ட அணியில் இருந்து திரு. பாலாஜி அவர்கள் கடவுள் அமைத்து வைத்த பாடலையும் அதில் நடுவில் வரும் மிமிக்ரி நிகழ்ச்சியையும் சிறப்பாக ஒருவரே
பாடி காண்பித்து ஒட்டு மொத்த ரசிகன் நிகழ்ச்சிக்கும் முத்தாய்ப்பாக வழங்கினார். அருமையாக பாடி அனைவரின் உள்ளத்தையும் கொள்ளைகொண்டார் என்று சொன்னால்
அது மிகையாகாது.
இந்த நிகழ்ச்சியின் நடுவராக வருகை தந்தவர் இசையமைப்பாளர் திரு. சிற்பி அவர்கள். அவர் நிகழ்ச்சி முழுவதும் மிகவும் ரசித்து தன் பங்குக்கு குழுவினரிடம் சில அழகான கேள்விகள் கேட்டு அருமையான பதில்கள் பெற்றார். அவரும் பாலுஜியின் மீது உள்ள தன் அன்பையும் சொல்லி எல்லோரையும் மெய் சிலிர்ர்க வைத்தார். முடிவில் இந்த நான்கு குழுக்களூம் பாலுஜியின் மீதுள்ள அன்பின் காரணமாக மிகவும் நன்றாக பாடினார்கள் யாரின் அன்பையும் நான் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை அனைவரின் அன்பையும் பிரித்து பங்குப்போட்டு யாரி அதிகம் அதிகம் அன்பு செலுத்திறார் என்று குறிப்பிட்ட விரும்பவில்லை ஆகையால் அனைத்து குழுவினருக்கும் அவர்களின் திறமையை பாராட்டி பரிசுகள் வழங்குகிறேன் என்று சொல்லி எல்லோரின் மனதிலும் இடம் பிடித்துவிட்டார் நடுவர்.
மேலும், இந்த நிகழ்ச்சியின் முன் தினம் இரவு 9 மணிக்கு ரசிகன் நிகழ்ச்சியின் இயக்குநர் திரு. மணிவண்ணன் அவர்கள் என்னிடம் தொடர்ப்பு கொண்டு நாளை நிகழ்ச்சியை
பாருங்கள் மிகவும் நன்றாக இருக்கும் என்றும். ரசிகர்களூக்கும் சொல்லுங்கள் என்று சொல்லி. சில மாதங்கள் கழித்து இது போல் இன்னும் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்வேன்
அதில் நீங்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தார். இந்த இரண்டு பகுதிகளையும் மிகவும் சிறப்பாக இயக்கி, சரியான இடத்தில் மிகவும்
எடிட் செய்து எங்கள் பாலுஜியின் சார்ட்டி பவுண்டேசன் பற்றி சிறிய ஒளிக்கோப்பும் சேர்த்து இந்த சமூகத்துக்கு மேலும் சில நற்பணிகளை செய்ய உதவி செய்த இயக்குநர்
அவர்களூகும் எங்களூக்கு இந்த வாய்ப்பு வழங்கிய தயாரித்த கிரேவிட்டி நிறுவனத்தாருக்கும் பாலுஜி சார்பாகவும் கோவை பாலுஜி ரசிகர்கள் சார்பாகவும் என் நன்றியை தெரிவித்து
கொள்வதில் மிகவும் மகிழ்கிறேன். அதுமட்டுமல்லாமல் நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை பெரும் வருத்தம் இருந்தாலும் இந்த இரண்டு நிகழ்ச்சியின்
ஒலித்தொகுப்பை பதிவு செய்து பாலுஜியின் பாடும் நிலா தளத்தில் வழங்க வாய்ப்பு கிடைத்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். அதற்க்கு மிகவும் ஒத்துழைத்த அனைத்து
அன்பு உள்ளங்களுக்கு மீண்டும் என் பணிவான நன்றி.
Posted by
Covai Ravee
at
6:29 AM
3
comments
Links to this post
Labels: Balu
Friday, February 13, 2009
726 பாலுஜியுடன் ஐந்து மணிநேர பரவசம்

ரிம்ஜிம், ரிம்ஜிம் ஹைத்ராபாத் சந்திப்பு அழைப்பிதழ்.
