Tuesday, June 30, 2009

799 கிக்கிக்கீ கிளியக்கோ



//கிக்கிக்கீ கிளியக்கோ.. கேட்டு சொல்லேன் ஒரு வழியக்கோ.. கிக்கிக்கீ கிளியக்கோ
கேட்டு சொல்லேன் ஒரு வழியக்கோ.. சக்கரைப் போல் இரண்டு இதழக்கோ.. தந்து விட்டால் என்ன குறையக்கோ.. சக்கரைப் போல் இரண்டு இதழக்கோ.. தந்து விட்டால் என்ன குறையக்கோ// பட்டைய கிளப்பும் இனிமையான வரிகள். பாலுஜியின் தீவிர ரசிகை 'பெர்த்'தில் வசிக்கும் செல்வி.சாமளாவிற்க்கு இந்த பாடல் சமர்ப்பணம்.

படம்: தர்ம ராஜா
இயக்குனர்: எம். ஏ. திருமுகம்
தயாரிப்பாளர்: சின்ன அண்ணாமலை
விஜயவேல் பிலிம்ஸ்
நடிப்பு: சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா
இசையமைப்பு: எம். எஸ். விஸ்வநாதன்
வெளியீடு ஏப்ரல் 26, 1980

Get this widget | Track details | eSnips Social DNA


படம்:தர்மராஜா
பாடியவர்கள்: பாலுஜி,வாணிஜெயராம்

கிக்கிக்கீ கிளியக்கோ
கேட்டுசொல்லேன் ஒரு வழியக்கோ

கிக்கிக்கீ கிளியக்கோ
கேட்டு சொல்லேன் ஒரு வழியக்கோ
கிக்கிக்கீ கிளியக்கோ
கேட்டு சொல்லேன் ஒரு வழியக்கோ
சக்கரைப் போல் இரண்டு இதழக்கோ
தந்து விட்டால் என்ன குறையக்கோ
சக்கரைப் போல் இரண்டு இதழக்கோ
தந்து விட்டால் என்ன குறையக்கோ

கிக்கிக்கீ கிளியக்கோ
கேட்டு சொல்லேன் ஒரு வழியக்கோ

தேதி இல்லாத பஞ்சாங்கமா
ஆசை எனக்கில்லையாஆஆஆ
நிலவு இல்லாத பௌர்ணமியா
நேரம் அதுக்கில்லையா
நேரம் அதுக்கில்லையா

என் கையாலே பூப்பறிக்க
என் கண்ணாலே அளவெடுக்க
அம்மாடி வந்தாளென்ன
பேரானந்தம் தந்தாளென்ன

மேகம் மூடாத மலையில்லையே
மெல்ல நெருங்குங்களே
தாகம் இல்லாத தண்ணில்லையே
தொட்டு தழுவுங்களே
ஆஆ தொட்டு தழுவுங்களே

ஏன் பேராசை வருகின்றது
உன் பெண்மைக்கு புரிகின்றது
என்னை நீராட சொல்கின்றது
இப்ப தானாக தருகின்றது

கிக்கிக்கீ கிளியக்கோ
கேட்டு சொல்லேன் ஒரு வழியக்கோ

போதை உண்டாகும் திராட்சை பழம்
பூஜை செய்வேனெம்மா
காதல் உண்டாக்கும் கன்னிக்கொடி
கட்டாயம் தேவையம்மா
கட்டாயம் தேவையம்மா

உன் கைரெண்டும் பொல்லாதது
எந்த காதலும்?? இல்லாதது
அது எங்கெங்கோ செல்கின்றது
சும்மா ஏதேதோ சொல்கின்றது

கிக்கிக்கீ கிளியக்கோ
கேட்டு சொல்லேன் ஒரு வழியக்கோ

சக்கரைப் போல் இரண்டு இதழக்கோ
தந்து விட்டால் என்ன குறையக்கோ

கிக்கிக்கீ கிளியக்கோ
கேட்டு சொல்லேன் ஒரு வழியக்கோ
கிக்கிக்கீ கிளியக்கோ
கேட்டு சொல்லேன் ஒரு வழியக்கோ

Monday, June 29, 2009

798 ஒரு பூப்பூவா பூப்பூத்தது



ஒலிக்கோப்பின் தரம் சற்று குறைவாக இருந்தாலும் பாடல் வரிகள் //நினைவாலே வாழ்ந்தாலே.. நிறைவாகும் வாழ்நாளே.. அந்நாள் என் நாளே.. அந்நாள் என் நா...ளே..//
பாலுஜியின் குரலில் பூப்பூத்த மணம் போல் தென்றலாய் மணம் வீசுது.

Get this widget | Track details | eSnips Social DNA


படம்: ரோஜா மலரே

பூ பூப்பூவா பூப்பூத்தது
பூத்து மணம் சேர்த்தது

அது மணம் தர மணம் தர மலர்ந்திடுது
மனம் மகிழ்ச்சியில் சுகமாய் நெகிழ்ந்திடுது
மலரே மறந்தால் மலர்ந்திடுது

பூ பூப்பூவா பூப்பூத்தது

மண நாளிலே மாலை சூடி
மணமக்கள் ஒன்று சேர
மலர் தூவியே மனங்கள் கூடி
மனதார வாழ்த்து பாட
விழா நாளது நிலா வான் அது
கனா ஆனது விழா நாள் அது
பெற்ற மனம் கானம் பாட
மற்ற மனம் சேர்ந்து ஆட
பூலோகம் பூத்தாட
வான் மேகம் கூத்தாட
என் நாள் எந்நாளோ
என் நாள் எந்நாளோ

பூ பூப்பூவா பூப்பூத்தது

மணம் மாறுமோ மலரில் ஏது
மாறாது அந்த வாசம்
மனம் போகுமோ நெஞ்சில் நேசம்
போகாது இந்த பாசம்
மகாத்மாவிலே அவள் சன்னிதி
அது போதுமே அகம் நிம்மதி
என்னுள்ளே எழுந்த ராகம்
எழுதியது புதிய வேதம்
நினைவாலே வாழ்ந்தாலே
நிறைவாகும் வாழ்நாளே
அந்நாள் என் நாளே
அந்நாள் என் நா...ளே..

பூ பூப்பூவா பூப்பூத்தது
பூத்து மனம் சேர்த்தது

அது மணம் தர மணம் தர மலர்ந்திடுது
மனம் மகிழ்ச்சியில் சுகமாய் நெகிழ்ந்திடுது
மலரே மறந்தால் மலர்ந்திடுது

Friday, June 26, 2009

797 தானா வந்த சந்தனமே



படம்: ஊரு விட்டு ஊரு வந்து
பாடியவர் டாக்டர்.எஸ்.பி.பி

தானா வந்த சந்தனமே
உன்னை தழுவ தினம் சம்மதமே

தானா வந்த சந்தனமே
உன்னை தழுவ தினம் சம்மதமே

இது வேறு யாரும் பறிக்காத மல்லிகை தோட்டமே
யாராலும் படிக்காத மங்கள ராகமே

இது வேறு யாரும் பறிக்காத மல்லிகை தோட்டமே
யாராலும் படிக்காத மங்கள ராகமே

தானா வந்த சந்தனமே

உன்னை தழுவ தினம் சம்மதமே

வண்ண வண்ண வலவி போட்டு
வசமாக அணைச்சி போட்டு
என்னை கட்டி இழுத்து போகும் இளந்தேகமே

கூறைபட்டு கலங்கிடாமே குறை ஏதும் நடந்திடாமே
ஆசைப்பட்டு அணைக்கவேணும் இது ராகமே

முன்ன பின்ன அறிஞ்சதில்லே முறையாக தெரிஞ்சதில்லே
சின்ன சின்ன தவற நீயும் பொருத்தாக வேணுமே

புத்தகத்த படிச்சதில்லே முறையாக நடக்கவில்லை
வித்தைகளை விவரமாக வெளியாக்க வேணுமே

இந்த மேனி இன்பத்தோனி

வா நீ இந்த வாணி
இன்ப ராஜயோகம் நெருக்கமே??

தானா வந்த சந்தனமே
உன்னை தழுவ தினம் சம்மதமே

இது வேறு யாரும் பறிக்காத மல்லிகை தோட்டமே

யாராலும் படிக்காத மங்கள ராகமே

தானா வந்த சந்தனமே

உன்னை தழுவ தினம் சம்மதமே

உத்தரவ ரத்தினதோட?? முழுசாக லட்சனத்தோட
மெத்தையிலே நானும் கூட வரவேணுமே

ஒன்னு ரெண்டு பவளத்தோட முன்வாயில் மதுரத்தோட
கன்னனுக்கு காதல் விருந்து தரவேணுமே

தொட்டு தொட்டு உடம்பு கூட சரியாக கலந்து தாரேன்
விட்டு விட்டு விலகி ஓட முடியாம போகுமே

கொத்து மல்லி கொண்டையிலாட குளிர் பார்வை வண்டுகள் ஆட
புத்தம் புது செண்டுகளாட புது ராகம் தோனுமே

நல்ல ராசா சொல்லு லேசா

ராசா இந்த ராசா இந்த ராணியோட பொருத்தமே

தானா வந்த சந்தனமே
உன்னை தழுவ தினம் சம்மதமே

இது வேறு யாரும் பறிக்காத மல்லிகை தோட்டமே

யாராலும் படிக்காத மங்கள ராகமே

தானா வந்த சந்தனமே

உன்னை தழுவ தினம் சம்மதமே


Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, June 25, 2009

796 முகம் பார்த்த கண்ணாடி ரசம்



//வசந்தத்தின் ரோஜாப்பூ .... வசந்தத்தின் ரோஜாப்பூ சருகாய் உதிரும், கருகும்
இலை உதிர்காலம் வந்ததோ.. வசந்தத்தின் ரோஜாப்பூ சருகாய் உதிரும், கருகும்
இலை உதிர்காலம் வந்ததோ.. சரியோ தவறோ ஒரு நாள் கலந்தோம்.. உலகம் முழுதும் அதிலே மறந்தோம்.. அது இன்று பொய்யாய் போனதோ.. நான் கண்ட கனவு என்று எல்லாம் ஆனதோ//

ஆஹா.. ஆஹா.. அற்புதமான சரணங்கள். சூப்பர் சோகம்ப்பா..


படம்: அவசரக்காரி
பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி
இயக்குனர் கே. எஸ். மாதங்கன்
தயாரிப்பாளர் ஏ. ரத்னம், ஆனந்த் கிரியேஷ்ன்ஸ்
நடிப்பு மோகன் குமார், ரூபா சக்ரவர்த்தி
இசையமைப்பு சங்கர் கணேஷ்
வெளியீடு ஜூன் 5, 1981

Get this widget | Track details | eSnips Social DNA


முகம் பார்த்த கண்ணாடி....
முகம் பார்த்த கண்ணாடி ரசம் போனது எப்போது
உறவான காதல் நெஞ்சில் பிரிவென்ன இப்போது

முகம் பார்த்த கண்ணாடி ரசம் போனது எப்போது
உறவான காதல் நெஞ்சில் பிரிவென்ன இப்போது

காதலுக்கு ஜாதி என்ன பேதம் என்னடி
காதலுக்கு ஜாதி என்ன பேதம் என்னடி

ஒரு நாள் உறவில் கலந்தாள்
மறு நாள் என்னையே பிரிந்தாள்
ஒரு நாள் உறவில் கலந்தாள்
மறு நாள் என்னையே பிரிந்தாள்

முகம் பார்த்த கண்ணாடி ரசம் போனது எப்போது
உறவான காதல் நெஞ்சில் பிரிவென்ன இப்போது

வசந்தத்தின் ரோஜாப்பூ ....
வசந்தத்தின் ரோஜாப்பூ சருகாய் உதிரும், கருகும்
இலை உதிர்காலம் வந்ததோ
வசந்தத்தின் ரோஜாப்பூ சருகாய் உதிரும், கருகும்
இலை உதிர்காலம் வந்ததோ

சரியோ தவறோ ஒரு நாள் கலந்தோம்
உலகம் முழுதும் அதிலே மறந்தோம்
அது இன்று பொய்யாய் போனதோ
நான் கண்ட கனவு என்று எல்லாம் ஆனதோ

