836 பட்டிமன்றம் பட்டிமன்றம்

விசு டைரக்ட் செய்த படம் ஆகையால் பாடல் மெட்டு அவருடைய சம்சாரம் அது மின்சாரம் பாட்டில் வரும் மெட்டு போல் சில இடங்களில் தெரியும் உதாரணத்துக்கு இந்த வரிகளை சொல்லலாம் //வெள்ளம் பள்ளம் தேடும் உள்ளம் உள்ளம் தேடும் தீராது அது மாறாது ஆண்மை பெண்னை தேடும் பெண்மை ஆணை தேடும் ஓயாது விதி மாறாது// தற்போது விழாகாலங்களில் தொலைக்காட்சியில் பட்டி மன்றம் இல்லையென்றால் வூட்டுக்கார அம்மணிகளுக்கு திருப்தி ஏற்படாது ஆகையால் இந்த தளத்தில் நாம் மட்டும் ஏன் விட்டு வைக்கனும் ஆணால் இது பட்டிமன்றம் இல்லை பட்டிமன்றத்தை பற்றியே ஒர் பாடல் அமர்க்களமாக பாலுஜி பாடியிருக்கிறார். கேட்டு தான் பாருங்களேன். இந்த பாலுஜி பாடலை தேடிப்பிடித்து தினமும் இந்த தளத்தில் தொடர்ந்து பின்னூட்டம் தந்து என்னை உற்சாகப்படுத்தி வரும் கோவை ரசிகர் திரு. கோபாலகிருஷ்னன் அவர்களுக்கு 2 பாடல்களூக்கு முன் ஓர் டப்பிங்க பட பாடலுக்கு சரியான தகவலை தந்ததினால் அவருக்கு இந்த பாடலை சமர்ப்பணம் செய்கிறேன். நன்றி கோபால்கிருஷ்னன் சார்.
படம்:உரிமை ஊஞ்சலாடுகிறது
இசை:சங்கர் கனேஷ்
நடிப்பு : ரமேஷ் அரவிந்
|
பட்டிமன்றம் பட்டிமன்றம் நெஞ்சுகுள்ளே பட்டிமன்றம்
பட்டிமன்றம் பட்டிமன்றம் நெஞ்சுகுள்ளே பட்டிமன்றம்
சுகம் எதில் மிக உண்டு ஆண் பெண்னை தொடும் போதா
சுகம் எதில் மிக உண்டு பெண் ஆணை தொடும் போதா
தீர்வென்ன இதில் தீர்ப்பென்ன
பட்டிமன்றம் பட்டிமன்றம் நெஞ்சுகுள்ளே பட்டிமன்றம்
வெள்ளம் பள்ளம் தேடும் உள்ளம் உள்ளம் தேடும் தீராது அது மாறாது
ஆண்மை பெண்னை தேடும் பெண்மை ஆணை தேடும் ஓயாது விதி மாறாது
ஆணும் பெண்ணும் இல்லையேல் பூமி வெறும் காடுதான்
காதல் மட்டும் இல்லையேல் தங்கம் கூட ஓடு தான்
வாழவைத்த காதலையே வாழ்த்துவோம் வா
பூமி சுற்றும் காலைவரை காற்று மட்டும் ஓயாது
காற்று சுற்றும் காலம் வரை காதல் இங்கு தீராது
பட்டிமன்றம் பட்டிமன்றம் நெஞ்சுகுள்ளே பட்டிமன்றம்
சுகம் எதில் மிக உண்டு ஆண் பெண்னை தொடும் போதா
சுகம் எதில் மிக உண்டு பெண் ஆணை தொடும் போதா
தீர்வென்ன இதில் தீர்ப்பென்ன
பட்டிமன்றம் பட்டிமன்றம் நெஞ்சுகுள்ளே பட்டிமன்றம்
எந்தப் புத்துக்குள்ளே எந்த பாம்போ என்று பார்க்காதே அது கூடாதே
எந்தப் பூவுக்குள்ளே எந்த தேனோ என்று நீ தேடு அது பண்பாடு
காதல் கொண்ட நெஞ்சிலே துனபம் கூட இன்பமே
கண்ணுறக்கம் இன்றியே கனவுகள் தோன்றுமே
ஜாதிமத ஜாதகம் தேவையா வா
எத்தனைப் பேர் காதலித்தும் காதல் இன்னும் மிச்சம் உண்டு
உச்சரிக்கும் ஆளவச்சு காதலுக்கு அர்த்தம் உண்டு