பாலுஜியுடன் ஐந்து மணிநேர பரவசம் >> சந்திப்பில் எடுக்கப்பட்ட சில படங்களின் தொகுப்பு.
அன்பு உள்ளங்களே...
வணக்கம். 6ஆம் தேதி வெள்ளியன்று கோவையில் பாலுஜியின் ஓர் அற்புதமான இன்னிசை நிகழ்ச்சி “நினைத்தாலே இனிக்கும்” என்ற பெயரில் அமர்க்களமாக நடந்தது. அன்று காலை முதலே எனது கோவை பாலுஜி ரசிகர்கள் சிலபேர் பாலுஜியை சந்திக்க வேண்டும் என்ற ஆவலை எனக்கு தெரியப்படுத்திய போது பார்துடலாம் கவலப்படாதீர்கள் என்ற நான் நம்பிக்கையை ஏற்படுத்தினேன். அவர்களின் அதிர்ஷ்டமோ அல்லது என் போதாத காலமோ தெரியவில்லை. அன்று பாலுஜி வந்த விமானம் 2 மணி நேரம் தாமதமாக வந்து
சேர்ந்தது அது மட்டுமல்லாமல் சில தவிர்க்க முடியாத காரணத்தால் பாலுஜியை சந்திக்க முடியவில்லை ஒரு விஐபியை கடத்தி செல்லுவது போல் அவரை கடத்தி ஓர் விலாசம் தெரியாத ஒரு கெஸ்ட் ஹவுஸில் தங்க வைத்தார்கள் விழாவை ஏற்பாடு செய்தவர்கள். இந்த குழப்பத்தினால் சரியான தகவல்கள் எனக்கு கிடைக்காததால். ஆவலுடன் காத்திருந்த அன்பர்களின் ஆசையை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. அதனால் மிகவும் வருத்தப்பட்டேன். இருந்தாலும் அன்பர்கள் அனைவரும் இசைநிகழ்ச்சியை கண்டு ரசித்து
மிகவும் ஆனந்தப்பட்டார்கள். அந்த ஆனந்தமும் எனக்கு கிட்டவில்லை. ஏனென்றால், 8 ஆம் தேதி ஞாயிறு அன்று பாலுஜியின் ரசிகர்களின் சாரிட்டி பவுண்டேசன் சார்பாக வருடாந்திர சந்திப்பு ஹைத்ராபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது.
அந்த சந்திப்பில் கலந்து கொண்ட என் சந்தோசத்தையும், அனுபவத்தையும் உங்களூடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்கின்றேன்.
பாலுஜியுடன் திரு.ஜி.ராமகிருஷ்னா ராவ் வீட்டிற்க்கு வருகை தந்த போது எடுத்த படம்.
முதலில், இந்த நிகழ்ச்சியை மிகவும் அற்புதமாக நடத்தி முடித்து கொடுத்த ஹைதராபாத் திரு. ஜி.ஆர்.ராமகிருஷ்னா அவர்களூக்கும் (கையில் எந்தவித குறிப்பும் இல்லாமலும் மிகச்சரளமாக பேசி திரு.ஜி.ஆர்.கே அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது கேட்டு அனைவரும் பாராட்டினர்), திரு. சைதன்யா அவர்களூக்கும் மற்றும் திருமதி. உஷா மற்றும் அனைத்து தெலுங்கு பாலுஜி ரசிகர்களூக்கும் கோவை ரசிகர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
8 ஆம் தேதி 7.45 மணிக்கு அதிகாலையில் சென்னையில் இருந்து ஒரு ரசிகர் கூட்டமே ரயிலில் வந்து இறங்கியவுடன் ஓரு பரபரப்பு எல்லோரையும் தொற்றிக்கொண்டது. எல்லோரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உற்சாகத்துடன் தயார் ஆனார்கள்.