முகம் பார்த்த கண்ணாடி ரசம் போனது எப்போது
உறவான காதல் நெஞ்சில் பிரிவென்ன இப்போது
காதலுக்கு ஜாதி என்ன பேதம் என்னடி
காதலுக்கு ஜாதி என்ன பேதம் என்னடி

விழி சிந்தும் கண்ணீரோ...
விழி சிந்தும் கண்ணீரோ மழை போல் தினமும் பொழியும்
உனக்கு இன்று பன்னீரானதோ

விழி சிந்தும் கண்ணீரோ மழை போல் தினமும் பொழியும்
உனக்கு இன்று பன்னீரானதோ

கடலில் அமைதி ஒரு நாள் வரலாம்
மனதில் அமைதி இனிமேல் வருமோ
பதில் கண்ணீர் சொல்லடி
வாழ்வுக்கு இனி என்ன அர்த்தம் சொல்லடி

முகம் பார்த்த கண்ணாடி ரசம் போனது எப்போது
உறவான காதல் நெஞ்சில் பிரிவென்ன இப்போது

காதலுக்கு ஜாதி என்ன பேதம் என்னடி
காதலுக்கு ஜாதி என்ன பேதம் என்னடி

ஒரு நாள் உறவில் கலந்தாள்
மறு நாள் என்னையே பிரிந்தாள்
ஒரு நாள் உறவில் கலந்தாள்
மறு நாள் என்னையே பிரிந்தாள்

Wednesday, June 24, 2009

795 மழை தருமோ என் மேகம்…





இசையமைப்பாளர் ஷியாம் இசையில் மனிதரில் இத்தனை நிறங்களா என்ற இந்த படத்தில் முரளி மோகன், ஸ்ரீதேவி, மற்றும் கமல் சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள் மழை தருமோ என்ற இந்த இனிமையான மெட்டு கொண்ட பாடல் அதிக பட்சம் இணைய த்ளங்களில் ஒரு ரவுண்டு வந்துள்ளது. இதே தளத்தில் திரு.யாழ் சுதாகர் சாரின் ஒலித்தொகுப்பில் வரிகள் இல்லாமல் வந்துள்ளது. ஏனென்றால் பாடல் அப்படி. தனியாக இந்த பாடலை இந்த தளத்தில் தரவேண்டும் என்று ரொம்ப நாளாக ஒரு ஆசை. எனது ஈரோடு நண்பர் காரவலசு திரு.கௌதம் அவர்கள் வானொலி பிரியர். இதோ அவருக்கு சமர்ப்பணம் செய்யும் வகையில் வானொலியில் வந்த இந்த பாடலை பிடித்து மறுபடியும் தருகிறேன். எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத இனிமை. மறுபடியும் கேளூங்களேன் ஒருமுறை.

படம்: மனிதரில் இத்தனை நிறங்களா
இசை: சியாம்
பாடியவர்: S.P.பாலசுப்ரமணியம், S.P.சைலஜா

Get this widget | Track details | eSnips Social DNA


மழை தருமோ என் மேகம்…
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்…
தோகைக்கு தூதுவன் யாரோ… தோல் தொட்ட தென்றலடி
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன… பொண்வண்டே….
(மழை தருமோ)

ஆஆஅஹஹா…ஒஹொஹோ….ம்ம்ஹ்ஹ்ஹூம்…

தேனிருக்கும் வண்ண மலர் நேராடுது…
தேனீயில் ஒன்று இங்கு போராடுது… (தேனிருக்கும்)
அழைக்கின்ற கண்கள் செய்யும் ஆனந்த கோலம்
தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம்…
தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம்…
தளிர்மேனி அன்னப்பெடு எண்ணம் மாறுமா…
(மழை தருமோ)

ஆஆஅஹஹா…ஒஹொஹோ….ம்ம்ஹ்ஹ்ஹூம்…

கோவிலுக்குள் தெய்வ மகள் குடியேறினாள்…
காதலுக்குள் என்று அவள் படியேருவாள்..
சிரிக்கின்ற தங்க சிற்பம் தேரில் வராதோ…
சிலை வண்ணம் அங்கே… கலை உள்ளம் இங்கே..
நிலை தன்னை சொல்ல தூதுவன் எங்கே…
பிழைக்கின்ற சேதி சொல்ல அன்பே ஓடி வா…
(மழை தருமோ)

ஆஆஅஹஹா…ஒஹொஹோ….ம்ம்ஹ்ஹ்ஹூம்…

Tuesday, June 23, 2009

794 மூவகைப் பாலில் மூன்றாம் பால்



பாலுஜி அதி தீவிர ரசிகர்கள், பாலுஜியின் அன்பை பெற்ற திரு அசோக் (24.06.2009), விஜய்கிருஷ்னன் (23.06.2009) தேதிகளில் பிறந்த நாள் காணும். இதோ உங்களுக்கு பிறந்த நாள் நழ்வாத்துக்களை பாடும் நிலா பாலு குழுவினர் தெரிவித்துக்கொள்கிறார்கள். நமக்காகத்தான் பாலுஜி இந்த வரிகளை பாடியுள்ளார் போலும். இருவரும் பல்லாண்டுகள் பாலுஜி ரசிகர்களாக மகிழ்ச்சியுடன் என்றும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். இருவருக்கும் இந்த பாடல் சமர்ப்பணம்.

//ஏழ்வகை பிறப்பிலும் எல்லாம் பிறப்பும் சொந்தம்.. அந்த சொந்ததிலானலே வந்தன்றோ இந்த பந்தம்.. வந்தன்றோ இந்த பந்தம்//

இதே படத்தில் 2 வருடங்களுக்கு முன் கன்னிப்பெண்ணே என்ற பாடல் பதிந்திருகேன் அதே படத்தில் இதோ ஒரு அற்புதமான பாட்ல பாலுஜி வாணியம்ம்மா கூட்டணியில் கேட்டு மகிழுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA


படம்: அத்திபூத்தது
பாடியவர்கள்: டாக்டர்.எஸ்.பி.பி, வாணிஜெயராம்

மூவகைப் பாலில் மூன்றாம் பால் தான் இன்பம்
அந்த மூன்றாம் பாலில் தோன்றுவதே உன் பிம்பம்

மூவகைப் பாலில் மூன்றாம் பால் தான் இன்பம்
அந்த மூன்றாம் பாலில் தோன்றுவதே உன் பிம்பம்
பிம்பம்.. பிம்பம்..

ஏழ்வகை பிறப்பிலும் எல்லாம் பிறப்பும் சொந்தம்
ஏழ்வகை பிறப்பிலும் எல்லாம் பிறப்பும் சொந்தம்
அந்த சொந்ததிலானலே வந்தன்றோ இந்த பந்தம்
வந்தன்றோ இந்த பந்தம்

தாழை மடலின் வாசம் தினம் தாங்கிடும் பூ குழல் நேசம்
தங்க பேழையின் வண்ணம் கண்ணம்
அதில் பதித்திட வேண்டும் சின்னம்

கோவை இதழின் ஓரம் பல கோலங்கள் தீட்டிடும் நேரம்
வண்ண அபாவையின் அங்கம் மின்னும்
இரு பாதங்கள் நாணத்தில் பின்னும்

மூவகைப் பாலில் மூன்றாம் பால் தான் இன்பம்
அந்த மூன்றாம் பாலில் தோன்றுவதே உன் பிம்பம்
பிம்பம்.. பிம்பம்..

நாதன் உறவை தேடும் இரு நேத்திரம் கீர்த்தனம் பாடும்
இந்த மாதவன் கொஞ்சும் பிள்ளை
தினம் மடியினில் ஆடும் முல்லை

காமன் கணைகள் பாய இளம் கோதையின் தோள்களில் சாய
கட்டில் காவியகண்கள் சொல்லும்
அது கம்பன் பாட்டையும் வெல்லும்

மூவகைப் பாலில் மூன்றாம் பால் தான் இன்பம்
அந்த மூன்றாம் பாலில் தோன்றுவதே உன் பிம்பம்
பிம்பம்.. பிம்பம்..

793 பூவே வா வா நிலவு நனையும் நேரம்



//நீராடும் தாமரை தண்ணீரே மேலுடை.. பார்க்காத பன்னீர் தேவதை ஆஆஹாஆஆஆ
பார்க்காத பன்னீர் தேவதை.. மன்மதன் அமைத்து வைத்த மஞ்சம் இல்லையோ
பூமியில் பறித்த மலர் போதவில்லையோ.. சொர்க்கத்தில் மல்லிகை முழம் என்ன விலையோ
ஹ ஆளீல்லையோ//

ஆஹா ஓஹோ..ஆஹா ஓஹோ.. இது ஒரு இசை வசந்த காலம். சூப்பரப்பு.

படம்:அந்திமயக்கம்
பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி
இயக்குனர் பானுதாசன்
தயாரிப்பாளர் ஏ. வி. ராஜ செட்டியார்
யுவராஜா பிக்சர்ஸ்
நடிப்பு மனோஜ், வனிதா
இசையமைப்பு ஷியாம்
வெளியீடு செப்டம்பர் 18, 1981

Get this widget | Track details | eSnips Social DNA


பூவே வா வா நிலவு நனையும் நேரம்
ஆஹா ஓஹோ இரவு வசந்த காலம்

அழகே உன் நாணம் கானம் பொழியும்
இனி மேகம் நனையும் மண்ணின் சொர்க்கமே வா
கண்ணில் வெட்கமாய் வா

பூவே வா வா நிலவு நனையும் நேரம்

ஆஹா ஓஹோ இரவு வசந்த காலம்
அழகே உன் நாணம் கானம் பொழியும்??
இனி மேகம் நனையும் மண்ணின் சொர்க்கமே வா
கண்ணில் வெட்கமாய் வா

நாளொன்று மாறினால் ஆளங்கு மாறலாம்
நாளொன்று மாறினால் ஆளங்கு மாறலாம்
ஆகாயம் ஊஞசல் ஆகலாம்.... ஓஓ
ஆகாயம் ஊஞசல் ஆகலாம்
ஆகாயம் ஊஞசல் ஆகலாம்
பருவமழையில் வழி பின்னிவிட்டது??
அருவி இரண்டில் அது கண்டுவிட்டது??
அமுத நதியில் அது தங்கிவிட்டது??.. யார் கேட்டது

பூவே வா வா நிலவு நனையும் நேரம்
ஆஹா ஓஹோ இரவு வசந்த காலம்
அழகே உன் நாணம் கானம் பொழியும்
இனி மேகம் நனையும் மண்ணின் சொர்க்கமே வா
கண்ணில் வெட்கமாய் வா

நீராடும் தாமரை தண்ணீரே மேலுடை
நீராடும் தாமரை தண்ணீரே மேலுடை
பார்க்காத பன்னீர் தேவதை ஆஆஹாஆஆஆ
பார்க்காத பன்னீர் தேவதை
மன்மதன் அமைத்து வைத்த மஞ்சம் இல்லையோ
பூமியில் பறித்த மலர் போதவில்லையோ
சொர்க்கத்தில் மல்லிகை முழம் என்ன விலையோ
ஹ ஆளீல்லையோ

பூவே வா வா நிலவு நனையும் நேரம்
ஆஹா ஓஹோ இரவு வசந்த காலம்
அழகே உன் நாணம் கானம் பொழியும்
இனி மேகம் நனையும் மண்ணின் சொர்க்கமே வா
கண்ணில் வெட்கமாய் வா

Monday, June 22, 2009

792 மாலை போடுற கல்யாணமா



//தள்ளாத வயசிலே தங்கை இங்கு படுத்திட்டா.. இல்லாத சீதனத்தை தன்னை வித்து கொடுத்திட்டா.. போதுமடா சாமிகளா பெண்ணப் பெத்த பெரும்பாவம்.. போதுமடா சாமிகளா பெண்ணப் பெத்த பெரும்பாவம்.. கல்யாணம் சொர்க்கத்தில் ஒன்னுதானா ஹஹ.. மாலை போடுற கல்யாணமா ஏலம் போடுற வியாபாரமா.. பெயருக்கு மணமகன் அவனொரு விலைமகன்.. யாருக்குமே.. வெட்கமில்லை மானமில்லை//

சோகமயமான தங்கச்சி செண்டிமெண்டி பாடல். நம் கண்ணீரையே கலங்கடிக்குது சார்.

