779 மோஹன ராகம் பாடும்

படம்:அஸ்வினி
பாடியவர்கள்: பாலுஜி, சித்ரா
நடிகர்கள்: அஸ்வின் நாச்சப்பா, Y.விஜயா, பானுசந்தர், ராம்ராஜ், சரன்யா
தயாரிப்பு: உஷா கிரன்
இசையன்பர்களே ஏற்கெனவே அஸ்வினி என்ற படத்தில் இருந்து ஹேய் உன்னை வெற்றி.. என்ற பாடல் இந்த தளத்தில் பதிவாகியுள்ளது எல்லோரும் அறிந்ததே இதோ இன்னொரு சூப்பர் மெலோடி பாடல். கேட்டு மகிழுங்கள்
|
மோஹன ராகம் பாடும் இளங்குயில் நானல்லோ
குயில் பாடும் பாட்டுக்கு பல்லவி நானல்லோ
இதழ் அங்கங்கள்..
என்னைக் கூப்பிட்டு சொல்லும்
புது அர்த்தங்கள்..
மஞ்சள் மாலையிலே மன்மதனே நினைந்து
மோஹன ராகம் பாடும் இளங்குயில் நானல்லோ
குயில் பாடும் பாட்டுக்கு பல்லவி நானல்லோ
வானில் தாரகை மடி ஓடி சேருமோ
நதிகள் பொங்கலாம் கடலில் வந்தே சேரனும்
இரண்டு கண்ணம் வெட்கம் நிறைந்த கிண்ணம்
கண்ணா உன்னை கண்டால் வெட்கம் வழியும்
சின்ன கண்ணே சிறகு கொண்ட பெண்ணே
உந்தன் காலைச்சுற்றி உள்ளம் அலையும்
சந்தோசம் தாளத்திலே...
மோஹன ராகம் பாடும் இளங்குயில் நானல்லோ
குயில் பாடும் பாட்டுக்கு பல்லவி நானல்லோ
மனமா உன்னிடம் உடல் தானே என்னிடம்
உயிரே பெண்ணிடம் உணர்வு தானே என்னிடம்
இந்த அங்கம் செதுக்கி வைத்த தங்கம்
உந்தன் கையில் தஞ்சம் கொண்டேன் அழகே
இந்த பந்தம் எனக்கு மட்டும் சொந்தம்
கண்ணால் வந்த பந்தம் என்பேன் நிலவே
ஆனந்த சாலையிலே...
மோஹன ராகம் பாடும் இளங்குயில் நானல்லோ
குயில் பாடும் பாட்டுக்கு பல்லவி நானல்லோ
இதழ் அங்கங்கள்..
என்னைக் கூப்பிட்டு சொல்லும்
புது அர்த்தங்கள்..
மஞ்சள் மாலையிலே மன்மதனே நினைந்து
தனனனனா தானேனான தன்னன்னா
தாஆஆனனன்ன்னாரரரரரராஆஆஆ குக்கூ