8.30 மணீக்கு வந்த 30 பேர் குழுவுடன் ஒரு ட்ரவாலர் டெம்போவில் ஆதாரானா என்ற ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் நோக்கி பயணமாகினோம். பாலுஜி அங்கே நேரில் வருவதாக தகவல். ஆகையால் அன்பர்கள் அனைவரும் ஒரு வித உற்சாகமான
மகிழ்ச்சி அவர்களின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. 9.30 மணியளவில் இல்லத்திற்க்கு சென்று அடைந்தோம் சரியாக 9.45 மணிக்கு பாலுஜி தன் ஹைத்ராபாத் நண்பர்களூடன் காரில் வந்து அட்டகாசமாக இறங்கினார். அவரை இல்லத்தின் நிர்வாகிகள் அன்புடன் வரவேற்றனர். மேலும், இல்லத்தின் சிறுவர்கள், அனைவரும் பூங்கொத்து வழங்கியும் மலர்கள் தூவியும் அவரை வரவேற்றது கண்டு அனைவரும் பாலுஜி நெகிழ்ந்து போனார்கள் அவர்கள் கொடுத்த பூங்கொத்தை அன்புடன் வாங்கிகொண்ட பாலுஜி அதை என் நண்பர் திரு. சேஷாத்திரியுடன் கொடுத்து பத்திரமாக கையில் வையுங்கள் ஒரு பூகூட கீழே விழக்கூடாது,
கைதவறியும் கீழே போட்டு விடாதீர்கள் என்று குறிப்பாக சொன்னது என் மனதில் இன்னும் ஒலித்துகொண்டே இருக்கிறது. திரு. சேஷாத்திரி அவர்கள் பாலுஜி நிகழ்ச்சியை பார்த்ததை விட பூங்கொத்து எங்கே கீழே விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் கவனமாக சற்று தூக்கியே பிடித்து வைத்துக்கொண்டு இருந்ததை நான் பல தடவை காண நேர்ந்தது.
உள்ளே நுழைந்ததும், சிறுவர்களை பார்த்து எடுத்ததுவுடன் சினிமா எல்லோரும் பார்ப்பீர்களா என்றார். அதற்கு சிறுவர்கள் ஆமாம் என்று தலையசைக்க வேண்டாம் அதிகம் பார்க்காதீர்கள் என்றதும். அனைவரும் சிரித்து விட்டார்கள். தொடர்ந்து நிர்வாகிகளூடன் பேசிக்கொண்டு இருந்த பாலுஜி விவரங்களை கேட்டு அறிந்துகொண்டார். நிர்வாகிகளூம் விவரமாக வந்தவர்களூக்கு விளக்கினார். மேலும், ஆதரவற்ற இல்லத்திற்க்கு
தேவையான பொருட்களான மிக்ஸி, க்ரைண்டர், ட்யூப் லைட், மற்றும் பல பொருட்கள் சாரிட்டி சார்பாக தன் கையால் வழங்கினார். அத்துடன் சிறுவர்களின் நடனம், பாட்டு நிகழ்ச்சியை மிகவும் ஆர்வத்துடன் ரசித்து மகிழ்ந்தார். நிர்வாகிகளூடனும், சிறுவர்களூடன் புகைப்படங்கள் எடுத்துகொண்டு அவர்களீன் உற்சாகத்தில் தானும் ஒரு குழந்தை சேர்ந்து போல் மகிழ்ந்தார். குறிப்பாக அவர் சிறுவர்கள் அனைவரிடமும் விடைப்பெற்று செல்லும் போது நான் இல்லத்தில் இருந்தவர்கள் முகத்தை பார்த்தேன் அங்கு இருந்த ஒவ்வோரின் முகத்திலும் இனம் புரியாத மகிழ்ச்சி தாண்டவாடியது கண்டு எங்களுக்கும் ஆனந்தம் தான். சும்மாவாகவா சொன்னார்கள் நமது பெரியோர்கள் அடுத்தவருக்கு உதவி செய்து அவர்கள் சந்தோசப்படுவதை பார்க்க கண் கோடி வேண்டும் என்று. அந்த ஆனந்தம் எங்கும் கிடைக்காது என்பது உறுதி. பின் அனைவரும் வேனிலும் கிளம்பினோம். கிளம்பும் நேரத்தில் இல்லத்தில் இருந்த கல்லூரியில் படிக்கும் மானவர்களை 4 பேரை நிர்வாகிகள் அறிமுகப்படுத்தினார்கள்
அவர்கள் படிப்பை விசாரித்த பாலுஜி எல்லோரும் கல்லூரியில் நன்கு படிப்பதை கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார். இவர்கள் போல் சிறுவர்களூம் நன்றாக படிக்க வேண்டும் மீண்டும் மற்றவர்களை கேட்டுக்கொண்டார். நானும், திரு. சேஷாத்திரி மற்றும் திரு. ராமகிருஷ்னா அவரின் காரில் பாலுஜியுடன் ரசிகர்கள் சந்திப்பு நடக்கும் ஹோட்டலுக்கு கிளம்பினோம்.