படம்: ஆனந்த கண்ணீர்
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி
நடிகர்கள்:சிவாஜி கனேசன், லக்‌ஷ்மி
இசை: சங்கர் கனேஷ்

Get this widget | Track details | eSnips Social DNA


மாலை போடுற கல்யாணமா ஏலம் போடுற வியாபாரமா
பெயருக்கு மணமகன் அவனொரு விலைமகன்
யாருக்குமே.. வெட்கமில்லை மானமில்லை

மாலை போடுற கல்யாணமா ஏலம் போடுற வியாபாரமா
பெயருக்கு மணமகன் அவனொரு ஹ விலைமகன்
யாருக்குமே.. வெட்கமில்லை மானமில்லை

தள்ளாத வயசிலே தங்கை இங்கு படுத்திட்டா
இல்லாத சீதனத்தை தன்னை வித்து கொடுத்திட்டா
போதுமடா சாமிகளா பெண்ணப் பெத்த பெரும்பாவம்
போதுமடா சாமிகளா பெண்ணப் பெத்த பெரும்பாவம்
கல்யாணம் சொர்க்கத்தில் ஒன்னுதானா ஹஹ

மாலை போடுற கல்யாணமா ஏலம் போடுற வியாபாரமா
பெயருக்கு மணமகன் அவனொரு விலைமகன்
யாருக்குமே.. வெட்கமில்லை மானமில்லை

பெண்னோட நெத்தியிலே குங்குமமா மின்னுவது
அப்பாடி மேனியிலே சிந்தி வந்த ரத்தம் அது
சாந்தியில்லா முகூர்த்தம் இது எதுவும் இங்கே சடங்காச்சு
சாந்தியில்லா முகூர்த்தம் இது எதுவும் இங்கே சடங்காச்சு

கண்ணீரும் பன்னீரும் ஒன்னுதானா
மாலை போடுற கல்யாணமா ஏலம் போடுற வியாபாரமா
பெயருக்கு மணமகன் அவனொரு விலைமகன்
யாருக்குமே.. வெட்கமில்லை மானமில்லை

Thursday, June 18, 2009

791 பாயாதே இது பச்சைக்கிளி



ராஜா நீ வாழ்க - டாக்டர பாலுஜி, டாக்டர்.எஸ். ஜானகி கூட்டணியில் ஒரு கலக்கல் எனர்ஜியான பாடல் இது. ரொம்ப நாள் ஆயிடுச்சு பாலுஜியின் கலக்கல் அதிரடி குரல் கேட்டு. கேட்டு மகிழுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA


படம்: ராஜா நீ வாழ்க
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி. டாக்டர்.எஸ்.ஜானகி

பாயாதே இது பச்சைக்கிளி அது அம்மாடி தாங்காதே

தடுக்காதே நான் வச்சக்குறி அது எந்நாளும் தவறாதே

கோட்டையுண்டு காவலுண்டு கொஞ்ச நேரம் தள்ளவா??

வேட்டைக்காரன் வளையை தேடி வந்த மானை தள்ளவா??

கோட்டையுண்டு காவலுண்டு கொஞ்ச நேரம் தள்ளவா??

வேட்டைக்காரன் வளையை தேடி வந்த மானை தள்ளவா??

பாயாதே இது பச்சைக்கிளி அது அம்மாடி தாங்காதே

தடுக்காதே நான் வச்சக்குறி அது எந்நாளும் தவறாதே

பஞ்சிலே வேகமோ பார்வையில் தீறுமோ
மடியில் வைத்து மகுடி ஊதவோ

போதையில் ஏறுது பாம்பு தான் சீறுது
கொத்தாமல் ஓடிப்போகவா

பஞ்சிலே வேகமோ பார்வையில் தீறுமோ
மடியில் வைத்து மகுடி ஊதவோ

போதையில் ஏறுது பாம்பு தான் சீறுது
கொத்தாமல் ஓடிப்போகவா

நெஞ்சோடு நெஞ்சாக தெம்மாங்கு பாடு

அன்பாக பண்பாக?? தாளங்கள் போடு

நெஞ்சோடு நெஞ்சாக தெம்மாங்கு பாடு

அன்பாக பண்பாக?? தாளங்கள் போடு

பாயாதே இது பச்சைக்கிளி அது அம்மாடி தாங்காதே

தடுக்காதே நான் வச்சக்குறி அது எந்நாளும் தவறாதே

கோட்டையுண்டு காவலுண்டு கொஞ்ச நேரம் தள்ளவா??

வேட்டைக்காரன் வளையை தேடி வந்த மானை தள்ளவா??

கோட்டையுண்டு காவலுண்டு கொஞ்ச நேரம் தள்ளவா??

வேட்டைக்காரன் வளையை தேடி வந்த மானை தள்ளவா??

பாயாதே இது பச்சைக்கிளி அது அம்மாடி தாங்காதே

தடுக்காதே நான் வச்சக்குறி அது எந்நாளும் தவறாதே

ரகசியம் அதிசயம் உன்னோடு?? நான் கண்டது

ஒரு தரம் துணிந்த பின் உன்னோடு நில்லாதது

ரகசியம் அதிசயம் உன்னோடு?? நான் கண்டது

ஒரு தரம் துணிந்த பின் உன்னோடு நில்லாதது

நெஞ்சோடு நெஞ்சாக தெம்மாங்கு பாடு

அன்பாக பண்பாக?? தாளங்கள் போடு

நெஞ்சோடு நெஞ்சாக தெம்மாங்கு பாடு

அன்பாக பண்பாக?? தாளங்கள் போடு

பாயாதே இது பச்சைக்கிளி அது அம்மாடி தாங்காதே

தடுக்காதே நான் வச்சக்குறி அது எந்நாளும் தவறாதே

கோட்டையுண்டு காவலுண்டு கொஞ்ச நேரம் தள்ளவா??

வேட்டைக்காரன் வளையை தேடி வந்த மானை தள்ளவா??

கோட்டையுண்டு காவலுண்டு கொஞ்ச நேரம் தள்ளவா??

வேட்டைக்காரன் வளையை தேடி வந்த மானை தள்ளவா??

பாயாதே இது பச்சைக்கிளி அது அம்மாடி தாங்காதே

தடுக்காதே நான் வச்சக்குறி அது எந்நாளும் தவறாதே

Tuesday, June 16, 2009

790 படபட படவென பறந்தது பறவை



பல்லவியை பார்த்தால் புரியாத புதிராக இருக்கிறது ஆணால்...சரணங்களில் மட்டும் //என்னங்கள் வளர்த்தேன் தவித்தேன் என் கண்ணே.. உன்னை நான் துவைத்தேன் சுவைத்தேன் என் அன்பே... அங்கங்கள் முழுக்க முழுக்க கற்கண்டு.. இன்பத்தில் உனக்கும் எனக்கும் பங்குண்டு// அடெங்கப்பா சூடான சரணங்கள்.. பாலுஜி, சைலா கூட்டணி குரலில் இனிமயாதான் இருக்கு...ம்..ம்.

ராஜ மரியாதை
பாலுஜி,எஸ்.பி.சைலஜா
தர்மா, பூர்னிமா ஜெயராம்
வருடம்:1988

படபட படவென பறந்தது பறவை
கடகட கடவென அடைந்தது நிலவை
ஆனந்தமே இங்கே ஆரம்பமே
ஆனந்தமே இங்கே ஆரம்பமே

படபட படவென பறந்தது பறவை
கடகட கடவென அடைந்தது நிலவை
ஆனந்தமே இங்கே ஆரம்பமே
ஆனந்தமே இங்கே ஆரம்பமே

மகிழ்ந்து பறக்கும் குருவிகளால்
மலைமேல் ஏறும் மகுடிகளாய்?
மகிழ்ந்து பறக்கும் குருவிகளால்
மலைமேல் ஏறும் மகுடிகளாய்?

என்னங்கள் வளர்த்தேன் தவித்தேன் என் கண்ணே
உன்னை நான் துவைத்தேன் சுவைத்தேன் என் அன்பே
என்னங்கள் வளர்த்தேன் தவித்தேன் என் கண்ணே
உன்னை நான் துவைத்தேன் சுவைத்தேன் என் அன்பே

அங்கங்கள் முழுக்க முழுக்க கற்கண்டு
இன்பத்தில் உனக்கும் எனக்கும் பங்குண்டு
அங்கங்கள் முழுக்க முழுக்க கற்கண்டு
இன்பத்தில் உனக்கும் எனக்கும் பங்குண்டு

படபட படவென பறந்தது பறவை
கடகட கடவென அடைந்தது நிலவை
ஆனந்தமே இங்கே ஆரம்பமே
ஆனந்தமே இங்கே ஆரம்பமே

மழைக்கு மேலே மழையடிக்கும்
மலர்கள் எல்லாம் குடைபிடிக்கும்
மழைக்கு மேலே மழையடிக்கும்
மலர்கள் எல்லாம் குடைபிடிக்கும்

வானத்தை பிடித்தேன் பிடித்தேன் கைகுள்ளே
மேகங்கள் இருக்கும் இருக்கும் கைகுள்ளே
வானத்தை பிடித்தேன் பிடித்தேன் கைகுள்ளே
மேகங்கள் இருக்கும் இருக்கும் கைகுள்ளே

ஏதேதோ தயக்கம் மயக்கம் உன்னாலே
பாய் ஒன்று விரிப்போம் விரிப்போம் விண்மேலே??
ஏதேதோ தயக்கம் மயக்கம் உன்னாலே
பாய் ஒன்று விரிப்போம் விரிப்போம் விண்மேலே??

படபட படவென பறந்தது பறவை
கடகட கடவென அடைந்தது நிலவை
ஆனந்தமே இங்கே ஆரம்பமே
ஆனந்தமே இங்கே ஆரம்பமே

Get this widget | Track details | eSnips Social DNA

Monday, June 15, 2009

789 நீங்காத ஞாபகம் நெஞ்சிலே



இங்கே இதே தளத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை பாலுஜியின் பிறந்த நாள் கொண்டாட்டமாக அவரின் பிரபலமான பாடல் தொகுப்புக்கள் சிறப்பு பதிவாக பதியப்பட்டன. பாடல்கள் கேட்பது மட்டும் நமது பணி அல்ல இதோ பாலுஜியின் ஆத்மார்த்தமான அன்பை பெற்ற அவரின் அனபு உள்ளங்கள் அவரால் இயன்ற அளவு பொருளுதவியுடன் கடந்த 4 வருடங்களாக நடைப்பெற்று வரும் பாலுஜி ரசிகர்கள் சாரிட்டி பவுண்டேசன் மூலம் அனாதை இல்லங்கள் ஆதரவற்ற முதியோர் இல்லங்களூக்கு வருடத்திற்க்கு ஓரிருமுறை சென்று அவர்களூக்கு தேவையான பொருட்கள் வழங்கி வருவது வாடிக்கை. அதுமட்டுமல்லாமல் டாக்டர் பாலுஜி அவர்களும் கலந்து கொண்டு அவர் கையால் வழங்குவது மிகவும் சிறப்பான அம்சம். அதேபோல், இதோ இந்த மாதம் அவரின் பிறந்தநாள் 3 நாள் கழித்து 7ஆம் தேதி ஒரு ஞாயிறு அன்று சென்னையில் பூந்தமல்லியில் உள்ள, காந்திஜி மறுவாழ்வு மையத்தில் சிறுவர்களின் படிப்பிற்க்கு தேவையான பொருட்கள் வழங்கும் நற்பணி விழா நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் டாக்டர் எஸ்.பி.பி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து அவரது ரசிகர்களையும் அந்த மையத்தின் சிறுவர்களையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

ஆமாம் இசையன்பர்களே டாக்டர் பாலுஜி அவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி இது ஒரு நீங்காத ஞாபகம் தான் நம் நெஞ்சிலே நீங்களும் கீழே புகைப்பட கண்காட்சியை கண்டு மகிழுங்கள்.



