757 காமி சத்யபாமா கதவை திறவாய்

ஸ்ரீ கிருஷ்ண லீலா என்ற படம் கேள்வி பட்டிருக்கேனே தவிர பார்த்ததில்லை. எனது பாலுஜியின் ரசிகர் ஒருவர் ரொம்ப வருடங்கள் முன் இந்த பாடல் பதியுங்கள் என்று அன்பு கட்டளையிட்டார் அன்று முதல் தேடினேன் தேடினேன் தேடிக்கொண்டே இருந்தேன், சமீபத்தில் தான் என் கைக்கு கிடைத்தது யார் கேட்டார்கள் என்று கூட சுத்தமாக மறந்து விட்டது. ( ஹி ஹி மன்னிக்கவும் அன்பரே). இணையத்தில் படப்பெயர் எழுதி தேடினால் அடெங்கப்பா 1934 ஆம் ஆண்டு வந்த படம் என்று விக்கிபீடியா இணையம் சொல்லுகிறது பாருஙக்ள் கூத்தை அந்த படத்தில் சி.எஸ்.ஜெயராமன் மற்றும் பிரபலமானவர்கள் பெயர்கள் எல்லாம் வருகிறது. விடுங்கடா சாமி.. என்று அத்துடன் வந்துவிட்டேன் அந்த தகவலை எடுத்து இங்கே தந்தால் நன்பர்கள் ஆட்டோ என்ன மீன்பாடி வண்டியை அனுப்பிவிடுவார்கள். ஆகவே இந்த படத்தின் தகவல் தெரிந்தவர்கள் தந்தால் அவருக்கு இந்த பாடல் சமர்ப்பணம்.. அதென்னம்மோ படத்தின் பெயருக்கும் பாடல் வரிகளூக்கும் துளியளவும் சம்பந்தமில்லை போல் எனக்கு தெரிகிறது உங்களூக்கு ஏதாவது தெரிகிறதா?
படம்: ஸ்ரீ கிருஷ்ண லீலா
பாடியவர்: டாக்டர்.எஸ்.பி.பி
|
கதவை திறவாய் பாமா கதவை திறாவாய்
சத்யபாமா கதவை திறாவாய் ஆஆஆஆஆஆஆ
காமி சத்யபாமா கதவை திறவாய்
எந்தன் காமி சத்யபாமா கதவை திறவாய்
கதவை திறவாய் திறவாய் திறவாய்
எந்தன் காமி சத்யபாமா கதவை திறவாய்
கதவை திறவாய்..கதவை திறவாய்
காமி சத்யபாமா கதவை திறவாய்
தாமதம் செய்தால் இனி காடே மனமோகினி
தாமதம் செய்தால் இனி காடே மனமோகினி
தயயை புறிவாய் என் கண்மணி
தயயை புறிவாய் என் கண்மணி
கண்மணி ...கண்மணி ...கண்மணி
காமி சத்யபாமா எந்தன் காமி சத்யபாமா கதவை திறவாய்
ஜாலம் எல்லாம் அறிந்த மாயன் என்னிடம் இந்த
ஜாலம் எல்லாம் அறிந்த மாயன் என்னிடம் இந்த
சாகசம் ஏனோ சொல்லடி என்னிடம் இந்த
சாகசம் ஏனோ சொல்லடி சத்யபாமா
சாகசம் ஏனோ சொல்லடி
சொல்லடி..சொல்லடி..சொல்லடி..
காமி சத்யபாமா எந்தன் காமி சத்யபாமா கதவை திறவாய்
கதவை திறவாய்..கதவை திறவாய்..கதவை திறவாய்..
கதவை திறவாய்..கதவை திறவாய்..
.jpg)

