ரசிகர்களை சந்திக்கும் இடத்திற்க்கு நாங்கள் செல்வதற்க்கு முன்னமே பாலுஜி தன் நண்பர்க்ளுடன் காரில் சிட்டாக பறந்து சென்று விட்டார். பின்னரே எங்கள் கார் சென்றது. விழா நடைபெறுவதற்க்கு முன்னமே பாலுஜியை சுற்றி சின்ன ஒரு கூட்டம் அனைவருக்கும்
வரவேற்பு தேனீர் வழங்கப்பட்டது. பாலுஜியும் தன் நண்பர்களூடனும் ரசிகர்களூடன் உரையாடிக்கொண்டு தேனீர் அருந்தினார். தொடர்ந்து வருபவர்களிடம் விழாவை ஏற்பாடு செய்த சென்னை ரசிகர்க்ள் சாரிட்டிகாக உள்ளே நுழையும் ரசிகர்களிடன் கண்களில் விளக்கெண்ணெய் விட்டு ஒவ்வொருத்தரையும் விடாது உறுப்பினர் கட்டணம் வசூல் செய்து கொண்டுஇருப்பதில் மிகவும் கவனமாக இருந்தார்கள்.
சரியாக காலை 10.45 மணியளவில் விழா துவங்கப்பட்டது. முதலில் சென்னையில் இருந்து வந்த பாலுஜியின் தீவிர ரசிகர் திரு. சதீஸ் அவர்கள் இறைவணக்கம்
பாடலை பாடி எல்லோரையும் அசத்தியது மட்டுமல்லாமல் பாலுஜி அவரை கட்டிப்பிடித்து பாராட்டையும் வழங்கினார்.
பாலுஜிக்கு திரு. ராமகிருஷ்னா அவர்களீன் குழந்தைகள் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்கள். அதன் தொடர்ச்சியாக திரு. ராமாகிருஷ்னா அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரசிகர்கள் ஒவ்வொருவரும் தனது சுயமாக அறிமுகப்படுத்திக்கொண்டார்கள். ஒவ்வொருவரின் அறிமுகம் முடிந்தவுடன் பாலுஜி சாரிட்டியுடன் பேசியவரின் தொடர்ப்பை விவரித்து நினைவில் கொண்டு பாராட்டியது கேட்டு ஒவ்வொருவரின் முகத்திலும் மகிழ்ச்சியின் ரேகைகள் விரிந்தது. மகிழ்ச்சியின் உற்சத்திற்க்கே சென்றார்கள் என்றால் மிகையாகாது. (நானும் தான்).
அதை தொடர்ந்து ஒவ்வொருவருடனும் பாலுஜி புகைப்படம் எடுத்துக்கொண்டது மறக்க முடியாத ஒன்று. இந்த நிகழ்ச்சியில் எனக்கு சிறிது பொறாமையும் கூட என்று சொல்லாம். ஏனென்றால் சென்ற வருடம் 2008 இதே மாதம் பிப்ரவரி 17ஆம் தேதி இது போல் ரசிகர் சந்திப்பிலும் ரசிகர்களூடன் புகைப்பட நிகழ்ச்சியில் கூட்டம் அதிகம் காரணத்தினாலும் நேரமின்மை காரணத்தினாலும் மேலும் பாலுஜியின் உடல் நிலை சரியில்லாத
காரணத்தினாலும் 4 பேர் கொண்ட குழுவாக தான் புகைப்படம் எடுக்க அனுமதியளிக்கப்பட்டது ஹைத்ராபாதில் எடுத்தது போல் சவுகரியமாகவும் பாலுஜி உரையாடவும் பேச முடியவில்லை. கோவையில் கலந்து கொண்ட புதிய ரசிகர்கள் தனியாக நின்று புகைப்படம் எடுக்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டார்கள். நான் அவர்களை, பாலுஜி எங்கே போகப்போகிறார் அடுத்த தடவை வரும்போது நிறைய பேசாலாம் என்று சமாதானபடுத்த வேண்டி இருந்தது.