பாடல்: நீங்காத ஞாபகம் நெஞ்சிலே
படம்: சாவி
பாடியவர்கள்:டாக்டர். பாலுஜி, டாக்டர்.எஸ்.ஜானகி

ம்ம்ம்ம்..ஆஆஆஆஅ. லலலல
ஆஆஆஆ..ஆஆஆஆ...ஆஆஆஆ
நீங்காத ஞாபகம் நெஞ்சிலே என்றும் வாழ்க
ஓ..ஓ என்றும் வாழ்க
நீங்காத ஞாபகம் நெஞ்சிலே என்றும் வாழ்க
ஓ..ஓ என்றும் வாழ்க

மாலை சுமந்து ஒரு மன்னன் உறவிலே
மஞ்சள் மலரிது கொஞ்சும் பொழுதிலே
நீங்காத ஞாபகம் நெஞ்சிலே என்றும் வாழ்க
ஓ..ஓ என்றும் வாழ்க

கோலக்கிளி ஒன்று என் கண்ணில் நடந்ததே
பாதச்சுவடுகள் என் நெஞ்சில் பதிந்ததே
நான் உன்னை ...ஆஆஆஆ

நீ என்னை வாழ்த்திட வாழ்க்கையும் பூத்திட
நன்றி கூறும் நேரம்தான் விழியோரம் ஈரம்தான்

நீங்காத ஞாபகம் நெஞ்சிலே
என்றும் வாழ்க
ஓ..ஓ..
என்றும் வாழ்க

காலம் முழுவதும் கண்கள் சிரிக்கட்டும்
காதல் தலைவனும் பக்கம் இருக்கட்டும்

நான் உன்னை ...ஆஆஆஆ

நீ என்னை தேற்றினால் பாதையை மாற்றினால்
மாலை மஞ்சள் குங்குமம் மனவி காணும் மங்களம்

நீங்காத ஞாபகம் நெஞ்சிலே என்றும் வாழ்க
ஓ..ஓ என்றும் வாழ்க

மாலை சுமந்து ஒரு மன்னன் உறவிலே
மஞ்சள் மலரிது கொஞ்சும் பொழுதிலே
நீங்காத ஞாபகம் நெஞ்சிலே என்றும் வாழ்க
ஓ..ஓ என்றும் வாழ்க

Get this widget | Track details | eSnips Social DNA

Friday, June 12, 2009

788 புது மஞ்சள் மேனிச்சிட்டு



இசையன்பர்களே இதோ ஒரு கலக்கல் பாடல். கேட்டு மகிழுங்கள்.

படம்:ருத்ர தாண்டவம்
பாடியவர்கள்:பாலுஜி,வாணிஜெயராம்
நடிகர்கள்:விஜயகுமார், சுமித்ரா
வருடம்:1978
இயக்குநர்:கே.விஜயன்

புது மஞ்சள் மேனிச்சிட்டு
புடவைக்குள் ஊஞ்சல் இட்டு
நடனங்கள் ஆடிடும் நயமான அழகு

புது மஞ்சள் மேனிச்சிட்டு
புடவைக்குள் ஊஞ்சல் இட்டு
நடனங்கள் ஆடிடும் நயமான அழகு
விழியே இதுவென்ன ராஜாங்கமோ..ஓஓ
விழியே இதுவென்ன ராஜாங்கமோ..ஓஓ

இதழ் தொட்டு தென்றல் பூஜை
இடைத்தொட்டு காமன் பூஜை
உடலெங்கும் உங்கள் பூஜை
இதுதானே உங்கள் ஆசை
மோகம் அழைக்கின்றதே
நாணம் தடுக்க்கின்றதே..ம்ஹும்
நாணம் தடுக்கின்றதே

புது மஞ்சள் மேனிச்சிட்டு
புடவைக்குள் ஊஞ்சல் இட்டு

நடனங்கள் ஆடிடும் நயமான அழகு
விழியே இதுவென்ன ராஜாங்கமோ..ஓஓ

நீர் கொணட மேகங்கள் குடை போலவும்
நிலை கொண்ட புஷ்பங்கள் மனம் போகவும்
தேர்?? கொண்ட பறவைகள் சுதி மீட்டவும்
திருமேனி வலம் வந்தால் சுகம் என்னவோ

கார் கூந்தல் கடல் கண்ட அலையாகவும்
கல்யாண பூச்செண்டு அசைந்தாடவும்
தேர் கொண்ட மணிசங்கு ஒலிக்காட்டவும்
நிழல் கொண்ட ரதிதேவி உருவந்ததோ
நிழல் கொண்ட ரதிதேவி உருவந்ததோ

அங்கம் தொடாமல் சங்கம் இல்லாமல்
கண்ணில் சுகங்கள் இல்லை

மன்னன் வராமல் மகராணி என்னி
பெண்மை நலன்கள் இல்லை

புது மஞ்சள் மேனிச்சிட்டு
புடவைக்குள் ஊஞ்சல் இட்டு

நடனங்கள் ஆடிடும் நயமான அழகு
விழியே இதுவென்ன ராஜாங்கமோ..ஓஓ

தேன் சிந்தும் சிறு கூடு நடமாடுது
சிறுமுல்லை மகரந்த பொடி தூவுது
பால்வண்ணம்?? மடிமீடு விளையாடுது
மலை ராக தமிழ் வீணை இசை பாடுது

உறவெங்கும் சுகமெங்க்கும் நினையாதது
ஒரு நெஞ்சில் நிலையான இடம் தேடுது
இரவென்றும் பகலென்றும் அறியாமலே
இதமான சுகம்காண உன்னை நாடுது
இதமான சுகம்காண உன்னை நாடுது

தஞ்சம் புகுந்த மஞ்சள் நிலாவை
என்றும் மறந்ததில்லை

அஞ்சும் நடுங்கும் பிஞ்சாத நின்று
மாசை?? என்பதில் இல்லை

புது மஞ்சள் மேனிச்சிட்டு
புடவைக்குள் ஊஞ்சல் இட்டு
நடனங்கள் ஆடிடும் நயமான அழகு

விழியே இதுவென்ன ராஜாங்கமோ..ஓஓ
விழியே இதுவென்ன ராஜாங்கமோ..ஓஓ


Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, June 11, 2009

787 நடையலங்காரம் நாட்டியமப்பா..ஹோய்.



இந்த பாடலும் கவிஞர் கண்ணதாசன் கைவண்ணத்தில் உருவான் பாடல் ரொம்ப நாட்களாக பதிவிற்காக காத்திருந்தன இப்போது தான் இந்த பாடலுக்கு பதிவேற்ற வேளை வந்தது. இது ஒரு உற்சாகமான பாடல் படம் சுஜாதாவாம். யாரு பார்த்தது? யாருக்காவது நடிக ந்டிகைகர்களின் தகவல்கள் தெரிந்தால் சொல்லலாமே..

பாடல்: நடையலங்காரம் நாட்டியமப்பா
பாடகர்: டாக்டர் எஸ்.பி.பி
படம்: சுஜாதா
இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி
பாடலாசிரியர்: கண்ணதாசன்

Get this widget | Track details | eSnips Social DNA


நடைய‌லங்காரம் நாட்டியமப்பா
இடைய‌லங்காரம் பூங்கொடியப்பா
உடையலங்காரம் ஊர்வலமப்பா
முடியலங்காரம் மோகமப்பா
தா தா தத்த..தா.தகதின தன...னன‌

ஆள் உயரம் ஐந்தடி
அழகுக் கூந்தல் ஆறடி
கண்ணகலம் ஏழடி
க‌ன்னிப் பெண்ணே கேள‌டி ஹாஹா..
ஆள் உயரம்...

ஹாஆ..இந்த ரெண்டு கண்ணைக் கண்டு
எத்தனை பேர் சொக்கினார்
சின்னைப் பொண்ணு பின்னலிலே
எத்தனை பேர் சிக்கினார்
ஆண‌வ‌த்தில் ராணி சிந்த‌னை எங்கே
ஆடி வ‌ந்த‌ ஆட்ட‌ம் போன‌தும் எங்கே
நடைய‌லங்காரம்...

ஹேய் க‌ம்ப‌னுக்கு தெரிய‌லே
க‌ன்னி உந்த‌ன் கூந்த‌லே
அம்பிகையை அட‌க்க‌வே
அம்பிகாபதி நானில்லே ஹா
க‌ம்ப‌னுக்கு...
ஹா க‌ட்டும‌ஸ்தா நீயிருந்தால்
எங்க‌ளுக்கு என்ன‌ம்மா
க‌ட்டிக் கொள்ள‌ப் போற‌வ‌ன்தான்
இஷ்ட‌ப் ப‌டுவான‌ம்மா ஹா
க‌ட்டும‌ஸ்தா நீயிருந்தால்...

நாக‌ரீக‌ ந‌ங்கை கேள‌டிய‌ம்மா
நாலு குண‌ம் எங்கே போன‌து சும்மா
ஆள் உயரம் ஐந்தடி
அழகுக் கூந்தல் ஆறடி
கண்ணகலம் ஏழடி
க‌ன்னிப் பெண்ணே கேள‌டி ஹாஹா..

நடைய‌லங்காரம் நாட்டியமப்பா..
இடைய‌லங்காரம் பூங்கொடியப்பா
உடையலங்காரம் ஊர்வலமப்பா
முடியலங்காரம் மோகமப்பா
தா தா தத்த..தா.தகதின தன...னன‌

பாடல் வரிகள் உதவி தூள் தளத்திற்க்கு நன்றி.

Wednesday, June 10, 2009

786 மதுவை எடுத்து கொஞம் ஊத்து



குடிமகனே பெருங்குடிமகனே என்ற குடிமகன்களூக்காக டி.எம்.எஸ் அண்ணா பாடிய பாடலும், இதே போல், ஒரு ஜீவன் தான் என்பாடல் தான் என்ற குடிமகன்களுக்காக பாலுஜி பாடிய பாடலும் அதிகம் தடவை கேட்டிருப்பீர்கள். இந்த இரண்டு ஜாம்பவான்கள் டி.எம்.எஸ் அண்ணாவும் பாலுஜியும் சேர்ந்து குடிகாரப்பாடல் அதிகம் பிரபலமாகாத பாடல் கேட்டிருக்கிறீர்களா? இந்த பாடல் கேட்டுப்பாருங்கள் சும்மாவே பாலுஜி குடிபோதை பாட்லை அமர்க்களப்படுத்திடுவார் இதோ டி.எம்.எஸ் அண்ணாவுடன் சேர்ந்து எப்படி கூத்தடிக்கிறார். கேட்டுத்தான் பாருங்களேன்.

படம்:வைராக்கியம்
இயக்குனர் ஏ. காசிலிங்கம்
தயாரிப்பாளர் கே. ஆர். பாலன்
அன்னை பிலிம்ஸ்
நடிப்பு ஜெமினி கணேசன்
நிர்மளா
இசையமைப்பு எஸ். எம். எஸ்
வெளியீடு மார்ச் 13, 1970

மதுவை எடுத்து.. மதுவை எடுத்து கொஞம் ஊத்து
அந்த மயக்கத்துலே வரும் பாட்டு
மனதை திறந்து கொஞ்சம் காட்டு
ஹஹஹஹஹ..ஹஹஹஹஹ

அந்த இனிய சிரிப்பில் சில கூட்டு
மதுவை எடுத்து கொஞம் ஊத்து ஹுஹஹஹ

இருப்பதை ரசிக்கட்டும் இளமை
அந்த இளமைக்கு நான் தான் தலைமை
ஆஹா... ஆஹா....ஆஆஹஆஆ

இருப்பதை ரசிக்கட்டும் இளமை ஹோஹோ
அந்த இளமைக்கு நான் தான் தலைமை ஹஹ
உச்சி முதல் பாதம் வரை தொட்டவுடன் மெய் சிலிர்க்கும்
பச்சை கிளி கொச்சை மொழி பேசி வந்து கை அணைக்கும்

மதுவை எடுத்து கொஞம் ஊத்து

கட்டப்பா என்னை கட்டப்பா யப்பனே
கட்டப்பா என்னை கட்டப்பா
பக்தனென்றால் என்னை கட்டப்பா நீ
பாதியென்றால் பெண்ணை கட்டப்பா
கட்டப்பா யப்பா..யப்பா...யப்பா..
அட்றாய்..