தொடர்ந்து, இசையமைப்பாளர் இளையராஜா, தெலுங்கு நடிகர் திரு. வெங்கடேஷ், திருமதி சைலஜா, திருமதி வசந்தா, மற்றும் பாடகர் திரு. மனோ, வீடியோ பேட்டி ஒளிப்பரப்பப்பட்டது அதை கண்டு அனைவரும் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றார்கள்.
பிறகு ரசிகர்களீடம் கேள்வி கேட்கும் நேரம், ஒவ்வொருவரும் வித்தியாசமான கேள்விகள் கேட்டார்கள். இந்த சந்திப்பில் சில கேள்விகளே கேட்கப்பட்டாலும். வழக்கம் போல் பாலுஜி ஒவ்வொரு கேள்விக்கும் பதில் தரும் போது தன் இசை அனுபவங்களை விவரமாக விவரித்து
சொன்னது அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது. கேள்வி கேட்டவர்கள் அனைவரும் தன் கேள்விக்கு அற்புதமான தகவல்கள் கிடைத்தது கேட்டு மகிழ்ச்சியில் திண்டாடித்தான் போனார்கள். ரசிகர்கள் அன்பு வேண்டுகோளுக்கிணங்க தமிழ், தெலுங்கு படப்பாடல்களை பாடி எல்லோரையும் அசர வைத்தார் அருகில் இருந்த கேட்டு ரசித்த என் கால்கள் பூமியில் நிற்காது பறப்பதை போன்ற உணர்வை அடைந்தேன்.



விழாவில் பாக்கெட் காலண்டர் பெற்றுக்கொள்ள தவறியவர்கள் மேலே உள்ளவற்றை தரவிறக்கம் செய்து தங்களின் இதயத்துக்கு அருகில் வைத்துக்கொள்ளலாம்.
பாலுஜிக்கு ரசிகர்கள் சார்பாக டைரி நினைவு பரிசும், கலந்து கொண்ட அனைவரையின் கையொப்பமிட்ட வாழ்த்து அட்டையும் வழங்கப்பட்டது. கோவை ரசிகர்கள் சார்பாக பாலுஜியின் படத்துடன் பாக்கெட் காலெண்டர் அட்டை வழங்கப்பட்டது. விழா அழைப்பிதழ் மற்றும் கோவை ரசிகர்கள் பாக்கெட் காலண்டர் வடிவமைத்த திரு. விகாஸ் காம்ளே, மும்பை அவர்களுக்கு கோவை ரசிகர்கள் சார்பாக நன்றி.
இந்த சந்திப்பில் பாலுஜியின் நெருங்கிய நண்பர்கள் திரு. முரளீ, திரு. ஷிவ்ராம், மற்றும் சுப்பாராவ் ஆகியோரின் நட்பு கிடைத்தது எனக்கு மிக்க மகிழ்ச்சியை தந்தது.
சந்திப்பை தொடர்ந்து அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யபட்டு இருந்தது. பாலுஜியும் அவரது நன்பர்களூம் மதிய உணவு அருந்தியது அனைவருக்கும் கிடைத்தற்கரியாத வாய்ப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அப்போதும் ராமகிருஷ்னா அவர்களூம் மற்ற நண்பர்களூம் நானும் உட்பட அவரை சாப்பிட விடாமல் பேசிக்கொண்டே இருந்தது அன்பர்களின் ஆர்வத்தை காணமுடிந்தது. அவரும் சளைக்காமல் பதில் தந்தது எனக்கு ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியமாக இருந்தது. தனது வேளை பளூவின் இடையிலும் பாலுஜி அவர்கள் 9.45 மணி முதல் 2.45 மணிவரை கிட்டத்தட்ட
5 மணி நேரம் கலந்துகொண்டது இப்போது நினைத்தாலும். ஒவ்வொருவரின் ரசிகர்களீன் புருவங்களூம் வில்லாக ஆச்சரியத்துடன் உயரும். அது மட்டுமல்லாமல்
கலந்து கொண்ட ஒவ்வொரு ரசிகரும் பாலுஜியின் மனதில் நீங்கா இடம் பெற்றுவிட்டார்கள் என்று சொன்னால் மிகையாகாது. மொத்தத்தில் இந்த ஹைத்ராபாத் பாலுஜியின் சந்திப்பு பரவசமான சந்திப்பாக அனைவருக்கும் இருக்கும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.