தகுமோடா சொல்ல தகுமோடா
நீ புத்தி சொல்ல தகுமோடா
வருமோடா இளமை வருமோடா
வருமோடா இளமை வருமோடா
விட்டுப்போனால் இளமை வருமோடா
ஏண்டா மூடா இங்கிருந்து போடா
உள்ள எவண்டா பையலே கொண்டு வாடா சோடா

கள்ளை உண்டு காதல் கொண்டு
கள்ளை உண்டு ஆஹா காதல் கொண்டு
உலகை தேடும் உலகம்ப்பா நீ
மாயயை விட்டு விலகப்பா
ஆஹா.. ஆஹா...
ஆஹா.. ஆஹா... யப்பா

மையல் பொங்க கைகளினாலே
மையல் பொங்க கைகளினாலே
மங்கையை தட்டும் உலகம்ப்பா
உன் மனதை கட்டிப்போடப்பா

சாமி யார்ப்பா இந்த சாமியாரப்பா
ஒழுங்கா சொன்னா கேட்காதப்பா
ஒருமுறை சொன்னா உறைக்காதப்பா

விருந்தையும் மருந்தையும் கொண்டுவாடப்பா

புத்திக்கு வேணும் மருந்து
புத்திக்கு வேணும் மருந்து நான்
சொன்னதை கேட்டு திருந்து
நான் சொன்னதை கேட்டு திருந்து
ஞானப்பாலை குடித்திருக்கேன்
எனக்கு ஏண்டா விருந்து

ஆஹா அப்படி சொன்னா எப்படி
நான் இனிமேல் போங்க சொற்ப்படி

இந்தாங்க சாமி அடியேன் விருந்து
நெய்யிலே செய்த அப்பம்.. ஆஹா
திரு நெய்யிலே செய்த அப்பம்
நீங்க உண்ண வேணும் என் விண்ணப்பம்

ஆஹா... நஞ்சை கலந்தனையா
என்னை கொல்ல நினைத்தனையா
நஞ்சை கலந்தனையா
என்னை கொல்ல நினைத்தனையா
அட பஞ்சப்பயலே.. பாவிப்பயலே
என்ன நடக்குது பார்..டபார்

சாமி.. டேய் சாமி..அடேய்
எரியுதே... எரியட்டும்
எரியுதே... எரியட்டும்
எரியுதே... எரியட்டும்
நல்லா எரியட்டும்

முன்னையிட்ட தீ முப்புறத்திலே
பின்னையிட்ட தீ தென் இலங்கையில்
அன்னையிட்ட தீ அடிவயித்திலே
இந்த அப்பனிட்ட தீ உந்தன் வீட்டிலே
அப்பனே ஏஏஏஏஏஏஏஏ

ஒட்ட தோண்டி கெட்டுடும்
தன்விணை தன்னைச்சுடும்
ஒட்ட தோண்டி கெட்டுடும்
தன்விணை தன்னைச்சுடும்
ஒட்ட தோண்டி கெட்டுடும்
தன்விணை தன்னைச்சுடும்

Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, June 09, 2009

785 பொங்குது கடல் பொங்குது



பொங்குது கடல் பொங்குது பொங்குது பாடல் பல்லவியை கேட்டாலே ஒரு டைப்பாக இருக்கிறது தானே. பாலுஜியின் குரலில் சுறுசுறுப்பான பாடல் கேட்டு ரொம்ப நாளாயிற்று இதோ அரன்மனைக்காவல்ன் என்ற படத்தில் ஒரு பாட்டு கிடைத்தது. என்னவொரு எனர்ஜியான் பாடல் கேட்டுதான் பாருங்களேன்.

Get this widget | Track details | eSnips Social DNA


படம்: அரண்மனை காவலன்
பாடியவர்:எஸ்.பி.பி
நடிகர்:சரத்குமார்??

பொங்குது கடல் பொங்குது பொங்குது
எங்கிலும் ஒரு சங்கு முழங்குது
பொங்குது கடல் பொங்குது பொங்குது
எங்கிலும் ஒரு சங்கு முழங்குது
பெண்புலியோடு?? ஒரு சிங்கம் நடந்ததுவே

வந்தது கனல் வந்தது வந்தது
வெந்தது பகை வெந்தது வெந்தது
வந்தது ஜெயம் வந்தது வந்ததுவே

இவள் படையால் பொடி படும் பூமி
இவள் நடையால் வழி விடும் சாமி
இவள் படையால் பொடி படும் பூமி
இவள் நடையால் வழி விடும் சாமி

இந்த பூமியில் ஒரு பூகம்பம்
இதோ இதோ இனி ஆரம்பம்
மீண்டுபோகுமோ ஓர் பேரண்டம்

பெண்ணரசி செல்வாள் முன்னே
கணபதி தான் வந்தான் பின்னே
பெற்றபடை சற்றே தீராதோ??
அவளோ ஒரு கீதை கொடுக்க
இவனோ ஒரு வில்லை எடுக்க
குருஷேத்திரம் இன்றே கூடாதோ

ஒரு வகையில் இவள் இரு காளி
இவள் தருவாள் பாவத்தின் கூலி
ஒரு வகையில் இவள் இரு காளி
இவள் தருவாள் பாவத்தின் கூலி

இந்த பூமியில் ஒரு பூகம்பம்
இதோ இதோ இனி ஆரம்பம்
மீண்டுபோகுமோ ஓர் பேரண்டம்

Monday, June 08, 2009

784 முத்துச் சிப்பிகுள்ளே



குழந்தை உள்ளம் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சாவித்திரியின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். என்னவொரு இனிமையான பாடல் எப்பவோ கேட்டதுங்க..//முத்தமிட்ட இதழே பாலாக.. முன்னிடை மெலிந்து நூலாக.. கட்டி வைத்த கூந்தல் அலையாக.. கட்டி வைத்த கூந்தல் அலையாக.. கண்ணங்கள் இரண்டும் விலையாக// கலக்கல் வரிகள். கேட்டு மகிழுங்கள்.

குழந்தை உள்ளம்
தயாரிப்பாளர் சாவித்திரி
சாவித்திரி புரொடக்ஷன்ஸ்
நடிப்பு ஜெமினி கணேசன், வாணிஸ்ரீ
இசையமைப்பு கோதண்டபாணி
வெளியீடு ஜனவரி 14, 1969

Get this widget | Track details | eSnips Social DNA


முத்துச் சிப்பிகுள்ளே ஓரு பூவண்டு
குடி கொண்டதே இன்ப தேன் உண்டு
முதல் நாள் மயக்கம் வரக்கண்டு
மோனத்தில் ஆழ்ந்ததே சுவைக்கொண்டு

முத்துச் சிப்பிகுள்ளே ஓரு பூவண்டு
குடி கொண்டதே இன்ப தேன் உண்டு

தலைமகன் செய்தது சோதனையோ
தலைவிக்கு இன்பத்தின் வேதனையோ
கலைகளில் ஓவியம் ரசிக்கின்றதோ
கனவிலே கண்டு சிரிக்கின்றதோ

முத்துச் சிப்பிகுள்ளே ஓரு பூவண்டு
குடி கொண்டதே இன்ப தேன் உண்டு

முத்தமிட்ட இதழே பாலாக
முன்னிடை மெலிந்து நூலாக
கட்டி வைத்த கூந்தல் அலையாக
கட்டி வைத்த கூந்தல் அலையாக
கண்ணங்கள் இரண்டும் விலையாக

முத்துச் சிப்பிகுள்ளே ஓரு பூவண்டு
குடி கொண்டதே இன்ப தேன் உண்டு

தேன் தரும் நிலவே நீ சாட்சி
தென்றல் காற்றே நீ சாட்சி
வானம் நிலவும் உள்ளவரை
வளரட்டும் காதல் அரசாட்சி
வளரட்டும் காதல் அரசாட்சி

முத்துச் சிப்பிகுள்ளே ஓரு பூவண்டு
குடி கொண்டதே இன்ப தேன் உண்டு

படத்தகவல்: நன்றி, விக்கீபீடியாதளம்.

Wednesday, June 03, 2009

783 டாக்டர் எஸ்.பி.பி 64ஆம் பிறந்தநாள் வாழ்த்துக்கள்


டாக்டர் எஸ்.பி.பி 64ஆம் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தொடர்ந்து 3 நாட்கள் வானொலி கவிதை ஒலித்தொகுப்புக்களை வழ்ங்கிய திருமதி ராகினி பாஸ்கரன் யார் என்று பார்க்க ஆவலாக உள்ளதா? இதோ இவர் தான் அவர். ஏற்கெனவே இந்த தளத்தில் சில பதிவுகளில் அறிமுகமானவர் தான். தெரிந்திராத இணையதள அன்பர்களூக்காக இதோ மறுமுறை லண்டன், அமெரிக்க வானொலிகளில் கவிதை குதுகுலம் என்ற நிகழ்ச்சிகளில் கவிதகளூடன் இனிமையான பாடல்களையும் தேர்ந்தெடுத்து தன் கொஞ்சும் குரலால் அனைவரையும் கவர்ந்தவர். இவர் தன் குரலால் லண்டனில் வசிக்கும் தமிழ் நெஞ்சங்களீன் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். இவர் பாலுஜியின் மீதும் அவர் குரலின் மீதும் வைத்திருக்கும் அன்பை இவரின் கவிதைகளில் அடையாளம் காணமுடியும்.

பாலுஜி அவர்கள் சில ஆண்டுகளாக பிறந்த நாளை தனிப்பட்ட முறையில் கொண்டாடுவதில்லை ஏனென்றால் அவரின் அபிமானம் பெற்ற நெருங்கிய நண்பர் திரு.ராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவாக தன் பிறந்தநாள் கொண்டாடுவதையே தவிர்த்து வ்ருகிறார். இதை பலமுறை எங்களிடம் நேரிலும் சொல்லியிருக்கிறார். இருந்தும் சமீபகாலமாக அவரின் அபிமான ரசிகரகளின் சாரிட்டி பவுண்டேசன் மூலம் நடைபெறும் நலதிட்டங்களில் ஆவலுடன் கலந்து கொண்டு வாழ்த்துககளை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்வதும் மட்டுமல்லாமல் பிறந்தநாள் அன்று தொடர்புகொள்ளும் அனைத்து அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நனறி சொல்லுவார். ஊரில் இல்லையென்றாலும் வந்த பிறகு தொலைபேசியில் தொடர்பு கொண்டவரக்ளை அழைத்து பேசி மகிழ்வார் இது அவரின் சிறப்பு. (இன்று கூட காலையில் ரசிகர்கள் அழைத்த அனைத்து தொலைபேசிகளூக்கும் அருகில் இருந்து பேசி வாழ்த்துக்களை பெற்று நன்றி சொன்னது கண்டு பாலுஜி ரசிகர்கள் உள்ளம் பூரித்துபோய் இருக்கிறார்கள் என்னையும் சேர்த்து. அவருக்கு இந்த ஒலித்தொகுப்பை உருவாக்கிய திருமதி ராகினி பாஸ்கரன், ஜெர்மனி, வானொலி உரிமையாளர் திரு.நடாமோகன், இந்த தளத்தின் உரிமையாளர் திரு. சுந்தர் அவர்களின் சார்பாகவும் அகில உலக பாலுஜி ரசிகர்கள் சார்பாகவும் அவர் பல்லாண்டு நீடுழி வாழ வேண்டும் என வாழ்த்தி எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.



இனி ராகினி பாஸ்கரன் அவர்களின் கவிதை தேன் மழையில் நனைவோமா அன்பர்களே..

Get this widget | Track details | eSnips Social DNA


கோடைக்காலத்தில் நிழல் தேடி அலைகின்ற உயிர்களூக்கு தேனருவி கொட்டுகின்றது மென்மையான குரலில் இசைமழை ஒன்று அருந்திச் செல்லுங்கள் ஒருமுறை நின்று.