இந்த முறை பல ஆந்திர ரசிகர்கள் சாரிட்டியில் சேர்ந்திருக்கிறார்கள் என்று வசூல் வேட்டையில் அமர்ந்திருந்த யாகூ குழுவின் மாடெரட்டர் திரு. தாசரதி சார் மகிழ்ச்சியுடன் தெரிவித்ததும் நானும் அவர் மகிழ்ச்சியடைந்தேன். அதற்காக தானே கோவை, சென்னை பாலுஜி ரசிகர்கள் இந்த விழாவை ஏற்பாடு செய்து தனது வேலை பளூவின் இடையிலும் நேரத்தை வழங்கி பாலுஜி கலந்து கொள்கிறார். இந்த பதிவை படித்தாவது அடுத்த வருடம் நடக்கு விழாவிலும் இன்னும் அதிக ரசிகர்கள் சாரிட்டி பவுண்டேசனில் சேர்ந்து கலந்து கொள்வார்கள் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன். இதுவரை பொறுமையுடன் தங்களின் நேரத்தை ஒதுக்கி படித்ததற்க்கு மிக்க நன்றி.
|
ஹைத்ராபாத் சென்று சுற்றித்தான் பார்க்கமுடியவில்லை அதனாலென்ன பாலுஜி பல வருடங்களூக்கு முன்னே இதோ இந்த தெலுங்க்கு பாடலின் மூலம் சுற்றி காண்பித்துவிட்டாரே அதையும் கேட்டு விடுங்கள். அத்துடன் உங்கள் இனிமையான உணர்வுகளை ஒரு வரியிலும் எழுதுங்கள்.
Movie: Mattilo Manikayam
Singer: Dr.SPB
rimjim rimjim hyderabad
rikshavaala jindabad
moodu chakramulu gira gira thirigithe
motorukaaru baladuru
rimjim rimjim hyderabad
rikshavaala jindabaad
atu chusthe chariminaru
itu chusthe jumma masidu
atu chusthe chariminaru
itu chusthe jumma masidu
aavanka assembili haalu
eevanka jubilee haalu
thala thala merise ye ye ye ye
thala thala merise hussainu saagaru
daatithe secunderabadu
rimjim rimjim hyderabad
rikshavaala jindabad
oka thalapai roomi topi
oka thalapai gandhi topi
oka thalapai roomi topi
oka thalapai ganthi topi
chaabayini antaadokadu
yemoyani antaadokadu
mathaalu baashalu veraynaa
mathaalu baashalu veraynaa
manam antha bhaayi bhaayi
rimjim rimjim hyderabad
rikshavaala jindabad
unnavaadiki thinte aragadu
lenivadiki thinde dorakadu
unnavdiki thinte aragadu
lenivadiki thinde dorakadu
parupulunna pattadu nidra
karakkunelanulo gurakalu vinara
hecchu thaggulu tholige roju
hecchu thaggulu tholige roju
eppudu vasthundo yemu
rimjim rimjim hyderabad
rikshavaala jindabad
moodu chakramulu gira gira thirigithe
motorukaaru balaatduru
rimjim rimjim hyderabad
rikshavaala jindabad
la la la la la la la laaaaaala
la la la la la la la laaaaaala
la la la la la la la laaaaaala
Posted by
Covai Ravee
at
4:08 AM
8
comments
Links to this post
Labels: Balu
Wednesday, February 11, 2009
725 நினைத்தாலே இனிக்கும் கோவை இசைநிகழ்ச்சி

நினைத்தாலே இனிக்கும் கோவை இசைநிகழ்ச்சி
அன்பு உள்ளங்களே...