1.பூங்குயில் இரண்டு ஒன்னுல ஒன்னாய் (துவகத்திலேயே சோகமான பாடலாக இருந்தாலும் சோகத்திலும் சுகமான ராகினி மேடம் சொன்னது போல் அருந்திச்செல்லாமல் இசைமழையில் நனைந்து மிதந்து செல்லுங்கள் ஒருவித சிலிர்ப்புடன்)

வாழ்க்கையில் பின்செல்லும் பாதையை கண்டறிய முடியாத விதியின் பாதையில்
ஒரு பூ ஒன்று மலர்ந்தது மலர்வதற்க்கு தீர்மானம் எடுத்தது இதழ்கள்
இதழ்களிலிருந்து ஆரம்பமாகின்றது இந்த பாதையில் ஓர் சிறு இடம் உண்டு என்று
இன்ம் காட்டியவர் திரு.நடாமோகன் அண்ணா அவர்களுக்கு இந்த ஏழையின் இரு கரம் கூப்பிய நன்றிகள்.

2.கவிதைபாடு குயிலே குயிலே இனி வசந்தமே.. (சரியான பாடல் தேர்வு ராகினி வாழ்க்கையில் இனி மட்டுமல்ல என்றுமே வசந்தமே தான். தலையசைக்கவைக்கும் தாளத்துடன் ரபப்ப்பாப்பாஆஆஅ பாடல்)

தேடலின் விழிம்பில் தத்தளிக்கும் இதயங்களூக்கு மன அமைதி கொடுப்பது இசை.
இசைக்கு உயிர் கொடுப்பது செவிகள். உங்கள் செவிக்களூக்கு விருந்து கொடுப்பது இந்த கவிதையில் பூத்திற்க்கும் பாடல்கள் )

3.பாடும் போது நான் தெறல் காற்று.. (பாடும் போது மட்டுமல்ல பாலுஜி அவர்களே நீங்கள் பேசினால் இல்லையில்லை விடும் மூச்சும் கூட தென்றல் காற்று தான்..நான் அடுத்த முறை இந்த பாடலை கேட்கும் போது இந்த பாடலின் துவக்கத்தில் வரும் அழகான ஆலாபனையுடன் தான் கேட்க வேண்டும்)

4.இரவில் நிலா வெளிச்சத்தில் அவள் முகம்
மஞ்சலாய் தெரிகின்றது அவன் விழிகளூக்கு.
விழிகளை விட நெற்றியில் இடும் பொட்டுக்கு
இத்தனை சக்தியா விழியின் மின்னல் ஒளியை
தாண்டி அவன் கண்களை பறிக்கின்றது
அவள் பொட்டில் இருக்கும் ஒளிகள்
அதனால் அவன் மனம் நிலைகுழைந்து இப்படி பாடுகின்றான்..

5.பொட்டு வைத்த முகமோ.. (தரையோடு வானம் விளையாடும் கோலம்.. இடையோடு பார்த்தேன் விலையாக கேட்டேன்..இடையோடு பார்த்தேன் விலையாக கேட்டேன்..செவானம் போலே புன்னகை புரிந்தால். அடடா அடடா என்னவொரு இனிமை.. செவ்வானம் என்ன.. இடையென்ன.. உந்த குரலுக்கு இந்த பிரபஞ்சமே விலையாக தரளாமே.. )

அச்சச்சோ இத்தன பொய்யா உன் உதட்டில் ஆணால்
உன் விழி சொல்கின்றது உள்ளத்தில் இருக்கும் உண்மைகளை
சண்டையிட்டாலும் ஆறுதல் தருவதும்
இறுதி வரை துணையாய் இருப்பதும் இவள் தான்..

6. மண்ணில் இந்த காதலின்றி.. (பாடல் வரிகளின் இனிமையில் லேசாக இழையோடும் இளையராஜாவின் கிடாரின் கார்ட்ஸில் மயங்காத மனங்களூம் உண்டோ..இல்லையென்றால் உன்னிப்பாக கவனியுங்கள்.)

7.சொர்க்கத்திலே முடிவானது.. ( உங்கள் குரல் தான் எங்களின் ஆத்மார்த்தமான இனிமை என்று சொர்ர்கத்திலே முடிவான ஒன்று.)

ஒலிக்கோப்பை கேட்டு ரசித்த அனைத்து அன்புள்ளங்களூக்கும் நன்றி.

-- ராகினி பாஸ்கரன், ஜெர்மனி, மற்றும் கோவை ரவி, வற்றாயிருப்பு சுந்தர், பாஸ்டன்

782 பாலுஜியின் பிறந்தநாள் வானொலித்தொகுப்பு - 3


இந்த மூன்றாவது நாள் சிறப்பு ஒலித்தொகுப்பு ஒரு வித்தியாசமானது இசையன்பர்களே. ஒலித்தொகுப்புக்குள் நுழையும் முன் இந்த தொகுப்பிற்க்கு தேவையான பாடல்களை தந்து உதவிய எனது பெங்களூர் அருமை நண்பர் மற்றும் பாலுஜியின் தீவிர ரசிகர்களில் ஒருவர் திரு.ஆர்.ஜி.நாராயாணா அவர்களூக்கும், இந்த பாடல்களையும் விளக்கங்களையும் ஒரே நாளில் பதிவு செய்து பாரிஸ் கலையகம் வானொலியில் ஒலிப்பரப்ப மிகவும் உதவியாக இருந்த கொஞ்சும் குரல்யாளினி கவிதைகுயில் திருமதி ராகினி பாஸ்கரன் அவர்களூக்கு அனைத்து உலக பாலுஜி ரசிகர்கள் சார்பாகவும் கோவை பாலுஜி ரசிகர்கள் சார்பாகவும் மற்றும் பாலுஜியின் சார்பாகவும் என் நன்றியை தெரிவித்துக்கொள்வதில் பெருமைப்படுகின்றேன்.

இந்த ஒலித்தொகுப்பை பற்றி ஒரு சிறு விளக்கம். பாலுஜி அவர்கள் பல மேடை நிகழ்ச்சிகளிலும், வானொலி மற்றும் தொலைக்காட்சி பேட்டிகளிலும், தொலைக்காட்சி பாடல் போட்டிகளிலும் புதிய பாடகர்களூக்கும் ரசிகர்களுக்கும் எப்போதும் ஒரு அறிவுரை சொல்ல தவறுவதேயில்லை அவை புதிய பாடகர்கள் பாடும் போது தன் சொந்தக்குரலில் நன்றாக வாயைதிறந்து பாட வேண்டும் மற்ற பாடகர்களை பின்பற்றி அவர் குரலைப்போன்று பாட முயற்சிக்கக்கூடாது என்று தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக சொல்லுவார். இதை எல்லோரும் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.

பாலுஜி சொன்னதற்க்கும் இந்த ஒலித்தொகுப்பிற்க்கும் நேர் மாறான ஏன் முறன்பாடான தொகுப்பும் கூட. அதுஎன்னவென்றால் மற்றவர்களூக்கு தான் அறிவுறையா அவருக்கு கிடையாதா அவர் எவ்வளவு பாடல்களில் குரல் மாற்றி பாடியிருக்கிறார் என்று கேட்கத்தோன்றுகிறதுதானே?. நீங்க சரியான கேள்வியை தான் கேட்டீர்கள் என்பேன். ஒன்று கவனியுங்கள் அவர் துவக்க காலத்தில் என்றுமே குரல் மாற்றி பாடியது இல்லை. பிரபலமான பிறகுதான் படங்களின் கதையம்ப்சத்திற்க்கு தேவை என்று இயக்குனர்கள் வேண்டுகோளின் படி அமரர்.நடிகவேள் எம்.ஆர்.ராதா, அவர் புதல்வர் திரு.எம்.ஆர்.ராதாரவி, அமரர்.தேங்காய் சீனிவாசன், திரு.வென்னிறஆடை மூர்த்தி மற்றும் அமரர் சுருளிராஜன் ஆகியோருக்கு குரலை மாற்றி பாடியிருக்கிறார் அவ்வளவு தான். இதையே சில பேர் கிண்டலாக கள்ளத்தொண்டையில் பாடுகிறார் என்று கிண்டலடித்திருப்பதை பல பேர் பேசியதையும் விமர்சனங்களையும் நானும் கேட்டுருக்கின்றேன். அவர்களுக்கெல்லாம் ஒன்றே ஒன்று தான் நான் சொல்வது..கள்ளத்தொண்டை என்று ஏன் எடுத்துக்கொள்கிறீர்கள் அவரிடம் இருக்கும் அபாரமான திறமை என்று எடுத்துக்கொள்ளலாமே? எந்தவொரு ஒரு பாடகரரும் தன்னுடைய வித்தியாசமான திறமை வெளிகொண்டுவரவில்லையென்றால் அவர் முன்னேற முயற்சி எடுக்கவில்லை என்று தான் நினைக்க தோன்றும். நான் சொல்வது சரிதானே?

Get this widget | Track details | eSnips Social DNA


சரீங்க..இனி தொகுப்பினுள் செல்வோமா...?

டி.ஆர்.டி லண்டன் வானொலியில் குயில் குதுகுலம் என்ற நிகழ்ச்சியில் வெளிவந்த ஒலித்தொகுப்பு தான் இந்த பதிவு. வழங்கியவர் டி.ஆர்.டி வானொலி அறிவிப்பாளர் திருமதி.ராகினி பாஸ்கரன் அவர்களுக்கு என் சார்பாகவும், பாஸ்டன் சுந்தர் சார்பாகவும் நன்றி.

துவக்கத்திலே எல்லோர் மனதையும் கவர்ந்த நலம் வாழ என்ற பாடல் எப்போது கேட்டாலும் அற்புதமான வரிகளால் மெய்மறந்து போவேன். இப்பாடலை எனக்காக வழங்கிய அறிவிப்பாளர் அவர்கள என்றென்றும் நலம் வாழ எந்நாளூம் என் வாழ்த்துக்கள் மீண்டும் மீண்டும் என் நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

சினிமா என்ற ஊடகத்தில் அந்த காலத்தில் பல பேர் நகைச்சுவை நடிகர்கள் அபாரமாக நடித்துள்ளனர். இந்த பாடலை அப்போதே அமர்க்களமாக இசையமைத்த சமீபத்தில் காலம் சென்ற வயலின் வித்வான் பத்மஸ்ரீ குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களூக்கு முதல் பாடலாக சமர்ப்பணம் செய்கிறேன். குன்னகுடியாரின் பெருமைகளையும் சாதனகளையும் என்றென்றும் பேசிக்கொண்டே இருக்கலாம். அவர் எப்போதும் தன் நெற்றியில் இடும் பட்டை விபூதியை போன்று பளீச்சென்று தன் சிரிப்பால் இசைப்போல் எல்லோரையும் கவர்ந்தவர். வயலின் இசைக்கருவியை தனிதன்மையாக மேடையேற்றிய பெருமை இவர் ஒருவருக்கே உண்டு. அந்த இசையருவியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் இறைவனை வேண்டுகிறேன். அவர் நினைவாக இந்த பாடல்.

தற்போது தொலைக்காட்சிகளில் மிமிக்ரி என்ற ஒரு நிகழ்ச்சி அதிகம் பிரபலமாகிறது. அதற்க்கு என்ன காரணம் ரசிகர்களீன் நகைச்சுவை உணர்வு மேலோங்கி இருப்பது தான். அதைப்பார்த்து தான் இந்த நிகழ்ச்சியை உருவாக்க தூண்டுதலாக இருந்தது. என் வாழ்நாளில் அதிகம் இடம் பிடித்தது ஏன் எனக்கு மிகவும் அமைதியை ஏற்படுத்துவது
இரண்டு. ஒன்று இசை மற்றொன்று நகைச்சுவை. இசையை ரசிப்பது என் உயிரிலே கலந்தது. நகைசுவை என் கவலைகளை மறக்கடிக்கசெய்வது. அந்த வகையில் எம்.ஜி.ஆர், சிவாஜி காலகட்டத்தில் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நடிப்பிலும் அவர் குரலிலும் ஒரு வித கவர்ச்சி இருக்கும். கூடவே நக்கலும், நையாண்டி வசணங்களூம் நூல் இலையாக இழையோடும் அவர் வசனங்கள் பேசும் ஸ்டைலே வித்தியாசமாக இருக்கும் அவர் பேசும் ஏற்ற இறக்கங்களின் உச்சரிப்பு எனக்கு தெரிந்த வரை எந்த வித ஒரு நகைச்சுவை நடிகரும் பேசியதில்லை.அந்த வகையில் பாலுஜி பாடிய கந்தர் அலங்காரம் என்ற படத்தில் வரும் இந்த இந்த பாடலில் அவரின் நக்கலும், நகைசுவையும் கொஞ்சிகுலாவி இந்த காதினில் தேன் பாய வைக்கின்றது இந்த பாடல்.