சென்ற வெள்ளிக்கிழமை 6 ஆம் தேதி பாலுஜி அவர்கள் சென்னை லக்ஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவுடன் சேர்ந்து இனிமையான ஓர் நிகழ்ச்சியை வழங்கினார். பதிவு எனது நண்பர் சுப்பையா வாத்தியார் ஐயா அவர்கள் தன் இணைய தளமான பல்சுவை தளத்தில் மிகவும் விரிவாக்கத்துடன் பாடல் பாடிய நேரத்துடன் எழுதியது எனக்கு மிக்க மகிழ்ச்சி தந்தது. நான் பெரிதும் தவறவிட்ட இந்த இன்னிசை நிகழ்ச்சியை நேரில் பார்த்த உணர்வை ஏற்படுத்தி விட்டார் சுப்பையா சார். அவரின்
மேலும், எனது ஆருயிர் நண்பர் பாலுஜியின் ரசிகர் தமிழ்மண இணைய தள பதிவாளர் பதிவை படிக்க இங்கே இதில் உள்ளது . படித்து மகிழுங்கள். மேலும், கோவை ரசிகர்கள் மற்றும் அகில உலக இணைய தள பாலுஜி ரசிகர்கள் சார்பாக அவரின் அற்புதமான இந்த பதிவிற்க்கு தலைவணங்கி நன்றியை சமர்ப்பிக்கிறேன். கூடிய விரைவில் இந்த நிகழ்ச்சி ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்புவார்கள் என்று நினைக்கிறேன். ஒளிபரப்பும் நேரம் தெரிந்ததும் அறிவிக்கப்படும்.
தொலைகாட்சியில் ஒலிப்பரப்பும் முன் இதோ இந்த ப்ளேயரில் உள்ளது பாலுஜி பாடிய நிகழ்ச்சியில் பதிவு செய்யப்பட்ட பாடல்கள் ஒலித்தொக்குப்பு தரவிறக்கம் செய்து கேளூங்கள். இந்த ஒலித்தொகுப்பை வழங்கிய எனது அருமை நண்பர் ஆத்மாஸ் ஆனந்த் ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு நன்றி.
|
Posted by
Covai Ravee
at
3:08 AM
4
comments
Links to this post
Labels: Balu
Thursday, February 05, 2009
724 நெல்லும் நீரும் ஒன்றை ஒன்று

க்கீச் கீச் போன்ற கிளிப்போல் வித்தியாசமான குரலுடைய சைலஜா மேடம் நிறைய பாடல்கள் பிரபலமாகமலே மறைந்து இருக்கின்றன. அதுவும் தன் அண்ணார் பாலுஜியுடன் பாடிய பாடல்கள் ஏராளம். அந்த வகையில் இதோ மனைவி உருவாகிறாள் என்ற ஒரு படத்திலும் அழகான இனிமையான பாடல். அதுவும் இந்த வரிகளில்.. // அறியாத புரியாத தெரியாத ஒரு பிள்ளை நான் மலர்ந்தேன், அந்த மகராசி இப்போது திருமாலின் திருமங்கைப் போல் மலர்ந்தாள்
அறியாத புரியாத தெரியாத ஒரு பிள்ளை நான் ஹஹமலர்ந்தேன்
அந்த மகராசி இப்போது திருமாலின் திருமங்கைப் போல் மலர்ந்தாள்
இன்று என் காரம் சம்சாரம் அவதாரம் தாரமல்ல // அமர்க்களம் கேட்டு மகிழுங்கள். படததை நான் பார்த்ததாக நினைவில்லை பார்த்தவர்கள் படத்தகவல்கள் தராலமே...