1. எட்டுகுடி மன்னவன்
படம்: கந்தர் அலங்காரம்,
பாடியவர்: எஸ்.பி.பி. எம்.ஆர்.ராதா,
இசை: குன்னக்குடிவைதியநாதன்

ஸ்ரீவைகுண்டம் என்ற ஊரில் பிறந்தவர் தான் தேங்காய் சீனிவாசன் அவர்கள். மகாத்மா காந்தி, நேரு ஆகியோர் இந்த பகுதிக்கு வந்தால் இவரின் கொள்ளுத்தாத்தா ஞானசிகாமணி வீட்டில் தான் தங்குவார்களாம். இவருக்கு தேங்காய் என்ற அடைமொழி எப்படி வந்தது என்று பலருக்கும் தெரிய வாய்ப்பே இல்லை. கல்மணம் என்ற நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக தோன்றி கலகலப்பூட்டியதால்தான் அவர் தேங்காய் சீனிவாசன் என்று அழைக்கபட்டார்.

தஞ்சைமாவட்டம் ராஜமன்னார்குடியில் பிறந்தவர் பெண் குழந்தை தேவி சாந்தா தான் இன்றைய ஆச்சி மனோரமா சிறு வயதிலேயே அசோக்குமார்,மீரா படப்பாடல்களை அபோதே பாடி அனைவரின் பாராட்டையும் பெற்றவர். இவர் அடிக்கடி விழாக்களிலும் பாடியவர். ஆகையால் பள்ளத்தூர் பாப்பா என்று அழைத்தார்கள்.எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்கள் மணிமகுடம் என்ற நாடகத்தில் நடிக்க வைத்தார். பல நாட்கங்களில் நடித்து வந்தவர் மாலையிட்ட மங்கை என்ற படத்தில் முதல் நகைச்சுவை கதாபாத்திரத்தை ஏற்றி நடித்திருக்கின்றார். தன் கணீர் என்ற குரலால் பல படங்களில் பாடி தன் இசைத்திறமையை வெளிபடுத்தியவர். அதில் ஒன்று 1971ஆம் ஆண்டு கருந்தேள் கண்ணாயிரம் என்ற படத்தில் நடிகர் தேங்காய் சீனிவாசணுடன் பூந்தமல்லியிலே ஒரு பொண்ணு பின்னாலே என்ற அட்டகாசமான பாடல் எஸ்.பி.பியுடன் பாடியது தான் இந்த பாடல். அசத்தி இருக்கும் நகைச்சுவை அரசி ஆச்சி மனோரமா அவர்களூக்கு கண்டிப்பாக ஒரு சபாஷ் கொடுக்கத்தான் வேண்டும். அவருக்கு மட்டுமா குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணீயம் அவர்களூக்கும் தான்.

2 பூந்த மல்லியிலே ஒரு பொண்னு பின்னாலே
படம்: கருந்தேள் கண்ணாயிரம்
பாடியவர்கள்: எஸ்.பி.பி, மனோரமா

முதல் பாடலைப்போன்று இந்த பாடலும் என்ன எம்.ஆர்.ராதா அவர்களின் புதல்வன் திரு.எம்.ஆர்.ராதாரவி அவர்களின் குரலிலும் வரும் இந்த பாடல் துவக்கத்திலே கட்டை குரலில் கர்ஜித்து ”அப்பன் பேச்சை ஒழுங்கா கேட்டவன் யார்டா டேய்” என்று அவர் பாணியிலே எஸ்.பி.பி துவங்குவது பாடல் கேட்பவரின் ஆர்வத்தை தூண்டிவிடும். தற்போது பல தனியார் தொலைக்காட்சி தொடர்களில் மிமிக்ரி பாணியில் பல நிகழ்ச்சிகள் வந்து ரசிகர்களை நகைசுவையால் குளிரவைக்கிறது. அதில் வரும் கலைஞர்கள் எம்.ஆர்.ராதா அவர்களின் குரலில் சர்வசாதரணமாக பேசுவதை கேட்டிருக்கிறோம். ரத்தக்கண்ணீர் நாடகம் அந்த காந்தா வசனம் முதல் பாடலில் அவர் சொன்னது போல் அனைவரின் உள்ளத்திலும் பதிந்துள்ளது. அதே போல் இந்த பாடலிலும் வரும் வசணங்களூம் வரிகளும் கேட்பவரின் வாயையும் முனுமுனுவைக்கும் நான் மட்டும் கேட்டால் போதுமா கேட்டுதான் பார்போமா? உங்களோடு இணைந்து நானும் மீண்டும் ஒரு தடவை.

3. அப்பன் பேச்சை கேட்டவன் யாரு
படம்: சூரக்கோட்டை சிங்கக்குட்டி
பாடியவர்: எஸ்.பி.பி

மொழி மாற்றம் செய்த படங்கள் ஒரு காலத்தில் பிரபலம். நட்சத்திரம் படப்பாடல்கள் மிகப்பிரபலம் அதில் அவள் ஒரு மேனகை என்ற பாடல் எல்லோர் மனதையும் கவர்ந்த பாடல். அதில் ஒரு வித்தியாசமான பாடலுக்கு சங்கர் கனேஷ் அவர்கள் இசையமைத்துள்ளார் அதிகம் பிரபல மாகாத பாடல் இது. கேட்பதற்க்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும். உங்கள் காதுக்கு விருந்தாக இந்த பாடலை காற்றாலைக்கு எடுத்து வருகின்றேன்.

4. கண்ணுல சூசின பொண்ணு
படம்: நட்சத்திரம்
பாடியவர்: எஸ்.பி.பி
இசை: சங்கர் கனேஷ்

வாழ்க்கையின் ஓட்டத்தில் நாம் எத்தனை காதாப்பாத்திரம் சந்திக்கின்றோம் சந்தித்த கதாபாத்திரங்களில் ஒருவராகிய சுருளிராஜன் அவர்கள். மன வளர்ச்சி குன்றிய நபரின் கதாபாத்திரத்தில் சுருளிராஜன் நடித்த பெண்ணுக்கு யார் காவல் படத்தில் வருகிற இந்த பாடல்.. சோகத்தையும், ஏக்க்ததையும் தனக்குள் புதைத்துக் கொள்கிற ஒரு ரம்மியமான தாலாட்டு. இந்த பாடலின் துவக்கமே பாலுவின் குரலில் அழகான, அமைதியான ஆலாபனையுடன் கேட்பதற்கு மனதிற்க்கு மிகவும் இனிமையாக இருக்கும். இந்த பாடலை நான் மட்டும் ரசித்தால் போதுமா நீங்களூம் அனுபவியுங்கள்.

5.கண்ண்ணே கண்ணான
படம்: பெண்ணுக்கு யார் காவல்
பாடியவர்கள்: எஸ்.பி.பி, எஸ்.ஜானகி

சுருளிராஜன் அவர்கள் டி.என்.பாலு இயக்கத்தில் பல நாடகங்களீல் நடித்து வந்தார்.டைரக்டர் வி.சி.குகநாதன் அவர்கள் முயலுகு மூணுகால் என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார். இவருக்கு பெரிய ப்ளஸ் பாய்ண்ட்ஸ் இவரின் குரல் தான். வேறு எவருக்கும் இவரைப்போல் வசணம் பேச வராது. இவரை பிரபல படுத்திய படமும் ஆதிபராசக்தி. கொக்கரக்கோ பாடலில் நவராத்திரி ஒன்பது, நவதானியம் ஒன்பது, நவரத்தினம் ஒன்பது, நவக்கிரங்களூம் ஒன்பது.. ஏண்டா நாங்க மட்டும் ஒன்பது.. என்ற வரிகள் இந்தச் சமூகம் இன்னும் அவர்களை எந்த நிலையில் நடத்துகிறது என்பதை ஒரு சுளீர் சாட்டையடி போல உணர்த்துகின்றன. திருநங்கையர்கள் உணர்வுகள் நாம் புரிந்து கொண்டு சமுதாயத்தில்
அவர்களூக்கு கொடுக்க வேண்டிய மரியாதை தர முயற்சி செய்வோம்.
திருநங்கையரகளுக்கு அரவாணீகள் என்ற சொல்லுக்கு இணையான தமிழ் சொல் திருநங்கையர். நிகழ்கின்ற வண்கொடுமைகளை பட்டியல் போடுகின்றது எனலாம். கதாபாத்திரத்தை நன்கு உள் வாங்கி தன்னைஇயே அந்த சூழலுக்குல் பொருத்திக்கொண்டு பிரமாதமாக பாடியிருக்கின்றார் எஸ்.பி.பாலசுப்ரமணீயம் அவர்கள் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அந்த சூலழுக்கேற்றவாரு தன்னை அர்பணித்துக்கொண்டு, இசையில் தானே புகுந்து கொண்டு ஒவ்வொரு திறமைகளையும் இத்தன ஆண்டுகாலமாக நம் காதுகளூக்கு விருந்தாக அள்ளித்தெளீக்கும் இவரது குரல் என்றும் மறக்க முடியுமா?. இனி வரும் சந்ததிகள் கூடத்தான் மறந்துபோக முடியுமா? நான் இப்பிறப்பில் கேட்கும் வரம் என்னவென்றால் இன்னும் ஒரு மானிட பிறவி எனக்குள் இருந்தால் எஸ்.பி.பி அவர்களூக்கு நான் தங்கையாக பிறக்க வேண்டும் அவர் பாடும் அழகை நான் அருகில் இருந்து ரசிக்க வேண்டும் இது தான் நான் இப்பிறப்பில் நான் கேட்கும் வரம்.

6.சொல்லவெக்கமா இருக்கு சொக்கம்மா
பெண்ணுக்கு யார் காவல்

தொங்குவ தற்கு முருங்கை மரம் தேடி அலைகின்ற ஒரு ஆவிக்கு பேய்கள் நிறைந்த ஒரு பாழடைந்த பங்களாவில் ஒரு விருந்தே கிடைக்கிறது. அந்த கொண்டாட்டத்தின் வெளிப்பாடு இப்பாடல். நம் பாலுவின் குரல் ஆவிக்கும் அம்சமாய் பொருந்தி அட்டகாசம் பண்ணுகின்றது.இதுதான் அவருக்கு இறைவன் கொடுத்த வரம். அது என்ன அட்டகாசம் என்று கேட்கபோகின்றீகளா?

7.வாய்யா வாய்யா
படம்:ஜப்பானில் கல்யாணரமன்

உல்லாசப் பறவைகள் படத்தில் அழகு ஆயிரம், தெய்வீக ராகம்,ஜெர்மனியின் செந்தேன் மலரே போன்ற என்றும் இனிமையான பாடல்களின் domination / ஆக்கிரமிப்பு காரணமாக அநேகமாக எல்லாரும் மறந்து போன அல்லது பெரிதும் கண்டு கொள்ளாத பாடல் இது. வெண்ணிற ஆடை மூர்த்தி சுருளிராஜன் இருவரும் இந்த படத்தில் பெண்களை தேடி அலையும் வகையில் எடுக்கப்பட்டிருக்கும் பாடல் அதனால். இந்த பாடல் கேட்பதற்க்கு மிகவும் இனிமையாக இருக்கும். தேங்காய் ஸ்ரீனிவாசன் அவர்களூக்காக பதிவு செய்யபப்ட்ட பாடல் தவிர்க்க முடியாத சில காரணங்களால் வென்னிறாடை மூர்த்தி நடித்தார் அவர் குரலுக்காகத்தான் பாலுஜி பாடியிருக்கிறார். சுருளிராஜன் அவர்களூக்கு மலேசியா வாசுதேவன் அவர்கள் வித்தியாசமான முயற்சி. நடிகர்கள் இருவரும் பாடல் காட்சி முடிவில் அடிபட்டு நொந்து நூலாகி வரும் உணர்ச்சியை அப்படியே தத்ரூபமாக தங்கள் குரலில் இறுதியில் பாடியிருப்பது அமர்க்களம்.