படம்: மனைவி உருவாகிறாள்
பாடியவர்கள்: எஸ்.பி.பி, எஸ்.பி.சைலஜா
|
படம்:மனைவி உருவாகிறாள்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலு எஸ்.பி.சைலஜா
நெல்லும் நீரும் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளனும் ஹோ ஹோ ஹோய்
நெல்லும் நீரும் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளனும் ஹே ஹே ஹேய்
மெல்ல பாய்வதிலும் தலை சாய்வதிலும் ஒன்று சேர்வதிலும்
இளம் தென்றல் தொட்டு பின்னல் இட்டு கலகலவென புதுசுகம் வர
நெல்லும் நீரும் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளனும் ஹோ ஹோய்
நெல்லும் நீரும் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளனும் ஹோ ஹோய்
அறியாத புரியாத தெரியாத ஒரு பிள்ளை நான் மலர்ந்தேன்
அந்த மகராசி இப்போது திருமாலின் திருமங்கைப் போல் மலர்ந்தாள்
அறியாத புரியாத தெரியாத ஒரு பிள்ளை நான் ஹஹமலர்ந்தேன்
அந்த மகராசி இப்போது திருமாலின் திருமங்கைப் போல் மலர்ந்தாள்
இன்று என் காரம் சம்சாரம் அவதாரம் தாரமல்ல
நெல்லும் நீரும் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளனும் ஹோ ஹோய்
நெல்லும் நீரும் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளனும் ஹோ ஹோய்
கவிஞர்கள் உருவாக தெய்வங்கள் துணை வேண்டுமே அறிந்தேன்
நல்ல மனையாளை உருவாக்கும் மனவாளன் துணை வேண்டுமே அலைந்தேன்
ஒரு அரசன் ஒரு அடிமை இந்த சுகமே போதுமய்யா
நெல்லும் நீரும் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளனும் ஹோ ஹோ ஹோய்
நெல்லும் நீரும் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளனும் ஹே ஹே ஹோய்
ஸ்ரீரங்கம் காவேரி கடலோடுதான் இணையும் எப்போதும்
நல்ல தேவாரம் தமிழ் பாட்டு சிவன் மீது தான் மலரும் எந்நாளூம்
ஒரு நிலையில் பல கலைகள் இரு மனதில் தேனலைகள்
நெல்லும் நீரும் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளனும் ஹோ ஹோய்
மெல்ல பாய்வதிலும் தலை சாய்வதிலும் ஒன்று சேர்வதிலும்
இளம் தென்றல் தொட்டு பின்னல் இட்டு கலகலவென புதுசுகம் வர
லலா லலா லலா லலா ஹா ஹாஆஆஆ
லலா லலா லலா லலா ஹா ஹாஆஆஆ
Posted by
Covai Ravee
at
2:01 AM
0
comments
Links to this post
Labels: Balu
Monday, February 02, 2009
723 ஹைத்ராபாத்தில் பாலுஜியுடன் ஓர் சந்திப்பு.

ஹைத்ராபாத்தில் பாலுஜியுடன் ஓர் சந்திப்பு.
அன்பு உள்ளங்களே,
வருகின்ற 08.02.2009 ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் 2.00 மணி வரை ஆந்திரமாநிலம் ஹைத்ராபாத்தில் டாக்டர் பாலுஜி அவர்கள் ஆந்திர மாநில ரசிகர்களூடன் கலந்துரையாடுகிறார். இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்கள். அந்த சந்திப்பில் அகில உலக எஸ்.பி.பி ரசிகர்கள் சாரிட்டி பவுண்டேசன் மூலம் அனாதை ஆதரவற்ற இல்லங்களூக்கு தேவையான பொருளுதவி உபகரணங்களை பாலுஜி நேரில் வழங்கவுள்ளார் அது சமயம் ஆந்திர மாநில பாலுஜி ரசிகர்கள் மற்றும் அகில இந்திய உலக பாலுஜி ரசிகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கோவை பாலுஜி ரசிகர்கள் சார்பாக அன்புடன் அழைக்கிறேன்.
இந்த சந்திப்பை பற்றி மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள விரும்புவோர், அழைப்பிதழின் மீது கர்சரை வைத்து அழுத்தினால் பெரிதாக தெரியும் அதில் உள்ள செல் பேசி எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
எஸ்ப.பி.பி.ரசிகர்கள் சாரிட்டி பவுண்டேசன்
சென்னை
அழைப்பிதழ் உதவி நன்றி, திரு. விகாஸ் காம்ப்ளே, மும்பாய்,
பதிவு: கோவை ரவி
Posted by
Covai Ravee
at
12:26 AM
4
comments
Links to this post
Labels: Balu