8. எங்கெங்கும் கண்டேனம்மா பெண்கள்
படம்: உல்லாசப்பறவைகள்
பாடிவர்கள்: எஸ்.பி.பி, மலேசியா வாசுதேவன்

இந்த ஒலித்தொகுப்பின் முக்கிய நோக்கமே பாலுஜியின் அபாரமான வித்தியாசமான திறமையை வெளிகொண்டுவந்து இணையதள அன்பர்கள் கேட்டுரசிக்கத்தான். அவரின் திறமையை வெளியினை வெளிக்கொணர்ந்த அனைத்து இயக்குநர்களூக்கும் இசையமைப்பாளருக்கும் தான் நன்றி சொல்லவேண்டும். அது போன்ற பாடல்களை தேடிப்பிடித்து உங்கள் செவிகளூக்கு விருந்தாக படைக்க உதவிய அனைத்து அன்புள்ளங்களூக்கும் கேட்டு ரசித்த இணையதள அன்பர்களூக்கும் என் மனாமார்ந்த நன்றி. கேட்டுவிட்டு 4.6.2009 அன்று கொண்டாடும் அபார திறமை பெற்ற நம் பாலுஜி அவர்களூக்கு பிறந்த நாள் வாழ்த்தையும் கூறிவிடுங்கள்.

-- கோவை ரவி

Tuesday, June 02, 2009

781 பாலுஜி பிறந்தநாள் வானொலி தொகுப்பு-2


நறுக்கு தெரித்தார் போல் நான்கு பாடலானாலும் ஓர் வித்தியாசமான பிறந்த நாள் தொகுப்பு கவிதை குவியலுடன் பாலுஜியின் பாடல் தொகுப்பு இந்த ஒலித்தொகுப்பில் அதிகமான பாடல்கள் இந்த தளத்தில் நாம் கேட்டு இருந்தாலும் தேனின் சுவையை எத்தனை முறை சுவைத்தாலும் தித்திக்காதே அதுவும் ஜெர்மனியின் செந்தேன் மலர் கொஞ்சும் குரல்யாளினி திருமதி. ராகினி பாஸ்கரன் அவர்களின் கவிதை தேன் மழையுடன் சேர்ந்து தெவிட்டாத பாடல்கள். இதோ அவரின் வானொலி குடும்பத்துடன் சேர்ந்து ரசிகர்களூடன் அவரின் பிரியமான பாலுஜியின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஒலித்தொகுப்பாக வழங்கியுள்ளார்கள். வழக்கம் போல் மிகவும் குற்றால அருவி போல் கொட்டும் கவிதை தொகுப்புக்கு பாலுஜியின் பாடல்கள் மனதை கொள்ளைக்கொண்டு போகின்றன. திருமதி ராகினி பாஸ்கரன் அவர்களூக்கு பாலுஜி சார்பாக நன்றி.

1.என் கண்மணி என் பாடல் கேளடி
2.மெட்டுப் போடு மெட்டுப்போடு
3.பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
4.என்னவென்று சொல்வதம்மா

Get this widget | Track details | eSnips Social DNA

Monday, June 01, 2009

780 பாலுஜியின் பிறந்தநாள் ஒலித்தொகுப்பு-1



வருகின்ற 4.6.2009 அன்று பாலுஜியின் 64ஆம் ஆண்டு பிறந்த நாள் வரவிருக்கிறது. அதன் முன்னோடியாக இன்றிலிருந்தே பாடும் நிலா பாலு தளம் தன் இசைக்கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிட்டது இசையன்பர்களே இதோ முதல் சிறப்பு ஒலித்தொகுப்பு. 4ஆம் தேதி அவருக்கு சிறப்பு வானொலி வாழ்த்தொலிதொகுப்பு வரவிருக்கிறது அதுவரை தினம் வலம் வரும் இந்த ஒலித்தொகுப்புக்களை பதிவிறக்கம் செய்து கேட்டு மகிழுங்கள்.

சென்ற மாதம் 24.05.2009 தேதி ஒரு ஞாயிறு மாலைபொழுதினில் கோவையில் மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்களின் பாராட்டு விழா மற்றும் இன்னிசை நிகழ்ச்சி நடைப்பெற்றது. திரு.ராமமூர்த்தி அவர்கள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் நிகழ்ச்சியில் பங்கேற்கமுடியவில்லை என்பதை திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் முதலிலேயே தெரிவித்தார்.

பாராட்டு விழா என்பதால் ஏழிசைவேந்தன் டி.எம்.எஸ், பாடும் நிலா பாலு, சின்னகுயில் சித்ரா, எல்.ஆர்.ஈஸ்வரி, ஸ்ரீனிவாஸ், டி.எம்.எஸ். பால்ராஜ் ஆகியோரும் மற்றும் அதிக பட்ச இசைக்கலைஞ்சர்கள் நடிகர்கள் சிவக்குமார், வடிவேல், இயக்குநர் மனோபாலா ஆகியோர் தங்கள் பங்குக்கு அதிகமாகவே பாராட்டி பேசிவிட்டார்கள். அதனாலேயே நிகழ்ச்சியில் 1.30 மணிநேரம் பேச்சிலேயே சென்றுவிட்டது. 3 மணி நேர இசை நிகழ்ச்சியில் இனி பாடகர்களூக்கு எவ்வளவு பாடல்கள் கிடைத்திருக்கும் நீங்களே சிந்தித்து பாருங்கள். பாலுஜிக்கு 4 பாடல்கள் தான் கிடைத்தன. அவர் பேசிய போது அவரே ரொம்ப பாடல்கள் பாட வேண்டும் ஆசைப்பட்டேன் என்று ஆதங்கப்பட்டார் இதோ இந்த ஒலித்தொகுப்பில் துவக்கத்திலேயே கேளூங்கள்.

நிகழ்ச்சியை சின்னத்திரை நடிகர் திரு.ஆதவன் தொகுத்து வழங்கினார். பாலுஜி மெகா ஹிட் பாடல்கள் தான் பாடினார் இதோ அவரின் குரலில் கேட்டு மகிழுங்கள். ஐபாடில் பதிவு செய்ததால் ஒலி அளவு அதிகமாக இருக்கும் தேவைக்கேற்ப வைத்துக்கொள்ளலாம்.

Get this widget | Track details | eSnips Social DNA


1.எங்கேயும் எப்போதும் >> நினைத்தாலே இனிக்கும் படத்தில் இந்த பாடலை அதே மெருகு, எனர்ஜி சிறிதும் குறையாமல் பாடியது அசத்தலாக இருந்தது அதை நேரில் பார்த்தவர்களூக்கு நன்றாக தெரியும்.

2.கனா காணூம் >> நடிகர் சிவக்குமார் அவர் பேசும் போது பாலுஜி தனக்கு பாடிய அனங்கன் அங்கஜன் அன்பன் பாடல் கண்காட்சிய்ல் வருகிறது அந்த பாடல்துவக்கத்தில் வரும் தொகையாறவை மனப்பாடமாக பேசி எல்லோரையும் கவர்ந்தார் அந்த பாடல் தனக்காக அருமையாக பாடி கொடுத்ததை மிகவும் சிலாகிதது பாராட்டினார். அவருக்காக பாலுஜி அவர்கள் கனா காணும் பாடலை மிகவும் அற்புதமாக பாடிவிட்டு தன் இருக்கைக்கு திரும்பும் போது சிவக்குமார் அவர்கள் ”எப்படியா அப்படியே அப்படியே பாடறே? என்று மெய் சிலிர்த்து” அவரை பாராட்டியது தூரத்தில் அமர்ந்திருந்தாலும் நன்றாக கேட்டது. மேலும் இந்த பாடலுக்கு ஒரு வரி விடாமல் கூடவே பாடி ரசித்தது மறக்கமுடியாத அனுபவம்.

இசைநிகழ்ச்சியின் பாடகர் திரு.ஆனந்தராஜன் அவர்கள் 12 வருடமாக மெல்லிசை மன்னருக்கு உதவியாக இருந்து வருகிறார் அவரும் சின்னகுயில் சித்ரா அவர்க்ளூம் “நெஞ்சம் மறப்பதில்லை” என்ற பாடலை மிகவும் அனுபவித்து பாடியது கேட்டு பாலுஜி எழுந்து வந்து திரு ஆனந்து அவர்களை பாராட்டியது மட்டுமல்லாமல் அந்த பாடலின் இசையமைப்பை வெகுவாக சிலாகித்து சொன்னது எல்லோரையும் மெய் சிலிர்க்க வைத்தது அதையும் இதில் கேட்டுமகிழுங்கள்.

3.கடவுள் அமைத்து வைத்த மேடை >> இந்த பாடலில் பாலுஜி ஏகப்பட்ட கூத்துக்கள் செய்தார். அதை காண கண்கோடிவேண்டும். இந்த பாடல் பதிவு தொடர்ச்சியாக ஒரே டேக்கில் செய்யப்பட்ட விதம் பற்றி எம்.எஸ்.வி அவர்கள் தெரிவித்தது எல்லோருக்கும் ஆச்சரியம் ஏனென்றால் பாடலில் வரும் சிறப்பு சப்தங்கள் அருமையாக இருக்கும். இந்த பாடலில் பாலுஜி அவர்களே அதிக சப்தங்களை கொடுத்து பாடியதும். பாடல் ஒரு இடத்தில் குழுவினர் பாடதாயாராக எனக்கு அந்த இடம் மிகவு பிடிக்கும் என்று கேட்டு பாடியது அசத்தல். அந்த தொடர்ச்சியில் பாடவேண்டிய பாடல் வரியை மறந்து விட்டு “நான் எங்கே இருக்கிறேன்” என்று முழித்துகொண்டு தலையை தடவியவாறே சொன்னது இப்போது நினைத்தாலும் புல்லரிக்கிறது. மிகவும் அட்டகாசமாக பட்டைய கிளப்பிவிட்டார் பாலுஜி. அந்த சம்பாஷனையை ஒலித்தொகுப்பில் அவதானித்து கேளூங்கள் நீங்களூம் ரசிக்கலாம்.

4.பாரதிகண்ணம்மா >> இந்த பாடலும் நினத்தாலே இனிக்கும் படத்தில் வருகிறது யப்பா என்னவொரு எனர்ஜிடிக் பாடல் பழைய பாடல்களூக்கு இசையமைத்த எம்.எஸ்வி. அவர்களே தான் இந்த படத்திற்க்கும் மனதை மயக்கும் மத்தியகால பாடல்கள் தேன் அடை போன்ற இந்த படம் நினைத்தாலே இனிக்கும் சரியான பெயர் பொருத்தம் இதுபோல் படத்திற்க்கு சரியான பெயர் பொருந்துவது அபூர்வம்.

மூத்த பாடகர் திரு.டி.எம்.எஸ் அவர்கள் ஒரு பாடலாவது பாடுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள் 87 வயது ஆகிவிட்டது ஆகையால் அவர் என்னால் இயலாது என்று சொல்லி மேடையில் மற்றவர் பாடியதை வெகுவாக ரசித்தார். முடிவில் ஆளுக்கொரு பாடலை பாடி எப்படியோ சமாளித்தார்கள் நிகழ்ச்சி முடிவும் தருவாயில் பாதி மைதானம் காலியாக இருந்தது. அதிகம் பாடல்கள் பாடததால் ரசிகர்கள் எல்லொருக்கும் ஒரு வித மணக்குறையுடன் தான் கலைந்து சென்றார்கள்.

எனக்கு, ஏழிசைவேந்தன் திரு.டி.எம்.எஸ் அவர்களையும் அவரின் புதல்வர் திரு.டி.எம்.எஸ் பால்ராஜ் அவர்களையும் கோவை நன்பர்களூடன் பாலுஜியையும் சந்தித்து பேச வாய்ப்பு கிடைத்தது பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

Followers

பகிர்க